
லிங்காஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
லிங்காஷ்டகம் 1
சிவா, உன்னை மறந்தவர் எவர் வாழ்ந்தார்? உன்னை நினைத்தவர் எவர் தாழ்ந்தார்? உலகமறிந்த உண்மை இது. ஆதி அந்தமில்லாத முழு முதற் கடவுளே, மகாதேவா, அடி முடி காண முடியாத விஸ்வ பிரமமே உன்னை ஸ்லோகங்களில் பாடித் தொழுதவர்கள் எண்ணற்றவர்கள்.. எண்ணிப்பார்க்கக் கூட முடியாத அளவுக்கு உன் பக்தர்கள் உலகெங்கும் உள்ளார்கள். ஆதி சங்கரரின் அற்புதமான ஒரு எட்டு ஸ்லோகம் உன்னை பற்றி அவர் பாடியது என்னை ஈர்த்தது. அதைப்பற்றி கொஞ்சம் சொல்ல ரொம்ப ஆவல்.
மஹாலிங்கமே , உன்னை எட்டு சுலோகங்களில் பாடியதற்கு பெயர் லிங்காஷ்டகம். எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கேட்கக் கேட்க அலுக்கவில்லை. பாடப் பாட நா மணக்கிறதே தவிர வெறுக்க வில்லையே. என்ன ரகசியம் இதில்?
சிவனை விஷ்ணுவும் பிரம்மாவும் வணங்குகிறார்கள். விஷ்ணுவை சிவனும் பிரம்மாவும் கோடி கோடி தேவர்களும் வணங்குகிறார்கள். இவ்வாறு ஒருவரை ஒருவர் வணங்குவதால் யாரும் யாருக்கும் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ இல்லை என்றும் பொருள் கொண்டாலும், மகாதேவா , நீ ஒன்றே சாஸ்வதம், வேண்டுவோர் வேண்டிய வண்ணம் பலராக, பலவாக, நிறைவாகத் தோன்றுகிறாய் என்று புரிந்து நமஸ்காரம் பண்ணுகிறேனே .நீ துக்க நாசனம் பல பிறவிகளில் சேர்த்து வைத்துக்கொண்ட , சர்வ பாப நாசனம் பண்ணுபவனல்லவா. ஆத்ம ஒளி தரும் ஜாஜ்வல்ய லிங்கமல்லவா. லிங்கமென்றாலே எனக்கு என்ன தோன்றுகிறது? . அருவத்தை ஏதோ உருத்தெரியாத ஸ்வரூபமாகக் காட்டுவது என்று. ஆனால் பார்க்கும்போதே மனத்தை காந்தமாக ஈர்க்கிறதே. இனம் புரியாத பக்தி, பரவசம், உள்ளே உலவுகிறதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வெளியே சொல்லத்தெரியவில்லையே.பொங்கி வரும் நன்றிபபெருக்கால் நான் சொல்ல முடிந்தது ”சிவ சிவா” ஒன்றே தான். இது தான் என் ஜபம். இதைச் சொன்னாலேயே கேட்டதெல்லாம் கொடுப்பவனாச்ச்சே நீ. எத்தனை ராக்ஷசர்களும் கொடியவர்களும் கூட உன்னை வேண்டினதும் அருள் புரிந்தவனல்லவா. .
லிங்காஷ்டகம் மொத்தத்தில் சின்ன சின்னதாக ஒரு எட்டு குட்டி ஸ்லோகங்கள். அவற்றுள் அடக்கம் இந்த பிரபஞ்சமே என்கிற மாதிரி எளிதில் புரிகிற வார்த்தைகள். இதை படித்தோ புரிந்து கொள்ளவோ ஸமஸ்க்ரிதம் விசேஷமாக தெரியவேண்டியதே இல்லை. அன்றாட வாழ்க்கையில் காதில் விழும் சில வடமொழிச் சொற்கள் புரிந்தால் அதுவே போதும்.
