ADHITHYA HRUDHAYAM SLOKAS 1 TO 6 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN
ஆதித்ய ஹ்ருதயம்

ஸ்லோகங்கள் 1- 6

1. ततो युद्धपरिश्रान्तं समरे चिन्तया स्थितम्।रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्॥

Tato yuddhapariśrāntaṃ samare chintayā sthitam rāvaṇaṃ chāgrato dṛṣṭvā yuddhāya samupasthitam

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் | ராவணம் ச்சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்த்திதம் || 1 ||

ஆதித்ய ஹ்ருதயம் அற்புதமான சூரிய ஸ்துதி. அகஸ்தியர் அவதாரமான ராமனுக்கு உபதேசித்தது. எல்லோருக்கும் பயனளிப்பது. சென்ற பதிவில் முதல் தியான ஸ்லோகத்தை மட்டும் அறிந்தோம், இப்போது மற்றும் தொடரும் முதல் ஆறு ஸ்லோகங்களைப் பார்ப்போம்:

ராம ராவண யுத்தம் நடப்பதை பார்க்க எல்லா தேவர்களும் கூடிவிட்டார்கள். ராமனுக்கு தெரியும் என்ன முடிவு என்று. ஆனால் ராவணன் சகல வல்லமை பொருந்தியவனாக இருந்தும் சோர்ந்து விட்டான். அவனது மஹா பெரும் சைன்யம் குறைந்து போய்விட்டது. ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் இழந்து கொண்டே வந்த ராவணன் கவலையோடு களைப்போடு எதிரே நிற்கிறான் . ”வாழ்வா சாவா ” போராட்டத்தில் மஹா புஜபலம் பொருந்திய ராமனை எதிர்த்துக் கொல்ல தயாராக உள்ளான்.

2. दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम्। उपागम्याब्रवीद्राममगस्त्यो भगवान् ऋषिः॥

2. Daivataiśca samāgamya draṣṭumabhyāgato raṇam upāgamyābravīdrāmamagastyo bhagavān ṛṣiḥ

தெய்வ தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் | உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: || 2 ||

இந்த மகத்தான ராம ராவண யுத்தம் சகல தேவதைகளும் சாக்ஷியாக நடைபெறுகிறது. வந்திருந்த தேவர்கள் ரிஷிகளில் இதோ அகஸ்தியரும் ஒருவர். யுத்த பூமியில் அகஸ்த்ய முனிவர், ராம பிரானை நெருங்குகிறார். ராமனும் சற்று களைத்து சோர்ந்த நிலையில் இருப்பதைக் காண்கிறார்.

3. राम राम महाबाहो शृणु गुह्यं सनातनम् । येन सर्वानरीन् वत्स समरे विजयिष्यसि ॥ 3 ॥

Rama rama maha baho srunu guhyam sanathanam yena sarvaanareen vatsa samare vijayishyasi

ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம் யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி (3)

”ப்ராக்ரம திண்மையான நீண்ட புஜபலம் கொண்ட வனே, தசரத ராமா. என் செல்வ மகனே ராமா, கண்ணே, இதைக் கேளடா. எது பரம ரஹஸ்யமோ, சாஸ்வதமோ, அதைச் சொல்கிறேன், நன்றாக கேட்டு நீயும் அதை உச்சரிப்பாயாக. உனக்கு இதனால் வெற்றி நிச்சயம்” என்று தெம்பூட்டுகிறார் அகஸ்தியர். அவர் முகம் அளவு கடந்த வாத்சல்யத்தோடு பிரகாசிக்கிறது. ராமனிடம் யாருக்கு தான் வாத்சல்யம் இல்லை?

