GODHAVARI MERGES WITH YAMUNA ! J K SIVAN

யமுனையில் சங்கமம் –  –  நங்கநல்லூர் J K SIVAN 

 கோதாவரி பாட்டிக்கு   எண்பத்தெட்டு  வயதுக்கு மேல்  ஆகிவிட்டது. அவளுக்கு  இங்கிலிஷ்  வயசு தேதி  மாசம் வருஷம்  எல்லாம் தெரியாது. தமிழ் வருஷம் மாசம் நக்ஷத்ரம் தான் சொல்வாள்.   ஒன்பது வயதில்  தொச்சா என்கிற துரைசாமி ஐயர்  அவளை  20 வயது  கணேசனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார். ருதுவாகி கணவன் வீட்டுக்கு கோதாவரி செல்வதற்கு முன் அவள் கணவன் வீட்டில் எல்லோரும்  வடக்கே  க்ஷேத்ராடனம் புறப்பட்டார்கள். கோதாவரியும் அவள் பெற்றோருடன் அவர்களுடன் சென்ற போது  அவளுக்கு 13 வயது. காவேரியில் நீச்சலடித்து அவளுக்கு பழக்கம்.  வடக்கே  கங்கை ,யமுநை போன்ற நதிகளை தரிசிக்க ஆசை.
எல்லோரும்  காசி கங்கை கயா என்று எல்லா இடமும் சென்றார்கள்.  பிருந்தாவனம் சென்ற  போது  அவளுக்கு  யமுனையைப் பார்க்க ஆசையாக இருந்தது.  அவள் கணவன் 24வயது கணேசன் தன்னுடைய வீரத்தை மனைவிக்கு காட்ட யமுனையில் தொப்பென்று குதித்தான்.அவனுக்கு அவ்வளவாக  நீச்சல் தெரியாது என்றாலும் யமுனையில் வெள்ளம் ஓடுவதை அவன் அறியவில்லையே.  தன் கண் எதிரேயே கணவன் நீரில் வேகமாக  போவதைப்  பார்த்த கோதாவரி திடீரென்று நீரில் குதித்தாள்.  ”யமுனாதேவி யமுனாதேவி  என் கணவனைக் கொடு” என்று கத்தினாள்.  கணேசன் கண்ணில் படாமல் தொலை  தூரத்தில் கையை  அசைத்தவாறே  கண்ணிலிருந்து  மறைந்தான். கோதாவரி நீந்தி கரையேறினாள் .
கோதாவரிக்கு  சித்ரப்ரமை ஏற்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை அவள் யமுனைநதிக்  கரையை விட்டு எங்குமே  நகரவில்லை. நீரையே பார்த்துக் கொண்டிருந்தாள். கணவன் தெரிகிறானா வருவானா   என்று 75 வருஷமாக   காத்திருக்கிறாள்.அவளுக்கு குடும்பம் உற்றார் உறவு என்று எவருமில்லை.   எப்போதும்   தனியாகவே இருப்பவள். அவள் வாழ்வின் பெரும் பகுதி யமுனை நதிக்கரையிலேயே  கழிந்து விட்டது. இரவோ பகலோ  அவளுக்கு  உற்ற  சினேகிதி   யமுனா மட்டுமே
யமுனை நதிக்கரையில் ஒரு சிறிய கிருஷ்ணன் கோவில் வாசல்  தான் அவள் வீடு.  யாரோ தினமும் அவளுக்கு ஏதோ பிரசாதங்கள் கொடுப்பார்கள்.பாதிநாள் சாப்பிடவே மாட்டாள்.பேசமாட்டாள்.
அன்று என்ன தோன்றியதோ தெரியவில்லை.கோதாவரி தூக்கமின்றி படுத்தவள் எழுந்து யமுனாநதிக் கரைக்கு வந்தாள் . ஹோ வென்று பிரம்மாண்டமாக  யமுனை காட்சி அளித்தாள் . அழகிய மரங்களிலிருந்து புஷ்பங்கள் அவள் மேல் விழுந்து அவளை அலங்கரித்தது.  வானில் பளிச்சென்று  முழு நிலா வெள்ளியாக  யமுனையை மாற்றி அவள் அழகுக்கு மெருகூட்டியது. தென்றல் குளிர்ச்சியாக  வீசியது  ”வா கோதாவரி வா என்னிடம் ” ”யார்  என் பேரைச்சொல்லி கூப்பிடுவது?   தலையை திருப்பி அங்குமிங்கும் பார்த்தாள்  கோதாவரி.”யார்  என்னைக் கூப்பிட்டது?”’கலகலவென்று சிரிப்பு.  ”நான் தான் ””ஓ   நீ தான் கூப்பிட்டாயா. யமுனா ?”ஆமாம்””ஆஹா  நீ  எவ்வளவு அழகாக இருக்கிறாய்  யமுனா . நுங்கும் நுரையும்  மலர்களும் நறுமணமும் வீச நிலவொளியில்  ஒரு  இளம் பெண்ணாகவே  எனக்கு காண்கிறாய் யமுனா “”என்னைப் போய் அழகி என்கிறாயே… என் சகோதரி கங்கையைப் பார்த்ததில்லையா?””கங்கையைப் பார்க்க வந்தவள் தான்  உன்னோடு இங்கே இருக்கிறேன். மறந்து விட்டாயா யமுனா? கங்கையை விட நீ அழகானவள் தான் எனக்கு”“ நீயும்  ஒருகாலத்தில் இளம் பெண் தானே. என்னை விட  அழகானவளாகவே இருந்திருப்பாய்  என்று தான் எனக்கு  தோன்றுகிறது”.
