
ஆத்ம வித்யா விலாசம் 51-55 – நங்கநல்லூர் J K SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா
भूतं किमपि न मनुते भावि च किञ्चिन्न चिन्तयत्यन्तः ।पश्यति न पुरोवर्त्यपि वस्तु समस्तार्थसमरसः कोऽपि ॥ ५१॥
bhUtaM kimapi na manute bhAvi cha ki~nchinna chintayatyantaH |pashyati na purovartyapi vastu samastArthasamarasaH ko.api || 51||
பூ⁴தம் கிமபி ந மநுதே பா⁴வி ச கிஞ்சிந்ந சிந்தயத்யந்த: । பஶ்யதி ந புரோவர்த்யபி வஸ்து ஸமஸ்தார்த²ஸமரஸ: கோऽபி ॥
ஆத்ம ஞானிக்கு இறந்தகாலம், எதிர்காலம் நிகழ் காலம் என எதுவும் தனியாக இல்லை, எல்லாம் ஒன்றேதான். அவன் காலத்தை கடந்தவன், அதனால் அவனுக்கு பிறப்பு இறப்பு வாழ்க்கை என்றார் எண்ணம் எதுவும் இல்லை. தான் என்ற எண்ணம் இல்லாதவனுக்கு எதற்கு இதெல்லாம் தோன்றப்போகிறது.? ப்ரம்மம் காலத்தை வென்றது. அதில் நிலைத்திருப்பவன் அதோடு இணைந்துவிடுகிறான்.
निगृहीताखिलकरणो निर्मृष्टाशेषविषयेहः ।तृप्तिमनुत्तमसीमां प्राप्तः पर्यटति कोऽपि यतिवर्यः ॥ 52॥
nigR^ihItAkhilakaraNo nirmR^iShTAsheShaviShayehaH |tR^iptimanuttamasImAM prAptaH paryaTati ko.api yativaryaH || 52||
நிக்³ரு’ஹீதாகி²லகரணோ நிர்ம்ரு’ஷ்டாஶேஷவிஷயேஹ: । த்ரு’ப்திமநுத்தமஸீமாம் ப்ராப்த: பர்யடதி கோऽபி யதிவர்ய: ॥
ப்ரம்ம ஞானி புலன்களை வென்றவன். பற்றற்றவன். உலகத்தோடு ஒட்டாதவன். ஆகவே சுக துக்கங்களை அப்பாற் பட்டவன். பிரம்மானந்தம் ஒன்றே துய்ப்பவன். சர்வ சுதந்திரமாக உலவுபவன்.
सन्त्यजति नोपपन्नं नासम्पन्नं च वाञ्छति क्वापि ।स्वस्थः शेते यतिराडान्तरमानन्दमनुभवन्नेकः ॥ ५३॥
santyajati nopapannaM nAsampannaM cha vA~nChati kvApi |svasthaH shete yatirADAntaramAnandamanubhavannekaH || 53||
ஸந்த்யஜதி நோபபந்நம் நாஸம்பந்நம் ச வாஞ்ச²தி க்வாபி । ஸ்வஸ்த:² ஶேதே யதிராடா³ந்தரமாநந்த³மநுப⁴வந்நேக: ॥ 53॥
ஆத்ம ஞானி தனித்திருப்பவன். தெளிவான சித்தம் கொண்டவன். தனக்குள்ளே சமுத்ரமாக இருக்கும் ஆத்ம வெள்ளத்தில் மூழ்கி ஆனந்தமாக இருப்பவன். வேண்டியது வேண்டாதது என்று எதுவும் இல்லாதவன். நடந்தது நடப்பது, நடக்கப்போவது எதுவும் லக்ஷியம் இல்லாதவன். விருப்பு வெறுப்பற்றவன். துறவிகளின் ராஜா அவன். சாக்ஷி யாக எல்லாவற்றையும் எந்த உறவுமின்றி பார்ப்பவன். பேதமற்ற பார்வை கொண்டவன்.
कामपि विमलां पदवीमासाद्यानन्दसंविदुन्निद्राम् ।आस्ते भिक्षुक एको विहरन्निर्मुक्तबन्धनः स्वैरम् ॥ ५४॥
kAmapi vimalAM padavImAsAdyAnandasaMvidunnidrAm |Aste bhikShuka eko viharannirmuktabandhanaH svairam || 54||
காமபி விமலாம் பத³வீமாஸாத்³யாநந்த³ஸம்விது³ந்நித்³ராம் । ஆஸ்தே பி⁴க்ஷுக ஏகோ விஹரந்நிர்முக்தப³ந்த⁴ந: ஸ்வைரம்
விவரிக்க இயலாத ஆனந்தத்தில் சதா ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஞானி எப்போதும் விழிப்போடு இருப்பவன். தனிமையை நாடுபவன். பற்று எதுவும் அற்றவன். உலக வாழ்க்கையோடு ஒட்டாதவன். உலக மாயையில் சிக்காதவன். -கர்ம பந்தங்களிலிருந்து விடுபட்டவன்.
वस्तुन्यस्तमिताखिलविश्वविहारे विलीनमनाः ।राजति परानपेक्षो राजाऽखिलवीतरागाणाम् ॥ ५५॥
vastunyastamitAkhilavishvavihAre vilInamanAH |rAjati parAnapekSho rAjA.akhilavItarAgANAm || 55||
வஸ்துந்யஸ்தமிதாகி²லவிஶ்வவிஹாரே விலீநமநா: । ராஜதி பராநபேக்ஷோ ராஜாऽகி²லவீதராகா³ணாம் ॥ 55॥
ஆத்ம ஞானி வைராக்ய சித்தன். பந்த பாசங்களை சுட்டெரித்தவன். பிரபஞ்சத்தின் மாறும் தன்மையை நன்றாக உணர்ந்தவன். எப்போதும் எந்த எதிர்பார்ப்பும் சந்தேகமும் இன்றி ஒளிர்பவன். தனது நிலையிலிருந்து சிறிதும் மாறாதவன்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



