KRISHNA – J K SIVAN

”கிருஷ்ணன்” பற்றிய  விஷயங்கள் –  நங்கநல்லூர்  J K SIVAN                             

ராமாயணம்  மஹா பாரதம்  பாகவதம்  பக்த விஜயம் போன்ற பழம் பெரும்  நூல்களை படிக்கும்போது  ஒரு விஷயம் தெளிவாக தெரியவரும்.  தெய்வங்கள் மனிதர்களாக  பூமியில் அவதரித்து,  நம்மோடு  சேர்ந்து வாழ்ந்ததும்  பக்தர்களுக்கு அநேக  நன்மை புரிந்ததும்  படிக்க  ஆனந்தமாக  இருக்கும்.  

துவாபர யுகத்தில்  மஹா விஷ்ணு கிருஷ்ணனாக  அவதரிக்கிறார்.  அப்போது   தேவர்களும் ரிஷிகளும்,  மற்ற கடவுள் அம்சங்களும்  எப்படி  கிருஷ்ணாவ தாரத்தில்  பங்கு கொண்டார்கள்  என்று  ஒரு முறை  ஒரு புத்தகத்தில் படித்தேன்.  

எனக்கு ஒரு பழக்கம்.  எங்காவது ஒரு பழைய டைரியில்  சில குறிப்புகள் மட்டும்  எடுத்து வைத்துக் கொள்வேன்.  அதைப் புரட்டி பல வருஷங்களுக்குப் பிறகு  பார்க் கும்போது  சில  அற்புத, ஆச்சர்ய, அதிசய  அர்த்தம் மனதில்  படுகிறது.

பசு  எப்போதோ  சாப்பிட்ட புல்லை  சுகமாக ஒரு மர  நிழலில் அமர்ந்து  அசை போட்டு இன்புறும்.  நானும்  எப்போதோ எழுதி  வைத்ததை  இப்போது போடும் அசை  இது. என்ன  வித்தியாசம்.  பசு  தானே  அசைபோட்டு பாலை தருகிறது. ; நான்  அசைபோடும் போது உங்களையும்  சேர்த்துக்கொள்கிறேன்.  மெசேஜ் தருகிறேன். பதிவுகள் இடுகிறேன். பசு அசைபோடுவ தால் எவருக்கும் தொந்தரவு இல்லை. நான் அப்படி யில்லை.  உங்களை அடிக்கடி தொந்தரவு பண்ணு பவன்.ஒடிந்த வலது கையை மீண்டும் உபயோகித்து மெதுவாக  விரல்களை  கம்ப்யூட்டர்  கீ போர்டு மீது  மேய விடுகிறேனே .

சரி, விஷயத்துக்கு வருவோம். கிருஷ்ணனின்  எட்டு மனைவிகளில் ஒருத்தி  ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி, அவளுக்கு பிறந்தவன் ஸ்கந்தன்.  ஜாம்பவதி  பாதி  பார்வதி அம்சம்  என்பார்கள்.

