ANATHMA VIGHARANA PRAKARANAM – ADHI SANKARAR – J K SIVAN

அனாத்ம  விகரண ப்ரகரணம் –    நங்கநல்லூர்   J K  SIVAN 

ஆதி சங்கரர் 

நாம்  எத்தனையாவது ஜென்மத்தில் இப்போது  இருக்கிறோம் என்று எவராலும் கண்டே பிடிக்க முடியாது. இன்னும் எத்தனை  பாக்கி இருக்கிறது என்பதும் ஒரு தெரியாத திரை போட்ட விஷயம்.  ஒன்றை  மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். நாம் செய்த  பாப புண்ய கர்மாக்களுக்கு தகுந்தவாறு நமது ஜென்மங்கள் அமைகிறது. ஏதோ ஒரு புண்யம் செய்து  தேள், பாம்பு, பல்லி  பிறவி எடுக்காமல் மானிடர்களாக பிறந்திருக்கிறோம்.  கிடைத்தற்க்கரிய  இந்த பிறவி எடுத்திருப்பதால் இதில் முடிந்தவாறு நல்ல காரியங்களையே செய்தொமானால்  இனி வரும் பிறவிகள் குறையவோ, மீண்டும் மனித பிறவி எடுக்கவோ சௌகர்யமாக இருக்கும். 

 
நம்முடைய முதல் தவறு நாம்  இந்த  உடம்பு, தேகம் என்று நினைத்துக் கொண்டிருப்பது தான். இந்த உடல் ஒரு கூடு. இதில் அருமையான ஒரு வஸ்து , அழிவற்றது குடியிருக்கிறதே, ஆத்மா, என்பது அது தான் நாம். நமக்கு அழிவே இல்லை. இந்த உடம்பு கர்மாக்களுக்கு ஏற்ப  கொடுக்கப்பட்டது என்றாலும் உள்ளே  அதை கவனிக்க, சாக்ஷியாக  இருப்பது தான் ஆத்மா. பேர், உருவம், ஆண்பால் பெண்பால், வயது எதுவுமே கிடையாது அதற்கு. 

எங்கும்  வியாபித்திருக்கும் ப்ரம்மம், ஒவ்வொரு ஜீவனிலும் தன்னை புகுத்திக் கொண்டிருக்கிறது.  ஆதி சங்கரர்  ஆத்மாவை நினையுங்கள், அனாத்மாவாக இருக்கவேண்டாம் என்று 32 வயதுக்குள் மூவாயிரஅனாத்ம விகரண ப்ரகரணம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்நாம் எத்தனையாவது ஜென்மத்தில் இப்போது இருக்கிறோம் என்று எவராலும் கண்டே பிடிக்க முடியாது. இன்னும் எத்தனை பாக்கி இருக்கிறது என்பதும் ஒரு தெரியாத திரை போட்ட விஷயம். ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். நாம் செய்த பாப புண்ய கர்மாக்களுக்கு தகுந்தவாறு நமது ஜென்மங்கள் அமைகிறது. ஏதோ ஒரு புண்யம் செய்து தேள், பாம்பு, பல்லி பிறவி எடுக்காமல் மானிடர்களாக பிறந்திருக்கிறோம். கிடைத்தற்க்கரிய இந்த பிறவி எடுத்திருப்பதால் இதில் முடிந்தவாறு நல்ல காரியங்களையே செய்தொமானால் இனி வரும் பிறவிகள் குறையவோ, மீண்டும் மனித பிறவி எடுக்கவோ சௌகர்யமாக இருக்கும்.

நம்முடைய முதல் தவறு நாம் இந்த உடம்பு, தேகம் என்று நினைத்துக் கொண்டிருப்பது தான். இந்த உடல் ஒரு கூடு. இதில் அருமையான ஒரு வஸ்து , அழிவற்றது குடியிருக்கிறதே, ஆத்மா, என்பது அது தான் நாம். நமக்கு அழிவே இல்லை. இந்த உடம்பு கர்மாக்களுக்கு ஏற்ப கொடுக்கப்பட்டது என்றாலும் உள்ளே அதை கவனிக்க, சாக்ஷியாக இருப்பது தான் ஆத்மா. பேர், உருவம், ஆண்பால் பெண்பால், வயது எதுவுமே கிடையாது அதற்கு.

எங்கும் வியாபித்திருக்கும் ப்ரம்மம், ஒவ்வொரு ஜீவனிலும் தன்னை புகுத்திக் கொண்டிருக்கிறது. ஆதி சங்கரர் ஆத்மாவை நினையுங்கள், அனாத்மாவாக இருக்கவேண்டாம் என்று 32 வயதுக்குள் மூவாயிரம் தடவை சொல்லி இருந்தும், இன்னும் நமக்கு அது புரியவில்லை,தெரியவில்லை. இதோ ஒரு அற்புத ஸ்தோத்ரம். அனாத்மாவாக இருக்கவேண்டாம் என்ற அற்புத ஸ்லோகங்கள்.

