
அருமையான குரு அபிமான சிஷ்யன்’’- 3நங்கநல்லூர் J.K. SIVAN
நமது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் திட்டமிடப்படாமல் தானாகவே நடப்பவை. நமது முயற்சியால் நமது எண்ணத்தின்படி நடப்பதாக நம்மை நம்பவைப்பது நமது அறியாமை. ஒரு அணுவும் அவன் செயலால் இன்றி அசைவதில்லை. இதை உணர்ந்தால் மட்டுமே உண்மை புலப்படும்.
நான் கடந்த சில தினங்களாக கூரத்தாழ்வான் பற்றி எழுதிக்கொண்டு வருகிறேன். எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு கூரம் சென்ற நினைவு மட்டுமே என் மனதில் இருந்த நிலையில் என் நீண்ட கால நண்பர் இந்திய அரசாங்க கப்பல்படையில் பணி புரிந்த நல்ல நண்பர் அசூரி வரதராஜன், என்னுடைய ”ச கோத்ரர்” . அவரும் ஹரித கோத்ரம் என்பதால் கொஞ்சம் நெருங்கிய நேசம் பாசம் கொண்டவர் என்னோடு தொடர்பு கொண்டார். திடீரென்று ரெண்டு நாள் முன்பு அவர் கைப்பேசியில் அழைத்தார்.
”போனமாதமே என்னுடன் எங்கள் ஊருக்கு வருகிறேன் என்கிறீர்கள் வரமுடியாமல் போய்விட்டது. இந்த ஞாயிற்றுக்கிழமை 31.3.24 வருகிறீர்களா சுவாமி ?””எந்த ஊர்?”அவர் காஞ்சிபுரத்தில் ஒரு சிற்றூரான தூசி மாமண்டுரில் பிறந்து வளர்ந்தவர். நிலபுலன் பரம்பரை வீடு இவற்றை பராமரிக்க செல்வார். அங்கே கிராமிய சூழ்நிலையைக் காண அழைத்தார். அது பற்றி தனியாக எழுதுகிறேன்.
”இந்த ஞாயிறு கட்டாயம் வருகிறேன்.””சரி, ஞாயிற்றுக்கிழமை விடிகாலை ரெடியாக இருங்கள் காரில் வீட்டுக்கு வருகிறேன் அங்கிருந்தேபோகலாம் உங்கள் கூரத்தாழ்வான் படித்தேன். கூரம் கிராமம் காஞ்சியிலிருந்து 8-10 கி.மீ. தான். நாம் போகும்போதே கூரம் முதலில் போய் தரிசித்து விட்டு பிறகு எங்கள் ஊர் தூசி மாமண்டூர் போவோம்”.
எப்படி இருக்கும் எனக்கு?.ரெண்டு, ரெண்டரை மணி நேரத்தில் கூரத்தாழ்வான் ஆலய வாசலில் கார் நின்றது. இந்த ஆலயம் தான் கூரத்தாழ்வான் ஆழ்வானின் அரண்மனையாக இருந்திருக்கிறது. இங்கிருந்த கதவு சாத்தும் சப்தத்தை தான்காஞ்சிபுரத்தில் வரதராஜன் பெருந்தேவி கேட்டார்கள்.
சில வருஷங்களில் மாற்றம் இருந்தாலும் அமைதி, அழகு குன்றவில்லை.
பட்டாச்சாரியார் வீடு கோவில் அருகே இருந்தாலும் காஞ்சி புரத்தில் வசிப்பவர். வாசலில் வரவேற்றார். ஆழ்வான் அருகே நிற்கவைத்தார். ஆழ்வான் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு நித்யோபாசனை செய்த உடையவர், ராமர் லக்ஷ்மணர் சீதா ஆஞ்சநேயர் பூஜா விக்கிரஹங்களை மூலவர் ஆழ்வான் சந்நிதியிலேலேயே வைத்திருக்கிறார்கள். தரிசித்தோம். ஆழ்வான் சந்நிதி தான் அவர் பூமியில் அவதரித்த அறை .