4. आदित्य हृदयं पुण्यं सर्वशत्रु विनाशनम् ।जयावहं जपेन्नित्यम् अक्षय्यं परमं शिवम् ॥ 4 ॥

adithya hrudayam punyam sarva sathru vinasanam jayavaham japen nithyam akshayyam paramam shubham

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

இந்த ஸ்லோகம் எல்லோரும் அறிந்தது. ரொம்ப பிரபலமானது. பரம சந்தோஷத்தை அளிக்கும் மந்திரம். இதற்கு தான் ஆதித்ய ஹ்ருதயத்தில் முக்ய ஸ்தானம். இந்த ஆதித்யனின் ஹ்ருதயத்தில் உள்ள சூர்ய நாராயணனை எவர் மனம் கனிந்து வேண்டினாலும் அவர்களைப் போல் வெற்றிசாலி வேறெவரும் இல்லை. சாஸ்வதமான காரண்டீயான உண்மை இது. புண்யம் நிறைந்தது.

5. सर्वमङ्गल माङ्गल्यं सर्व पाप प्रणाशनम् । चिन्ताशोक प्रशमनम् आयुर्वर्धन मुत्तमम् ॥ 5 ॥

sarva mangala mangalyam sarva papa pranasanam chinthasoka prasamanam ayur vardhanamuthamam

ஸர்வமங்கள மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம் சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம்

இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்கிற ஸ்லோகமானது எல்லாவிதமான ‘கொடிய பாபங்களையும் அழித்திடும். துக்கம், துயரம், துன்பம் எல்லாவற்றிற்கும் கைகண்ட நிவாரணி. நாம் சாப்பிடும் மருந்துகள் உப விளைவுகள்(SIDE EFFECTS ) ஏற்படுத்தும். தலைவலிக்கு மருந்து சாப்பிட்டால் வயிற்று வலியை கிளப்பும். முதுகு வலிக்கு மருந்து விழுங்கினால் உடலெல்லாம் சொறி போல் அரிக்கும். புண்ணாகும். சிலருக்கு மார்பில் வலி ஆரம்பிக்கும். விஷம் தான் வேறு வேறு நாம, ரூபத்தில். ஆனால் இந்த மருந்து அப்படியல்ல. நூறு ஆண்டுகளை வாழ அருள்வது. ஒரு காசில்லாத போனஸ். .

எவருக்குமே எப்போதுமே நீண்ட கட்டுரைகளை படிப்பது சிரமமாகத்தான் இருக்கும். நேரமும் கிடைப்பதில்லை, மனமும் ஒன்றி ஒரே சமயத்தில் ஒரு விஷயத்தை கவனிக்க அனுமதிப்பதில்லை. விட்டு விட்டு தான் படிக்க நேர்கிறது. அப்படி படிக்கும்போது முடிக்கும் இடமும் தொடங்கும் இடமும் ஆர்வ
மூட்டும்படி இருந்தால் கண்ணும் கவனமும் அங்கே செல்லும்.

6. रश्मिमन्तं समुद्यन्तं देवासुर नमस्कृतम् । पूजयस्व विवस्वन्तं भास्करं भुवनेश्वरम् ॥ 6 ॥

rasmi mantham samudhyantham devasura namaskrutham poojayaswa vivaswantham bhaskaram bhuvaneshwaram

ரஸ்மி மந்தம் சமுத்தியந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் பூஜ்யஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரும் புவனேஸ்வரம்.

‘ இதோ பார் ராமா, மேலே ஜொலிக்கிறான் பார் சூரியன் அவனைப் பிரார்த்தனை செய்து கொள். அவன் தான் உலகமெல்லாம் பரவி நிற்கும் சூரிய காந்தன், ஒளிக்கதிரின் சொந்தக்காரன். தினமும் காலை கிழக்கே, கீழே யிருந்து, கடலோ மலையோ, நிலமோ மேலே மெதுவாக எழுகிறான். அவனை தேவர்கள் அசுரர்கள் எவருமே அன்றாடம் வணங்குகிறார்கள். பிரபஞ்சமே தொழும் தேவன் அந்த சூர்யநாராயணன். ஆதித்யன். ஜீவசக்தி. ஆதித்யன் எனும் சூரியனை நினைத்து வேண்டுவதால் நமக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து கொண்டு துன்புறுத்தும் சகல எதிரிகளையும் அழித்து விடுவான். ஆதித்ய ஹ்ருதயம் இப்படிப்பட்ட ஈடற்ற ஒளஷதம்.

தொடரும்

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;