சின்னதோ பெரியதோ இந்த ஸ்லோகங்களை ஒருதரமாவது அறிவோம். அதை புரிந்துகொண்டு அவர் காட்டும் வழியிலோ, அவர் உபதேசிக்கும் நல்வார்த்தைகளில் மனதை ஈடுபடுத்துவோம், உயர்வோம்.

உபநிஷத் மஹாவாக்யம் எது உண்மையோ,ஸத்யமோ அது நீ, தத்வமஸி, அஹம் ப்ரம்மாஸ்மி. நாம் பிரம்மத்தின் அம்சம், அதாகவே இருக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறது. இருந்தாலும் நமக்கு ரெண்டு காது கொடுத்திருப்பதால் ஒரு காதில் வாங்கி நேர்கோட்டில் அடுத்த காது வழியாக வெளியே விட்டுவிடுகிறோம்.முதலில் காதுக்கு ஒரு கதவு வைத்து அதை மூடவேண்டும். ரமணர் வாழ்நாள் பூரா உபதேசித்த ”நான் யார்?” என்ற ஆராய்ச்சியை, விசாரத்தை நாம் தொடுவதில்லை.

लब्धा विद्या राजमान्या ततः किं प्राप्ता संपत्प्राभवाढ्या ततः किम् ।
भुक्ता नारी सुन्दराङ्गी ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१॥

Labdha Vidhya rajamanya , Thatha kim, Praptha sampath prabhavadayam Thatha kim,
Buktha Nari sundarangi, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 1

நிறைய படித்தவன், நன்றாக கற்றவன், பண்டிதன், என்று ராஜா போற்றி அரசவையில் மேலே ஷால் போர்த்தி, கிரீடம் வைத்தால் என்ன பிரயோஜனம்? எவ்வளவு செல்வம், ஏக்கரா கணக்கில் நில புலம் இருந்து என்ன பிரயோஜனம்? ஊரே பெரிய ஆள் என்று புகழ்ந்து என்ன லாபம்? உலகத்திலேயே சிறந்த அழகி என் மனைவி என்று அவன் பெருமைப்பட்டு என்ன சார் லாபம்? நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

केयूराद्यैर्भूषितो वा ततः किं कौशेयाद्यैरावृतो वा ततः किम् ।
तृप्तो मृष्टान्नादिना वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥२॥

Keyuradhyair bhooshitho va , Thatha kim, Kauseyadhyai aavrutho va, Thatha kim,
Thruptho mrushtanna dheena va, Thatha kim,Yena swamathma naiva sakshathkrutho abhooth. 2

தங்கத்தில் கனமாக கழுத்து வலிக்க செயின்கள் மாட்டிக்கொண்டாலோ, காய் நிறைய கங்கணங்கள், பாட்டு பீதாம்பர உடைகள் பளபளக்க உடுத்தோ, வேளா வேளைக்கு வாழை இலை நிறைய பல பதார்த்தங்கள் பக்ஷணங்கள் உண்டோ என்ன சார் பிரயோஜனம். நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

दृष्टा नाना चारुदेशास्ततः किं पुष्टाश्चेष्टा बन्धुवर्गास्ततः किम् ।
नष्टं दारिद्र्यादि दुःखं ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥३॥

Drushta nana charu desasthatha kim,Pushtascheshta bandhu vargha sthatha kim,
Nashtam daridryadhi dukhaam sthatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 3

எனக்கு இருபது பாஸ்போர்ட் புஸ்தகம் ரொம்பி விட்டது. இப்போது 21வது. அத்தனை ஊர்களுக்கு தேசங்களுக்கு போய்ட்டு வந்திருக்கிறேன்… எனக்கு எந்த பக்கம் திரும்பினாலும் சொந்தக்காரங்கள்… அதென்னவோ சார், சின்ன வயசிலிருந்தே வறுமை, பசி என்றால் என்ன வென்றே தெரியாது…. கேட்டதெல்லாம் டக் டக்குனு கிடைச்சுண்டு வருது… இப்படியெல்லாம் பீற்றிக்கொண்டு என்ன பலன். எது அவசியமோ அது தெரியவில்லையே… நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

स्नातं तीर्थे जह्‌नुजादौ ततः किं दानं दत्तं द्व्यष्टसंख्यं ततः किम् ।
जप्ता मन्त्राः कोटिशो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥४॥

Snathastheertha jahnu jadhou sthatha kim, Dhanam datham dravya ashtashta asankhyam sthatha kim,
Japtha manthraa koteeso vaasthatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 4

கங்கையிலே வருஷா வருஷம் போய் குளிச்சிருக்கேன். பதினாறு வகை தானம் பண்ணி இருக்கிறேன் சார். லக்ஷம் தடவை நாம ஜெபம் பண்ணி இருக்கிறேன். என்ன யூஸ்? நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

