
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
கடைசி ஆசை
மோக்ஷம் என்பது செத்துப் போன பிறகு வேறு எந்த லோகத்திற்கோ போய் அனுபவிப்பது என்றால் அதை நம்மால் இப்போது புரிந்து கொள்ள முடியாது. மனிதனின் நினைவு மரணத்துக்கு பிறகு புதிய பிறவியில் தொடர்ந்தாலும் அதை உணரமுடிவதில்லை. ஆகவே கை கண்ட பலனாக இந்த உலகில் இருக்கும் போதே மோக்ஷம் அனுபவிக்க ஒரு சுலப வழி முடிந்தவரை எப்போதும் பிறருக்கு நல்லது செய்வது. இப்போதெல்லாம் கஷ்டம், சுகம் என்று அழுது கொண்டு இருந்து விட்டு செத்துப் போன பின் மோக்ஷம் கிடைக்கிறது என்பதில் பிரயோஜனம் இல்லை. பிரதி பலன் கருதாது நீ செய்யும் கர்மங்களுக்கு பிரதி பலனாக கிடைக்கும் ஆனந்தமே மோக்ஷம். இது இப்பிறவியிலேயே கிடைக்கும்.அனுபவிக்க முடியும் என்கிறார் மஹா பெரியவா.
”Moksha is not an experience to realize after we die and go to some other place. It needs to be experienced right here while we live in this world. If we do good things we reap good benefits. There is no point in getting Moksha if all through our life we complain about good and bad experiences. Moksha is nothing but a blissful state for all the Karmas we do without any expectations. That can be attained in this Janma itself. – Sri Kanchi Maha Periyava”
மஹா பெரியவாளின் அம்மா மஹா லக்ஷ்மி பெயரில் உள்ளது போலவே மிக பெரிய மோக்ஷ செல்வத்தை பெற்றவள். மோக்ஷம் அளிக்கும் மஹா பெரியவாளை பெற்றதாலேயே மோக்ஷ சாம்ராஜ்யம் அடைந்தவள்.
வீட்டில் எதிரொலிக்கிறது பலத்த வேத கோஷம் .!! எந்த ஊரில்? தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள ஈச்சங்குடி கிராமத்தில். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை என்ன வென்றால் நடமாடும் பேசும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் மஹா லக்ஷ்மி பிறந்த புண்ணிய பூமி இது!
ஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் மஹா லக்ஷ்மி. வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத் துக்கும், 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு, சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்து, சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுவாமிநாத ஸ்வாமியைப் போல், தன் மகன் இந்த உலகுக்கே ஞான உபதேசம் செய்யப் போகிறான் என்பதை அந்த பெற்றோர்களோ மற்றவர்களோ அப்போது அறியவில்லை!
ஒருநாள்… காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யராகப் பொறுப்பேற்கிற பாக்கியம் கிடைத்தபோது, பெற்ற வயிறு குளிர்ந்து போனது மகாலக்ஷ்மி அம்மாளுக்கு! 13 வயதிலேயே காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதியாக ஜகத்குருவாக ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார். தேச மெங்கும் திக்விஜயம் பல்லக்கிலும் பாத யாத்திரையிலும் மேற் கொண்டார். நூறு ஆண்டுகள் அனைவருக்கும் ஆசி வழங்கி, அருளி னார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா, மஹா சுவாமி, எனப் பெருமையுடன் அழைத்து போற்றிப் பூரித்தனர்.
ஒரு1932ல் ஜூன் 14 அன்று ஆந்திராவில் நகரி என்னும் ஊரில் மஹா பெரியவா முகாமிட்டிருந்தபோது தான் தாயார் மஹாலக்ஷ்மி அம்மாள் காலமான செய்தி வந்தது. தாய்க்கு ஸ்நானம் செய்து விட்டு பிராமணர்களுக்கு தானம் வழங்கினார். அதோடு அந்த சந்நியாசி தன்னைப் பெற்ற தாய்க்கு ஒரு சந்நியாசியின் கடமையை முடித்தார். அப்போது தான் அவர் மனதில் ஒரு எண்ணம் உதயமாயிற்று. தனது தாய் பிறந்த பழைய வீட்டை ஈச்சங்குடியில் ஒரு வேத பாடசாலையாக்கினால் என்ன? வேத சப்தம் ஒலிக்கட்டுமே . இந்த எண்ணம் பூர்த்தியாக பல வருஷம் ஆகியது. எண்ணம் எப்போது செயலாகியது?
1993ல் ஒருமுறை பெங்களூர் ஹரி என்ற பக்தர் தரிசனத்துக்கு வந்தபோது மகா பெரியவா ” நீ ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலை புனருத்தாரணம் பண்ணப் போறியா?
”பெரியவா அனுக் ரஹத்தோடு அப்படி ஒரு எண்ணம் இருக்கு ”
”ரொம்ப சந்தோஷம். நிச்சயம் அது பூர்த்தியாகும். அங்கே தான் நான் சின்ன வயசிலே அம்பாளை காருண்ய வல்லியை , கச்சபுரீஸ் வரரோடு நிறைய தரிசனம் பண்ணி இருக்கேன். வேதம் எல்லாம் கத்துண்டேன். ஞாபகம் இருக்கு ” என்று மஹா பெரியவா சிரித்தார்.