எட்டு அஷ்டகத்தில் முதல் ரெண்டு ஸ்லோகம் கீழே தருகிறேன். மற்றவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் அறியலாம்.
ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गं निर्मलभासितशोभितलिङ्गम् ।
जन्मजदुःखविनाशकलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥1॥
பிரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் நிர்மல பாசித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
brahma muraari suraarchitha lingam nirmala bhaasita shobhita lingam
janmaja duhkha vinaashaka lingam tatpranamaami sadaasiva lingam ( 1 )
பிரம்மனும் விஷ்ணுவும் தேவர்களும் மனிதர்களும் வணங்குமே லிங்கமே,எண்ணுவோர் எண்ணமாய் விகசிக்கும் நிம்ர்மலமான ச்வயம்ப்ரகாசமான லிங்கமே பிறப்பறுக்கும் பிஞ்ஞகா ஜரை மூப்பு துக்கம் இவற்றின் துன்பத்திலிருந்தெல்லாம் விடுவிக்கும் விஸ்வநாதா நினைத்தாலே இனிக்கும் நிர்மலா சதாசிவ லிங்கமே — உனக்கு நமஸ்காரம்
देवमुनिप्रवरार्चितलिङ्गं कामदहं करुणाकरलिङ्गम् ।
रावणदर्पविनाशनलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥२॥
Devamuni Pravaraarchita Lingam Kaama Dahana Karunaakara Lingam
Ravana Darpa Vinaasaha Lingam Tatpranamaami Sadaashiva Lingam (2)
தேவமுனி ப்ரவரார்சித லிங்கம் காமதஹன கருணாகர லிங்கம் |
ராவண தர்ப வினாஶன லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 2 ||
குளிர்ந்த பனிமலை. எங்கும் நிசப்தம் காற்றின் அசைவைத்தவிர. குளிரையும் பணியில் நனைந்து உடலைத் துளைக்கும் காற்றையும் லட்சியம் செய்யாத பொன்னிற மேனி. மலையின் மேல் ஒரு சிலையாக அமர்ந்து மனமே பிரபஞ்சமாக பிரபஞ்சமே நெஞ்சாக வியாபித்த ஏகாந்த ஒரு நிலையில் தியானம். முகத்தில் சாந்தம். அக்னிஸ்வரூபம் ஒரு பனிமலை மேல் உட்கார்ந்திருந்தால், அதையே தெற்கே அண்ணாமலை தீபம் என்று வணங்குகிறோமோ? செஞ்சடையான ஜடாமுடியே கிரீடம். அதன் மேல் ஒரு ஓரத்தில் அழகாக வளைந்த மூன்றாம் பிறைச்சந்திரன். மறுபுறம் அதற்கேற்றாற்போல் வெள்ளியை உருக்கி வார்த்தது போல் ஒரு பய பக்தியோடு சிரசிலிருந்து பதவிசாக வழியும் கங்கை புண்ணிய நதி. கங்காதரன். கழுத்தை அணைத்தாற்போல இது வரை யாரும் அணியாத ஒரு ஆபரணம். நாகாபரணம். அதை ஒட்டி ஜடாமுடியில் பிணைத்த அதே போன்ற ருத்ராக்ஷ மணி மாலை.
ஆகாசத்திலிருந்து பூமியை இணைப்பது போன்ற பால் வெண்ணீறு பூசிய பரந்த நெற்றி கொண்ட இந்த திரு உருவத்தின் இடையில் புலித்தோல். நெற்றி நடுவில் மூடிய முக்கண். திறந்தால் பனி மலையே அக்னியால் அழிந்துவிடும் அல்லவா?. ஒரு கையில் சக்திவாய்ந்த ஒரு திரிசூலம். பனி ச்சிகரத்துக்கு அழகூட்டும் அமர்ந்த திருக்கோலத்தில் ஒரு கால் மடித்து ஒரு கால் கீழே. இன்னும் வர்ணித்துக்கொண்டே போகலாமே உன் திருவுருவை.