ஆதிகேசவ பெருமாள் சந்நிதி, பராசர பட்டர், பிள்ளை லோகாச்சார்யார்,மணவாள மாமுனிகள், சேனை முதலி, உடையவர் திருமங்கை ஆழ்வார் எல்லோருக்கும் சந்நிதி இருக்கிறது. காட்டினார். தரிசித்தேன். ஆழ்வான் வாழ்க்கை வரலாறை சித்திரத்தோடு பிரஹாரத்தில் வர்ணத்தில் படித்தேன். கூரத்தாழ்வான் ஒருவர் தான் தாடி மீசையோடு உள்ள சீடர். ராமானுஜரை விட 10 வயது மூத்தவர் என்றாலும் பிரதம சீடர். ஆலய பட்டாச்சார்யருக்கு சில புத்தகங்ளை வழங்கினேன். அவரோடு போட்டோ எடுத்துக் கொண்டோம். ஆழ்வான் படம் ஒன்று அளித்தார்.அதை இணைத்திருக்கிறேன்.
கூரத்தாழ்வானைப் பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும்.
ராமாவதாரத்தில் லக்ஷ்மணனைப் போல் பதினாலு வருஷம் கண் துஞ்சாமல் ஸ்ரீ ராமனுக்கு நிழல் போல் கூட நின்று தானும் மரவுரி தரித்து, தானாகவே வனவாசம் இருந்து எள் என்பதற்கு முன் எண்ணையாக இருந்து சேவை செய்த லக்ஷ்மணன் மேல் ராமருக்கு எத்தனை பிரியம் இருந்திருக்கும். ஆதிசேஷன் தான் லக்ஷ்மணனாக அவதாரம் எடுத்தவர். மானுடப்பிறவியில் பின்னர் ஆதிசேஷன் ராமானுஜராக அவதரித்தபோது ஸ்ரீ ராமர் தம்பி லக்ஷ்மணனுக்கு நன்றிக்கடனை செலுத்த இதுவே நல்ல தருணம் என்று சங்கல்பித்து கூரத்தாழ்வானாக அவதரித்தார். அதனால் தான் கூரத்தாழ்வார் வயதில் பெரியவராக இருந்தும் ராமானுஜருக்கு பிரதம சீடனாகி, தன் கண்ணையே தியாகம் செய்தவர்…
இனி தொடருக்குள் செல்வோம்.
ஸ்ரீரங்கத்திலிருந்து வந்த வைஷ்ணவர் மேல்கோட்டையில் ராமானுஜரை சந்தித்து ஸ்ரீரங்கத்தில் நடந்த சம்பவங்களையும் , கூரேசர், பெரியநம்பிகளுக்கு நேர்ந்த துன்பங்களைப் பற்றியும் சொன்னபோது ஆசார்யன் கண்ணீர் உகுத்தார். தன்னுடைய குரு பெரிய நம்பிகளுக்கு தான் எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்று நினைவு கூர்ந்தார். தனக்காக அவர் உயிர் தியாகம் செய்தது ராமானுஜரை வாட்டியது. அந்திம நேரத்தில் அருகிருந்து மஹா பூர்ணருக்கு,குரு பெரியநம்பிக்கு, சேவை செய்யும் பாக்கியம் கிட்டவில்லையே என நொந்தார்.
”வர்தராஜா, ரங்கராஜா, என்ன பாக்கியம் கூரேசனுக்கு? என்னால் முடியாததை ஆசார்யர் பெரியநம்பிக்கு சேவையை கூரேசர் நிறைவேற்றினாரே என மகிழ்ந்தார். கூரேசர் குருவை மிஞ்சிய சீடன்.
சிலகாலம் கழிந்து கண்பார்வை அற்ற கூரேசன் ஸ்ரீரங்கம் திரும்பினார். திருக்கோஷ்டி நம்பிகள், திருமலை ஆண்டான் , திருவரங்க பெருமாள் அரையர் என்று ஒவ்வொருவராக மஹா புருஷர்கள் எல்லாம் மறையலானார்கள் திருப்பதியில் ராமானுஜரின் நெருங்கிய உறவினர் ஸ்ரீ சைல பூரணரும் திருக் கச்சி நம்பிகளும் விண் எய்தினர். கூரேசருக்கு ஸ்ரீ ரங்கம் வெறிச்சோடியது போல் தோன்றியது. தனிப்பட்டு விட்டோமோ?
கண்ணற்ற கூரேசர் ரங்கநாதனே கதி என்று தனிமையில் மன வியாகூலத்தை ரங்கனிடம் கொட்ட ஆலயம் சென்றபோது காவலர்கள் தடுத்தனர்.
தொடரும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



