
படியுங்க, எழுதுங்க நீங்களும்….. நங்கநல்லூர் J K SIVAN
கல்வி அறிவு சிந்தனை பற்றி பேசும்போது ஆங்கிலத் தில் மூன்று ‘R’ வேண்டும் என்பார்கள். அதென்ன மூன்று R? ரீடிங் READING, ரைட்டிங், WRITING , அரித் மெடிக் , ARITHMETIC . இதைத்தானே ஆகிய ஆங்கிலம் தெரியாத நம்முடைய முப்பாட்டன்மார்களும் கூட ”எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்று சொல்லிவைத்திருக்கிறார்கள்.
மூன்று R படிப்புக்காக மட்டும் அல்ல ஸார் , நமது குணநலன், வாழ்க்கை அணுகுமுறை, சிந்தனை ஆழம், மற்றும் சுய முன்னேற்றம் ஆகியவற்றுக்கும் அஸ்தி வாரம். அதன் மேலே தான் மற்றதெல்லாம் கட்டிடமாக எழும்பும்.
நிறைய படிக்க வேண்டும். வாசிக்க வேண்டும். அது ஒருவனை அறிவுள்ளவனாக மட்டுமல்ல, உள்ளம் விசாலமாக விரிந்த மனிதனாகவும் மாற்றிவிடும். அம்பேத்காரோ யாரோ ஒரு தடவை “Cultivation of mind should be the ultimate aim of human existence.” என்று சொன்னதாக கேள்வி.. அதாவது மனிதனின் மனதை வளர்ப்பது தான் ஒரு மனித வாழ்வின் உயர்ந்த நோக்கமாக இருக்கவேண்டும்.
உடம்பை வளர்க்க பாதம் பருப்பு, பால், புஷ்டியான ஆகாரம், பழம் காய் என்றுசொல்வார்கள். ஆனால் ”மனதை” எப்படி வளர்ப்பது? அதற்கும் நல்ல வழி இருக்கிறது ஸார் .
“மனதை வளர்ப்பது” என்பது நம்முடைய ஞாபக சக்தி, நினைவாற்றல் மட்டும் அல்ல, நல்ல எண்ணங் கள்,அதைப் பற்றிய சிந்தனை, உணர்ச்சி கட்டுப்பாடு, கவனம் ஆகியவற்றையும் வளர்ப்பதைத் தான் குறிக் கிறது. தினமும் நல்ல விஷயங்களை தேடி படிக்க வேண் டும். நான் 87+ல் தினமும் அதை செய்கிறேன். புத்தகங்கள், கட்டுரைகள், புதிய விஷயங்கள் — இவை நமது சிந்தனையை விரிவாக்கும் என்பது என் அனுபவம்.
தினமும் தனிமையில் குறைந்தது 10–15 நிமிடம் அமைதியாக அமர்ந்து மூச்சில் கவனம் செலுத்துவது மனதிற்கு தெளிவை தரும். ப்ராணாயாமம் என்று பெயர். முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து, காலை, மாலையில் முடிந்தபோது அதிகம் ஆகாரம் வயிற்றில் இல்லாமல்.. (முழுச்சாப்பாட்டுக்கு அப்புறம் இல்லை. அப்போது தூக்கம் தான் வரும் )
ஒவ்வொரு நாளும் புதுசாக ஏதாவதை கற்றுக் கொள்ள லாம். நான் தினமும் SUDOKU போடுவேன். சங்கீதம் ஏதாவது ராகம் ஒன்றிரண்டுஆவது முழுசாக கேட்பேன். பாடுகிறேன். யாரும் என் அறையில் வந்து நிறுத்து என்று சொல்ல மாட்டார்கள். நான் தான் கதவை சாத்திவிடுவேனே. மூளையின் செயல்பாட்டை இது வளர்க்கும்.
எழுதும் பழக்கம் நல்லது. நான் ஒரு ADDICT .19 மணி நேரம் படிப்பு எழுத்து இதிலேயே என் காலம் தள்ளுகி றேன். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இது. அனைத்தும் ஆன்மீக எண்ணங்கள் தான். கவிதை, சிறுகதை, நாவல், மர்மம், சினிமா இந்த பக்கம் மனம் போகமாட்டேன் என்கிறது.
நல்ல சுற்றுப்புற சூழ்நிலை. வானத்து மேகம் இரவில் நக்ஷத்திரங்கள். காலையில் சூரிய உதயம் முன் செக்கர் வானம்.. இயற்கையை ரசிப்பது. தென்னைமரம் ஓலை காற்றில் ஆடுவது கூட பிடிக்கும். விதவிதமான பட்சி களின் குரலை கூர்ந்து கவனிப்பேன். வாசலில் கீரை, காய்கறி, பழம் விற்கும் ஓசையும் ரசிப்பேன். எங்கள் வீட்டு மாமர பழத்தை தின்ன கூச்சலிடும் அணில் கூட்டத்தை ரசிப்பேன்.
நேர்மறையான மனிதர்கள், நல்ல உரையாடல்கள் மனநிலையை மேம்படுத்தும். நிறைய இம்மாதிரியான மனிதர்கள் யூட்யூபில் கிடைக்கிறார்கள். உடற்பயிற்சி குட்டியாக ஏதாவது காலை மாலை பண்ணுகி றேன்.
“இன்று நான் என்ன கற்றேன்?” என்று தினமும் சிந்திப்பது வளர்ச்சிக்கு உதவும். மற்றவர்கள் என்னை
பறி என்ன நினைக்கிறார்கள் என்ற எண்ணமே எழாது. மற்றவர்கள் ஏதாவது கம்மெண்ட் comment பண்ணி போடும்போது ‘நமஸ்காரம், நன்றி கட்டாயம் போடுகி றேன். என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள் எழுததா ளர்கள் படித்தவர்கள் இருக்கிறார்கள், விஷய ஞானிகள் உண்டு என்ற என் மதிப்பீடு வளர்கிறது.படிப்பதால் விஷயங்களை தெரிந்து கொள்வதால் பிறரின் அனுபவங்களை அறிகிறோம்.பொறுமை, பரிவு, நாகரிகம் வளர்கிறது. எது சரி எது தவறு புரிகிறது.
“Reading maketh a full man. conference a ready man and writing an exact man.” ” என்று பிரான்சிஸ் பேகன், FRANCIS BACON சரியாகவே சொல்லி இருக்கிறார். . ஆமாம் ஸார் ,வாசிப்பு மனிதனை முழுமையானவனாக்குகிறது. வள்ளுவர் சொன்னபடி நம்மால் நடக்கமுடியுமா என்பது சந்தேகம் தான். “கற்க கசடறக் கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக.” ஸாரி நோ சான்ஸ்.
” a man is but the product of his thoughts. மனசு தான் மனுசன். படிப்புக்கு முடிவே கிடையாது. நிறையவே
இருக்கிறது saar . நானும் சளைக்காமல் எழுதிக் கொண்டு தானே இருக்கிறேன்.“Learning never exhausts the mind.” — Leonardo da Vinci “கற்பது எப்போதும் மனதை சோர்வடையச் செய்யாது.
”நிறைய படியுங்க ஸார் , நீங்களும் எழுதுங்க ஸார் . என்னைவிட நிறைய நன்றாக எழுதக்கூடியவர்கள்
நீங்கள் எல்லோருமே. நான் கற்றுக்குட்டி ஸார்.
.நலமும் அமைதியும் உங்களைச் சூழ கிருஷ்ணன் அருள் கிடைக்கட்டும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




