அறுபத்து மூவர்

அறுபத்து மூவர் –  நங்கநல்லூர்  J K  SIVAN
காரைக்கால்  அம்மையார்.
எத்தனையோ  சிவனடியார்கள்  நம்மிடையே வாழ்ந்தவர்கள், இன்னும் வாழ்பவர்கள்.  வெளியே அதிகம் தெரியாமல் அமைதியாக  எளிய வாழ்வை மேற்கொண்டவர்கள்.  அவர்களில் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு. பக்திக்கு பாகுபாடு கிடையாதே. அப்படி  ஒருவர்  தமிழகத்தின்  அண்டை மாநிலமான பாண்டிச்சேரி எனும்  புதுச்சேரியில்   உள்ள  காரைக்கால் எனும் ஊரில்  வாழ்ந்த தவப்  பெண்மணி.  திருவாலங்காடு அற்புத மான, அருமையான க்ஷேத்ரம் அங்கே செல்லும்போதெல்லாம் காரைக்கால் அம்மையாரை  தரிசித்து மகிழ்வேன். திருவாலங்காட்டை பற்றி ஒரு தனி பதிவு  மீண்டும் இடுகிறேன்.புனிதவதி என்ற அவருடைய இயற்பெயரைச்  சொன்னால்  எந்த படத்தில் நடித்த நடிகை என்று தான் நாம் கேட்பவர்கள். நம் ஞானம் அவ்வளவு தான்.  காரைக்கால் அம்மையார் என்றால் யாரோ ஒரு பாட்டி, ஔவையார் மாதிரி என்று மட்டும்  புரிந்து கொண்டு  உடனே கை கூப்புவோம்.   அறியாமை நமது பொது தவறு.

காரைக்கால் அம்மையார்  ஒரு வைசிய பெண்மணி. அப்பா  பேருக்கேற்றபடி  தன தத்தன் என்ற  பெரிய பணக்கார வியாபாரி. கடற்கரையில் உள்ள  காரைக்கால் பட்டினத்தில் கப்பல் வாணிகம். தான தத்தன் என்றாலும்  கூட  பொருந்தும்.  நிறைய தான தர்மங்கள் செய்பவர்.  சிவனருளால் ஒரு பெண் குழந்தை பிறந்து  புனிதவதி என பெயரிட்டு, ஆசையாக வளர்த்து பரமதத்தன் என்ற  வியாபாரிக்கு அவளை மணம் முடித்தனர். இளம் வயது முதல்  புனிதவதி சிறந்த சிவபக்தை.  இல்லறம் நல்லறமாக சென்று கொண்டிருந்தது.
ஒரு நாள் பரமதத்தன்  ரெண்டு அழகிய  மாங்கனிகளை வீட்டுக்கு  கொடுத்து அனுப்பினான்.  அன்று மத்தியானம் சாப்பிட கணவன் வரும்போது அவனுக்கு இலையில் போடலாம்  என்று அதை  வைத்திருந்தாள்.
மதியம் கணவன் சாப்பிட வருவதற்குள் வாசலில்  ”பவதி பிக்ஷாந்தேஹி ” குரல் கேட்டது. வயதான ஒரு சிவனடியார் வாசலில் நின்றார்.நல்ல பசியும்  களைப்பும்  அவருக்கு.  புனிதவதி அவரை உள்ளே அழைத்து உபசரித்து நமஸ்கரித்து அவரை அமர்ந்து பிக்ஷை ஏற்றுக்கொள்ள  வேண்டினாள். அந்த நேரம் வேறு ஒன்றும் சமையல் அறையில் உணவு   தயாராக இல்லாததால்  மாம்பழத்தை தவிர வேறு  எதுவும் கண்ணில் படவில்லை. ஒரு மாம்பழத்தை எடுத்து அவருக்கு அளித்தாள். உண்டு பசி தீர்ந்து வாழ்த்தி விட்டு சென்றுவிட்டார்.
சற்று நேரத்தில் பரமதத்தன் வீட்டுக்கு வந்தான். அவனுக்கு  மீதி இருந்த ரெண்டாவது மாம்பழத்தை கொடுத்தாள்.
”புனிதவதி ரொம்ப  ருசியாக  இருக்கிறது, நான் அனுப்பிய  இன்னொரு மாம்பழத்தையும் எனக்கு கொடு” என்று கேட்டான் கணவன்.
புனிதவதிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  கவலை.  
”பரமேஸ்வரா,   அவர் கொடுத்த இன்னொரு மாம்பழத்தை  சிவயோகிக்கு அளித்து விட்டேனே.  அதை இப்போது என் கணவன் கேட்கிறாரே என்ன செய்வேன்? அவரை எப்படி திருப்திப் படுத்துவேன்?”
