SELF CHECK J K SIVAN

பேசும் தெய்வம்   –    நங்கநல்லூர்  J K   SIVAN

பெரியவா மனசிலே  ஒரு உறுத்தல்
மஹா பெரியவா ஒரு வார்த்தை சொன்னால் அதை வேத வாக்காக  எடுத்துக் கொண்டு  எத்தனையோ பேர்  அந்தக்ஷணமே  பொது நல சேவையில்  ஈடுபடுகிறார்கள்.   மஹா பெரியவா வாக்குக்கு அத்தனை மதிப்பு. அந்தஸ்து. அதனால் உண்டாகும் எதிர் மறை விஷயங்கள்  வெளியே  தெரிவதில்லை என்று நம்பும்படியாக  ஒரு ஆச்சார்யமான  சம்பவம் பற்றி தான்  இன்று சொல்லப்போகிறேன்.

மஹா பெரியவாவின் பிடி அரிசி சேமிப்பு திட்டம்.   காய்கறி தோல் சேமித்து  பசுக்களுக்கு கோசாலைகளுக்கு  கொண்டு கொடுக்கும் திட்டம். ஏழை எளியவர்களைத் தேடிச்சென்று  நல்ல விஷயங்களை சொல்வது, புத்தகங்கள், ஆடைகள் கொடுப்பது  போன்ற திட்டம். கோயில்களுக்கு  உழவாரப்பணி செய்வது என்று பல வித  பரோபகார  சேவைகள் பற்றிய  உபதேசங்கள் செய்வதை அப்படியே  கடைப்பிடிக்க  பல  குடும்பஸ்தர்கள்  தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.  சரி அதில் என்ன எதிர்மறை நிகழ்வு?யாருக்கு என்ன கஷ்டம் இதில்?

இதோ அந்த சம்பவம்:
காஞ்சிபுரத்தில் ஒரு நாள்  பக்தர்கள் மஹா பெரியவாளை தரிசிக்க கூடுகிறார்கள். அவர்களில் ஒரு தம்பதியர் கொஞ்சம் தயங்கி தயங்கி நின்று  பெரியவளோடு ஒரு சில நிமிஷங்கள் பேசவேண்டும் என்று கேட்கிறார்கள்.
”அங்கே  உட்காருங்கோ  கூப்பிடறேன்”
பெரியவா சொல்படி ஒரு தொண்டர் அவர்களை ஒரு இடத்தில் உட்கார வைக்கிறார். மற்ற  பக்தர்களை வரிசையாக  தரிசனம் செய்யவைத்து கொஞ்சம்  நேரம் நடுவே கிடைத்தபோது இந்த தம்பதியை பெரியவா முன்னால் அமர  வைக்கிறார்.
”என்கிட்டே  என்ன பேசணும்?”
”பெரியவா, எப்படி சொல்றதுன்னே  தெரியல. ரொம்ப மனம் உடைஞ்சு உங்க கிட்டே வந்திருக்கோம். நீங்க தான் வழி காட்டணும்.
”ம்ம்ம்ம்…  சொல்லுங்கோ”
”எங்க பையன் ரமணி பெரியவாளுடைய பக்தன்.  பிரம்மச்சாரி. ஒரு கம்பனியிலே நல்ல வேலை. அவன் உழைப்பில் தான் எ
ங்க  குடும்பம்  நடக்கிறது.  நாங்க  ரெண்டு பேருமே  பெற்றோர்  வயசானவர்கள். …….”

