
விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
ஸ்லோகங்கள் 171-180
सुषुप्तिकालेमनसि प्रलीने नैवास्ति किञ्चित्सकलप्रसिद्धेः । अतो मनःकल्पित एव पुंसः संसार एतस्य न वस्तुतोऽस्ति ॥ 171॥
suṣuptikālē manasi pralīnē naivāsti kiñchitsakalaprasiddhēḥ । atō manaḥkalpita ēva puṃsaḥ saṃsāra ētasya na vastutō’sti ॥ 171॥
ஸுஷுப்திகாலே மநஸி ப்ரலீநே நைவாஸ்தி கிஞ்சித்ஸகலப்ரஸித்³தே:⁴ । அதோ மந:கல்பித ஏவ பும்ஸ: ஸம்ஸார ஏதஸ்ய ந வஸ்துதோऽஸ்தி ॥ 171॥
அசந்து சுகமாக தூங்கினேன் என்று சொல்கிறோமே அந்த ஆழ்ந்த உறக்கத்தில் கனவு இல்லை, நினைவு இல்லை, உணர்வு இல்லை, உலகமே இல்லை, மனம் இருந்தால் தானே இதெல்லாம்… மனம் நிலைத்து செயலற்று நின்றாள் எஞ்சுவது ஆனந்தம் தான். அதை தான் சுகமாக என்று சொல்கிறோம்.
वायुनाऽऽनीयते मेघः पुनस्तेनैव नीयते। var वायुना नीयतेमेघः पुनस्तेनैव लीयते मनसा कल्प्यतेबन्धो मोक्षस्तेनैव कल्प्यते॥ 172
vāyunā”nīyatē mēghaḥ punastēnaiva nīyatē । (pāṭhabhēdaḥ – vāyunā nīyatē mēghaḥ punastēnaiva līyatē)
manasā kalpyatē bandhō mōkṣastēnaiva kalpyatē ॥ 172॥
வாயுநாऽऽநீயதே மேக:⁴ புநஸ்தேநைவ நீயதே । var வாயுநா நீயதே மேக:⁴ புநஸ்தேநைவ லீயதே மநஸா கல்ப்யதே ப³ந்தோ⁴ மோக்ஷஸ்தேநைவ கல்ப்யதே ॥ 172॥
வானத்தில் மேகங்கள் எப்படி, எதனால் அசைகிறது. காற்றினால் அது திசையற்று காற்று வீசும் திசையில் நகர்கிறது. காற்று மேகத்தைக் கூட்டுகிறது, அதுவே மேகத்தைக் கலக்கிறது. காற்றைப்போல் மனித னின் பற்றுகளைக் கூட்டுவதும், கலைப்பதும் மனம் தான். மனதின் உதவியோடு தான் மோக்ஷமும் கிட்டும்.
॥ देहादिसर्वविषये परिकल्प्य रागं बध्नाति तेन पुरुषं पशुवद्गुणेन । वैरस्यमत्र विषवत्सुविधाय पश्चाद् एनं विमोचयति तन्मन एव बन्धात्॥ 173
dēhādisarvaviṣayē parikalpya rāgaṃ badhnāti tēna puruṣaṃ paśuvadguṇēna । vairasyamatra viṣavat suvidhāya paśchād ēnaṃ vimōchayati tanmana ēva bandhāt ॥ 173॥
தே³ஹாதி³ஸர்வவிஷயே பரிகல்ப்ய ராக³ம் ப³த்⁴நாதி தேந புருஷம் பஶுவத்³கு³ணேந । வைரஸ்யமத்ர விஷவத் ஸுவிதா⁴ய பஶ்சாத்³ ஏநம் விமோசயதி தந்மந ஏவ ப³ந்தா⁴த் ॥ 173॥
மனம் நம்மை எப்படி தப்பு செய்ய வைக்கிறது தெரியுமா? முதலில் நமக்கு தேகத்தின் மேல் ஆசை வைக்க செய்யும் . அப்புறம் ஐம்புலன்களின் வழியில் அந்த உடம்பு நாய்க்குட்டி மாதிரி பின்னாலேயே செல்ல வைத்து அடிமையாக்கும். நம்மை பற்றுகளை விடாமல் தேட கட்டிப்போட்டுவிடும். இதே மனது தான் நாம் செய்வது தவறு, தப்பான வழியில் சென்று தடுமாறுகிறோம் என்று உணரவைத்து பற்றுக்களி லிருந்து விடுபட்டு மோக்ஷத்தை தேடவும் வழி வகுக்கும்.