गोत्रं सम्यग्भूषितं वा ततः किं गात्रं भस्माच्छादितं वा ततः किम् ।
रुद्राक्षादिः संधृतो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥५॥

Gothram samyakh bhooshitham va sthatha kim,Gathram basmaschaditham va strhatha kim,
Rudrakshadhi sadhatho va sthatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 5

என் சொந்தக்காரன் எவனும் ஏழையே இல்லை. எல்லா பயலும் நிறைய வீடு நிலம், ரொக்கம்னு வச்சிருக்கான். பணத்தில் மிதக்கிறவனுங்க. நகை நட்டு ரொம்ப இருக்கு. எப்போதும் உடம்பெல்லாம் வெள்ளையா விபூதி பூச்சு. கழுத்திலே கையிலே ருத்திராக்ஷ மாலை. என்ன பலன்? நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

अन्नैर्विप्रास्तर्पिता वा ततः किं यज्ञैर्देवास्तोषिता वा ततः किम् ।
कीर्त्या व्याप्ताः सर्वलोकास्ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥६॥

Annair viprastharpitha va sthatha kim, Yagnair deva sthoshitho va sthatha kim,
Keerthya vyaptha sarvalokaisthatha kim,Yena swamathma naiva sakshathkrutho abhooth. 6

வீட்டிலே விசேஷம் என்றால் பத்து ப்ராமணனையாவது கூப்பிட்டு சாப்பாடு போடுவேன். ஹோமம் வளர்ப்பேன். என் புகழ் எல்லா ஊரிலேயும் பேசுவா. என்ன பிரயோஜனம்? நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

कायः क्लिष्टश्चोपवासैस्ततः किं लब्धाः पुत्राः स्वीयपत्न्यास्ततः किम् ।
प्राणायामः साधितो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥७॥

Kaya klishta schoupavasai sthatha kim, Labdha puthra sweeyapathnyasthatha kim,
Pranayama sadhitho va sthatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 7

நிறைய நாள் நான் உபவாசம் இருக்கிறவன். ஒரு ஏகாதசி விட்டதில்லை. அருமையான மூணு பிள்ளை பெத்திருக்கேன். ஒரு நாள் விடாம ப்ராணாயணம் பண்ணுவேன். ஹுஹும்… நோ குட். NO GOOD. நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

यद्धे शत्रुर्निर्जितो वा ततः किं भूयो मित्रैः पूरितो वा ततः किम् ।
योगैः प्राप्ताः सिद्धयो वा तथ किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥८॥

Yudhe shathru nirjitho va Thatha kim, Bhooyo mithrair pooritho va Thatha kim,
Yogi praptha sidhayo va Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 8

எனக்கு ஒரு எதிரி கிடையாது. எங்கேயும் எனக்கு தான் வெற்றி. கை சொடுக்கினால் போதும். ஆயிரம் நண்பர்கள் வந்து நிற்பார்கள். யோகா பண்ணுவேன். அத்தனை சக்தியும் எனக்கு உண்டு…. ஓஹோ… சிரிப்பு தான் வருது…நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

अब्धिः पद्भ्यां लङ्‌घ्रितो वा ततः किं वायुः कुम्भे स्थापितो वा ततः किम् ।
मेरुः पाणावुद्‌धृतो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥९॥

Abdhih Padbhyám lañghrito vá tatah kim váyuh kumbhe sthápito vá tatah kim
Meruh PáNávuddhruto vá tatah kim Yena svátmá naiva sakshatkruto’bhüt.(9)

என்னாலே சமுத்ரத்துக்கு மேலே நடக்க முடியும். ஹடயோகம் எக்ஸ்பர்ட் . மூச்சு மணிக்கணக்கா அடக்குவேன். இடது கையாலே மேரு மலையை தூக்கி அசைப்பேன். இது முக்கியமா? நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

क्ष्वेलः पीतो दुग्धवद्दा ततः किं वह्निर्जग्धो लाजवद्दा ततः किम् ।
प्राप्तश्चारः पक्षिवत्खे ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१०॥

Kshwela peetho dugdha vadha , Thatha kim,Vahnirjagdho laja vadha , Thatha kim,
Prapthaschara pakshi vathkhe, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 10

விஷத்தை பால் மாதிரி லோட்டா லோட்டாவா குடிச்சா கூட என்னை ஒண்ணும் பண்ணாது.நெருப்பு துண்டை வடை மாதிரி கடிச்சு முழுங்குவேன். கருடன் மாதிரி நானும் மரத்துக்கு மேலே பார்ப்பேன். என்ன பயன் அதனால் ? நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

