
கந்த புராண சுருக்கம் 1 – நங்கநல்லூர் J K SIVAN
கந்த ஷஷ்டி விரத சமயத்தில் நமக்கு தெரியாத விஷயங்கள் ஏதாவது இருந்தால் அறிந்து கொள்வோமே. காஸ்யப ரிஷி, அதிதி தம்பதியருக்கு பிறந்தவன் அசுரேந்திரன் பலம் மிகுந்த ராக்ஷசன்.. அவன் மகள் சுரஸை எனும் மாயா. அவளுக்கு பிறந்தவர்கள், பத்மாசூரன் எனும் சூரபத்மன், சிங்கமுகன், யானை முகம் கொண்ட கஜமுகன் எனும் தாரகாசுரன். அஜமுகி என்ற ஆடு முகம் கொண்ட பெண். போதுமா?
ஒருநாள் மாயா தன்னுடைய முதல் மகன் சூரபத்மனை அழைத்தாள்:
”சூரா, நீ பரமேஸ்வரனை துதித்து தவமிருந்து யாகம் செய்யவேண்டும். வட கடலில் வாடா த்வீபம் எனும் தீவு நீ யாகம் செய்ய தகுந்தது. அங்கே போ. நான் உன் யாகத்துக்கான திரவியங்களை நான் கொண்டு தருவேன். நீ யாகம் செய்து ஈஸ்வரன் வரம் பெற்று மூவுலகும் ஆளவேண்டும். தேவர்கள் உன்னடிமையாகி அசுரர் குலம் தழைக்க வேண்டும்.இது என் ஆசை. நிறைவேற்று . போ ”
வழியில் அசுரகுரு சுக்ராச்சாரியாரின் ஆசி பெற்று, வட த்வீபத்தில் பிரம்மாண்டமான யாகசாலை அமைத்தான் சூரபத்மன். 10000 யோஜனை பரப்பளவு! (28000 சதுர கி.மீ!) அதன் நடுவே 1000 யோஜனை நீள அகல ஆழம் கொண்ட யாக குண்டம். 3000 யோஜனை பரப்பளவு ஹோம திரவியங்கள் மலை போல். அவன் நடத்திய யாகம் 10,000 வருஷங்கள் நீடித் ததாம். யாக முடிவில் சூரன் தன் சிரத்தைத் தானே கொய்து பலி கொடுத்து ரத்தத்தை யாக குண்டத்தில் கொட்டி னான். அப்படியே தாரகாசுரன், சிங்கமுகனும் அண்ணனோடு சேர்ந்து அந்த யாகத்தைச் செய்தார்கள். யாகத்தில் சூர பத்மன் அவன் சகோதரர்கள் யாவருமே ம் உயிர்பலி கொடுத்தார்கள். அக்காலத்தில் யாகத்தில் உயிர்பலி கொடுப்பது வழக்கம்.
பரமசிவன் ப்ரத்யக்ஷமாகி சிரத்தில் இருந்த கங்கையால் யாகத்தீயை அணைத்து ” சூரா பத்மா, நீ கேட்கும் வரம் என்ன சொல். அளிக்கிறேன்” என்கிறார்
‘பரமேசா, ஸகல அண்டங்களும் என் வசமாக வேண்டும். ப்ரம்மா, விஷ்ணு, தேவர்கள், எவராலும் எனக்கு தோல்வியோ அழிவோ கூடாது. தேவர்கள் ஆயுதங்கள் எதாலும் எங்களுக்கு மரணம் கூடாது.ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்க ளுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும்.”
”சூரபத்மா, நீயும் உன் சகோதரர்களும் புரிந்த கடின தவத்தால், தியாகத்தால், யாகத்தால், நீ கேட்கும் வரம் பெற்றாய். ஆனால் நீ கேட்கும் அத்தனையும் 108 யுககாலம் தான். பிறகு நீ மரணம் எய்துவாய்” என்று வரமளித்தார் சிவன்.
‘ஈஸ்வரா, அப்படியென்றால் தங்களைத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது.”
”சூர பத்மா,என்னால் உனக்கு மரணமில்லை”. சிவன் மறைந்தார்.
அசுரர் குலம் தழைக்க சூரன் பெற்ற வரம் கேட்டு அசுரர் குரு சுக்ராச்சாரியார் மகிழ்ந்தார். சூரன் தனது பலத்தை, அதிகா ரத்தை பிரயோகித்து குபேரனை அடிமையாக்கினான். ஈசானன் சரணடைந்தான். கிழக்கு திசையில் இந்திரலோகம் சென்று இந்திரன் அக்னியை எல்லாம் வென்று சூரபத்மன் இந்திரலோக அரசனானான். தெற்கே எமலோகம் சூரன் வசமாயிற்று. யமதர்மன் அடிமையானான். இவ்வாறே நிருதி, வாயு, வருணன் அனைவரும் சூரன் கட்டளைப்படி இயங்கலானார்கள். சூரன் வைகுண்டத்தை நோக்கி நகர்ந்தான். நடந்தது அனைத்தும் நாராயணன் அறிவான். காக்கும் கடவுளாக இருந்தும் தன்னால் சூரனை எதிர்க்க முடியாதபடி சர்வேஸ்வரனிடம் வரம் பெற்றவன் என்றும் தெரியும். விஷ்ணுவின் சக்ராயுதத்தை தாரகனுக்கு அளித்து வைகுண்டத்துக்கும் சூரன் அதிபதியானான்.
சூரன் வீர மஹேந்திரபுரத்தை நிர்மாணித்து அங்கே பலமான ஒரு கோட்டை கட்டினான். ப்ரம்மா சூரபத்மனுக்கு முடி சூட்டினார். இந்திராதி தேவர்கள் சூரனின் பணியாட்களானார்கள். மஹேந்திர புரத்தை உருவாக்கிய விஸ்வகர்மாவின் மகள் பத்ம கோமளையை சூரபத்மன் மணந்தான். அவர்களுக்கு பானுகோபன், அக்னிமுகன், இரண்யன், வஜ்ரபாகு என நான்கு மகன்கள்.
அஜமுகிக்கு வாதாபி, இல்வலன் எனும் அசுரர்கள் பிறந்து தேவர்கள், முனிவர்களை வதைத்தனர். எதிர்த்தவர்களைக் கொன்றனர், சிறையிலடைத்தனர். அகஸ்தியரை ஏமாற்றிக் கொல்ல வாதாபி முயன்றபோது அவரால் வாதாபி மாண்டான்.
அசுரர்களின் அக்கிரமத்தை, சூரனின் கொடிய செயல்களை தாங்கமுடியாத தேவர்கள் மஹாவிஷ்ணுவோடு சேர்ந்து பரமேஸ்வரனை சந்தித்து முறையிட்டனர். அசுரனின் கொடுமைக்கு முடிவு தேடினர்.
”விஷ்ணு முதலான தேவர்களே, என் சக்தியால் தான் சூரனுக்கு முடிவு. இதை நிறைவேற்றுகிறேன்”. சிவனின் நெற்றியிலிருந்து திகு திகு வென்று உஷ்ணமயமாக ஒரு அக்னி பிழம்பு ஆறு நெருப்பு பந்தங்களாக, பெரும் பொறிகளாக, வெளிப்பட்டு ஹிமாலயத்தில் உள்ள சரவணப் பொய்கையில் இறங்கியது.
தொடரும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


