
ராமாவதாரம் உண்மையே . நங்கநல்லூர் J K SIVAN
பாரத தேசத்தில் பாய்ந்தோடும் புண்யநதிகள் பல. அவற்றில் பிரபலமான ஒன்று தூங்க பத்ரா. துங்க பத்ரையின் தென்கரையில் ஒரு பட்டணம் அதன் பெயர் பெல்லாரி. அதற்கும் மேற்கே சென்றால் ஒரு கிராமம வரும் அதற்கு ஹம்பி என்று பெயர் அதுவே கிஷ்கிந்தாவாக இருக்கலாம் என்கிறார்கள் சரித்திர ஆராய்ச்சியாளர்கள். அறிஞர்கள். லான்கார்ஸ்ட் என்கிற சரித்திர நிபுணர் ஹம்பியைப் பற்றி சொல்லும்போது பம்பா சரஸ் என்றும் பம்பா என்றும் அழைக்கப்படும் நதி நிசாம் பகுதியில் அனேகுண்டி என்ற ஊரில் உள்ளது என்கிறார்.
துங்கபத்ரையின் புராண பெயர் பம்பா. இங்கெல்லாம் ஹம்பியை சுற்றி பரவலாக அறியப்படும் செய்திகள் ராமாயணத்தில் வரும் பெயர்களாகவும் இடங்களா கவும் உள்ளது.
கிரிப்பித் என்ற அறிஞர் கிஷ்கிந்தா தக்ஷிண பிரதேசத் தின் பெரும்பகுதியாக இருந்தது அப்போது என்கிறார்.
ராமனும் லக்ஷ்மணனும் வானர சேனையை சுக்ரீவன் ஹனுமான் தலைமையில் நடத்திச் சென்று இப்போ தைய கர்நாடக சித்தல் துர்க் ஜில்லா வழியாக சென்றார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் சஹ்யா பர்வதத்தை அடைந்தார்கள். மலை மேல் ஏறி கிழக்குப்பக்கமாக இறங்கினார்கள். காவேரியைக் கூட குடகுமலை பக்கத்தில் எங்காவது கடந்திருக் கலாம்.
மைசூர் கெசட்டில்(GAZETTE) ரைஸ் என்பவர் ஒரு சுவாரஸ்யமான செய்தி சொல்கிறார். காவேரி நதி லக்ஷ்மண தீர்த்தத்தை சங்கமிக்கும் இடத் திற்கு அருகே ஸ்ரீரங்கபட்டினத்தில் மேற்கு பக்கத்தில் தான் காவேரியை ராமன் கடந்தார் என்பது தான் அது. எந்த அளவிற்கு இரவும் பகலும் ராம சிந்தனையில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அறியும்போது நம்மையறியாமல் இரு கரம் கூப்பி அவர்களை மானசீகமாக வணங்குகிறோம்.
வானர வீரர்கள் அங்கிருந்து மகேந்திரகிரி என்ற மலை அடைந்தார்கள். அங்கிருந்து தான் ஹனுமான் இலங்கைக்குத் தாவினான்.
மேஜர் போர்ப்ஸ் என்று ஒருவர் நாம் ஹிந்துக்கள் செய்யாத ஒரு அசகாய சூர வேலை ஒன்றை செய்தி ருக்கிறார். பதினோரு வருஷங்கள் சுற்றோ சுற்று என்று இலங்கை பூரா கீழே விழுந்த ஊசியை தேடுவது போல் தேடி சென்று இராமாயண சம்ப வங்கள் நடந்த இடங்கள் பெயர்கள் போன்ற விவரங்கள் எல்லாம் சேகரித்தார். கண்டியில் மூன்று குன்றுகள் இருக்கிறதே அது தான் ராமாயணத்தில் வரும் திரிகூட பர்வதம் என்று அடித்துச் சொல்கிறார். அதன் கீழே வறண்ட நிலப்பரப்பு தான் ஹனுமானால் தீ வைக்கப்பட்டு அழிந்த ராவண நந்தவனங்கள். இது ஹலகட்டாவுக்கு மேலே உள்ளது.
ஒரு இடத்தின் பெயர் சீதா தளவா. இங்கு தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் . இதோ இது என்ன தெரிய வில்லையா.? நிகும்பா, இங்கு தானே இந்திரஜித் தவமிருந்தான் யாகம் வளர்த்தான். மேலும் சில இடங்களையும் தேடிக் காட்டுகிறார். இது ராமாயண ஸ்லோக விஷயங்களோடு பொருந்துகிறது.
இன்னொரு அற்புத மனிதர் பெயர் டாக்டர் ராம் அவதார்ஜி . பெயருக்கேற்றபடி, அவர் ராமன் எங்கெல்லாம் நடந்தான் என்று அயோத்தி முதல் இலங்கை வரை அவன் காலடித் தடங்களை பிடித்துக் கொண்டே அலைந்து ஒரு புத்தகம் ”ராமன் நடந்த இடங்கள்” என்று இந்தியில் எழுதியிருக்கிறார்.
‘ராமன் என்பவனே கிடையாது. அவன் இருந்தால் அவன் என்ன இஞ்சனீயரா? இல்லையே . சேது பாலம் அவன் கட்டவில்லை” என்றெல்லாம் நம்மவர்கள் வீட்டிலிரு ந்தபடியே மறுக்கும் போது ஒரு சில மனித தெய்வங் கள் நமக்காக இவ்வளவு அலைந்து திரிந்து காரணம் காட்டி நிருபித்து உதவியிருப்பது அந்த ராமனின் கருணையாலே தான்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