बद्धाः सम्यक्पावकाद्यास्ततः किं साक्षद्दिद्धा लोहवर्यास्ततः किम् ।
लब्धो निक्षेपोऽञ्जनाद्यैस्ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥११॥

Badha samyak pavakaadhyasthatha, Thatha kim,Sakshadhidha loha varyas , Thatha kim,
Labdho nikshepo anjanadhyous, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 11

நெருப்பை கையால் பிடிச்சு மூட்டை கட்டி அக்குள் ளே வைச்சுப்பேன். ஒரே குத்து, இரும்பு துண்டு விரிஞ்சு சுக்கல் சுக்களாகும். நான் வெற்றிலை மேலே மை வைச்சு பார்த்தா எங்கெல்லாம் புதையல் இருக்குன்னு டக்குனு கண்டுபிடிச்சுடுவேன். மஹா வீரனா இவன்?? ஹாஹாஹா …. நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

भूपेन्द्रत्वं प्राप्तमुर्व्याम ततः किं देवेन्द्रत्वं संभृतं वा ततः किम् ।
मुण्डीन्द्रत्वं चोपलब्धं ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१२॥

Bhoopendrasthwam praptha murvya, Thatha kim, Devendrathwam sambrutho vaa, Thatha kim,
Mundeendrathwam chopa labdham, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 12

சகல தேசங்களுக்கும் ராஜா, ராஜாதி ராஜன், சக்ரவர்த்தியாக இருக்கட்டுமே. தேவர்களை எல்லாம் அடக்கி விண் மண் பாதாளம் எல்லா உலகங்களிலும் உள்ளவர்களுக்கு தலைவன். ரிஷிகளுக்கு எல்லாம் முதல்வன். இத்தனை பெருமை இருக்கு என்கிறான்…? நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

मन्त्रैः सर्वं स्तम्भितो वा ततः किं बाणैर्लक्ष्यो भेदितो वा ततः किम् ।
कालज्ञानं चाऽपि लब्धं ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१३॥

Manthrai sarva sthambhitho va, Thatha kim,Banair lakshya bedhitho va, Thatha kim,
Kala gnanam cha aapi labdham, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 13

மந்திரத்தால் மாங்கா விழ வைப்பானாம். உச்சாணிக்கிளையிலே இருக்கிற கொய்யாக்காயை வச்சிக்குறி தவறாமல் கல்லால் அடிப்பாகம். கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் அதிலெல்லாம் நடப்பதை அப்படியே சொல்வானாம். ஓஹோ அப்படியா….. அவனைப்பற்றி தெரியுமா அவனுக்கு? நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

कामातङ्‌कः खण्डितो वा ततः किं कोपावेशः कुण्ठितो वा ततः किम् ।
लोभाश्लेषो वर्जितो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१४॥

Kamathanga ganditho va, Thatha kim,Kopavesa kunditho va, Thatha kim,
Lobha slesha varjitho va, Thatha kim,Yena swamathma naiva sakshathkrutho abhooth. 14

எனக்கு கவலைகள் கிடையாது. கோப தாபங்கள் கிட்டேயே வராது. பொறாமை என்றால் என்னவென்றே தெரியாது என்றெல்லாம் சொல்கிறார் ஒரு பண்டிதர் எல்லோரும் கை தட்டவேண்டும் என்றா? உண்மையிலேயே அப்படியா? இருந்தாலும் நான் யார் என்று அவர் இதுவரை முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவரை என்ன என்பது?

मोहध्वान्थ पेषितो वा ततः किं जातो भूमौ निर्मदो वा ततः किम् ।
मात्सर्यार्तिर्मीलिता वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१५॥

Moha dwantha poshitho va, Thatha kim, Jathou bhoomou nirmadho va, Thatha kim,
Mathsaryadhir meelitho va, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 15

பொய்யான பிம்பங்களை நம்பமாட்டேன். எதிலும் மயங்காதவன். எனக்கு தற்பெருமை, கர்வம் கொஞ்சமும் இல்லை. எவரிடத்திலும் பொறாமை கிடையாதே. இப்படி எல்லா நல்ல குண்டங்களும் இருந்தால் போதாதே. நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

धातुर्लोकः साधितो वा ततः किं विष्णोर्लोको वीक्षितो वा ततः किम् ।
शंभोर्लोकः शासितो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१६॥

Dhathur loka sadhitho va, Thatha kim,Vishnur loko veekshitho va, Thatha kim,
Shambhor loka sasitho va, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 16

நான் ப்ரம்மலோகத்துக்கு போய் வரக்கூடியவன். மஹா விஷ்ணுவை வைகுண்டத்தில் சந்தித்திருக்கிறேன். கைலாசத்துக்கு போனால் சிவன் வாடா என்று கூப்பிடுவார். இப்படிப்பட்ட தவ ஸ்ரேஷ்டனாக இருந்தாலும் நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால் யார் அது, எங்கே காட்டு என்று தேடுபவனை என்ன சொல்வது?

