

அருமையான குரு அபிமான சிஷ்யன்- 4நங்கநல்லூர் J.K. SIVAN
நான் பல மஹான்கள் சரித்ரங்களை அறிந்திருக்கிறேன், படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். ராமானுஜர் வாழ்க்கை ரொம்ப வித்யாசமாக தனித்து காண்கிறது. எத்தனை போட்டிகள், எதிர்ப்புகள், அனைத்தையும் தைரியமாக எதிர்கொண்டு தனது கோட்பாடுகளில், நம்பிக்கையில், சித்தாந்தத்தில் துளியும் மாறுபடாது, ஞான தீபமாக அனைத்திலும் வெற்றி கண்டு, 120வருஷங்கள் வாழ்ந்து அதில் ஒரு கணத்தையும் வீணாக்காத கர்மயோகியை வேறெங்கும் காண இயலாது. ராமானுஜரின் வெற்றிக்கு காரணம் அவரது சிறந்த சிஷ்யர்கள் தான். முக்கியமாக கூரத்தாழ்வான்.
எப்படி திடீரென்று நான் கூரத்தாழ்வானைப் பற்றி தொடர் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும்போது என்னை ஆழ்வான் தரிசிக்க வைத்தார்? இன்னும் அந்த ஆச்சர்யத்திலிருந்து என்னால் மீளமுடியவில்லை. காஞ்சி வரதராஜநெய்யே முழுமுதற் கடவுளாக மனதில் சதா வழிபட்டுக்கொண்டிருந்த ஆழ்வான் ‘வரதராஜன்” பெயர் கொண்ட சகோத்ர வைணவர் மூலமாகவே நேற்று (31,3.24) என்னை கூரத்துக்கு வரவழைத்தான். நான் ஏதோ முற்பிறவிகளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த நற்பயனின் பலன் தான் இது என்று இரு கரம் கூப்பி ஆண்டவனையும் ஆசார்யனையும், ஆழ்வானையும் வணங்குகிறேன்.
இனி தொடரில் முன்னேறுவோம்.ஸ்ரீரங்க ஆலயவாயிலில் அரங்கனைக் ”காண” உள்ளே நுழைகிறார் கூரத்தாழ்வான். அரங்கனை ஊனக்கண்ணால் நம்மைப் போல் அவரால் காண முடியாதே. அகக்கண்ணால் தரிசிக்க ஆலயம் போகவேண்டிய அவசியமே இல்லையே,என்றாலும் அரங்கன் முன் நிற்பதே ஒரு தெய்வீக அதிர்வை, அலையை அளிக்கும் அது வேறே எங்கே கிடைக்கும்?
காவலர்கள் ஆழ்வானை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்தார்கள்.”ஏன் என்னை தடுக்கிறீர்கள்?””ஐயா இது ராஜாவின் உத்தரவு. ”யார் ராமானுஜரை தம்முடைய குரு அல்ல என ஒப்புக்கொள்கிறார்களோ அவர்கள் மட்டும் ஆலயத்தில் அனுமதிக்கப் படுவார்கள்” “ஓஹோ அப்படி ஒரு கட்டளையா? காவலர்களே, உங்கள் அரசரிடம் சொல்லுங்கள் ராமானுஜரை இகழ்ந்து புறக்கணித்து விட்டு கூரேசனுக்கு அரங்கன் இந்த ஜென்மத்தில் மட்டு மல்ல இனி வரும் ஜென்மத்திலும் தேவையில்லை. உங்கள் கட்டளையை ஏற்று நான் அரங்கனை தரிசிக்க விரும்பவில்லை , திரும்பிப் போகிறேன்” என்று வீடு திரும்பினார் கூரேசர்.
” ஆண்டாள், பசங்களைக் கூப்பிடு இனி ஸ்ரீரங்கம் நமக்கில்லை. வேறெங்காவது செல்வோம்” ஆழ்வான் குடும்பம் அன்றே திருமாலிருஞ் சோலை (மதுரை அருகே) குடியேறி தனிமையில் வாழ்ந்தது. காலம் மாறியது. சோழ ராஜா கிருமி கண்ட சோழன் மாண்டான். கொடிய ஆட்சி விலகியது. பல வருஷங்கள் சென்றது.
நூறு வயதான ராமானுஜரும் ஸ்ரீரங்கம் மீண்டார். கோலாகல வரவேற்பு பிரபந்தங்கள் பாசுரங்கள் எதிரொலிக்க ஸ்ரீவைஷ்ணவ பக்த கோடிகள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். அவர் கண்களோ கூரேசனைத் தேடியது. கூரேசர் வீட்டு வாசலை அடைந்தார்.
