TIMELY HELP. GRATEFUL REACTION.

நோ தேங்க்ஸ்….. நங்கநல்லூர் J K SIVAN

இப்படி கூட நடக்குமா? என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு சில சம்பவங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் நிகழ்கிறது. இது ஒரு பிரபலமான ஆச்சர்ய சம்பவம்.
” எதுக்குய்யா விட்டுக்கொடுக்கணும்? விட்டுக்கொடுக்குறதாலேயோ அடுத்தவங்களுக்கு உதவி செய்றதாலேயோ எனக்கு என்னங்க லாபம்?” என்று கேட்கும் யதார்த்த வாதிகளுக்கும்

* “என் வாழ்க்கையில எவ்வளவோ பேருக்கு உதவியிருக்கேன். எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கேன். எவன் என்ன செஞ்சான் எனக்கு? உதவி பண்றதாலே என்ன சார் புண்ணியம்…?” என்று விரக்தியில் இருப்பவர்களுக்கு இந்த நிகழ்வு கண்ணைத் திறக்கும்.

* “வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது என்ன கொண்டு போகப்போறோம்…. வாழுற மட்டும் சுகமானாக நமக்காகவே வாழ்ந்துட்டு போவோம். வாடா நைனா” என்ற கொள்கையுடைய உத்தமர்களுக்கும் அது தப்புடா கண்ணா என்று இந்த பதிவு அவசியம் உணர்த்தும்.
++
1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்கா விலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக் கலைஞர் இக்னேஸிஜே.பேட்ரோவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜர் “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.
பேட்ரோவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்ப வில்லை.அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப் படுத்திக்கொண்டு பேட்ரோவ்ஸ்கியை சந்தித்து நடந்ததைக் கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரோவ்ஸ்கி மறுத்துவிடுகிறார்.
“நான் திட்டமிட்டபடி வந்து நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம்அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடிஅவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கிஅவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.
அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப் படுவதை அறிந்து கொண்ட பேட்ரோவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரோவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரைப் பொறுத்தவரை அது சாதாரண பிஸாத்து தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

யாரோ முன் பின் தெரியாத இரு மாணவர்களிடம் ஏன் பேட்ரோவ்ஸ்கி இப்படி நடந்துகொள்ளவேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம்?

“எரியும் வீட்டில் பிடிங்கிய து வரை லாபம் என்று கருதுவது தானே புத்திசாலித்தனம், மனித ஸ்வபாவம். நாம் விட்டுக் கொடுத்தாலோ, இல்லை உதவி பண்ணினாலோ அதுனால நமக்கு என்ன லாபம்?” இப்படித் தான் பெரும்பாலானோர் நினைப்பார்கள்.

ஆனால் பேட்ரோவ்ஸ்கி வேறே தினுஸு ஆள் , “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.
ஆண்டுகள் உருண்டன.
பேட்ரோவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக முதல் உலகப் போர் துவங்கிய கால கட்டம் அது. போலந்து நாடு போரில் ஜெர்மனியின் பிடியில் சிக்கி சின்னா பின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர்.எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1919-20ல். .

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரோவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவைஅணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர்பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரோவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை தானிய பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரோவ்ஸ்கி நிம்மதி பெரு மூச்சு விட்டார். தான்கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவி லிருந்துகாப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில்சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரோவ்ஸ்கி.
ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான்உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் FEES கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக் கொடுத்து உதவினீர்கள்அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.
பேட்ரோவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.
காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.
இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக் கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்குஉதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களைவகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன்காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்துமக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டுஅமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது எவ்வளவு ஆச்சர்யம் பார்த்தீர்களா?
அதனால் தான் நம் பாரதி, ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினான். அவன் தீர்க்கதரிசி.
இந்த சம்பவம் உணர்த்தும் நீதி ஒன்றா! இரண்டா!
* ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் உண்மையில் நீங்கள் உங்களுக்கு உதவி செய்துகொள்கிறீர்கள்.
* நீங்கள் எதை விதைத்தாலும் அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.
* அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
* காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை.
* எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை இருக்கும்.
* எல்லாம் நன்மைக்கே
* விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை; கெட்டுப்போகிறவர் விட்டுக்கொடுப்பதில்லை
* தர்மோ ரஷதி. ரஷித…..
தர்மத்தை நீங்கள் காப்பாற்றினால் அது உங்களை காப்பாற்றும்.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது (குறள் 102)
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. (குறள் 103)
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். (குறள் 104)

எனவே அடுத்த முறை, இக்கட்டில் சிக்கித் தவிக்கும் எவருக்கேனும் நீங்கள் உதவ நேர்ந்தால், உண்மையில் நீங்கள் உங்களுக்கு உதவிக் கொள்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
நாம் எதை விதைக்கிறோமோ அதை பன்மடங்கு அறுவடை செய்வோம். ஏனெனில் விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும்உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரோவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தில் செய்த உதவியாயிற்றே. காலம் குறித்து வைத்துகொண்டு பலமடங்கு திருப்பி தராமலா போகும்?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;