यस्येदं ह्रदये सम्यगनात्मश्रीविगर्हणम् । सदोदेति स एवात्मसाक्षात्कारस्य भाजनम् ॥१७॥
Yasyedham hrudhaye samyaghanathma Sri vigarhanam, SAdho dhethi swatha sakshathkarasya bhajanam. 17

ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறேன். எவனொருவன் இதயம் சதா ஆத்ம சிந்தனையில் ஈடுபடுகிறதோ, அவன் நிச்சயம் ஆத்மதரிசனம் பெறுவான்.

अन्ये तु मायिकजगद्‌भ्रान्तिव्यामोहमोहिताः। न तेषां जायते क्वाऽपि स्वात्मसाक्षात्कृतिर्भुवि ॥१८॥
Anye tu máyikajagadbhránti vyámoha mohitáh Na teshám jáyate kvápi svátma sákshátkrutirbhuvi(18)

மற்றவர்கள் யாராக இருந்தாலும் உலக மாயையில் உழல்பவர்கள். மண்ணுலகில் இப்படி உழல்பவர்களுக்கும் ப்ரம்மத்துக்கும் வெகு தூரம். ஆத்மாவை உணராதவனை விட்டுத்தள்ளு. ஒரு கணம் ஒரு வினாடி அவனோடு பழகினாலும் அது வீணான நேரம். ஆதிசங்கரரின் இந்த ஸ்லோகங்கள் ரொம்ப அழகாக தலையில் குட்டி நமக்கு உணர்த்துவதை இப்போதாவது புரிந்து கொள்வோம். எந்த வாத்யார் இவ்வளவு அழகாக உதாரணத்துடன் விளக்கி ஆத்மா பற்றி சொல்லி கொடுப்பார்?
.
ம் தடவை சொல்லி இருந்தும், இன்னும் நமக்கு அது புரியவில்லை,தெரியவில்லை.  இதோ ஒரு அற்புத  ஸ்தோத்ரம்.  அனாத்மாவாக இருக்கவேண்டாம் என்ற அற்புத ஸ்லோகங்கள்.

 
சின்னதோ பெரியதோ இந்த ஸ்லோகங்களை ஒருதரமாவது அறிவோம். அதை புரிந்துகொண்டு அவர் காட்டும் வழியிலோ, அவர் உபதேசிக்கும் நல்வார்த்தைகளில் மனதை ஈடுபடுத்துவோம், உயர்வோம். 
 
உபநிஷத் மஹாவாக்யம் எது உண்மையோ,ஸத்யமோ  அது நீ, தத்வமஸி, அஹம் ப்ரம்மாஸ்மி. நாம்  பிரம்மத்தின் அம்சம், அதாகவே இருக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறது. இருந்தாலும் நமக்கு ரெண்டு காது கொடுத்திருப்பதால்  ஒரு காதில் வாங்கி நேர்கோட்டில் அடுத்த காது வழியாக வெளியே விட்டுவிடுகிறோம்.முதலில் காதுக்கு ஒரு கதவு வைத்து அதை மூடவேண்டும்.  ரமணர்  வாழ்நாள் பூரா  உபதேசித்த  ”நான் யார்?” என்ற ஆராய்ச்சியை, விசாரத்தை  நாம் தொடுவதில்லை.
 
लब्धा विद्या राजमान्या ततः किं  प्राप्ता संपत्प्राभवाढ्या ततः किम् ।

भुक्ता नारी सुन्दराङ्गी ततः किं  येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१॥

Labdha Vidhya rajamanya , Thatha kim, Praptha sampath prabhavadayam Thatha kim,
Buktha Nari sundarangi, Thatha kim,  Yena swamathma naiva sakshathkrutho abhooth. 1

நிறைய படித்தவன், நன்றாக கற்றவன், பண்டிதன், என்று ராஜா போற்றி அரசவையில் மேலே  ஷால் போர்த்தி, கிரீடம் வைத்தால் என்ன பிரயோஜனம்?  எவ்வளவு செல்வம், ஏக்கரா கணக்கில் நில புலம்  இருந்து என்ன பிரயோஜனம்?  ஊரே  பெரிய  ஆள் என்று புகழ்ந்து என்ன லாபம்?  உலகத்திலேயே சிறந்த அழகி என் மனைவி என்று அவன் பெருமைப்பட்டு என்ன சார்  லாபம்? நான் யார் என்று அவன் முதலில்  தன்னைத் தானே கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது?