திருமாலிருஞ் சோலையிலிருந்து கூரேசர் குடும்ப சகிதம் ஸ்ரீரங்கம் விரைந்தார். கண்ணிழந்த கன்று தாய்ப் பசுவை ஆர்வமாக நாடியது. தன் வீடு தேடி ஆசார்யன் வந்தார் என கேட்டு புளகாங்கிதம் அடைந்தார் கூரேசன், ஆசார்யனும் பிரதம சீடனும் பல வருஷங்கள் கழித்து சந்தித்தனர். நா எழவில்லை இருவருக்கும். எண்ணங்கள் ஓடின, காஞ்சியில், ஸ்ரீரங்கத்தில், காஷ்மீரில் ஸ்ரீபாஷ்யம் எழுதியது என்று எத்தனையோ எண்ண ஓட்டத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை எத்தனை இடையூறுகள், இன்னல்கள்,எதிப்புகள், விவாதங்கள் ஒன்றாக அல்லவா எல்லாம் கடந்தோம்.
ராமானுஜர் கண்களில் காவேரி, கூரேசருக்கோ கண்ணே இல்லையே.!! விழி யற்று பேச்சற்று தடுமாறி தத்தி ராமானுஜரின் கால்களில் விழுந்தார் கூரேசன். குருவின் பாத கமலங்களை கெட்டியாக இரு கரங்களாலும் பிடித்து கொண்டார். அமைதி நிலவியது. பாசத்தோடு கூரேசனை தொட்டு தூக்கி மார்போடு அணைத்து கொண்டார் ராமானுஜர். “என்அருமை கூரேசா, என்ன செய்தாய் நீ எனக்காகவும் ஸ்ரீ வைஷ்ணவதுக்காகவும்? உன் கண்களையே தியாகம் செய்தாயே”! பன்னிரண்டு வருஷங்கள் கழித்து மீண்டும் ஆச்சர்யனைக் கண்ணாற பார்க்கமுடியாவிட்டாலும் அவர் அமுத குரலை கேட்ட கூரேசர் வானில் பறந்தார்.
“சுவாமி நான் எங்கோ எப்போதோ யாரோ ஒரு சிறந்த ஸ்ரீ வைஷ்ணவனின் நெற்றியை பார்த்து இவன் எவ்வளவு அலங்கோலமாக ஊர்த்வ புண்ட்ரம் சாத்திகொண்டிருக்கிறான் பார்” என்று கேலி செய்திருப்பேனோ என்னவோ. அந்த பாவத்துக்கு பிராயச்சித்தமாக எனக்கு விழிகளை இழக்கும் தண்டனை கிடைத்ததாக தான் நான் கருதுகிறேன்”’
”என்ன உளறுகிறாய் கூரேசா? பரம ஞானியான நீயாவது பாவம் செய்வதாவது!. நான் செய்த பாபத்திற்காக தான் நீயாக இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டாய் என்று தான் உணர்கிறேன்” ”கூரேசா,நடந்ததெல்லாம் போகட்டும் என்னோடு வா. நீயும் நானும் செய்ய வேண்டியது அநேகம் இன்னும் உள்ளது”. கை பிடித்து கூரேசனை ஆசார்யன் கூட்டி சென்றார், நிஜமும் நிழலும் ரங்கநாதர் ஆலயம் அடைந்தது.
ஸ்ரீ வைஷ்ணவம் மீண்டும் துளிர்த்தது. கிருமி கண்ட சோழன் ஆலயத்தையும், ஸ்ரீவைஷ்ணவ சம்பந்தமான அனைத்து பள்ளிகள், மடங்கள் நூலகம் எல்லாம் நாசமாக்கியிருந்தான். ஆசார்யனும் கூரேசன் முதலான சீடர்களும் இணைந்து நடந்த தவறுகளை எல்லாம் திருத்துவதில் முனைந்தனர்.
ராமானுஜருக்கு வயதாகிவிட்டது. கூரேசரும் இப்போது அவரைவிட வயதானவர், கண்ணற்றவர். ஒருநாள் வழக்கம்போல கூரேசர் ரங்கநாதனை மனதாரக் காண, அவனுடன் பேச ஆலயத்தில் நின்றார். அப்போது என்ன நடந்தது? அடுத்த பதிவில் சொல்கிறேன்.
தொடரும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



