DESIRE IS THE FIRE – J K SIVAN

பற்று பற்றி எரியட்டுமே     நங்கநல்லூர்   J K   சிவன்  

ஜனக மஹாராஜா  என்றால்  விதேக  நாட்டு ராஜ, தலைநகரம் மிதிலையில்  எல்லோராலும் போற்றப்பட்டு  ஆளும்  அரசன் என்று தெரியும்.  இது மக்களை பொறுத்தவரை.  அவன் விசித்ரமானவன். ராஜ உடை அணிந்தாலும் அவன் உண்மையில் ஒரு விவேகி,  அரண்மனை அலங்காரத்தை எல்லாம் கடந்த  ஒரு பழுத்த துறவி, ஞானி என்று கற்றோர்கள், துறவிகள், ஞானிகள் அறிவார்கள்.  அரசனும் ஆண்டியாவான் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை மாற்றி அமைத்தால்  ஆண்டி ஒருவன் அரசனாகியது ஜனகன் விஷயத்தில் மட்டும் தான் என்று புரியும்.
 அரசகுமாரனாக பிறந்து   அரச வாழ்வை வெறுத்து  துறவியானவன்  கௌதம புத்தன்.  ஆனால்  அரசன் என்ற கடமையை புரிந்து கொண்டே  ஆண்டுகொண்டிருந்த  ஆண்டி  ஜனகன் ஒருவனே.  உலக வாழ்வில் இருந்து கொண்டே தாமரை இலை  தண்ணீராக  வாழ்ந்து  இறைவனோடு ஒன்றியவன். இல்லாவிட்டால்  மஹா விஷ்ணு அவன் பெண்ணை மணப்பாரா? தனது பத்னி  மஹா லக்ஷ்மியையே ஜனகனுக்குப் பெண்ணாக வளர  அனுமதிப்பாரா.
ராமகிருஷ்ண பரமஹம்சர் சரித்திரம் படித்தவர்கள் அவர் அடிக்கடி ” எல்லோராலும் ஜனகனாக முடியாது. கோடியில் ஒருவன் அவன்.  உலக வாழ்வின் சகல சம்பத்துகளுடனும் இருந்து அதே சமயம் அதில் எதிலும் பற்றில்லாமல் வாழ்ந்த ஒருவனைக் காட்டுங்கள் பார்க்கலாம்”  என்பார்.
ஜனகனுக்கு ஒரு குரு உண்டு.  அவரை அடிக்கடி சென்று பார்த்து அறிவுரை பெறுவான் ஜனகன்.
இப்படி வாழ்ந்த ஜனகன் மேல் பொறாமை கொண்ட ஜீவன்களும்  அக்காலத்தில்  மிதிலையில் பொருமிக் கொண்டிருந்தார்கள். உண்டு. அது தானே உலகம்.
ஒருநாள்  ஜனகன் தனது குருவை க்கான  காட்டுக்குச்  சென்றபோது யாரோ விஷமி அவனது மாளிகைக்கு தீ வைத்து விட்டான்.  நெருப்பு ஹோ  என்று  ஆயிரம் நாக்குகளோடு  சிகப்பு கொழுந்துகளை  வீசிக்கொண்டு   ஜ்வாலை விட்டு ஜிகு ஜிகு என்று கட்டுக்கடங்காமல்  சகலத்தையும் பாரபக்ஷமில்லாமல்  கபளீகரம் பண்ணு கிறது. மிஞ்சினால் அது சாம்பல்தான்.    

எல்லோரும்  எதெல்லாம்  காப்பாற்றமுடியுமோ அதெல்லாம் எடுத்துக்கொண்டு  ஓடினார்கள்.ஜனகனிடம் ஓடிவந்து  விஷயம் சொன்னார்கள்.

ஜனக மஹாராஜா அப்போது  குருவிடம் பாடம் கேட்டுக்கொண்டிருந்தான். காதில் விழுந்த விஷயம் அவனை துளியும்  பாதிக்கவில்லை.
குரு கவனித்தார்.  அதிர்ந்து போனார்.
”ஜனகா,  என்ன இது, உன் அரண்மனை,  மாளிகை எண்ணற்ற  விலைமதிப்பற்ற  பொருள்களோடு பற்றி எரிகிறது என்கிறார்கள். நீ  அசைவற்று பேசாமல் இருக்கிறாயே? உன் காதில்  அவர்கள் சொன்ன சேதி விழவில்லையா?
”குருநாதா, எனக்கு எது தேவையோ அதை பெறத்தானே  உங்களிடம் வருகிறேன்.  எனக்கு தேவையற்றவை மீது எனக்கு பற்று ஏது? பற்று  பற்றி எரியட்டுமே!”  இப்படி ஒரு மனசு, திட சத்தம்  ஆயிரத்தில் ஒரு பங்காவது எனக்கு வராதா என்று ஏங்குகிறேன். உங்களுக்கு எப்படியோ?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;