
ஸுர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN
மாறாத சோகம் தானோ?
ஒவ்வொரு நாளும் திருவிழாவா, தீபாவளி கோலாகலமா? எப்படி சொன்னாலும் பொருத்தமாக இருக்குமே. அப்படிப்பட்ட பிருந்தாவனம் களையிழந்து நிற்கிறதே. 24 மணி நேரம் கூட ஆகவில்லையே. அதற்குள்ளாகவா உயிரிழந்து வெறிச்சோடி விட்டது. கிருஷ்ணன் ஜீவசக்தி என்பதில் சந்தேகமே இல்லை. அவன் தேரில் பலராமனோடும் , அக்ரூரருடனும் மதுராவுக்கு சென்ற போது அவ்வளவு சோகம் தெரியவில்லை. சீக்கிரம் வந்துவிடுவான் என்று ஒருபக்கம் நம்பிக்கை. அவன் இல்லாவிட்டால் பிருந்தாவனம் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றுவிடும் என்ற பயமும் எதிர்பார்ப்பும் அப்போது தெரிய வில்லை. கலகலவென்று சிரிப்பு சப்தம் கேட்டு அதற்குள் ஒரு நாளாகி விட்டதே! இனி எப்படி ஒவ்வொருநாளும் தள்ளுவது? யாரையும் தெருவில் காணவில்லையே. கன்றுக்குட்டிகள் விடாமல் ‘அம்மா’ என்று யாரைக் கூப்பிடுகிறது? அவற்றின் அம்மாக்கள், தாய்ப்பசுக்கள் அருகிலேயே இருக்கும்போது அவற்றுக்கு வேறு ”அம்மா” யார்? கண்ணன் தான். அவன் தான் செவிலித்தாய் எல்லா பசுக்களுக்கும். கன்றுகளுக்கும் .ஏன் பிருந்தாவனத்தில் எல்லா ஜீவராசிகளுக்கும் கூட.
யசோதை கன்னத்தில் கையூன்றி அசைவற்று தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவ்வளவு பெரிய நந்தா கோபன் மாளிகை நிசப்தமாக இருக்கிறது. தனிமை வாட்டுவது என்றால் என்ன என்று இன்றுதான் புரிகிறது எனக்கு என்கிறாள். கண்ணில் நீர் வடிந்து வற்றிப்போய் கன்னத்தில் காய்ந்து விட்டது. இந்த பெரிய வீட்டில் எல்லாம் வைத்தது வைத்தபடியே இருக்கிறதே. இப்படி அவன் இருந்தால் இருக்காதே. ஒவ்வொரு கணமும் துறுதுறுவென்று ஏதாவது ஒரு விஷமம் பண்ணுபவனாயிற்றே.
பொழுது விடிந்தவுடன் ஆரம்பமாகிவிடுமே அவனுடைய வெண்ணை திருட்டு அட்டகாசம். என்னுடைய கைகளில் இருந்து வெடுக்கென்று பிடுங்கி கொண்டு ஓடுவான். உயிரற்ற ஜடம்போல் கோபியர்கள் நடமாடுகிறார்கள். ஒருவளிடமிருந்தும் எந்த கம்ப் ளைண்ட்டும் COMPLAINT வரவில்லையே. இதல்லவோ அதிசயம்?
திடீரென்று வாழ்க்கை ஏன் எனக்கு வெறுத்து விட்டது? யசோதை திணறினாள். எண்ணற்ற கேள்விகள் பொங்கி எழுந்ததே தவிர, எதற்கும் பதில் தெரியவில்லை. ஒரே பதில். கிருஷ்ணன் இல்லை. பிரிந்தாவனத்தின் மொத்த சந்தோஷம் நேற்று தேரில் ஏறி மதுராவுக்கு போய்விட்டதே.
ரிஷிகள், முனிவர்கள் கூட சந்தோஷமாக அவனைத் தேடுவார்கள். அவர்களே ஏன் சோர்ந்து உட்கார்ந்து விட்டார்கள் .
இந்த ஸூர் தாஸின் எஜமானன், ப்ரபு , கிருஷ்ணன் இல்லை யென்றால் பிருந்தாவனம் தம்பிடிக்கு கூட பிரயோஜன மில்லை . ஆமாம் சுத்த வேஸ்ட்.
அருமையான ஸூர் தாஸ் பாடல் இது என்று நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்களா?
In her lonely house
Yashoda remembers her son.
‘Nothing is disturbed
by my prince: Kanha.
As soon as he got up
he grabbed butter from my hand.
The young women of Braj,
still gather together
but nobody brings any
complaints to me.’
Yashoda’s agony is intense.
The happiness that reigned
once in Braj
was not available even, to holy men.
Without Surdas’s Lord,
Braj is not worth a penny.
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