மஹா பெரியவா சொல்கிறார்:
அந்த தம்பதி சொன்னதிலிலிருந்து என் உபதேசங்களை, கேட்டுட்டு, படிச்சுட்டு,  பரோபகார சேவையிலே  ரொம்ப  ஓவரா ஈடுபடறான்.வீட்டுலே இருக்கிறதே இல்லை. வீட்டுக்கு ஒண்ணுமே  செய்யறதில்லே.  . தன் கார்யம், வீட்டுக் கார்யம் எதையும் கவனிப்பதில்லை. ஆபீஸ் கார்யம்கூட ச்ரத்தையாகப் பண்ணுகிறானோ இல்லையோ என்று பயமாயிருக்கிறதாம். எப்போது பார்த்தாலும் பிடி அரிசி கலெக்ஷன், மாடுகளுக்காக, காய்கறித் தோல் கலெக்ஷன், இப்படி ஒரு பக்கம் கலெக்ஷன், இன்னொரு பக்கம் டிஸ்ட்ரிப்யூஷன் – ஆஸ்பத்திரியில் பிரஸாத டிஸ்ட்ரிப்யூஷன் மாதிரி, என்றிப்படி ஓயாமல் ஒழியாமல் அலைந்து கொண்டிருக்கிறானாம். முன்னெல்லாம் தன்னுடைய  வேஷ்டி சட்டை, அப்பா அம்மா துணிமணிகள் எல்லாம் தோய்ப்பான்,மொட்டை மாடியிலேயே வெயிலே உணர்த்துவான், மடிச்சு வைப்பான், கறிகாய் மளிகை சாமான்கள் கடைக்கு போய் வாங்கி போடுவான். சமையல் உள்ளே ஏதாவது காய் கறி  நறுக்கி, வீடு துடைச்சு,  ஒட்டடை அடிச்சுன்னு ஏதாவது பண்ணிண்டே இருப்பான்.இப்போ  அவன் வேஷ்டியைக் கூட அப்பாக்காரர் தான் தோய்ச்சு போட வேண்டிருக்கு. ஏதாவது  செய்னுட்டு  சொன்னாக்கூட  காதில் போட்டுக் கொள்வதில்லை.  இத்தனை வயஸுக்கு அப்பா தான் எல்லாத்தையும்  அரைக்கண்ணோடு  வெளியிலே போய் பண்ணும்படி இருக்கிறது என்று அந்த அம்மாள் அழுது கொண்டே சொன்னாள் ”ஊர் வெயில் மழை எல்லாம் அவன் மேலேதான். உடம்பு வீணாய்ப் போயிடுத்து. கையை விட்டுச் செலவும் நிறையப் பண்ணுகிறான். நாங்கள் கேட்கிறோமென்பதால் எரிச்சல், கோபம்வருது. எங்க கிட்டே  கத்தறான்.ரொம்ப  சொன்னா  ஏதோ கொஞ்சம்   எப்போவாவதுஅகத்தில் தலை  காட்டுவதையும் நிறுத்திவிடப் போகிறானே என்கிற  பயத்திலே  நாங்க  ரெண்டு பெரும்  வாயைத் திறப்பதில்லை. இருந்தாலும் நாங்களும்  மநுஷ்யர்கள்தானே? சொல்லாமலேயும் இருக்க முடியவில்லை.  ரொம்ப யோசிச்சுட்டு  உங்க கிட்டே வந்திருக்கோம்.  பெரியவா நீங்கள்தான் அவனுக்கு நல்ல புத்தி வரப்பண்ணணும்” அந்த  பெற்ற  மனசு படற  பாடு இந்த சந்ந்யாசிக்கு தெரியாதா என்ன?அப்புறம் இது பத்தி ரொம்ப  நானே  எனக்குள் யோசித்தேன்.
நான் இப்படி  பொது நல   ‘அட்வைஸ்’ பண்ணுவதிலுங்கூட   இனிமேல்  ரொம்ப  ஜாக்ரதையாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு  நானே  சொல்லிக்கொண்டேன்.  அந்த  தம்பதிகள்  எல்லாம் உங்களாலே வந்த வினை தான் என்று என்னை வசவுவார்த்தைகள் சொல்லி  திட்டவில்லை… ரொம்ப  விசனத்தோடு  விஞ்ஞாபனம் பண்ணிண்டா.
”இதிலேருந்து எனக்கு என்ன தோணறது? எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ என் ஜாக்ரதைக் குறைவால், நான் பரோபகாரம் பண்ணுங்கோ  ன்னு சொல்றபோது  அதற்கு  ஒரு நிபந்தனை போட்டுக்கொள்ள வேண்டும்.  qualifying clause நிபந்தனை, போடாமல் இருந்துவிட்டேன் என்பதற்காக என்னை அவர்கள் வையத்தான் வேண்டும்.  அவா  என்னை கோபித்தாலும், திட்டினாலும் ரொம்ப சரி தான்.  அவர்களுக்கு  என்னால் ரொம்பவும் கஷ்டம் யதார்த்தத்தில் ஏற்பட்டுவிட்டதால் திட்டி னால்  தப்பு இல்லை.   என் வயஸு, லாயக்கிருக்கோ இல்லையோ அதுவாக வந்து சேர்ந்துவிட்ட என்னுடைய  ”ஜகத் குரு ஸ்தானம்’  இதுகளை உத்தேசித்துத் திட்டாமல் மரியாதையாகவே சொல்லிவிட்டுப் போனார்கள்  என்று புரிந்தது. அந்த தம்பதி என்னை நமஸ்கரித்து  பிரார்த்தனை பண்ணிக்கொண்ட போதிலும், ”இந்தக் கஷ்டம்  எல்லாம் எங்களுக்கு  உண்டாக நீதானே ஜவாப்தாரி? நீதான் இதை ஸரி பண்ணணும்”என்று  இடித்துக் காட்டினதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன்.
இனிமேலே நான்   யாருக்கும் எந்த  உபதேசம்  பண்ணுகிற உத்தேசமில்லை.   நிறுத்திக் கொண்டு விடுகிறேன்.  ஆனாலும் இப்போதுதான் என்னைப் பார்க்க வருகிறவர்களும், அட்வைஸ் கேட்கிறவர்களும் ஜாஸ்தியாகிக்கொண்டு வருகிறார்கள். அதனால் இனிமேல் பிரஸங்கம் பண்ணாவிட்டாலும், என்னிடம் வருகிறவர்களிடம் பேசுகிறபோது, நல்லதைச் சொல்கிறபோது, ஒவ்வொருவனும் பொதுத்தொண்டு ஏதேனும் அத்யாவச்யமாகப் பண்ணித்தானாக வேண்டும் என்று சொல்லும்போதே, “without prejudice to” … ஆனால்… னு என்று அநேக ஒப்பந்தங்களில் qualifying clause ,கண்டிஷன், போடுகிறார்களே, அந்த மாதிரி என்னுடைய  உபதேசத்துக்கும், ஒரு கண்டிஷன், ஒரு நிபந்தனை கண்டிப்பாக  போடப்  போறேன். ‘‘தன் கார்யம், குடும்பக் கடமைகளைக் கொஞ்சங்கூட,  ஒண்ணு கூட விடாமல்  செஞ்சபிறகு …..’  நீ  பொதுக் காரியம், பொதுநல சேவை பண்ணு … என்றும்  கண்டிஷன் போடவேண்டுமென்று தீர்மானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். பிற்பாடு இது ஸமயத்தில் நினைவு வந்து சொல்வேனோ மாட்டேனோ, அந்த பரோபகார ஸப்ஜெக்டே என்னை இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்னவோ, எப்படியானாலும், இன்றைக்கேனும் அந்தத் தாயார் தகப்பனார் படுகிற கஷ்டத்தைப் பார்த்ததில் இப்படிச் சொல்கிற ஞானம் எனக்கு உண்டாயிருக்கிறது.”