மன்மதனும்  ரதியும் எப்படி  பங்கு கொண்டார்கள்?  கிருஷ்ணன் ருக்மிணி தம்பதிக்கு  மகன் பிரத்யும்னன். அவன்  தான் மன்மதன். சம்பராசுரன் பெண்  ரதி.
பாரதி  (சரஸ்வதி)  பாணாசூரன் மகள்.
கிருஷ்ணனின் பேரன் (பிரத்யும்னன் மகன்) அநிருத்தனாக  வருபவர்  பிரம்மா.
ஆதிசேஷன்  தேவகி கர்பத்தில் உதித்து  ரோகிணிக்கு மகனாக மாற்றப் பட்டு பலராமனாக பிறக்கிறான். ஒரு கர்ப் பத்திலிருந்து மறு கர்ப்பத்திற்கு மாறியதால் சங்கர்ஷணன் என்று பெயர்.
சூர்யனின் குமாரி  யமுனா  காளிந்தியாக  வந்து கிருஷ்ணன் மனைவியாகிறாள்.
லக்ஷ்மணை துளசியாகிறாள். கிருஷ்ணன் மாலையாக சூட்டிகொள்கிறான்.
வசுதா தான்  சத்யபாமா. சரஸ்வதி  சாயாவாகிறாள். ஸ்வாஹா தேவி  குசேலன் மனைவி சுசீலா .
ரத்னமாலா   சூரியனின் மனைவி சஞ்சனாவாக தோன்றுகிறாள்.
தாமரை இதழ்கள் 16000 கோபியராக  கிருஷ்ணனின் ஜோடிகளாகிறார்கள்.
தர்ம தேவதை  யுதிஷ்டிரனாக உருவெடுக்கிறான்.
வாயு தேவன் பீமனாகிறான்.கேட்கவே வேண்டாம். இந்திரனின் அம்சம் அர்ஜுனன்.அஸ்வினி குமாரர்கள்  நகுல சஹாதேவர்கள்.
யமதர்மன்  விதுரன்.  கர்ணன்  சூர்யனின் அம்சம். காளி தான் துர்யோதனன். சமுத்ரதேவன் தான் சந்தனு மகாராஜா.
சந்திரன்  தான் அபிமன்யு.
அஷ்டவசுக்களில்  எட்டாவது வசு பிரபாசன் தான்  பீஷ்மன்.
காச்யபர்  தான்  வசுதேவன். கிருஷ்ணனின் தந்தை ரோல்  அவருக்கு.  அதிதி அப்படிஎன்றால் தேவகி தானே.  வசுவும் வசுபத்னியும்  நந்தகோபன் யசோதா எனும்  கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தையும் தாயும்.
தாமரையின் அம்சம் திரௌபதி. யாக குண்டத்தில் பிறக்கிறாள் .த்ருஷ்டத்யும்னனும் அவ்வாறே  பிறக்கிறான்.
சுபத்ரா  ஷதரூபா அம்சம். தேவகி கர்ப்பத்தில்  உதயம்.
விட்டுப்போன  அனைத்து  தேவர்கள் தேவ பத்னிக்கள்  எல்லோருமே  கோப கோபியர்கள். எல்லாமே கிருஷ்ணன் ஏற்பாடு தானே.
கர்க  ரிஷி  கிருஷ்ணனுக்கு  நாமகரணம் செய்கிறார்.
 ”க் ”- க காரம் பிரம்ம வாசகம்.
 ”ரு” * ‘கரம் அனந்த (சேஷ) வாசகம்.
”ஷ்  -ஷ ”காரம்  சிவன்
”ண’-‘ கரம்  தர்ம வாசகம்
.”அ ”காரம் விஷ்ணுவாசகம்.
விஸர்கம்  நர நாராயண அர்த்த போதகம்.
‘இப்படி  அமைந்தது   ”கிருஷ்ணன்”  என்கிற பெயர்.   இதால்  என்ன விளக்குகிறது?   சர்வ ஸ்வரூபன்.  எல்லா(ரு )மே  சேர்ந்தது என்று காட்டுகிறது.  சர்வ ஆதாரம்,  சர்வ பீஜம்.  ”கிருஷ் ” சப்தமே நிர்வாண வாசகம். ”ண ” வாசகம்  ஒரு மோக்ஷ போதகம்.
கிருஷ்ணன்  மோக்ஷம் (நிர்வாணம்) அளிப்பவன்.  ”கிரிஷ் ” என்ற சொல்  நிஷ் சேஷ்ட (ஒன்றுமே பண்ணாமல் சும்மா  இருப்பது ) என்றும்  பொருள் படுகிறது.  ”ண ” என்றால்  பக்தி ‘ஆ” சேரும்போது பக்தி உண்டாக்குபவன்  என்று  அர்த்தம் கொடுக்கிறது.
பகவான்  நிஷ்காம  தாதா.  அதாவது  நாம்  செயல்களை பலன் எதிர்பார்க்காமல் செய்ய அருள்பவன் என்று  புரிகிறதா?   நந்தகோபன்  என்னென்ன பேர் எல்லாம் வைத்தான் கிருஷ்ணனுக்கு என்று உங்களுக்கு தெரியாவிட்டால்  கீழே  லிஸ்ட்  தருகிறேன்.
”கிருஷ்ணன், பீதாம்பரன், கம்ச த்வம்ஸி, தேவகி நந்தன் , யசோத நந்தன், ஹரி, சர்வேஷன், சர்வரூபன்,  சர்வாதாரன், சர்வ கதி, சர்வ காரணன். இன்னும் எத்தனையோ….
பலராமனுக்கு  நந்தகோபன் இட்ட பெயர்கள் :  ”ஹலதாரி, சங்கர்ஷணன், அனந்தன், பலதேவன், நீலாம்பரன்,முசலி, ரேவதிரமணன், ரோஹிணீயன்”

எவ்வளவோ  தெரியாத விஷயங்களை  நமது பழம் பெரும் பக்தி நூல்கள் ரிஷிகள் மூலம் நமக்கு  அளிக்கிறது.
நன்றி கிருஷ்ணா, ரிஷிகளே . 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;