”சீக்கிரமே ஆரம்பிக்க ஏற்பாடு பண்றேன். எல்லாம் பெரியவா ஆசீர்வாதம் அனுக்கிரஹம்”
”நான் உன்னை ஒண்ணு கேட்கட்டுமா. எனக்கு உபகாரம் பண்ணுவியா?”
”மஹா பெரியவா ஆக்ஞா எதுவா இருந்தாலும் அதை நிறைவேற்றுவேன் பெரியவா”
”ஸ்ரீ காருண்யவல்லி சமேத கச்சபுரீஸ்வரர் அனுக்கிரஹம் உனக்கு கிடைக்கட்டும். நான் என் பூர்வாஸ்ரம தாயார் பிறந்து வளர்ந்த ஒரு பழைய வீடு ஈச்சங்குடியிலே இருக்கே உனக்கு தெரியுமா? அதை குழந்தைகளுக்கு வேதம் கத்துக்கொடுக்கிற பாடசாலையா புனருத்தாரணம் பண்ணனும் னு மனசிலே வெகுகாலமா ஒரு எண்ணம். அங்கே வேதம் என்னிக்கும் ஒலிக்கணும். நாலு பேருக்கு ஊரிலே உபயோகமான இடமாக அதை மாத்தணும்”
ஹரி உணர்ச்சி வாசத்தோடு கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய ”மஹா பெரியவா, இது எனக்கு கிடைச்ச பெரிய பாக்கியம்! என் பூர்வ ஜென்ம புண்யம். உடனே அதற்கு செயல்படறேன்”
இத்தனை வருஷம் எவரிடமும் சொல்லாத மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு எண்ணத்தை மஹா பெரியவா சொன்னதற்கு காரணம் இருந்திருக்கிறது. அந்த பழைய வீட்டை அப்போதைய உரிமையாளரிடம் பேசி வாங்க வேண்டும், இடித்து பாடசாலை கட்ட ஒரு வருஷமாக ஆகும். தனது வாழ்நாளில் அங்கே வேத பாடசாலை நிறுவிய சேதி காதில் விழவேண்டும் என்பதற்காக காத்திருந்தார்.
அந்த பழைய வீடு உரிமையாளரிடமிருந்து விலை பேசி வாங்கப்பட்டு பக்தர்களின் ஒத்துழைப் போடு விரைவில் பாடசாலையாகியது.
1994 ஜனவரி 8 உலகம் மஹா சோகத்தில் ஆழப்போகிறது என்று அந்த காலை வேளை ஒருவருக்கும் தெரியாது. உடல் நலம் ஒத்துழைக்காததால் பக்தர்களுக்கு தரிசனம் தர இயலவில்லை. தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம், அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யாருக்குத்தான் தெரியும்?! ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அருகே இருந்தவர் உரக்க காதில் சொன்னார்:
‘பெரியவா பெங்களூர் ஹரி ந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச் சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். அன்பரை ஆசீர்வதித்தார்.’ யாரு பெங்களூர் ஹரியா? எங்கிருந்து?
”ஈச்சங்குடியிலிருந்து , பெரியவாளுடைய அப்பா அம்மா படம், பாதுகை கொண்டு வந்திருக்கார்”
”அழைச்சுண்டு வா”
வெள்ளிப் பாதுகைகளை காலில் மெதுவாக அணிந்துகொண்டார். ஹரிக்கு ஆசீர்வாதம் பண்ணினார்.
”பெரியவா உங்க அனுக்ரஹத்தோடு ஈச்சங்குடியிலே அந்த இல்லத்தில் பாடசாலையை ஆரம்பிக்க நாள் குறிச்சாச்சு. பத்திரிகை வெளியிடணும் . பெரியவா கையாலே தொட்டு ஆசிர்வாதத்தோடு ஆரம்பிக்கணும் . புன்னகையோடு பெரியவா அந்த பாடசாலை ஆரம்ப விழா பத்திரிகையை வாங்கிப் படித்தவர், தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை ஹரியிடம் கொடுத்தார். “இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.
ஹரி தான் கடைசியாக இந்த உலகத்தில் மஹா பெரியவாளுடன் பேசி அவர் ஆசிபெற்ற பக்தர். என்ன பாக்யம். இதெல்லாம் நடந்த ரெண்டு மூணு மணி நேரத்தில் மஹா பெரியவா சித்தி அடைந்துவிட்டார்.
ஈச்சங்குடி வேத பாடசாலை, அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், வேத பாடசாலையில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை, மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரியவாளின் தாயாரால் வணங்கப் பட்டு, பெரியவாளின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஸ்ரீகச்சபுரீஸ்வரர் கோயில், அழகுறத் திகழ்கிறது. இவரை வணங்கினால், நிலம் மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும் நீங்கி, குறையின்றி வாழ்வர் . அருகே யுள்ள பாடசாலையில் பெரியவாளின் பாதுகைகளை நமஸ்கரித்தால், ஞானகுருவின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



