விஞ்ஞான நௌகா – 5/9 – நங்கநல்லூர் J K SIVAN
निषेधे कृते नेति नेतीति वाक्यैः समाधिस्थितानां यदाभाति पूर्णम् । अवस्थात्रयातीतमद्वैतमेकं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ५॥
Nishedhe krute neti neteeti vakyaih Samadhisthithaanaam yadaabhaathi poornam Avasthaathrayaatheetham advaitam ekam Param Brahma nityam tadevaaham asmi. 5
நிஷேதே க்ருதே நேதி நீதீதி வாக்யைঃ ஸமாதிஸ்থிதாநாம் யদாভாதி பூர்ணம் ॥ அவஸ்தாத்ரயாதீதம் அத்வைதம் ஏகம் பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 5
“அது இல்லை”, “இது இல்லை” என்ற வார்த்தைகள் தான் நம்மிடமிருந்து அதிகப்படியாக தினந்தோறும் வருகிறது.எதனால்? நமக்கு எதிர்பார்ப்பு நிறைய இருக்கிறது.அது நிறைவேறுவதும் இல்லை, அதனால் ஏமாற்றம், மற்றவர்கள் நமக்கு கிடைக்காததைப் பெறும் போது பொறாமை,கோபம் ஆத்திரம் எல்லாம் வந்து நமக்கு இன்னும் அமைதியை கெடுக்கிறது. ஞானிக்கு இதே வார்த்தைகள் வேறு அர்த்தத்தில் தோன்றுகிறது. ஒவ்வொன்றாக விட்டு விடுபவன். ‘ தான் தேடுவது அது இல்லை இது எல்லை’ என்று விலக்குபவன். ஒவ்வொன்றாக விட்டுவிடுபவன் தியானத்தில் நன்றியோடு இறைவனை அணுகுகிறான். முக்தன் சமாதி நிலையில் நுழைந்து முழுவதுமாக ஞானப்ரகாசமாக திகழ்கிறான். விழிப்பு,கனவு, ஆழ்ந்த உறக்க நிலைகளுக்கு அப்பாற்பட்ட நான்காவது நிலையாகிய துரீயத்தில் இருப்பவன் ப்ரம்ம ஞானி. தானே ப்ரம்மமானவன். நமக்கு அந்த நாளும் வந்திடாதோ?