
சோமயாஜுலு கதை – நங்கநல்லூர் J K SIVAN
எனக்கு கோவில்களுக்கு போய் தரிசனம் பண்ணுவதில் அலாதி சந்தோஷம், அளவு கடந்த திருப்தி. நல்ல நண்பர்களோடு செல்வது இன்னும் பரமானந்தம். ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு வண்டி வைத்துக்கொண்டு 13, 15, 20, 25 ,50 பேர் என்று கூட பல வித வாகனங்களில் சென்றிருக்கிறோம். முன்பே எந்தெந்த ஸ்தலங்கள் செல்கிறோம், என்னென்ன விசேஷங்கள் அங்கு என்று பட்டியல் போட்டுக் கொள்வேன். யார் யார் விருப்பப்படுகிறார்கள் என்று கேட்டு சேதி அனுப்புவேன். தேவையான எண்ணிக்கை கிடைத்தவுடன் வண்டி வாடகைக்கு எடுப்போம், வழியில் சாப்பிட தேவையான பொருள்கள், உணவு தயாரித்து காலை முதல் இரவு வரைக்கு தேவையானவற்றை வண்டியில் ஏற்றுக் கொண்டு புறப்படுவோம். மொத்த செலவு அனைத்து பயணிகளும் தலா இவ்வளவு என்று பகிர்ந்து கொள்வோம். குறைந்த செலவில் உணவோடு, வீடு வாசல் வரை எங்கள் புனிதப் பயணங்கள் ஒரு நாள், ரெண்டுநாள், மூன்று நாள், ஐந்து நாள் என்று கூட நீண்டிருக்கிறது. அந்தந்த கோவில்களைப்பற்றி எழுதும்போது எங்களோடு பயணிக்காத வர்களுக்கு அதே இன்பம் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு என்னால் முடிந்தவரை எழுதுவேன்.
ஒரு சின்ன பிரயாண கதை சொல்கிறேன்.ஒரு கிருஷ்ண பக்தன் , இயன்ற போதெல்லாம் எங்கெங்கோ இருக்கும் கிருஷ்ணன் கோவில்களுக்கு செல்பவன். யாத்ரீகன், சோமயாஜுலு என்று தமிழ் பேசும் நண்பன்.
ஒருநாள் துவாரகைக்கு புறப்பட்டான். வெகு நாள் விருப்பம் நிறைவேறப்போகிறது என்று சந்தோஷம் அவனுக்கு.
”கிருஷ்ணா, இத்தனை காலம் உன்னை மனதால் நெருங்கியவன் இப்போது உடலாலும் உன்னை நெருங்கப் போகி றேன்”என்று சொல்லிக் கொள்வான்.அவனுக்கு ஹிந்தி பேசத் தெரியாது, அந்த அளவு தான் ஆங்கில ஞானமும். ஏதோ தட்டுத்தடுமாறி விசாரித்துக்கொண்டு துவாரகா சென்றுவிட்டான்.சோமயாஜுலுவுக்கு ஒரு பழக்கம், எங்கே சாமியார்களை, துறவிகளை பார்த்தாலும் நமஸ்கரித்து வணங்கி ஆசி கேட்பது. தன்னாலான தான தர்மம் பண்ணுவது.துவாரகை கோவில் செல்லும் வழியில் ஒரு சத்திரத்தில் துறவி ஒருவரைப் பார்த்தான். வணங்கினான். அதிர்ஷ்ட வசமாக அந்த துறவிக்கு கொஞ்சம் திக்கி திக்கி தமிழ் பாஷை பேசத்தெரியும். ”எங்கேருந்து ப்பா வறுகிறாய் ?””தமிழ்நாட்டிலே திருநெல்வேலி பக்கம் ஒரு க்ராமமுங்க சாமி ””ஓ அவ்வளவு தூரத்திலிருந்தா வந்திருக்கே. எதுக்கு இவ்வளவு தூரம் ?””எனக்கு கிருஷ்ணன் இஷ்ட தெய்வமுங்க சாமி. எங்கெல்லாம் கிருஷ்ணன் கோவில் இருக்குதோ அங்கெல்லாம் போய் தரிசனம் பண்ண ஆசை. முடிந்த போதெல்லாம் போவேன். துவாரகை கிருஷ்ணனை பார்த்துட்டா அநேகமாக எல்லா கிருஷ்ணனையும் பார்த்தது மாதிரி””துவாரகையில் வந்து என்ன பண்ணுவே?””கோவில்லே உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணுவேன் சாமி”துறவி வாய் கொள்ளாமல் சிரித்தார். ”ஏதாவது தப்பா சொல்லிட்டேனா சாமி. எதுக்கு சிரிக்கிறீங்க?””கோவிலுக்கு போகிறதும், அங்கே உட்கார்ந்து பேசறதும் , பாடறதும் , படிக்கிறதும் மட்டும் பக்தி தெய்வீகம் இல்லைப்பா. நீ இதுக்கு முன்னாலே கிருஷ்ணனை பார்த்திருக்கியா? அவனைத் தெரியுமா உனக்கு?”” இல்லீங்க சாமி””அவனையே தெரியாதபோது அவனை எப்படிப்பா வழிபடுவாய்?. உட்காருகிறது, பிரார்த்தனை பண்றது மட்டும் போதுமா?”’