ஹே, மகாதேவா, உன் பெயரே விளக்குகிறதே, நீ தேவர்களுக்கெல்லாம் தலைவன், முதல்வன், பெரியவர் களுக்குள்ளேயே ஒருவரை நாமெல்லாம் மகா பெரியவா என்று போற்றி வணங்கு கிறோமே அதே போல் தேவர்களுக்குள்ளேயே மிகப் பெரிய மகத்தான பூஜிக்கத் தகுந்த தேவனே, நீ மகா தேவன் என்பதால் தான் தேவர்களும் முனீச்வரர்களும் உன்னை வணங்குகிறார்கள். நீ யார்?. தவத்தில் முதிர்ந்த, சிவந்த, பரம சிவன். உனது தவத்தைக் கலைக்க முனைந்த அந்த மன்மதனை நீ ஒன்றும் செய்யவில்லை. உன்னை காமத்தால் வெற்றி கொள்ளவந்த மன்மதன் மேல் நெற்றிக்கண் பார்வை சற்றே பட்டதும் எரிந்து போனான்.
அசுரனாக இருந்தாலும் உன் மீது அளவில்லா பக்தி கொண்டவன் ராவணன். பத்து தலை இருந்தாலும் அவனுக்கு அது அத்தனை யிலும் அகம்பாவம் ”தலைக்கேறி” விட்டதால் உன்னையே அசைக்கப் பார்த்தான். பலசாலி யாயிற்றே. உன்னிடமே வரம் பெற்றவன் அல்லவா? கயிலாயத்தையே கையால் தூக்க முயற்சித்த அவன் கர்வம், அவன் தற்பெருமை அனைத்தையும் நீ உன் கால் கட்டைவிரலில் ஒரு ”அழுத்து” அழுத்தி போக்கினவனாயிற்றே மஹா தேவா, சதாசிவா, உன்னை நெஞ்சிலிருத்தி நாவினிக்க மனம் மணக்க போற்றுகிறேன். உன்னை ஒன்றும் கேட்க மாட்டேன். எனக்கு என்ன வேண்டும் என்று என்னைக்காட்டிலும் நீ யல்லவோ நன்றாக உணர்ந்தவன்.ன வேண்டும் என்று என்னைக்காட்டிலும் நீயல்லவோ உணர்ந்தவன்.
ஒரு தடவை மதுரை போயிருந்தேன். பல வருஷங்களுக்கு முன்பு. மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு வாசலில் எதிரே ஒரு அழகிய மண்டபம் உள்ளது. அதில் சிற்பத்தை தேடுவோர்கள் அங்கிருக்கும் தகரம், இரும்பு, பிளாஸ்டிக், தட்டுமுட்டு சாமான்களை மெதுவாக கண்களால் நகற்றி நாயக்கர் மன்னர்கள் நமக்கு சொத்தாக விட்டுப்போன அருமையான கற் தூண் சிற்பங்களை பார்க்க முயற்சிக்கலாம். முயற்சி வீண் போகாது. எனக்கு போகவில்லை. ஒரு ராவணன் கிடைத்தான். அவனை இணைத்திருக்கிறேன். அற்புதமான ராவணன் கைலாய மலையை பார்வதி பரமேஸ்வரர்களோடு தூங்குகிறான். அது அவனுக்கு கனமாக தோன்றவில்லை. இப்போது வியாபாரிகள், பிளாஸ்டிக், அலுமினியம், தகரம், என்று பல உலோக தட்டு முட்டு சாமான்களை அவன் மேல் ஒட்டி வைத்து துன்புறுத்துவது அவனுக்கு மட்டும் அல்ல பார்த்த எனக்கும் பிடிக்க வில்லை. என்ன செய்வது. கவனிக்க வேண்டியவர்கள் கண்ணை மூடிக்கொண்டால் என்ன பண்ணமுடியும். காசு கண்ணை மறைக்கிறது…அவர்களுக்கு, அவர்களால் ராவணன் நமக்கு மறைந்து போகிறான்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



