
ஒண்ணுமே புரியலே உலகத்திலே. – நங்கநல்லூர் J K SIVAN ‘
‘ஏன் சார், நல்ல பழக்கம் கெட்ட பழக்கம் எல்லார் கிட்டேயும் இருக்குதே எப்படி? அதுவே நல்லதா கெட்டதா?”’அதென்ன அப்படி கேட்டுபுட்டீங்க. நல்ல பழக்கம் இருந்தா நல்லவங்க, கெட்டபழக்கம் இருந்தா கெட்டவங்க””கெட்டவங்க ன்னு நாம சொன்னா அவங்க உண்மையிலேயே நல்லவங்க இல்லீங்களா?””ஆமாங்க நீங்க சொல்றதும் ரைட் தான். கொஞ்சம் யோசிக்கணும் .நமக்கு நல்லதா இருக்கிறது மத்தவங்களுக்கு கெட்டதா இருக்கலாம். அப்படி தான் அவங்க செய்றதும் நமக்கு. சில கெட்ட பழங்கங்களிலேயும் சில நல்லது இருக்குதுன்னு சொல்றாங்க ”அதெப்படி?”
”எங்க வீட்டிலே நகத்தை கடிச்சா தலையிலே ணக் குன்னு கொட்டுவாங்க. அதிலே நல்லதும் இருக்குதாம். நகத்தை கடிக்கிறவன் ஆதி காலத்திலிருந்து இருக்கான். நகம் கூரா வளர்ந்து நம்மையோ மற்றவனையோ குத்தாம இருக்க நகத்தை கடிக்கிறது நல்லது தானே. நக இடுக்கில் அழுக்கு உள்ளே போனா வியாதி வராதாம். உடம்பு இம்யூன் IMMUNE ஆயுடுதான். நக இடுக்கில் அழுக்கு சேராம அதை வெட்டறது நல்லது தானே. கத்தி, கத்திரிக்கோல் தெரியாத காலத்திலேயே பல்லு உபயோகமா இருந்திருக்கு.
உட்கார்ந்திருக்கும்போது காலை ஆட்டுறது நல்ல பழக்கம் இல்லை, ஒழுக்கம் இல்லை என்கிறாங்க. கையாட்டுவது, காலாட்டுவது எல்லாம் ஒருத்தர் மனதில் அமைதி இல்லை ன்னு காட்டுதாம். ஏதோ உள்ளே அவங்களை கொதிக்க வைக்குது. பாதிக்குது. அதை போக்குவதற்கு கையாட்டறது ,காலாட்டறது மூளையை ஊக்குவிக்குது, உபயோகமா இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க. கொட்டாவி உடறது தப்பு என்கிறார்களே, அது தான் தப்பு. நுரையீரலுக்கு உள்ளே பிராணவாயு அதிகம் செல்வதற்கு கொட்டாவி முக்கியம்னு தெரிஞ்சுக்கோ.
பொசுக்குன்னு கோபம் வந்து பளிச் பளிச்சுன்னு திட்றவங்க, சாபம் கொடுக்கறவங்களைப் பாத்திருக்கியா? அதுவும் சின்னவங்களை தான் ஜாஸ்தி கடிப்பாங்க. இது ரொம்ப நல்லதாம். மாரடைப்பு வராதாம். அதுக்காக எப்போவும் யாரையும் எதுக்கெடுத்தாலும் திட்டக்கூடாது இல்லையா? ஒரு வரம்பு, இல்லைன்னு ஒண்ணு இருக்கவேணாமா?
நண்பர்களோடு ஊர்வம்பு பேசறதும், அக்கப்போர் பேசறதும் , வம்படிப்பதும் நல்லது தானாம். டென்ஷன் குறையுமாம். நல்ல மூடு MOOD லே குறைஞ்சது நாலு மணிநேரமாவது மனது நல்லா இருக்குமாம்.
ராத்திரி பத்து மணிக்கு தூங்கப் போய்ட்டு காலையிலே ஆறரை மணிக்கு எழுந்திருக்கறது நல்லதில்லையாமே. மார்பு குடல் சம்பந்தப்பட்ட வியாதி வருமாம். என்னய்யா இது. தலைகீழ் பாடமாக இருக்கு. பின்தூக்கி முன்னெழும்பும் பேதைகள் கொண்ட ஊராச்சே நம்முது. தூக்கம் எப்போ வருதோ அப்போ தூங்கிட்டு எப்போ முழிப்பு கொடுக்குதோ அப்போ எந்திரிக்கணும்னு சொல்றாங்க வெள்ளைக்கார ஆராய்ச்சிக்காரங்க. அவனை நம்பலாமா?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