“யமுனா நான்  எப்படி இருந்தேன்  என்றே  எனக்கு தெரியாது யமுனா.  நான் வயதுக்கு வரும்  முன்பே  எனக்கு   கணவனாக  இருந்தவன் உன்னில்  மூழ்கி போனானே. அன்றிலிருந்து  நான் அவன் வருவானா என்று தானே   இத்தனை காலமாக  உன் கரையிலேயே  காத்திருக்கிறேன்.  காலம் செல்லச் செல்ல  நீ தான் அவன் என்று அவனை  மறந்து,  உன் அழகில் மயங்கி உன்னைப்  பார்த்துக்கொண்டே  வாழ்கிறேன்..
“கோதாவரி,   நீ  சொல்வது சரியே.  எல்லாம் எனக்கு நன்றாக தெரியும்.  என் சகோதரி  கங்கை மிக பெரியவள்.  பெரிய இடத்தை சேர்ந்தவள் .எங்களுக்கெல்லாம்  தலைவி. புண்ய நதி. அவளுக்கு  நான்  ஈடாக முடியுமா? நான்  சாதாரண மானவள் கோதாவரி”.
“அம்மா , யமுனா  நீ  ரொம்ப அடக்கமானவள்  என்றுமே.    கங்கைக்கு  கோபமும் சீற்றமும் அடிக்கடி  வரும். உன்  பெருமை நான்  அறிவேன்.  என்  வாழ்வு முடியும் வரை  நான் உன்னோடு  இருக்கவேண்டும்.  உன்னிலே கலந்து தான் நானும்  என் மூச்சை விடவேண்டும்  என்பதற்காகவே வாழ்பவள்.”
“கோதாவரி,  நீ  எனக்கு  மகிழ்ச்சியூட்ட  இப்படியெல்லாம்  சொல்கிறாய்.  நான்  கங்கையின்  முன்பு  ஒரு சிறு ஓடை. அவ்வளவே.”
“யமுனாதேவி,  எனக்கும்  நீயும்  கங்கையும்  ஒன்றே. உன் பெருமை  நான்  உணர்ந்தவரை  சொல்கிறேன் கேள். ”கங்கையை நூறு மடங்கு புனிதப்படுத்தினால்  கிடைப்பவள் நீ.  விஷ்ணு   என்கிற  நாராயணனின்  ஆயிரம்  நாமத்தை விட ராமா என்கிற பெயர் உசத்தி. அப்படிப்பட்ட  ராமனின்  மூன்று நாமங்களுக்கு  ஈடு  கிருஷ்ணன்  என்கிற  ஒரு  நாமம்.  கிருஷ்ணனுக்கு விளையாடப்  பிடித்தது உன்னிடம் தான்…இது  பாகவதத்தில் இருக்கு என்று என் அப்பா  சொல்வார்…. யமுனையில்  நீராடினால் ஒருவன் செய்த பாபத்தின்  விளைவுகள்  அவனை விட்டு விலகும்
”அம்மா  யமுனா,  நீ  ரொம்ப  புண்யம்  செய்தவள்.  புண்யம்  தருபவள்.  உன்னில்  ஒருமுறை  ஸ்நானம்  செய்தவன்  குளித்து எழும்போது மனம் பூரா கிருஷ்ணனின்  நினைவுகளோடு  தான்  கரையேறுகிறான்.  சைதன்யர்  சொன்னதம்மா இது. உனக்கு தெரியாதா? ”  ”பிருந்தாவனத்தில்  வசித்து  அன்றாடம் உன்னிடம் ஸ்நானத்துக்கு வருபவர்களால்   இந்த  உலகமே சுத்தமாகிறது என்று சொல்வார்களே நீ மறந்துவிட்டாயா? எத்தனை ஆயிரம் முறை  உன்னில்  மூழ்கி  விளையாடியிருக்கிறான்  கிருஷ்ணன் நண்பர்களுடனும்  கோபியர்களுடனும்!!  அவன்  பாதத்தை எவ்வளவு ஆயிரம் தடவை  நீ  தொட்டு புனிதமடைந்தவள். யாருக்கு  கிடைக்கும்  இந்த பாக்கியம்?  என் கணவன் உன்னிலே  கலந்தவன்  இன்றுவரை என்னிடம் மீண்டும் வர விருப்பப் படவில்லையே. நானும் அவனுடன் சேர்ந்து உன்னிலேயே கரைகிறேன்.

கோதாவரி  நீரில் இறங்கினாள். நீந்த முயலவில்லை. ”தாயே  யமுனாதேவி ஸ்ரீ கிருஷ்ணா” என்ற வார்த்தைகள் கடைசியாக அவள் மூச்சோடு கலந்து அவளிடமிருந்து வெளிப்பட்டது. யமுனையில் அன்றும் வெள்ளம்…  கோதாவரி யமுனையோடு கலந்து மறைந்தாள். அப்புறம் அவளை எவரும்  பார்க்கவில்லை. கிழவி  யமுனையில் கலந்து கிருஷ்ணனில்  கரைந்தாள்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;