எனக்கு தெரியலே சாமி. நீங்க விளக்கமாக சொல்லுங்க””அது வழிபாடு இல்லேப்பா. கோவிலுக்கு போறவங்க ஏதோ மளிகை லிஸ்ட் மாதிரி பெரிசா ஏதாவது கோரிக்கை, வேண்டு கோளுடன் எனக்கு அது நடக்கணும், இது நிறைவேறணும், இது வேணும், அது வேணாம்” என்று எதையாவது கேட்க தான் கோவிளுக்கு சாமி பாக்க போறாங்க.””சொல்லுங்க சாமி”” கோவிலில் சாமி கும்பிடறது வியாபாரம் இல்லே. ”எனக்கு இதை செஞ்சு கொடு, நான் உனக்கு இதை செய்யறேன்” என்று வேண்டிக் கொண்டால் அது வியாபாரம் தானே. பண்டம் மாற்றுதல் தானே””புரிஞ்சுது சாமி. பகவான் மேலே பக்தி, அன்பு எப்படி இருக்கணும் சாமி, சொல்லிக்கொடுங்க””உனக்கு தெரியாத, புரியாத நீ பார்க்காத, பேசாத ஒரு கடவுள் கிட்டே நீ எப்படி அன்பை செலுத்துவே? யோசி” சிரித்துக் கொண்டே பேசினார் துறவி.”எப்படி சாமி கடவுளை பார்க்கறது நான்?””கடவுளைப் பார்க்கறது இல்லையேப்பா, ”உணருவது” தான் முக்யம் ”.”எப்படி சாமி?””தியானம் பண்றது எப்படினு சொல்லித்தரேன், அதை விடாமல் முடிஞ்ச போது எல்லாம் மனதை குவித்து மனதால் கடவுளை உள்ளன்போடு நினைத்துக் கொண்டு செய், அவனைப் புரிந்து கொள்வாய்.’
‘சாமி, தியானம் பூஜை, அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கா ?””அப்பனே, தியானம், மௌனம் மூலம் உனக்குள்ளேயே அவனைக் காண்பது தான் உணர்வது” அமைதியாக மனதில் வேறு எந்த சிந்தனையும் இல்லம், உலகை, உன்னை மறந்து கண்மூடி அவனை நினைத்து அவன் நாமம் சொல். அப்போது உனக்கே தெரியும், உன் மன அமைதி, சந்தோஷம் எல்லாம் புரியும் ””சாமி எனக்கு அமைதியும் அன்பும் வேண்டும் சாமி ””ரெண்டு வார்த்தை சொன்னியே ”எனக்கு” ”வேண்டும் ”என்று அதை எடுத்துட்டுப்பார் மீதி என்ன இருக்கு. ”அமைதியும் அன்பும்” தானே, அது உன் கிட்டேயே இருக்குது பார்.””ரொம்ப சந்தோஷம் சாமி” நிறைய கோவில்லே சீக்கிரமே போய் எவ்வளவு கிட்டே நிக்க முடியுமோ அவ்வளவு கிட்டே போய் சாமி கிட்டேயே நின்னு பார்த்திருக்கிறேன் சாமி.” துறவி சிரித்தார். ”எதுக்கு சாமி சிரிக்கிறீங்க?””அவ்வளவு கிட்டே, சாமிக்கு பக்கத்திலே நின்னு பார்த்தேன் என்கிறாயே, அவனை நினைத்தாயா? கிட்டே போய் நிக்கிறது அன்பு பக்தி இல்லைப்பா. அப்படிப் பார்த்தா எத்தனை அர்ச்சகர்கள் ஒவ்வொரு நாளும் விக்ரஹங்கள் கிட்டே நின்னு, தொட்டு அபிஷேகம், அர்ச்சனை பண்ணுகிறார்கள். 24 மணி நேரமும் கடவுளையே அவர்கள் நினைக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா?” நீ எங்கிருக்கிறாயோ அங்கேயே அப்போதே கடவுளை உன்னுள்ளே நீ காண முடியும் தொழமுடியும்.சோமயாஜுலு சாமான்களை மூட்டைக்கட்டிக்கொண்டு புறப்பட தயாரானான்.”எங்கேப்பா கிளம்பிட்டே, துவாரகை கோவிலுக்கா?””இல்லே சாமி ரயில் பிடிச்சு ஊருக்கு திரும்பப போறேன்””ஏம்பா என்ன ஆச்சு?””சாமி உங்ககிட்டே பேசினதே கிருஷ்ணன் எனக்கு நேரே வந்து சொல்லிக்கொடுக்கிறமாதிரி இருந்துது. நான் மனசு மாறிட்டேன் சாமி.எங்க ஊருக்கு போறேன்””நான் முதல்லே கடவுளே உணரணும் அப்புறம் அவனைக் கண்டு வழிபடணும் ‘ நீங்க சொன்ன அமைதியும் அன்பும் மனசிலே முதல்லே ரொப்பிக்கொண்டு அப்புறம் தான் அவனை தேடணும். என்னிலிருந்து நான் தூர விலகிப்போனால் தான் அவன் கிடைப்பான் என்று புரிகிறது சாமி ”
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




Namaskaram mama,
Beautiful story on True Krishna Bhakthi.Thanks