SADHASIVA BRAHMENDHRA – J K SIVAN

சதாசிவ ப்ரம்மேந்திரா – நங்கநல்லூர் J K SIVAN

நீ எப்போ வாயை அடக்கப் போறியோ?

”பெரியவா தான் இல்லை, இனிமே பார்க்க முடியாது. அவரைப் பற்றி சொல்ற, எழுதற உங்களையாவது இன்னிக்கு பார்க்க லாம்னு வந்தேன்.”
பரமானந்தம் என் எதிரே அரை டஜன் ஆரஞ்சு பழங்களை தட்டில் வைத்தார்.
‘பரமானந்தம், இதோ பாருங்கோ, நான் ஒண்ணுமே இல்லை. ஒரு தூசி. இப்போ பெரிய பெரிய மஹான்கள் நன்றாக படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம் பெரியவா பத்தி அமோகமா பேசறா. எழுதறா, பாடறா. நான் அங்கே இங்கே ஏதாவது என் காதிலே விழுந்தது, படிச்சது, மனசுக்கு பிடிச்சதை மட்டும் தானே என் நண்பர்கள் எல்லோரோடும் சேர்ந்து அனுபவிக்கறவன். அதுக்கு மேலே என்கிட்டே சரக்கு கிடையாது”
”அது எதேஷ்டம் ஸார், இது விடாம கிடைக்க பகவானை வேண்டிக்கறேன். இன்னிக்கு சதாசிவ ப்ரம்மேந்திரா பத்தி சொல்லுங்கோ. காது குளிர கேக்கறேன். ஒரு நல்ல விஷயம் உள்ளே போகட்டும் னு ஆசைப்படறேன்”
”ஆஹா சொல்றேனே. அதைவிட வேறே என்ன சந்தோஷம் இருக்கு எனக்கு?” என்றேன். பர்மானந்தத்தோடு சேர்த்து உங்களுக்கும் ப்ரம்மானந்தமாக இதோ:
”சதாசிவ ப்ரம்மேந்த்ரர் ஒரு ப்ரம்ம ஞானி. அவதூதர். மதுரையிலே அப்பா சோமசுந்தர அவதானி ஒரு வேதாந்த விற்பன்னர். குடும்பம் திருவிசநல்லூரிலே பெரிய மஹான்கள் இருக்கிறதை கேள்விப்பட்டு அங்கே குடியேறியது. சதா சிவனுக்கு 5வயதில் உபநயனம். குருகுல வாசம். சின்னவயசிலேயே கல்யாணம். மனைவி புஷ்பவதியாகி தாய் வீட்டிலிருந்து சதாசிவன் வீட்டுக்கு வரும் நாள் வீட்டில் நிறைய அயிட்டங்கள் அம்மா சமைக்கிறாள். விறகு அடுப்பு சாமையை, அம்மி கல்லுரல் இத்யாதி சமையல் எப்போவும் கொஞ்சம் லேட்டாக தான் இலையில் அன்னம் விழும். அன்று காலை வீட்டுக்கு முதல் முதலாக மாட்டுப்பெண் வருகிறாள் என்பதால் கொஞ்சம் அதிகம் அயிட்டங்கள் என்பதால் எக்ஸ்ட்ரா லேட். நல்ல பசி சதாசிவனுக்கு அவனுக்கு. சமையல் லேட்டாகிறதே . தாயை கேட்கிறான்
”ஏம்மா சமைக்கிறதுக்கு இன்னிக்கு ஏன் இத்தனை நாழி? பசிக்கிறதே. ”
அம்மா பார்வதி மாமி : ”சதாசிவா , இன்னிக்கு நம் அகத்துக்கு உன் பார்யா வரப்போறா. அதுக்காக விருந்து பண்ணிண்டி ருக்கிறதாலே லேட்”
சதாசிவனுக்கு கவலை வந்துவிட்டது:
”அம்மா எனக்கு கல்யாணமாகி இன்னிக்கு தான் என் மனைவி இங்கே வரப்போறாளா? அவன் வரப்போறா என்பதாலேயே சாப்பிட இவ்வளவு நாழியானால், மனைவியாக வீட்டுக்குள் வந்துவிட்டால் இனிமேல் தினமும் எத்தனை நாழியாகுமோ?”

