
நான் பூஜை பண்ணுகிறேன் – நங்கநல்லூர் J K SIVAN
”கடவுள் மீது பக்தி என்பது காசுக்கு தகுந்தவாறு கோவில்களில் நடக்கிறதே ஸார்” என்கிறார் மார்கபந்து.
”என்ன சொல்கிறீர்கள் புரியவில்லையே?”
”உங்களுக்கு தெரியும். நீங்கள் அது பற்றி ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்கள். சரி நானே சொல்கிறேன்.
பெரிய கோவில்களில் ஸ்வாமி தரிசனம் எளிதில் கிடைக்கிறதா ஸார்? ஐநூறு ஆயிரம் கட்டி அதுவும் முன்கூட்டியே ரிசர்வ் செய்து திருப்பதி போன்ற கோவில்களில் சில நிமிஷ தரிசனம் பண்ண முடிகிறது. வி ஐ பி யாக இருந்தால் தனி வழியே கூட்டமாக பல பேரோடு நேராக உள்ளே செல்ல முடியும். ஏழை பாழை எல்லாம் தர்ம தரிசனத்துக்கு பல மணி நேரம் கூண்டு கூண்டாக நின்று உள்ளே போய் அரை நொடி யில் வெளியே தள்ளப்படுகிறார்கள். அதைத்தான் சொல்கிறேன். தட்டில் விழும் காசுக்கு தகுந்த விசேஷ கவனிப்பு செய்யும் அர்ச்சகர்களும் உண்டு. பகவான் எல்லோருக்கும் பொது. அவன் இதெல்லாம் செய்ய
சொல்லவில்லை. ஏதோ நமது துரதிர்ஷ்டம் .சாமி எங்கேயும் இருக்கிறார். வீட்டிலேயே நிம்மதியாக திருப்தியாக பூஜை செய்து மகிழ்வோம் என்று சிலர் மட்டும் தான் உண்மையாகவே ஈடுபடுகிறார்கள். மற்றதெல்லாம் பட்டினத்தார் சொன்ன வகை தான்.”
”அட இது என்ன குண்டு போடுகிறீர்கள்.? பட்டினத்தார் என்ன சொல்லி இருக்கிறார் பூஜை செய்வது பற்றி.
அவர் பெரிய ஞானி ஆயிற்றே தப்பாக ஒன்றும் சொல்லி இருக்க மாட்டாரே”
”கேளுங்கள் அவர் சொல்வதை. மெட்ராஸில் யார் வீட்டிலோ சென்று பார்த்திருக்கிறார். அது சுப்பிர
மணிய சர்மா வீடு மைலாப்பூரில் தான் இந்த காட்சி.
தனி வீடு. வெளி வாசல் கேட் பெரிய இரும்பு கதவு சார்த்தி இருக்கிறது. உள்ளே பூஜை அறையில் பலகையில் பஞ்ச கச்சத்தோடு சர்மா. உடம்பு பூரா விபூதி பட்டை. கழுத்தில் ருத்ராக்ஷம். ஸ்ரீ ருத்ர பாராய ணம் செய்கிறார்.கண்ணாடி போட்டுக்கொண்டு கையில் உள்ள ஸ்ரீ ருத்ர புஸ்தகத்தில் த்ரிசதி (300 ஈஸ்வர நாமாக்கள் சொல்லி புஷ்பம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
எதிரே ஒரு குட்டி மேஜையில் தாம்பாளம். அதில் சிவலிங்க விகிரஹம். ஸ்டாண்டில் தாரா பாத்திரம் தொங்க,அதிலிருந்து சொட்டு சொட்டாக சிவ லிங்கம் தலை மேல் ஜலம். தாம்பாளம் வாயிலிருந்து கீழே சொம்பில் உபரி ஜலம் விழுகிறது. குத்து விளக்கு தீபம். நிறைய புஷ்பங்கள் மடியில் ஒரு பிளாஸ்டிக் பூக்கூடையில் வைத்து ஒவ்வொன்றாக நாமா சொல்லி லிங்கத்தின் மீது போடுகிறார். ஊது வத்தி, சாம்பிராணி, தசாங்கம் வாசனை மூக்கை துளைக்கிறது.
ஐயருக்கு மனதில் சிவன் மேல் எண்ணம் இல்லை.
”இன்றைக்கு இன்போசிஸ் ஷேர் விற்க வேண்டும்.நல்ல விலை போகிறது. கொழுத்த லாபம் வரும். கண்கள் மேலே கடிகாரத்தை பார்க்கிறது. பத்தரை மணிக்கு இன்னும் ஒன்றரை மணி இருக்கிறதே. அதற்குள் பூஜை முடித்து சாப்பிட்டு விட்டு புறப்படவேண்டும்.
”மாடியிலிருந்து யார் கீழே இறங்கி வருகிறார்கள். ஒரு கணம் நாமா சொல்வது நிறுத்தி திரும்பி மாடிப்படியை பார்க்கிறார். அட மொட்டை மாடியிலிருந்து மாங்கிளை களிருந்து மாம்பழம் பறித்துக்கொண்டு மனைவி பக்கெட் நிறைய கொண்டு வருகிறாளே. யாருக்கெல் லாம் கொடுக்க? அவள் தம்பி அக்கா வீடுகளுக்கோ?
