NIRVANA DASAKAM DASASLOKI – J K SIVAN

நிர்வாண தசகம் – (தஸ ஸ்லோகி) நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

நிர்வாண தசகம் -5-6

ஏற்கனவே சொன்னாலும் விளக்கினாலும், அதே கேள்வி மீண்டும் கேட்கிறேன்.
”நிர்வாணம் என்றால் என்ன?”
” இதென்ன கேள்வி. துணியில்லாமல் பறவை, மிருகம் போல் சுற்றுவது? ”
இப்படி சட்டென்று பதில் சொல்பவர்களே, அதல்ல இதன் உண்மை அர்த்தம். மறுபடியும் நினைவில் இதைக் கொள்வோம்.
உயர்ந்த ஞானிகளை பற்றி அறியும்போது இந்த வார்த்தை அடிக்கடி வரும். தன்னை மறந்த நிலை யில், ப்ரம்மத்துடன் ஒன்றாக இணைந்த ஜீவர்களின் சமாதி நிலையைக் குறிக்கும் சொல் தான் நிர்வாணம். அம்மணமாக தோன்றுவது அல்ல. புத்தர் நிர்வாணத்தைத் தேடி அடைந்தவர். அவர் துணி இல்லாமல் இருந்த ஒரு சிலையை, படத்தைக் கூட பார்க்க முடியாது. ‘சமா’ = அமைதி, சாந்தம், வேறுபாடில்லாத நிலை. ‘தி’ = புத்தி. வேறு வேறாக எதுவுமில்லை. எல்லாம் ஒன்றே! அதுவே கடவுள் என்கிறது அது இரண்டல்ல ஒன்று என போதிக்கும் அத்வைதம். ஒரே சக்திதான் இயக்குகிறது என்று சயன்ஸ் கூட சொல்கிறது.
வழக்கம் போல ஒரு கதை சொல்கிறேன்.
ஒரு ஊரில், ஜென் குரு ஒருவர் அழகாக ஓவியம் வரைவார். அந்த ஊர் ராஜா, அவரை காட்டிலிருந்து எப்படியோ தனது அரண்மனைக்கு வரவழைத்தான்.
”குருவே, நீங்கள் ஒரு ஓவியம் வரைந்து அது என் அரண்மனையை பெருமையாக அலங்கரிக்க வேண்டும்” என்று ராஜா கேட்டான்.
“ராஜா எனக்கு நீ தனியாக ஒரு அறை கொடுக்க வேண்டும் ” என்கிறார்.
”ஆஹா இதோ என் அறையையே உங்களுக்கு என்று எடுத்துக் கொள்ளுங்கள்”
சகல வசதிகளுடன் தனது ஓர் அறையை துறவிக்கு அளித்தான் ராஜா. பல மாதங்கள் ஆகிவிட்டன.
மாதத்துக்கு ஒரு தடவை அவர் அறைக்குள் நுழைந்து ஓவியம் எவ்வாறு வரைந்திருக்கிறார் என்று ராஜா பார்க்கச் செல்வான் . சுவற்றில் ஒரு சின்னக் கீறல், கோடு கூட துறவி அந்த அறையில் வரையவில்லை.
ராஜா வுக்கு பொறுமை போய்விட்டது. மெதுவாக ஒருநாள் துறவியை கேட்டான்:
“சுவாமி, நான் கேட்ட ஓவியம் எப்போது தயாராகும்?”
”இன்னும் மூணு வருஷம் என்கிட்டே வராதே”
மூன்று வருஷங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு ராஜா ஜென் குருவின் ஓவியத்துக்காக ஆவலாக காத்திருந்தான். மூன்று வருஷம் முடியும் சமயம் ஒருநாள் ராஜா அந்த அறைக்குள் துறவி இல்லாத சமயம் பார்த்து உள்ளே நுழைந்து பார்த்தான்.
மொட்டையாக ஒரு பாதையை ஏணி மாதிரி வரைந்திருந்தார் ஜென் குரு.
என்ன இது ஓவியமா? ஏதோ ஒரு பாதை. மொட்டையாக, ஆரம்பம் எங்கு என்றோ முடிவு எங்கு என்றோ ஒன்றுமே இல்லையே? இன்னும் ஒருவேளை ஜென் குரு ஓவியத்தை பூர்த்தி செய்ய வில்லையோ?
துறவி வந்ததும் கேட்டான்;
”சுவாமி, இது என்ன ஏதோ ஒரு நீண்ட பாதை மாதிரி இருக்கிறதே. இது எங்கே போகிறது? ”
ஜென் குரு புன்னகையோடு சுவற்றுப் பக்கம் சென்றார். அந்த ஏணிப்பாதை யின் ஒரு பக்கமாக நெருங்கினார். அதில் ஏறுவது போல் நுழைந்தார். அப்பறம் அவரைக் காணோம்?
அவர் புகட்டிய உபதேசம், நீதி, உண்மை என்ன?