பட்டினத்தாரை போல் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் சதாசிவ ப்ரம்மேந்த்ரர் . அதிர்ச்சியடைந்த பெற்றோர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. சிலகாலம் எங்கோ அலைந்து திரிந்து தீக்ஷை பெற்று சந்யாசியாக திருவெண்காட்டில் வாழ்ந்திருந்தார். அகோர மூர்த்தி பக்தரான அவர் பரமசிவேந்திராள் (1539-1586) என்ற அப்போதைய காஞ்சி காமகோடி பீடாதிபதியை குருவாகக் கொள்கிறார். பரம சிவேந்திராள் வேதாந்த சாஸ்திரங்கள் எல்லாம் கற்ற இணையற்ற யோகி. ப்ரம்ம சூத்ர வ்ருத்தி, யோக சூத்ர வ்ருத்தி, சித்தாந்த கல்பவல்லி ஆகிய வேதாந்த நூல்களை இயற்றியவர். சதாசிவன் அவரோடு கல்வி சம்பந்தமான கேள்விகள்கேட்பார். ஏன் எப்படி, எதற்காக என்றெல்லாம் நிறைய வாதங்கள் புரிவார். தவறைச் சுட்டிக்காட்டுவார்.
ஒருநாள் ஒரு பண்டிதர் குருவின் முன்பு தவறாக ஏதோ வ்யாக்யானங்கள் செய்தபோது அவரைச் சாடினார் சதாசிவப்ரம்மேந்திரா.
அந்த பண்டிதர் சென்றபிறகு குரு பரமசிவேந்திராள் சதாசிவனை அழைத்து ”சதாசிவா, நீ செய்கிற தர்க்கங்களால், வாதத்தால் என்ன பயன். என்றாவது ஒருநாள் உன் நாவை நீ கொஞ்சம் அடக்கவேண்டாமா?” என்று வருந்துகிறார்.
”குருநாதா. உங்கள் அனுக்கிரஹம் கிடைத்துவிட்டது. அதை இன்றே நிறைவேற்றுகிறேன்”
குருவை நமஸ்கரிக்கிறார் சதாசிவ ப்ரம்மேந்திராள். அந்த கணம் முதல் தேக வியோகம் அடையும் வரை அவர் மௌனகு ருவாக இருந்தார். சர்வமும் துறந்த ஞானியாக பல க்ஷேத்ரங்கள் அலைந்து திரிந்து பைத்தியம் என்று எல்லோரும் எள்ளி நகையாட திரிந்தார். குரு பரமசிவேந்திராளிடம் செய்தி சென்றது.
”ஆஹா என்ன பாக்யம். எனக்கு அப்படி ஞானப் பைத்திய பட்டம் வர நான் கொடுத்து வைக்கவில்லையே” என்று வருந்துகிறார்.
நிர்வாண ப்ரம்ம ஞானியாகிவிட்டாரே சதாசிவர் என்று தானும் அன்றுமுதல் சிவத்யானத்தில் மௌனமாக ஈடுபட்டார். மற்றொருவரை ஜகத் குரு பீடாதிபதியாக்கிவிட்டார்.
ஒருமுறை சதாசிவ ப்ரம்மேந்த்ரா எங்கோ ஒரு வரப்பின் மேல் தலைவைத்து சாய்ந்து வயலில் படுத்திருந்தார். ஒரு வழிப்போக்கன், ”துறந்த கட்டைக்கு சாய்மானமா” என்று சொல்லி சிரித்தான்.
எழுந்திருந்து உட்கார்ந்தார்.
”துறவிக்கு சொல் பொறுக்கவில்லையா?’ என்றான் அவன்.
”இது எனக்கு உபதேசம். எல்லாம் துறந்தவனுக்கு மற்றவர் உபதேசம் அலட்சியமா?” என்று புரிந்து கொள்கிறார்.

