
கருட மஹா புராணம் – நங்கநல்லூர் J K SIVAN
”பிரபு, நாராயணா, எந்தெந்த பாபங்கள் செய்வதால் நீண்ட நரகப் பாதைக்கு செல்லவேண்டியிருக்கிறது? ஏன் வைதரணி ஆற்றில் விழவேண்டும்? இதை சொல்லுங்கள்” என கேட்கிறான் கருடன்.
”தப்பு காரியங்கள் செய்து அதனால் சந்தோஷம் அடைபவன் போய் சேருவது பல நரகங்களுக்கு. நல்லது பண்ணியவர்கள் செல்ல மூன்று வாசல்கள் இருக்கிறது. தெற்கு பக்க வாசலுக்கு செல்பவர்கள் பாபிகள். வைதரணி அந்த பக்கம் தான் இருக்கிறது. அதில் விழுபவர்கள் எந்த விதமான பாபம் செய்பவர்கள் என்று சொல்கிறேன். கேள்”
”பிராமணனை கொன்றவர்கள், மது போதையில் ஈடுபட்டவர்கள், பெண்களை குழந்தைகளை கொன்றவர்கள், கருவை சிதைத்தவர்கள், ரகசியமாக பல தீய காரியங்கள் செய்தவர்கள். குருவின் செல்வத்தை திருடியவர்கள். கோவில் சொத்தை கொள்ளை அடித்தவர்கள். பெண்களை ஏமாற்றி சொத்து சேர்த்தவர்கள். குழந்தைகளிடம் திருடியவர்கள். கடன் வாங்கி திருப்பி தராதவர்கள், நம்பிக்கை துரோகம் செய்தவர்கள். விஷங்களை உணவோடு கலந்து விற்றவர்கள். பொறாமையால் தீங்கு செய்பவர்கள், யாத்திரை, புண்ய ஸ்தலங்களை அழிப்பவர்கள், பாழ் செய்பவர்கள், புராணங்கள் வேதங்கள் வேதாந்தம் ஆகிய தெய்வீக நூல்களை இகழ்பவர்கள். துன்புறுத்தும் வார்த்தைகளை பேசுபவர்கள். கெட்டபுத்தி கொண்டவர்கள், தாய் தந்தையை மதிக்காமல் திகழ்பவர்கள், துன்புறுத்துபவர்கள், நீதி மன்றத்தில் பொய் சாக்ஷி சொல்பவர்கள், பொது நீர் நிலைகளை அழிப்பவர்கள், தெய்வத்தை தொழாதவர்கள், பித்ருக்களுக்கு கடமையை செய்யாதவர்கள், கூந்தலை விற்கும் பெண்கள், அதிதிகளுக்கு உணவளிக்காதவர்கள், ஏழைகளுக்கு உதவாதவர்கள்,நட்புக்கு துரோகம் செய்தவர்கள், நல்ல குடும்பங்களை பிரிப்பவர்கள், ஆகியோர் பின்னர் எம தூதர்களிடம் அடிபட்டு, அழுதுகொண்டு நரகத்தை நோக்கி நகர்பவர்கள்.
இப்படிப்பட்ட பாபிகள் தீயிலிட்டப்பட்டு வாடும்போது ஐயோ நிழல் வேண்டும் என்று கதறும் வேளையில் யமதூதர்கள் அவர்களை கத்தி போன்ற கூரான இலைகள் நிறைந்த மரத்தில் வீசுவார்கள். ”இந்த மர நிழலில் சந்தோஷமாக தூங்கப்பா” என்று சொல்லப்படுவார்கள். தாகமாக இருக்கிறது என்ற பொது யமதூதர்கள் கொதிக்கும் எண்ணையை வாயில் ஊற்றுவார்கள், கருடா, இதை சொல்லிக்கொண்டே போகலாம் எல்லையே இல்லை. அத்தனை கெட்ட காரியங்களை உலகில் பாபிகள் செய்கிறார்கள். அதனால் தான் எட்டு லக்ஷத்து நாற்பதாயிரம் பிறவிகள், புல்லாக பூண்டாக, புழுவாக, பறவையாக, மிருகமாக, கடைசியில் மனிதனாக, எடுக்க வேண்டி இருக்கிறது இந்த பாபங்களை கழுவ. மனிதப் பிறவி எடுத்தாலும் வியாதி, ஊனத்தோடு, பிறக்கவும் நேரிடுகிறது.
”நாராயணா, இதுவரை நான் அறியாத விஷயங்கள் இதெல்லாம். கேசவா, எனக்கு கொஞ்சம் விவரமாக சொல். எந்தெந்த பாபங்கள் செய்வதால் என்ன எப்படிப்பட்ட பிறவிகள் உலகத்தில் வாழும்போது எடுக்க வேண்டியிருக்கிறது?
”கருடா சொல்கிறேன் கேள். பிராமணனை கொன்றவன் க்ஷயரோகம் போன்று கொஞ்சம் கொஞ்சமாக அவஸ்தைப்பட்டு சாகவேண்டிய பிறவி எடுப்பான். பசுவைக் கொன்றவன், கூனனாக பிறப்பான், சித்த ஸ்வாதானமாக அவஸ்தைப்படுவான். கன்னிப்பெண்ணை கொன்றவன் குஷ்டரோகியாக அவஸ்தைப்படுவான். இந்த மூன்று விதமான பாபிகளும் சமூகத்தால் வெறுக்கப்பட்டு தனியே ஒதுக்குப்புறத்தில் தவிப்பார்கள். பெண்களை கொன்றாலும், கருவை சிதைத்தாலும் அவன் காட்டுமிராண்டியாக, வியாதியஸ்தனாகி அல்லல் படுவான். கற்பழித்தவன் ஆணுமில்லாத பெண்ணுமில்லாத நபும்சகனாக சமூகத்தில் வெறுக்கப்படுவான். குருவுக்கு அவர் மனைவிக்கு துரோகம் விளைவித்தவன் உடல் முழுதும் தோல் வியாதியால் துன்புறுவான். குடிகாரன், மாம்சம் அதிகம் உண்பவன், எதையுமே சாப்பிடமுடியாமல் வயிற்றுநோய்களால் துடிப்பான்.