ஆச்சர்யமாக  ஒரு மாம்பழம் அவள் கையில் வந்து விழுந்தது.  பரமதத்தன்  அந்த பழத்தை உண்டான். ”ஆஹா  எவ்வளவு  அற்புதமாக  அதிரசமாக இருக்கிறது இந்த பழம்.   நான் கொடுத்த பழம் இல்லையே  இது , முதல் பழம் சாப்பிட்டேனே  அது போல்  தானே  ரெண்டாவதும்  இருக்கும்?  ஆனால்  இநத  அதி ருசியான பழம்  எங்கே இருந்து  கிடைத்தது புனிதவதி உனக்கு? என்று கேட்டான் கணவன்.  நடந்ததைச்  சொன்னாள்  புனிதவதி.
”என்ன சொல்கிறாய் நீ?  என்னால்  நம்பவே முடியவில்லையே!. எங்கே  மறுபடியும் வேண்டிக்கொண்டு இன்னொரு பழம் வரவழை”
கணவன் இப்படி கேட்டால்  புனிதவதி என்ன செய்வாள்?
”பரமேஸ்வரா எனக்கு ஏன்  இப்படி  ஒரு  சோதனை? என் கணவனை நான்  த்ரிப்திப் படுத்தவேண்டியது என் கடமை. தயவு செய். எனக்கு இன்னொரு பழமும் தா ”
மனமுருகி சிவனை வேண்டினாள். கணவன் கண்ணெதிரே  எங்கிருந்தோ ஒரு அழகிய மாம்பழம் அவள் கையில் கனமாக வந்து விழுந்தது. அடுத்த கணம் மறைந்தது. அதிர்ச்சியில்  பரமதத்தன் பயந்து விட்டான்.
”ஆஹா. என் மனைவி  எவ்வளவு பெரிய யோகி. சிவபக்தை. அவளிடம் நான் கணவனாக  நடந்து கொள்வது  ரொம்ப பெரிய  பாபம்”  என்று மனதில் எண்ணினான்.  இரவெல்லாம் யோசித்து மறுநாள் காலை
”புனிதவதி நான் வெளிநாடு சென்று  கப்பல் வியாபாரம் கவனிக்கவேண்டும்.  திரும்பி வர கொஞ்ச காலம் ஆகலாம்” என்று சொல்லி வீட்டை விட்டு புறப்பட்டுவிட்டான் பரமதத்தன். பாண்டியநாடு சென்று அங்கே ஒரு வைசிய பெண்ணை மணந்து வாழ தொடங்கினான்.  பெண் குழந்தை பிறந்தது. புனிதவதி என்று அதற்கு பெயர் சூட்டினான்.
வருஷங்கள்  ஓடின. புனிதவதியின் உறவினர்கள் சிலர்  மதுரையில்  பரமதத்தன் வேறொருத்தியை மணந்து வாழ்வதை  அறிந்து  திடுக்கிட்டு புனிதவதிக்கு இந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது.  கணவன் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று சந்தோஷித்து அவர்களைப்  பார்க்க மதுரை சென்றாள் .  அவளைப்  பார்த்ததும் பரம தத்தன் குடும்பத்தோடு அவள் காலில் விழுந்து வணங்கினான்.
”அவள்  ஒரு தெய்வம். நான் அவளை எப்படி மனைவியாக  ஏற்றுக் கொள்ளமுடியும்” என்று எல்லோரிடமும் சொன்னான்.  கணவன் மன நிலை புரிந்து கொண்ட  புனிதவதி ”பரமேஸ்வரா, இனி நான் தனியள். இளம்வயதில் தனித்து வாழ சமூகத்தில் முடியாது. என்னை ஒரு எலும்புக்கூடாக பண்ணிவிடேன்” என்று வேண்டினாள்.   தோல் போர்த்திய  எலும்புக்கூடாக அடுத்த கணமே பேய்க்கோலம் கொண்டாள். கால்நடையாக பல  க்ஷேத்ரங்கள் சென்று  கைலாசத்தை அடைந்தாள். அந்த புனித க்ஷேத்திரத்தில் என் கால் எப்படிப்  படலாம் என்று தலையால்  நடந்தாள் .
பார்வதி தேவி புனிதவதியின் பக்தியை மெச்சினாள் .சிவனோடு காட்சி அளித்தாள் .
”பரமேசா,  இனியொரு பிறவி எனக்கு வேண்டாம்.   பிறந்தாலும் என்றும் உன் நினைவாகவே நான் இருக்க அருள் புரிவாய் என்று வேண்டினாள். திருவாலங்காட்டில்  ரத்னசபையில்  நடேசன் தாண்டவத்தை நேரில் காண  வேண்டினாள்.  சென்று கண்டு மகிழ்ந்தாள். மறைந்தாள்.  சிவனோடு கலந்தாள் .
”கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும்
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்
பாடுவாய் நம்மை என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்.
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;