ஒரு சமயம் பசி உடலை வாட்ட, யாரோ ஓரு முஸ்லீம் பிரபு வீட்டிற்குள் நுழைந்து கையேந்தினார். ஒரு நாளைக்கு ஒரு தரம் தான் கையேந்துவார். அப்போது யார் என்ன கொடுக்கிறார்களோ அந்த ஒரு கவளம் தான் ஆகாரம். அடுத்த உணவு அடுத்தநாள் தான்.
அந்த முஸ்லீம் வீட்டு பெண்கள் ” யார் இவன்? நிர்வாணமாக அத்து மீறி, நம் வீட்டுக்குள் நுழைந்தவன்”
என்று அந்த முஸ்லீம் பிரபுவிடம் முறையிட அவன் வாளை உருவிக்கொண்டு கோபத்தோடு அவரைத் தேடி ஓடி வந்தான். அதற்குள் பிரம்மேந்திரர் ஆகாரம் இல்லை என்று அந்த பெண் சொன்னவுடன் சிவ ஸ்தோத்திரங்கள் மனதால் சொல்லிக் கொண்டே காவேரிக் கரை நோக்கி நடந்தார். ஒரு கை ஜலம் அன்று போதும் என்று நினைத்தாரோ என்னவோ. அதற்குள் அவர் பின் ஓடி வந்த முஸ்லீம் கூரான வாளினால் அவர் வலது கையை தோளோடு வெட்டினான். அது கீழே விழுந்தது. அவர் ரத்தம் சொட்ட சொட்ட ஒன்றுமே நடக்காதது போல் ஆற்றங் கரையை நோக்கி நடந்தார். முஸ்லீம் அசந்து போனான். அவரிடம் ஓடிச்சென்றான்.
”ஐயா, நான் உங்கள் கையை வெட்டினேன் நீங்கள் ஒன்றுமே லக்ஷியம் பண்ணாமல், கோபிக்காமல், வருந்தாமல், உங்கள் ஸ்தோத்திரத்தை தடைபடாமல் சொல்லிக்கொண்டு நடக்கிறீர்களே. என்ன ஆச்சரியம் இது?”
அப்போது தான் ப்ரம்மேந்த்ரருக்கு தனக்கு வலது கை இல்லை என்பதே தெரிந்தது. இருபது அடி தூரம் பின்னால் நடந்து கீழே இருந்த கையை இடது கையால் எடுத்து வலது தோளில் வைத்தார். அது முன் போல் தோளில் ஒட்டிக்கொண்டு ஒன்று சேர்ந்து விட்டது! நமக்கே இதை படிக்கும்போது மயிர் சிலிர்க்கிறதே, அந்த முஸ்லீம் நேராகவே இதை பார்த்தவனுக்கு எப்படி இருக்கும்?”
அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவனையும் எல்லோரையும் போல் அன்பாக நேசித்து ஆசி வழங்கி அவர் காவிரி நதிக்கு சென்றார்.
”மானஸ சஞ்சரரே” பாடல் மணலில் எழுதினர். பலர் அதை எழுதி வைத்துக்கொண்டார்கள் நாம் இன்றும் அதை கேட்டு பாடி, அனுபவிக்கிறோம்.
மானஸ சஞ்சரரே எனும் இந்த அற்புத சதாசிவ ப்ரம்மேந்திராவின் கீர்த்தனையை சாமா ராகத்தில் கேட்டு மகிழாதவர்கள் இல்லை. ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அதை சற்று வேறு விதமாக மாற்றி அனுபவித்து பாடியிருக்கிறார். நான் அந்த பாட்டின் ரசிகன் .பாடி பார்த்தேன்.

मानस सन्चररे। ब्रह्मणि मानस सन्चररे॥ – mānasa sancarare |brahmaṇi mānasa sancarare ||
मदशिखि पिञ्छालन्क्रुत चिकुरे। महणीय कपोल विजित मुकुरे॥ madaśikhi piñchālankruta cikure | mahaṇīya kapola vijita mukure ||
श्री रमणी कुच दुर्ग विहारे। सेवक जन मन्दिर मन्दारे॥śrī ramaṇī kuca durga vihāre |sevaka jana mandira mandāre ||
परमहम्स मुखचन्द्र चकोरे। परिपूरित मुरली रवधारे॥ paramahamsa mukhacandra cakore | paripūrita muralī ravadhāre ||

“ஏ மனமே சற்று சிந்தித்துப்பார். மிக உயர்ந்தது ஒன்று உன் மனதை கடந்து நிற்கிறதே அந்த பிரம்மத்தை நாடு. சிந்தித்து பார். அந்த பரம்பொருள் என்ன ஆபரணம் பூண்டு மினுக்குகிறான்? ஒரு சாதாரண அழகிய மயில் இறகு , பீலி அவனது கருத்த சுருண்ட கூந்தலில் எவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்டது போல அமர்ந்திருக்கிறது. உன்னத பிரம்மத்தை தேடும் முயற்சியும் அப்படி அழகு பெறட்டும். அந்த பரப்ரஹ்மத்தின் கன்னங்கள் எப்படி கண்ணாடியை போல பளபளக்கிறது. அவன் மஹாலக்ஷ்மியை மார்பில் தாங்கி நிற்கும் ஸ்ரீ நிவாஸன். அவனே துர்காவை சேர்ந்து நிற்கும் பரமேஸ்வரனும் கூட. அவனது பக்தர்களுக்கு அவன் ஒரு கல்பதரு. நினைப்பதெல்லாம் அளிக்கும் வாசலில் நிற்கும் கற்பக விருக்ஷம். அவனை அடிபணிந்து நிற்கும் சேவிக்கும் பக்தர்களுக்கு அந்த பரம ஹம்ஸ ஞானியின் முக கமலம் பூரணநிலவு. அவர்கள் அவனை நாடி விண்ணில் பறக்கும் சகோர பக்ஷிகள். மனமே, ப்ரம்மஸ்வரூபத்தை நாடும் சகோரபக்ஷியே, ஆனந்த பரிபூரணத்தை அவனது நாணல் குழல் பிரம்மானந்தத்தை எங்கும் நிரப்பும் ஒலியிலிருந்து அனுபவி!

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;