तस्मान्मनः कारणमस्य जन्तोः बन्धस्य मोक्षस्य च वा विधाने। बन्धस्य हेतुर्मलिनं रजोगुणैः मोक्षस्य शुद्धं विरजस्तमस्कम्॥ 174
tasmānmanaḥ kāraṇamasya jantōḥ bandhasya mōkṣasya cha vā vidhānē ।bandhasya hēturmalinaṃ rajōguṇaiḥ mōkṣasya śuddhaṃ virajastamaskam ॥ 174॥
தஸ்மாந்மந: காரணமஸ்ய ஜந்தோ: ப³ந்த⁴ஸ்ய மோக்ஷஸ்ய ச வா விதா⁴நே । ப³ந்த⁴ஸ்ய ஹேதுர்மலிநம் ரஜோகு³ணை: மோக்ஷஸ்ய ஶுத்³த⁴ம் விரஜஸ்தமஸ்கம் ॥ 174॥
பற்றுக்களில் சிக்கி தவிப்பதற்கோ, பற்றுக்களிலிருந்து விடுபட்டு மோக்ஷம் அடையவோ ரெண்டுக்குமே மனம் தான் முக்கிய காரணம். ரஜோகுணங்களின் வசப்பட்டு பற்றுக்களில் சிக்கிக் கொள்கிறோம். ரஜோ தமோ குணங்களின் பிடியிலிருந்து விடுபட்டு சத்வகுணம் நிறைந்து மோக்ஷத்தை நாடவும் காரணமாக இருப்பது மனம் ஒன்றே தான்.
विवेकवैराग्यगुणातिरेका च्छुद्धत्वमासाद्य मनो विमुक्त्यै। भवत्यतो बुद्धिमतो मुमुक्षोस्ताभ्यां दृढाभ्यां भवितव्यमग्रे॥175॥
vivēkavairāgyaguṇātirēkā-chChuddhatvamāsādya manō vimuktyai ।bhavatyatō buddhimatō mumukṣō-stābhyāṃ dṛḍhābhyāṃ bhavitavyamagrē ॥ 175॥
விவேகவைராக்³யகு³ணாதிரேகாச்சு²த்³த⁴த்வமாஸாத்³ய மநோ விமுக்த்யை । ப⁴வத்யதோ பு³த்³தி⁴மதோ முமுக்ஷோஸ்தாப்⁴யாம் த்³ரு’டா⁴ப்⁴யாம் ப⁴விதவ்ய மக்³ரே ॥ 175॥
ஆகவே மனதை மிகுதியாக சத்வ குணத்தை நாடச் செய்வதன் மூலம் பற்றுகளிலிருந்து விடுபட முடியும். எல்லோருக்கும் இது சாத்தியம். ரிஷியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனத்தை கட்டுப்படுத்த முயன்றால் எல்லோறாலும் முடியும். விவேகிகள் இதை உணர்கிறார்கள்.
मनो नाम महाव्याघ्रो विषयारण्यभूमिषु। चरत्यत्र न गच्छन्तुसाधवो येमुमुक्षवः ॥ 176
manō nāma mahāvyāghrō viṣayāraṇyabhūmiṣu । charatyatra na gachChantu sādhavō yē mumukṣavaḥ ॥ 176॥
மநோ நாம மஹாவ்யாக்⁴ரோ விஷயாரண்யபூ⁴மிஷு । சரத்யத்ர ந க³ச்ச²ந்து ஸாத⁴வோ யே முமுக்ஷவ: ॥ 176॥
புலன்களால் துய்க்கும் இன்பம் என்பதே ஒரு பெரிய காடு. அதில் ஏகபோகமாக சுற்றி அதை ஆண்டு கொண்டி ருக்கும் பெரிய புலி தான் மனம். ஆத்ம ஞானம் வேண்டுவோர், மோக்ஷம் நாடுவோர் அந்த காட்டுக்குப் பக்கமே போகமாட்டார்கள்.
मनः प्रसूतेविषयानशेषान् स्थूलात्मना सूक्ष्मतया च भोक्तुः । शरीरवर्णाश्रमजातिभेदान् गुणक्रियाहेतुफलानि नित्यम्॥ 177
manaḥ prasūtē viṣayānaśēṣān sthūlātmanā sūkṣmatayā cha bhōktuḥ । śarīravarṇāśramajātibhēdān guṇakriyāhētu phalāni nityam ॥ 177॥
மந: ப்ரஸூதே விஷயாநஶேஷாந் ஸ்தூ²லாத்மநா ஸூக்ஷ்மதயா ச போ⁴க்து: ।ஸரீரவர்ணாஶ்ரம
ஜாதிபே⁴தா³ந் கு³ணக்ரியாஹேதுப²லாநி நித்யம் ॥ 177॥
மனது ஏன் குரங்கு எனப்படுகிறது? அதால் ஒரு வினாடி கூட சும்மா இருக்க முடியாது. புலனுணர்ச்சிகளை வாரி அனுபவிக்க செய்யும். அதற்கு எந்த வித்தியாசமும் கிடையாது.சகலமும் அனுபவிக்கச் செய்யும். அதற்கு அடிமையாக்கிவிடும். படிப்பு, குலம் , வயது, ஆண்பால், பெண்பால் எதுவும் கிடையாது அதற்கு.