केयूराद्यैर्भूषितो वा ततः किं  कौशेयाद्यैरावृतो वा ततः किम् ।
तृप्तो मृष्टान्नादिना वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥२॥
Keyuradhyair bhooshitho va , Thatha kim, Kauseyadhyai aavrutho va, Thatha kim,
Thruptho mrushtanna dheena va, Thatha kim,Yena swamathma naiva sakshathkrutho abhooth. 2

தங்கத்தில் கனமாக  கழுத்து வலிக்க  செயின்கள் மாட்டிக்கொண்டாலோ, காய் நிறைய கங்கணங்கள்,  பாட்டு பீதாம்பர உடைகள் பளபளக்க உடுத்தோ, வேளா வேளைக்கு   வாழை  இலை  நிறைய பல  பதார்த்தங்கள் பக்ஷணங்கள் உண்டோ என்ன சார் பிரயோஜனம்.  

 நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது?

दृष्टा नाना चारुदेशास्ततः किं  पुष्टाश्चेष्टा बन्धुवर्गास्ततः किम् ।
नष्टं दारिद्र्यादि दुःखं ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥३॥
Drushta nana charu desasthatha kim,Pushtascheshta bandhu vargha sthatha kim,
Nashtam daridryadhi dukhaam sthatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 3

எனக்கு  இருபது பாஸ்போர்ட்  புஸ்தகம்  ரொம்பி விட்டது. இப்போது 21வது.  அத்தனை ஊர்களுக்கு தேசங்களுக்கு  போய்ட்டு வந்திருக்கிறேன்… எனக்கு எந்த பக்கம் திரும்பினாலும் சொந்தக்காரங்கள்… அதென்னவோ சார், சின்ன வயசிலிருந்தே  வறுமை,  பசி என்றால்  என்ன வென்றே  தெரியாது…. கேட்டதெல்லாம் டக் டக்குனு  கிடைச்சுண்டு வருது…  இப்படியெல்லாம் பீற்றிக்கொண்டு என்ன பலன். எது அவசியமோ அது தெரியவில்லையே…

 நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? 

 
स्नातं तीर्थे जह्‌नुजादौ ततः किं  दानं दत्तं द्व्यष्टसंख्यं ततः किम् ।
जप्ता मन्त्राः कोटिशो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥४॥
Snathastheertha jahnu jadhou sthatha kim, Dhanam datham dravya ashtashta asankhyam sthatha kim,
Japtha manthraa koteeso vaasthatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 4

கங்கையிலே  வருஷா வருஷம் போய்  குளிச்சிருக்கேன்.  பதினாறு வகை  தானம் பண்ணி இருக்கிறேன் சார்.   லக்ஷம் தடவை  நாம ஜெபம் பண்ணி இருக்கிறேன். என்ன யூஸ்?  

 நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? 

गोत्रं सम्यग्भूषितं वा ततः किं गात्रं भस्माच्छादितं वा ततः किम् ।
रुद्राक्षादिः संधृतो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥५॥
Gothram samyakh bhooshitham va sthatha kim,Gathram basmaschaditham va strhatha kim,
Rudrakshadhi sadhatho va sthatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 5

என் சொந்தக்காரன் எவனும் ஏழையே  இல்லை. எல்லா பயலும்  நிறைய  வீடு  நிலம், ரொக்கம்னு வச்சிருக்கான். பணத்தில் மிதக்கிறவனுங்க. நகை நட்டு ரொம்ப இருக்கு.  எப்போதும் உடம்பெல்லாம் வெள்ளையா  விபூதி பூச்சு.  கழுத்திலே  கையிலே  ருத்திராக்ஷ மாலை.  என்ன பலன்? 

 நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? अन्नैर्विप्रास्तर्पिता वा ततः किं  यज्ञैर्देवास्तोषिता वा ततः किम् ।
कीर्त्या व्याप्ताः सर्वलोकास्ततः किं  येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥६॥

Annair viprastharpitha va sthatha kim, Yagnair deva sthoshitho va sthatha kim,
Keerthya vyaptha sarvalokaisthatha kim,Yena swamathma naiva sakshathkrutho abhooth. 6

வீட்டிலே  விசேஷம் என்றால்  பத்து ப்ராமணனையாவது கூப்பிட்டு சாப்பாடு போடுவேன்.  ஹோமம் வளர்ப்பேன். என் புகழ் எல்லா ஊரிலேயும் பேசுவா.  என்ன பிரயோஜனம்? 

 நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? 

कायः क्लिष्टश्चोपवासैस्ततः किं  लब्धाः पुत्राः स्वीयपत्न्यास्ततः किम् ।
प्राणायामः साधितो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥७॥


Kaya klishta schoupavasai sthatha kim, Labdha puthra sweeyapathnyasthatha kim,
Pranayama sadhitho va sthatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 7

நிறைய நாள் நான் உபவாசம் இருக்கிறவன். ஒரு ஏகாதசி விட்டதில்லை.  அருமையான  மூணு பிள்ளை பெத்திருக்கேன்.  ஒரு நாள் விடாம  ப்ராணாயணம் பண்ணுவேன்.   ஹுஹும்…  நோ  குட்.  NO GOOD. 
 நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? 