பிரபஞ்சத்துடன் உயிர் ஒன்றிக் கலப்பதுதான் சமாதி நிலை. ஞானப் பாதையில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் எட்ட நினைக்கும் நிலை, சமாதி நிலை. உடலிலிருந்து உயிர் ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும் என்பது நியதி. நாமாகவோ அல்லது ஏதோ காரணமாகவோ உயிரை உடலிலிருந்து பிரித்தால் அது தற்கொலை, கொலை, அல்லது விபத்து ஆகும். ஆனால் அது இல்லை சமாதி. உடலோடு மூச்சு நன்றாக இருந்து, உயிர் தானாகவே, மூச்சோடு கலந்து பிரம்மத்தை அடைவது தான் சமாதி. மஹா யோகிகளால் வேண்டும்போது இப்படி சமாதி நிலை அடைந்து திரும்பவும் முடியும். அவர்கள் இப்படி அடைவது மரணம் இல்லை. ஜீவனோடு சேர்ந்த சமாதி. ஜீவ சமாதி. அவர்கள் சமாதி அடைந்த உடலில் மீண்டும் அவர்களால் நினைத்த போது திரும்ப வந்து பிரவேசிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்மையை அடிப்படையாக கொண்டது. ராகவேந்திரர் மந்த்ராலயத்தில் 700 வருஷங்கள் அப்படி இருக்கிறார். ரமணர், ராமகிருஷ்ணர்,போதேந்திராள், மஹா பெரியவா போன்ற மஹான்கள் அவரவர்கள் அதிஷ்டானத்தில் பல காலம் சூக்ஷ்ம சரீரத்தில் இருப்பதை நம்மால் உணரமுடியும். அதனால் தான் அவர்கள் பூத சரீரத்தை சமாதியாக பத்திரப் படுத்துவது. புதைப்பது. எரிப்பதில்லை. இந்த உடல் இல்லாவிட்டாலும் சூக்ஷ்ம சரீரத்தோடு அவர்களால் எங்கும் சஞ்சரிக்க முடியும். அவர்களை அதனால் தான் ஜீவன் முக்தர்கள் என்கிறோம்.னும் பூத சரீரத்தில் இல்லாமல் சூக்ஷ்ம சரீரத்தோடு நம்மோடு இருப்பவர்கள்.

முக்தி, மோக்ஷம், நிர்வாணம் என்பதெல்லாம் இந்நிலையைக் குறிக்கும் வேறுவேறு வசீகரமான சொற்கள்.

ஆதி சங்கரரின் அத்வைத சாரத்தின் ஒரு துளியாக இந்த நிர்வாண தசகம் அமைந்திருக்கிறது. இன்று இன்னும் ரெண்டு ஸ்லோகங்களை அறிவோம்.

