
ஸ்ரீ ஹரி வம்ச புராணம் – நங்கநல்லூர் J K SIVAN \
பதிவு 1
ஹரி வம்சம் என்கிற பெயரிலிருந்து அது மஹாவிஷ்ணுவின் வாழ்க்கை சரித்திரம் என்று புரிகிறது. நமக்கு விஷ்ணுவை தெரியும் என்று நினைப்பவர்கள் அவர் சரித்திரமும் நமக்கெல்லாம் தெரியும் என்று தானே நினைப்பீர்கள். அது தான் இல்லை. நமக்கு தெரியாத அநேக விஷயங்கள் இந்த புராணத்தில் இருக்கிறதற்கு காரணம் கிருஷ்ண த்வைபாயனர் தான். யார் இந்த மனிதர்? வேறு யாருமில்லை. நமக்கு தெரிந்த வேத வியாசர் தான். வியாசம் மாதிரி நீளமாக எல்லாவற்றையும் விளக்கி எழுதுவதில் (சொல்வதில்) அவருக்கு நிகர் அவர் தான். அந்த காலத்து கூகிள் மாமா. கம்ப்யூட்டர் பேப்பர் இல்லாத காலத்திலேயே வாயிலேயே ஸ்லோகங்களாக சிஷ்யர்களுக்கு 18 புராணங்களை, இதி ஹாசமான மஹா பாரதம், ஸ்ரீமத் பாகவதம் என்று பல வேத நூல்களை கோர்வையாக சொன்னவர் வியாசர். காலம் காலமாக பல ரிஷிகள் மூலம் இவ்வாறு புராணங்கள் காப்பாற்றப்பட்டு பின்னர் ஒலைச்சுவடி, என்று தொடர்ந்து கடைசியில் அச்சிட்ட புத்தகங்கள், அதையும் தாண்டி ஆன்லைன் இ புத்தகங்களாக e-books நமக்கு கிடைத்திருக்கிறது. இவ்வளவு வசதி இருக்கும்போது அவற்றை படிக்க வேண்டாமா. அற்புதமான விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டாமா?
ஹரிவம்சம் கிருஷ்ண சரித்திரம் என்று தான் நான் ஏற்கிறேன். மஹா பாரதத்தின் தொடர்ச்சி. வ்ருஷ்ணி அந்தகர்கள் குல த்தை பற்றி சொல்வது. மஹா பாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் சரித்திரம் கிடையாது. ரிஷிகள் தான் எழுதியது என்று தம்பட்டம் அடிக்காத எளிய ஞானிகள். நிறைய விஷயங்கள் யார் எழுதியது என்று நமக்கு சரியாக தெரியாத காரணம் இது தான். எது முன்னால் எது பின்னால் வருவது என்று கண்டுபிடிப்பதும் சிரமம். ப்ரம்ம வைவர்த்த புராணம் சகல விஷயங்களும் கொண்ட ஒரு கருவூலம்.
ஹரிவம்சத்தின் முதல் பர்வா, ஆதி பர்வா, இந்த பிரபஞ்சம் உருவானதில் ஆரம்பித்து சூர்ய சந்திர வம்சங்கள் கிருஷ்ணன் பிறப்பு வரை சொல்கிறது. விஷ்ணு பர்வா கிருஷ்ணனின் வளர்ச்சி, மஹாபாரதம் வரை சொல்கிறது. பாவிஷ்ய பர்வா , சிவனையும் விஷ்ணுவையும் பற்றி சொல்வதுடன் கலியுகம் பற்றியும் கூறுகிறது.
கிருஷ்ண பகவான் மனிதனாக பிறந்த அதிசயங்கள் நிகழ்த்திய ஒரு ராஜ தந்திரி. ஞானயோகி. எழுபது என்பது வருஷங்களும் அதற்கு முன்னும் நிறைய விஷயங்களை நிலவொளியில், அல்லது மாலையில் தோட்டத்தில், குளக்கரையில் என்று ரம்யமான நேரத்தில், இடத்தில் இந்த மாதிரியான இதிகாச, புராண கதைகளை நாம் அத்தைகள், பாட்டிகள், தாத்தாக்கள், போன்றோர் சொல்லி கேட்ட காலம் இப்போது மறைந்து விட்டது. கோவிலில் உபன்யாசம் கேட்கக் கூட ஆளில்லை. பொது இடங்களில் பல சொல்கிறார்கள், சிலர் தான் கேட்கிறோம். கற்றது நிச்சயம் உயிருள்ளவரை நினைவில் நிற்கும்.