அந்த நேரம் பார்த்து மொபைல் கிணிங் கிணிங் என்கிறது. இடது கையால் செல்போனை காதில் வைத்து யார் என்கிறார்.
”அய்யய்யோ இந்த தொணதொணப்பு குமாரசாமி கூப்பிடுகிறான். ரெண்டாயிரம் ரூபாய் கடன் கேட்டு துளைக்கிறான்.”
அடுத்த கணமே என்ன பதில் சொல்வது என்று திட்டம் தீர்மானமாகி விட்டது.
‘குமார் , நான் ஊர்லே இல்லேடா. . ஸ்ரீரங்கத்தில் தம்பி வீட்டிலே விசேஷம் . அங்கே இருக்கேன். அடுத்த வெள்ளிக்கிழமை தான் மெட்ராஸ் வருவேன் அப்புறம் கூப்பிடு’
”’…………”’
‘அதெல்லாம் இல்லேடா.நான் தான் உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டேனே. நேரம் சரியில்லை. மனைவிக்கு காலில் ஒரு ப்ராப்ளம். நடக்க முடியலை. அதுக்கு அலைஞ்சிண்டு இருக்கேன். இல்லேன்னா அடுத்த வாரம் கூப்பிடுன்னு சொல்வேனா”
கூசாமல் பொய் . ரெண்டு மாடி ஏறி இறங்குகிற மனைவிக்கு ப்ராப்ளமாம் .அலையறானாம்.
ரெண்டு பூ போடுவதற்குள் வாசலில் காலிங் பெல். இரும்பு கேட் திறக்கும் கூர்க்காவைப் பார்த்து விட்டார்.
”மங்களம், ஐயர் பூஜை பன்றார் டிஸ்டர்ப் பண்ணா மல் நாளைக்கு வந்து காசு வாங்கிக்கோ” ன்னு சொல்லி அனுப்பு’ .
”பேப்பர் போடற பையன் வாசல்லே டைம்ஸ் பேப்பர் போட்டிருக்கானா பார். அப்படியே தொட்டிகளில் இருக்கிற செடிக்கெல்லாம் தண்ணி பிடிச்சு ஊத்த சொல்லு . நைஸா போயிடப்போறான்.”
அடுத்து ரெண்டு நாமா, சொல்லி ரெண்டு பூ போட்டார். மூணாவது பூ போடுவதற்குள் ….
”மங்களம். அடுப்பில் என்னடி வச்சிருக்கே. அடி பிடிச்சு தீஞ்சு போற வாசனை வருது. போய்ப் பார். கேஸ்க்கு புடிச்ச கேடு. முதல்லே அடுப்பை அணை”
இன்னொரு பூ போட்டு முடிவதற்குள்.
.”கோபாலா, போய் ஹாலில் இருக்கிற டேபிள் பேன் இங்கே கொண்டு வந்து முதுகுக்கு பின்னாலே வைடா . வேக்கறது ‘ சீக்கிரம் பூஜை பண்ணனும். டைம் ஆச்சு.
‘++
இதற்கு மேல் நான் இந்த பூஜை பண்ணும் காட்சியை வளர்த்த பிடிக்கவில்லை. இதுவே போதும் சுப்ரமணிய சர்மா பூஜை, ஸ்ரீ ருத்ர பாராயணம். இதை தான் பல வீடுகளில் வெவ்வேறு காட்சிகளாக நடப்பதை அப்போதே உணர்ந்து பட்டினத்தார் பாடுகிறார்:
”கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே. ”
பரமேஸ்வரா, எனது கைகள் ஏதோ ஒரு காரியம் செய்கிறது. என் விழிகளோ உன்னைப்பார்க்காமல் வேறெதையோ பார்க்கிறது.அலைகிறது. அடடா,என் மனத்தை பற்றி என்ன சொல்வேன் ஈஸா, கிண்டி ரெஸ் குதிரை தோற்றது. என்னென்னவோ எண்ண அலைகள். என் நாக்கு நாமம் சொல்வதற்குள் கூசாமல் வஞ்சனை செய்து பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறது. மூக்கு உன் சந்நிதி புஷ்ப, கந்த, சுகந்த வாசனையில் மகிழா மல் வேறேதோ நாற்றம் வீசுவதில் ஈடுபட்டி ருக்கிறது. உடலானது உனக்கு சேவை செய்யாமல் எதையோ சுகம் என்று அனுபவிக்க துடிக்கிறது, செவிகள் உன் நாமத்தின் இனிமையை சுவைக்காமல் தெரு நாய் போல் எதையோ தேடி கேட்கிறது. இப்படி நான் உனக்கு பூஜை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு நான் மலரை எடுத்து உன் சிலையில் அல்லது படத்தின் மீது போட்டால், இறைவா, அதை நீ எங்ஙனம் ஏற்றுக் கொள்வாய்?
வினைதீர்க்கும் அருள் கொண்ட என் பரமேஸ்வரா நீயே பதில் சொல் ”
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



