
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
பெரியவா பற்றிய ஞாபகம்.
குறைந்தது 80 ஆண்டுகளாக இப்போது வாழும் நம்மில் பலர் பெரும் பாக்யம் செய்தவர்கள். என்ன பாக்யம்? பாக்யம் மட்டுமா, பெரிய அதிர்ஷ்டம் கூட. காஞ்சி பரமாசார்யர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம், அவர் சுவாசித்த காற்றை நாமும் சுவாசித்து, அவர் நடந்த மண்ணில் நாமும் நடந்தோம், அவரை நேரில் பார்த்தோம் என்பதே அது. அவரை தரிசனம் செய்தவர்கள் புன்யசாலிகள் . அவரோடு பேசி, அவர் பேசியதைக் கேட்க கொடுத்துவைத்தவர்கள் புண்யம் பண்ணிய மஹா புருஷர்கள். எனக்கு என்ஹட் புண்யம் கிடைத்தது என் முன்னோர்கள் ஆசிர்வாதம். மஹா பெரியவாளுடன் கூடவே இருந்தவர் களைப்பற்றி கேட்கவே வேண்டாம் அவர்களுக்கு மறு பிறப்பே கிடையாது.
மஹா பெரியவா ஒரு அபூர்வ மாணிக்கம். இந்த நாடே நற்கதியடைய அவதரித்தவர். அவரை வயதைக்கொண்டோ, கால அளவைக் கொண்டோ மதிப்பிட முடியாத பரம புருஷர். ஒரு சிறந்த ஆன்ம ஜோதி, ப்ரம்ம ஞானி. நமது பாரத தேசத்தில் மட்டுமே இத்தகைய மஹான்கள் அவ்வப்போது தோன்றி அருள்பவர்கள் என்பது நமக்கு பெரும் புகழ். எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்தாலும் நடு நடுவே அவ்வப்போது இத்தகைய வழிகாட்டி ஒருவர் தோன்றி நம்மை நல்வழிப்படுத்த அவதரித்துக்கொண்டே இருக்கும் ஒரே நாடு உலகத்தில் நமது பாரத தேசம் தான்.
பெரியவா ஒரு ஞான சாகரம். உயர்ந்த நோக்கு, வேத சாரம், பரோபகாரம், சகலரிடமும் பாரபட்சமின்றி அன்பு, தர்ம சிந்தனை யின் மொத்த உருவம். ஜகத்குரு என்ற பேருக்கே இலக்கணமாக இருந்தவர். அவர் அறியாத மொழி இல்லை. அறியாத சாஸ்திரம் இல்லை. அனுபவிக்காத ரசனை இல்லை. எளிமையின் சின்னம். கலியுக தெய்வமென்பதால் தானே அவரது வாக்க்குகளை ரா. கணபதி தெய்வத்தின் குரலாக நமக்கு அளித்திருக்கிறார். ஒடிந்து விழும் அந்த 100 வயதான சிறிய ரூபத்தில் எத்தனை பெரிய ஆத்ம பலம். தெய்வீக சக்தி.
பன்னிரண்டு வயதிலேயே சன்யாசம். ஆதி சங்கரரின் வழித்தோன்றல் அல்லவா. முதலாமவர் அவர் 7 வயதிலேயே உலகைத் துறந்தவராச்சே.
”யாரப்பா ஒரு உண்மையான குரு?” என்று ஆதி சங்கரரைக் கேட்டபோது அவர் சொன்னது என்ன தெரியுமா?. எவர் ஒருவர் ஞானத்தை முழுமையாக பெற்று தனது சிஷ்யர்களுக்கும் தன்னை அண்டிய வர்க்கும் அவர்கள் நற்கதி பெற போதிக்க தன்னை முழுமையாக அற்பணிக்கிறாரோ அவரே குரு.ஆதி சங்கரர் சொன்னது 68 வது பீடாதிபதி மஹா பெரியவாளுக்கு முற்றிலும் பொருந்தும்.
சதாய்ஸ் (100 ஆண்டுகள்) பெற வாழ்த்தும் வழக்கமுடையவர்கள் நாம், ஹிந்துக்கள். பெரியவா நூறாண்டுகள் வாழ்ந்த மகான். ஆதி சங்கரரைப்போன்றே கால் நடையாகவே பல வருஷங்கள் விஜய யாத்ரை சென்று மக்களை சந்தித்தவர் . தெய்வமே மனிதனைத் தேடி நாடு பூரா சஞ்சாரம் செய்து மக்களை அடைந்து மகிழ்வித்து உய்வித்தது. அவர் காலடி படாத கிராமம் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு எல்லா திசைகளிலும் யாத்திரை சென்றவர். வேறு எங்குமே உலகில் காணாத அதிசயம் இது.
ஒரு மனிதன் எந்த அளவுக்கு தன்னை உயர்த்திக்கொள்ள முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் மஹா பெரியவா. மனித குலமே மூக்கில் மேல் விரலை வைத்து அதிசயிக்கும் மாண்பு கொண்டவர். எந்த பட்டமும் கவுரமும் ஆடம்பரமும் தன்னை நெருங்காதபடி கவனமாக இருந்த எளிய உன்னத தபோ பலம் மிக்க ரிஷி. உலகமே அவரது கனகாபிஷேகத்தை ஆர்வமாக் கொண்டாடியது. அவரோ என்றுமே போல் ஒரு வித்தியாசமும் இன்றி அன்றும் தரிசனம் தந்தார். விரலசைத்தால் நவ நிதியம் அவர் காலடியில் கொண்டு கொட்ட அநேகர் காத்திருந்த போதிலும் பணம் அவரை நெருங்க அவர் விடவில்லை..
ஒரு அறிவாளி, ஞானி என்ன சொல்கிறார் தெரியுமா? கடவுளின் கருணை, அருளை மேலும் மேலும் பெற்று உயரும் ஒருவன் தன்னைப் பற்றிய சுய மதிப்பை தூசாக கருதுகிறான். ”தான்” விலக விலகத் தானே ”அது” நெருங்குகிறது. அப்படி தன்னை ”பெரியவாளாக” நினைக்காது எளிமையாக தவ ஸ்ரேஷ் டராக வாழ்ந்து காட்டியவர் தான் மஹா பெரியவா. நமக்குத் தான் அவர் மஹா பெரியவா. தான் அப்படி யென்று அவர் சிந்தித்ததே இல்லை. அவர் எண்ணம் பூரா நம் க்ஷேமத்திலேயே தான் இருந்தது. நமது வேதமும் சாஸ்திரங்களும் எப்படி ஒரு யோகி இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறதோ அப்படி வாழ்ந்து காட்டியவர் மஹா பெரியவா. அவரை நேரில் கிணற்றங்கரையிலும், ஒலைத்தட்டிகளுக்கு அடியிலும், சிறிய ஒரு சுவற்றின் மேல் சாய்ந்துகொண்டு தரையில் படுத்ததையும் கண்டவர்கள் அறிவர்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