வேத வியாசர் இயற்றிய புனித நூலான ஸ்ரீ ஹரி வம்சம் 16374 ஸ்லோகங்களை கொண்ட ஒரு ஸமஸ்க்ரித கடல். ஆதிபர்வா, விஷ்ணு பரவா, பாவிஷ்ய பர்வா என மூன்று பகுதிகளைக் கொண்டது. முழுக்க முழுக்க ஸ்ரீ மந் நாராயணின் எட்டாவது அவதாரமான க்ரிஷ்ணன் ஜனனம், வளர்ச்சி பற்றிய சுவாரசிய சமாச்சாரங்கள் கொண்ட அற்புத காவியம் . பெயரே சொல்கிறதே ஸ்ரீ ஹரியின் வழி வந்தவர்களை பற்றி என்று. .
எல்லாவற்றையும் நான் படித்து எவ்வளவு சுருக்கமாக எதையும் விடாமல் சொல்லமுடியுமோ அப்படி அதை உங்களுக்கு அளிக்க என்னோடு நீங்களும் அந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அருளையே வேண்டுவோம்.
என் சிறுவயதில் சூளைமேட்டிலிருந்து தி.நகர் நடந்து போய் சிவ விஷ்ணு ஆலயத்தில் அனந்தராம தீக்ஷிதர் பாரத உபன்யாசம் கேட்பது ரொம்ப பிடிக்கும். தானும் 7 மணிக்கு ஆரம்பிப்பார். நாங்கள் ஐந்தரை மணிக்கே நடந்து ஆறரை மணிக்குள் ஜமக்காளத்திலோ,தரையிலோ எவ்வளவு கிட்ட உட்காரமுடியுமோ அப்படி இடம் பிடித்து உட்கார்ந்து கொள்வோம். ஹரிவம்சத்தை பற்றி ஒரு தரம் அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
yo harivaMshaM lekhayati yathAvidhinA mahAtapAH sapadi |
sa jayati haripadakamalaM madhupo hi yathA rasena lubdhaH ||7
”எவன் இந்த ஹரிவம்சத்தை அப்படியே நகல் எடுக்கிறானோ, அவனுக்கு, தெவிட்டாத தேன் சொட்டும் மலரின் உள்ளே தன்னை மறக்கும் பூ வண்டாக, ஸ்ரீ ஹரியின் திருவடி நிழலில் இடம் ரிஸர்வாகி விட்டது,
இந்த வியாசரின் ஹரிவம்ச நூலை ஓர் கற்றறிந்த பிராமணருக்கு நகலெடுத்து கொடுத்தால் அதால் கிடைக்கும் புண்யம் என்ன என்பதை சொல்லப்போகிறேன். கீழே விழுந்து விடாமல் எதையாவது கெட்டியாக பிடித்துக்கொண்டு செவி மறுக்கவும்.
”நூறு அஸ்வமேத யாகம், நாலு லக்ஷ வேத பாராயணம், ராஜ சூய யாகம், வாஜபேய யாகம் எல்லாம் ஸ்ரத்தையாக செய்த பலன், நிறைய யானைகள், தேர்கள் தானம் செய்த பலன். இது ஏதோ நான் உங்களை படிக்க செய்வதற்காக சொல்வதில்லை சார். வால்மீகியும் வியாசரும் சேர்ந்து ஒன்றாக மேலே சொன்ன ஸ்லோகத்தில் சொல்கிறார்கள்.
ஆகவே இதை நமக்கு அளித்த வேதவியாஸருக்கும் நன்றி:. வியாசரை போற்றும் ஒரு ஸ்லோகம்:
pitAmahAdyaM pravadanti ShaShThaM maharShimakShayyavibhUtiyuktam |
nArAyaNasyAMshajamekaputraM dvaipAyanaM veda mahAnidhAnam || 8
ஸ்ரீமன் நாராயணன் முதலாக தோன்றிய பாரம்பரியத்தில் ஆறாவதாக அவதரிக்கும் ஸ்ரீ கிருஷ்ணத்வைபாயனரே, உங்களுக்கு நமஸ்காரம். உங்களால் தானே எண்ணற்கரிய அற்புத வேத ஸ்லோகங்கள், புராணங்கள், இதிகாசம் இன்னும் எத்தனையோ உலகத்துக்கு கிட்டியது. நாராயணனின் அம்சமே அல்லவா நீங்கள். பராசரரின் ஒரே புத்ரரான உம்மைசாஷ்டாங்கமாக நமஸ்கரித்து இனி புனித நூலான ”ஸ்ரீ ஹரி வம்சம் ” துவங்குகிறேன்” என்ற ஸ்லோகம் இங்கே பொருத்தமாக அமைந்துள்ளது. இனி முடிந்தவரை சுருக்கமாக ஹரிவம்சம் அறிவோம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