न शुक्लं न कृष्णं न रक्तं न पीतं न पीनं न कुञ्जं न ह्रस्वं न दीर्घम ।
अरूपं तथा ज्योतिराकारकत्वात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥५॥

Na shuklam na krishnam na raktham na peetham, Na peenam na kubjam na hruswam na deergam,
Na roopam thada jyothirakarakathwath, Thadekovasishta Shiva kevaloham. 5

ந சுக்லம் ந க்ருஷ்ணம் ந ரக்தம் ந பீதம் ந பீநம் ந குஞ்ஜம் ந ஹ்ரஸ்வம் ந தீர்கம் |
அரூபம் ததா ஜ்யோதிராகாரகத்வாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௫||

எனக்கு என்று ஒரு நிறம் உண்டா என்று நீங்கள் கேட்கலாம். நான் வெள்ளை நிறமோ, கருப்போ, சிவப்போ, மஞ்சளோ, எதுவும் இல்லையே. என் உயரம் பருமன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நான் உயரம் இல்லை, குட்டை இல்லை. குண்டும் இல்லை ஒல்லியுமில்லை. ஆகவே எந்த ஒரு நிறமோ, உருவமோ இல்லாத ஆத்மா. ஒளி ஸ்வரூபம். நான் என்றும் சாதாரண சிவன். தூக்கத்திலும் மறையாதவன். எல்லாம் அழிந்தாலும் அழியாத நிலையானவன். சதாசிவன்.

न जाग्रन्न मे स्वप्नको वा सुपुप्तिर्न विश्वो न वा तैजसः प्राज्ञको वा ।अविद्यात्मकत्वान्त्रयाणां तुरीयं तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥६॥

Na jagranna me swapnako vaa sushupthi,Ne viswo na vaa thaijasa pragnako vaa,Avidhyathmakathwath trayanam thureeyam,Thadekovasishta Shiva kevaloham. 6

ந ஜாக்ரந்ந மே ஸ்வப்நகோ வா ஸுபுப்திர்ந விச்வோ ந வா தைஜஸ: ப்ராஜ்ஞகோ வா |
அவித்யாத்மகத்வாந்த்ரயாணாம் துரீயம் ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௬||

எனக்கு விழிப்பு நிலை என்று தனியாக எதுவும் இல்லை. நான் கனவு காண்பவனும் அல்ல. எனக்கு தூக்கமும் கிடையாது. சுருக்கமாக சொன்னால் உங்கள் உலக வாழ்க்கையில் நீங்கள் காணும் உணர்வுகள் எதுவும் இல்லாதவன் நான். கனவில் தோன்றும் காட்சிகளில் யாரும் என்னைக் காண முடியாது. எந்த உணர்ச்சியில் என்னை தேடாதே. நான் மேலே சொன்னதெல்லாம் அவித்யா என்பார்களே அது தான். நான் அதல்ல.

உனக்கு புரியும்படி ஒரு விஷயம் சொல்கிறேன் கேள்.
விழிப்பு, கனவு, தூக்கம் என்ற வழக்கமான நீ அறிந்த மூன்றையும் கடந்து இன்னுமொன்று நாலாவதாக இருக்கிறது. அதற்கு பெயர் துரீய நிலை. அதில் இருப்பவன் நான். என் பெயர் அங்கே சிவன். தூக்கத்தையும் மற்றதையும் தாண்டி நிற்பவன். எது அகன்றாலும் அகலாமல் தனித்து நிலையாக நிற்பவன்.

ஆதிசங்கரர் ஒரு அலாதியான ப்ரம்ம ஞானி. எவ்வளவு உயர்ந்த விஷயங்களை எல்லாம் நமக்கு போதித்தவர். 32 வருஷங்களுக்குள் இவ்வளவு ஞானமா? அழகிய புன்சிரிப்பு உதிர்க்கும் ஆதி சங்கரரை கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சமாதி மந்திர் எனும் ஆலயத்தில் தரிசிக்கலாம்.
இன்னும் மீதி அடுத்த பதிவில் சொல்லட்டுமா?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;