”தான் அவிழ்த்துப்போட்ட துணியைத் தாயார்க்காரி தோய்க்கணும்; வயஸுக் காலத்தில் அப்பன்காரன் கடை கண்ணி ஏறி இறங்கணும்” என்று விட்டு விட்டு ஒருத்தன் ஸோஷல் ஸர்வீஸுக்கு கிளம்பணும் என்று நான் நினைத்ததேயில்லை. நினைக்காவிட்டாலும் இதை வாய்விட்டு நான் சொல்லாதது தப்புத்தான். இதனால், இன்றைக்கு இங்கே வந்து போனவர்கள் மாதிரி இன்னும் எத்தனை பேர் வீட்டில் அனர்த்தத்தை உண்டாக்கியிருக்கிறேனோ? எல்லாருக்கும் என்னிடத்தில் வந்து சொல்லிக்கொள்ள முடியுமா? ”சொல்லிக்கொள்வதே ‘பெரியவா’ மேலே குறை சொல்கிற மாதிரித்தானே ஆகும்? அப்படிப் பண்ணலாமா?” என்றே பலபேர், பாவம், வாயை மூடிக்கொண்டு என்னால் ஏற்பட்ட கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம்.

இன்றைக்கு வந்தவர்கள் எனக்கு என்ன உபதேசம் பண்ணியிருக்கிறார்கள்? ‘வசவு’, ‘வசவு’ என்று இத்தனை நாழி நான் சொன்னதை ‘உபதேசம்’ என்று சொல்லியிருக்கலாம். வசவானால்தான் feeling -ஐக் கிளப்பிவிடும் என்று அப்படிச் சொன்னேன். அதனால் உண்மையை அலசிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வழி ஏற்படுமென்றேன். அதைவிட ‘உபதேசம்’ என்று அடக்கமாக எடுத்துக்கொண்டு விட்டால் இன்னம் ச்லாக்யம் என்று தோன்றுகிறது. ஸ்வய ஸமாசாரங்களிலேயே ஒருத்தன் அதியாக ஈடுபட்டுப் பொதுக் கார்யங்களை கவனிக்காமலிருப்பதுதான் ‘ஜெனரல் ரூல்’ என்றாலும், எதிர்த்திசையில் சில பேர் அத்யாவசியமான சொந்தக் கார்யம், கடமைகளையும் விட்டு விட்டுப் பொதுக் கார்யம் என்று பறந்துகொண்டு, வீட்டு மநுஷ்யர்களுக்கு ச்ரமம் உண்டாக்கவும் கூடும் என்பதை நான் மறக்கக்கூடாது. அதனால், ”சொந்தக் கார்யம் என்பதையே கவனித்துக் கொண்டிருந்தால், அலை ஓய்ந்துதான் ஸமுத்ர ஸ்நானம் என்கிற மாதிரி பொதுக் கார்யங்களை எவருமே எப்போதுமே செய்ய முடியாது” என்று நான் அட்வைஸ் பண்ணும்போதே, அதை qualify பண்ணி, ”அதற்காக, அத்யாவச்யமான சொந்த வேலைகளை, அகத்து ட்யூட்டிகளை ஒருநாளும் விடக்கூடாது” என்றும் எடுத்துச் சொல்லிவிட வேண்டும். இதுதான் எனக்குக் கிடைத்திருக்கும் உபதேசம்.”’

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;