இனிப்புகளை விரும்பி தானே பிறர்க்கு அளிக்காமல் உண்டவன் எதையுமே விழுங்கமுடியாமல் தொண்டை பெருத்து அடைத்து அவதிப்படுவான். ஆசிரியரை, குருவை அகங்காரத்தால் எதிர்த்தவன், அவமதித்தவன், அடுத்த பிறவியில் வலிப்பு நோயால் வாயில் நுரை தள்ளி துன்புறுவான். வேதத்தை திகழ்ந்தவன் கண்ணிழந்து தவிப்பான். வேண்டுமென்றே போய் சாக்ஷி சொன்னவன் ஊமையாக பிறப்பான். பசியோடு சாப்பிட வந்தவரை விரட்டியவன், கைகள் விளங்காமல் கண் பார்வை குன்றி தவிப்பான். கல்யாணங்களை தடுத்தவன், உதடுகள் இன்றி எதுவும் பேசமுடியாமல் சாப்பிடமுடியாமல் அவஸ்தை படுவான். புத்தகங்களை திருடியவன் கண் பார்வை அற்றவனாக பிறப்பான். பசுவையோ, ப்ராமணனையோ உதைத்தவன், நொண்டியாக பிறப்பான். ஊனமுள்ளவனாக இருப்பான். பொய்சொன்னவன் திக்குவாயுடன் சரியாக பேசமுடியாமல் தவிப்பான். பிறர் குறைகள் குற்றங்கள் பேசுவதை கேட்பவன் செவிடனாக பிறப்பான். விஷமிட்டவன் புத்தி சுவாதீனம் இல்லாதவனாக பிறப்பான். பிறரிடம் கோள் மூட்டி மகிழ்ந்தவன் மண்டையில் காயங்களோடு, ஆறாத புண்ணொடு வழுக்கையும் அவனை வெறுக்கச் செய்யும். பிறர் பொருள் திருடியவன் கைவிரல்கள் இல்லாதவனாக அவஸ்தை படுவான். உணவுப்பொருகளை பதுக்கியவன் எலி பெருச்சாளியாக பிறந்து அடிபடுவான். நீர்நிலைகளில் தண்ணீர் திருடியவன் தடுத்தவன், சாதகப்பறவையாக மழை நீரை நம்பி வாழவேண்டி பிறப்பான். பிறர் பொருளை திருடியவன் தேளாக பூரானாக பிறப்பான். தானியங்களை திருடியவன் வெட்டுக்கிளியாக பிறப்பான். காய்கறியை திருடியவன் வான்கோழியாக, மயிலாக பிறப்பான். பழங்களை திருடியவன் குரங்காக பிறப்பான். செருப்பு காலணிகளை திருடியவன் ஆடுகளாக பிறந்து தோல் உரிக்கப்படுவான். வழிப்பறி செய்தவன், வேட்டையாடி பறவைகளைக்கொன்றவன் கசாப்பு கடைகளில் ஆடாக உயிரிழப்பான். விஷங்களை உணவில் கலந்து பிறரை கொன்றவன் விஷப்பாம்பாக பிறப்பான். பிறரை பலத்தால் அடக்கி அதிகாரத்தால் துன்புறுத்தியகவான் யானையாக காட்டில் பிறந்து அலைவான். யாகத்தில் ஹோமத்தில் தேவதைகளுக்கு சரியாக ஆஹுதி செய்யாதவன் காட்டில் உணவுக்கு அலையும் புலியாக பிறப்பான். காயத்ரி மந்த்ரம் தினமும் சொல்லாதவன் வெளிவேஷம் போடுபவன் அடுத்த பிறவியில் கொக்காக பிறந்து உணவுக்கு காத்திருப்பான். மந்திரம் தெரியாமல் யாகத்தில் கலந்து கொள்ளும் பிராமணன், காகமாக, கழுதையாக, தெருநாயாக பிறப்பான். தனக்கு மந்திரங்கள் தெரிந்தும் பிறர்க்கு அதை கற்பிக்காத பிராமணன் பாரம் இழுக்கும் எருதாக பிறப்பான். அடிபடுவான். குருவை அவமதித்து, அவரை துன்புறுத்திய பிராமணன் சிஷ்யன் பிரம்மராக்ஷசனாக பிறந்து காட்டில் அலைவான். பிராமணனுக்கு தக்ஷிணை தருவதாக சொல்லி குறைத்து கொடுத்தோ,ஏமாற்றியோ மகிழ்ந்தவன் குள்ளநரியாக பிறப்பான். அளவு குறைத்து வியாபாரத்தில் ஏமாற்றியவன் ஆந்தையாக பிறப்பான்.நண்பனை ஏமாற்றியவன் கழுகாக பிறப்பான்.
லிஸ்ட் தொடர்கிறது. அடுத்த பதிவில் சந்திப்போம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