असङ्गचिद्रूपममुंविमोह्य देहेन्द्रियप्राणगुणैर्निबद्ध्य । अहम्ममेति भ्रमयत्यजस्रं मनः स्वकृत्येषु फलोपभुक्तिषु॥178
asaṅgachidrūpamamuṃ vimōhya dēhēndriyaprāṇaguṇairnibaddhya ।ahammamēti bhramayatyajasraṃ manaḥ svakṛtyēṣu phalōpa bhuktiṣu ॥ 178॥
அஸங்க³சித்³ரூபமமும் விமோஹ்ய தே³ஹேந்த் ³ரியப்ராணகு³ணைர்நிப³த்³த்⁴ய । அஹம்மமேதி ப்⁴ரமயத்யஜஸ்ரம் மந: ஸ்வக்ரு’த்யேஷு ப²லோப பு⁴க்திஷு ॥ 178॥
மனது சக்தி வாய்ந்தது. இல்லாததை இருப்பதாக நம்ப வைக்கும். புத்தியை மழுங்கச் செய்யும். உடம்பைத் தனது இச்சைக்கு ஆடவைக்கும். அலைந்து கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் நிற்காது. இந்த உடம்பு தான் சகலமும், அது தான் எல்லாமே, நான் என்பது இந்த உடம்பு தான் என்று ஏமாற்றும்.
अध्यासदोषात्पुरुषस्य संसृतिः var अध्यासयोगात् अध्यासबन्धस्त्वमुनैव कल्पितः । रजस्तमोदोषवतोऽविवेकिनो जन्मादिदुःखस्य निदानमेतत्॥179
adhyāsadōṣātpuruṣasya saṃsṛtiḥ (pāṭhabhēdaḥ – adhyāsayōgāt) adhyāsabandhastvamunaiva kalpitaḥ rajastamōdōṣava tō’vivēkinō janmādiduḥkhasya nidānamētat ॥ 179॥
அத்⁴யாஸதோ³ஷாத்புருஷஸ்ய ஸம்ஸ்ரு’தி: var அத்⁴யாஸயோகா³த் அத்⁴யாஸப³ந்த⁴ஸ்த்வமுநைவ கல்பித: । ரஜஸ்தமோதோ³ஷவதோऽவிவேகிநோ ஜந்மாதி³து:³க²ஸ்ய நிதா³நமேதத் ॥ 179
மனிதன் மாறி மாறி தோற்றமளிப்பது, சிந்திப்பது, செயல்படுத்துவது எல்லாமே மனத்தின் வெளிப்பாடு தான். ஒரு உண்மை யை தனது பிம்பத்தால் மறைத்து அது தான் உண்மை, நிஜம் என்று நம்மை வழி நடத்து வது, நம்ப வைப்பது தான் மாயை எனும் அதன் செயல். அதன் பயனாக ஜனன மரண துன்பம் தொடர்ந்து சந்திக்க வேண்டி இருக்கிறது. ரஜோ தமோ குணத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறோம்.
अतः प्राहुर्मनोऽविद्यां पण्डितास्तत्त्वदर्शिनः । येनैव भ्राम्यतेविश्वं वायुनेवाभ्रमण्डलम् ॥ 180
ataḥ prāhurmanō’vidyāṃ paṇḍitāstattvadarśinaḥ । yēnaiva bhrāmyatē viśvaṃ vāyunēvābhramaṇḍalam ॥ 180॥
அத: ப்ராஹுர்மநோऽவித்³யாம் பண்டி³தாஸ்தத் த்வத³ர்ஶிந: । யேநைவ ப்⁴ராம்யதே விஶ்வம் வாயுநேவாப்⁴ரமண்ட³லம் ॥ 180॥
சிறந்த ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள், கற்றோர்கள் தவ ஸ்ரேஷ்டர்கள், மனதை அதனால் தான் அவித்யா, ஞானமற்றது, அஞ்ஞானம், என்று சொல்லி அதற்கு முக்யத்வம் கொடுப்பதில்லை. பிரபஞ்சமே இப்படி ஒரு மாயையில் மூழ்கி பொய்த் தோற்றம் அளிக்கிறது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