यद्धे शत्रुर्निर्जितो वा ततः किं  भूयो मित्रैः पूरितो वा ततः किम् ।
योगैः प्राप्ताः सिद्धयो वा तथ किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥८॥
Yudhe shathru nirjitho va Thatha kim, Bhooyo mithrair pooritho va Thatha kim,
Yogi praptha sidhayo va Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 8

எனக்கு ஒரு எதிரி கிடையாது. எங்கேயும் எனக்கு தான் வெற்றி. கை சொடுக்கினால் போதும். ஆயிரம் நண்பர்கள் வந்து நிற்பார்கள். யோகா  பண்ணுவேன். அத்தனை சக்தியும்  எனக்கு உண்டு…. ஓஹோ… சிரிப்பு தான் வருது…

நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? 

 
अब्धिः पद्भ्यां लङ्‌घ्रितो वा ततः किं  वायुः कुम्भे स्थापितो वा ततः किम् ।
मेरुः पाणावुद्‌धृतो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥९॥
Abdhih Padbhyám lañghrito vá tatah kim  váyuh kumbhe sthápito vá tatah kim
Meruh PáNávuddhruto vá tatah kim Yena svátmá naiva sakshatkruto’bhüt.(9)

என்னாலே  சமுத்ரத்துக்கு மேலே  நடக்க முடியும். ஹடயோகம்  எக்ஸ்பர்ட் . மூச்சு மணிக்கணக்கா அடக்குவேன்.   இடது கையாலே  மேரு மலையை தூக்கி  அசைப்பேன். இது முக்கியமா? 

 நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? 


क्ष्वेलः पीतो दुग्धवद्दा ततः किं  वह्निर्जग्धो लाजवद्दा ततः किम् ।
प्राप्तश्चारः पक्षिवत्खे ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१०॥
Kshwela peetho dugdha vadha , Thatha kim,Vahnirjagdho laja vadha , Thatha kim,
Prapthaschara pakshi vathkhe, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 10

விஷத்தை பால் மாதிரி லோட்டா லோட்டாவா  குடிச்சா  கூட என்னை ஒண்ணும்  பண்ணாது.நெருப்பு துண்டை வடை மாதிரி கடிச்சு முழுங்குவேன்.   கருடன் மாதிரி நானும்   மரத்துக்கு மேலே  பார்ப்பேன்.  என்ன பயன் அதனால் ? 

நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? 

 
बद्धाः सम्यक्पावकाद्यास्ततः किं  साक्षद्दिद्धा लोहवर्यास्ततः किम् ।
लब्धो निक्षेपोऽञ्जनाद्यैस्ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥११॥
Badha samyak pavakaadhyasthatha, Thatha kim,Sakshadhidha loha varyas , Thatha kim,
Labdho nikshepo anjanadhyous, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 11

நெருப்பை கையால்  பிடிச்சு மூட்டை கட்டி அக்குள் ளே  வைச்சுப்பேன்.  ஒரே  குத்து, இரும்பு துண்டு விரிஞ்சு சுக்கல் சுக்களாகும்.  நான்   வெற்றிலை மேலே மை வைச்சு பார்த்தா  எங்கெல்லாம்  புதையல் இருக்குன்னு டக்குனு கண்டுபிடிச்சுடுவேன். மஹா வீரனா இவன்??  ஹாஹாஹா …. 

நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? 


भूपेन्द्रत्वं प्राप्तमुर्व्याम ततः किं देवेन्द्रत्वं संभृतं वा ततः किम् ।
मुण्डीन्द्रत्वं चोपलब्धं ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१२॥
Bhoopendrasthwam praptha murvya, Thatha kim, Devendrathwam sambrutho vaa, Thatha kim,
Mundeendrathwam chopa labdham, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 12


சகல  தேசங்களுக்கும் ராஜா, ராஜாதி ராஜன், சக்ரவர்த்தியாக இருக்கட்டுமே.  தேவர்களை எல்லாம் அடக்கி விண்   மண் பாதாளம் எல்லா உலகங்களிலும் உள்ளவர்களுக்கு தலைவன்.  ரிஷிகளுக்கு எல்லாம் முதல்வன். இத்தனை பெருமை  இருக்கு என்கிறான்…?
  நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? 

मन्त्रैः सर्वं स्तम्भितो वा ततः किं बाणैर्लक्ष्यो भेदितो वा ततः किम् ।
कालज्ञानं चाऽपि लब्धं ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१३॥
Manthrai sarva sthambhitho va, Thatha kim,Banair lakshya bedhitho va, Thatha kim,
Kala gnanam cha aapi labdham, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 13

மந்திரத்தால்  மாங்கா  விழ வைப்பானாம்.  உச்சாணிக்கிளையிலே இருக்கிற கொய்யாக்காயை வச்சிக்குறி தவறாமல் கல்லால் அடிப்பாகம்.  கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் அதிலெல்லாம் நடப்பதை அப்படியே  சொல்வானாம்.  ஓஹோ அப்படியா….. அவனைப்பற்றி தெரியுமா அவனுக்கு? 

  நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? 


कामातङ्‌कः खण्डितो वा ततः किं  कोपावेशः कुण्ठितो वा ततः किम् ।
लोभाश्लेषो वर्जितो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१४॥
Kamathanga ganditho va, Thatha kim,Kopavesa kunditho va, Thatha kim,
Lobha slesha varjitho va, Thatha kim,Yena swamathma naiva sakshathkrutho abhooth. 14

எனக்கு  கவலைகள் கிடையாது.  கோப தாபங்கள் கிட்டேயே வராது.  பொறாமை என்றால் என்னவென்றே தெரியாது என்றெல்லாம் சொல்கிறார் ஒரு பண்டிதர் எல்லோரும் கை தட்டவேண்டும் என்றா?  உண்மையிலேயே அப்படியா? இருந்தாலும் 

நான் யார் என்று அவர்  இதுவரை முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவரை என்ன என்பது? 

मोहध्वान्थ पेषितो वा ततः किं  जातो भूमौ निर्मदो वा ततः किम् ।
मात्सर्यार्तिर्मीलिता वा ततः किं  येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१५॥
Moha dwantha poshitho va, Thatha kim, Jathou bhoomou nirmadho va, Thatha kim,
Mathsaryadhir meelitho va, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 15

பொய்யான  பிம்பங்களை நம்பமாட்டேன். எதிலும் மயங்காதவன்.  எனக்கு தற்பெருமை, கர்வம் கொஞ்சமும் இல்லை.  எவரிடத்திலும் பொறாமை கிடையாதே.  இப்படி எல்லா நல்ல குண்டங்களும் இருந்தால் போதாதே.

  நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? धातुर्लोकः साधितो वा ततः किं  विष्णोर्लोको वीक्षितो वा ततः किम् ।
शंभोर्लोकः शासितो वा ततः किं येन स्वात्मा नैव साक्षात्कृतोऽभूत् ॥१६॥

Dhathur loka sadhitho va, Thatha kim,Vishnur loko veekshitho va, Thatha kim,
Shambhor loka sasitho va, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 16

நான்  ப்ரம்மலோகத்துக்கு போய் வரக்கூடியவன்.  மஹா விஷ்ணுவை  வைகுண்டத்தில் சந்தித்திருக்கிறேன்.  கைலாசத்துக்கு போனால் சிவன் வாடா என்று கூப்பிடுவார்.  இப்படிப்பட்ட  தவ ஸ்ரேஷ்டனாக இருந்தாலும்  

 நான் யார் என்று அவன் முதலில் தன்னைத் தானே   கேள்வி கேட்டு பதில் இன்னும் அவன் பெறவில்லையே! ஆத்மா என்றால்  யார் அது,  எங்கே காட்டு  என்று தேடுபவனை என்ன சொல்வது? 


यस्येदं ह्रदये सम्यगनात्मश्रीविगर्हणम् ।  सदोदेति स एवात्मसाक्षात्कारस्य भाजनम् ॥१७॥
Yasyedham hrudhaye samyaghanathma Sri vigarhanam, SAdho dhethi swatha sakshathkarasya bhajanam. 17
ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறேன்.  எவனொருவன்  இதயம் சதா  ஆத்ம சிந்தனையில் ஈடுபடுகிறதோ, அவன் நிச்சயம்  ஆத்மதரிசனம் பெறுவான். 

 
अन्ये तु मायिकजगद्‌भ्रान्तिव्यामोहमोहिताः। न तेषां जायते क्वाऽपि स्वात्मसाक्षात्कृतिर्भुवि ॥१८॥
Anye tu máyikajagadbhránti vyámoha mohitáh Na teshám jáyate kvápi svátma sákshátkrutirbhuvi(18)
மற்றவர்கள் யாராக இருந்தாலும் உலக மாயையில் உழல்பவர்கள். மண்ணுலகில் இப்படி உழல்பவர்களுக்கும் ப்ரம்மத்துக்கும்  வெகு தூரம். ஆத்மாவை உணராதவனை விட்டுத்தள்ளு.  ஒரு கணம் ஒரு வினாடி அவனோடு  பழகினாலும் அது வீணான நேரம்.  ஆதிசங்கரரின்  இந்த ஸ்லோகங்கள் ரொம்ப அழகாக  தலையில் குட்டி  நமக்கு உணர்த்துவதை  இப்போதாவது புரிந்து கொள்வோம். எந்த வாத்யார் இவ்வளவு அழகாக  உதாரணத்துடன் விளக்கி  ஆத்மா பற்றி சொல்லி கொடுப்பார்?

. 
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;