MIR JUMLA J K SIVAN

சரித்திரத்தை ஆழமாக தோண்டினால்

மீர் ஜூம்லாவை தெரியுமா? – நங்கநல்லூர் J K SIVAN ஒளரங்க சீப் ஒரு தீவிர முஸ்லிமாக வாழ்ந்தும், மற்ற மதத்தினரிடம் நல்ல பெயர் வாங்காத ஒரு சந்தேகப் பிராணியான முகலாய சக்ரவர்த்தி. அவன் காலத்தில் இந்தியா முழுதும் அவன் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹிந்து மதமோ, அதன் கடவுள் சிலைகளோ, பக்தியோ, கோவிலோ, சங்கீதமோ, அவனுக்கு பிடிக்காத விஷயங் கள். எரிச்சல் மூட்டிவை. கொடூரமான குணம் கொண்ட வன். அவன் தனது தந்தை, உடன் பிறப்பு களை, பெற்ற வாரிசுகளைக் கூட சுயநலத்துக்காக கொல்ல தயங் காதவன் என்று சரித்திரம் சொல்வதிலிருந்து தெரிகி றது. அவன் காலத்தில் அவனுடன் பழகிய ஒரு சந்தர்ப்ப வாதி, சுயகார்ய புலி, மீர் முஹம்மது சயீத் ஆர்தேஸ்தானி. எனும் மீர் ஜூம்லா. இப்போதைய ஈரான் பிரதேசம் இஸ்பஹானில் 1591ல் பிறந்தவன். 72 வயது வாழ்ந்தவன். ஷியா முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவன். தனது தலைவனைப் போலவே சுயநலவாதி. சந்தர்ப்ப சிகாமணி. பாரசீகத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் என்றாலும் இங்கே வந்து, இந்தியாவில் கோல்கொண்டா பகுதியில் அவன் நடமாட்டம் ஜாஸ்தி. அங்கு நடந்த வைர வியாபாரத்தில் ஆர்வம் கொண்டு பல கப்பல்களை வாங்கி தனது வைர சாம்ராஜ்யம் ஓஹோ என்று பிரபலமடைய செய்தவன். நமது தேசத்தின் பல வைர சுரங்கங்களுக்கு சொந்தக்காரன். கோஹினூர் வைரம் அவனிடம் இருந்தது. ஒளரங்க சீப் காலத்தில் இந்திய வியாபாரிகளுக்கு எல்லாம் ராஜா மீர் ஜூம்லா. பாரசீகம், தென் கிழக்கு ஆசியாவில் அவன் வியாபாரம் களை கட்டியது. பணம் இருந்தால் மட்டும் போதாது, பதவி, அதிகாரமும் கையில் இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று தெரிந்தவன். சக்ரவர்த்தி ஷாஜஹான், அவன் பிள்ளைகள் எல்லோருடனும் பழகி, கோல்கொண்டா பிரதம மந்திரியானவன் . ஷாஜஹானுக்கும் அவன் மகன் ஒளரங்க சீப், தாரா, ஷூஜா ஆகியோருடன் தனித்தனியாக ரஹஸ்ய நல்லுறவு கொண்டு அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் சிண்டு முடிந்து விட்டு, அவர்கள் ஒற்றுமையைக் குலைத்து ஒவ்வொருவரிடமும் நல்ல பெயர் வாங்கிய நயவஞ்சக நரி. முகலாய படைகளை கர்நாடகாவின் மேல் ஏவி அதன் செல்வங்களை அனுபவிக்க பல பகுதிகளை இணைத்துக் கொண்டவன். அவனது அரசியல் சமூக வளர்ச்சி படை, பண பலம் கோல்கொண்டா சுல்தானுக்கு தூக்கமில்லாமல் செய்தது. ஒளரங்க சீப்புக்கு நண்பனாக தக்ஷிண பிரதேச படையெடுப்புகளுக்கு ஆதரவு கொடுத்தான். டெல்லி சக்கரவர்த்தி ஷாஜஹானிடமும் நல்ல பெயர் வாங்கி உயர்ந்த ராணுவ பதவி, ”மான்சாப்” ஆனான். ‘திவானி குல்”பதவி பெற்று கோல்கொண்டா பிரதமந்திரி ஆனான். ஒளரங்கசீப் தனது அப்பா ஷாஜஹானை சிறையில் அடைத்து சகோதரர்களைக் கொன்று டில்லி சக்ரவர்த்தி ஆன போது அவனுக்கு துணையாக நின்றான். ஒளரங்க சீப் தன்னுடைய சகோதரன் ஷூஜாவை வெல்ல, கொல்ல, மீர் ஜூம்லா அருமையான திட்டம் தீட்டி நிறைவேற்ற வைத்தான். ஒளரங்கசீப் பின் நம்பிக்கை நக்ஷத்ரம் மீர் ஜூம்லா. வங்காளத்தின் சுபாதார் , கவர்னர் ஆனான். அவன் காலத்தில் வங்காளத்தின் தலைநகரம் தாக்கா. தாக்காவை ஒரு பெரிய நகரமாகிய பெருமைக்குரியவன் மீர் ஜூம்லா. கிழக்கு இந்தியாவில் அஸ்ஸாம் வரை முகலாய அதிகாரம் செல்லுபடி ஆக செய்தவன். ராஜ்யத்தின் வருமானம் அவன் கையில் இருந்தது. ஒளரங்க சீப்பின் ஆளுமை நாடு முழுதும் வலுப்பெற உழைத்தவன். மீர் ஜூம்லா தெலுங்கு நியோகி ப்ராமணர்களோடு நல்ல நட்பு கொண்டவன் . உதவி பெற்றவன். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள தெரிந்த சாமர்த்தி யசாலி. நிர்வாக திறமை கொண்டவன் . ஷாஜஹானையோ,ஒளரங்கசீபையோ கோல்கொண்டா சுல்தான்களோடு பழகினாலும் அவர்களை நெருங்காத வன். நம்பாதவன். முதுகில் குத்த தெரிந்தவன் என்பதால் தனக்கும் அது நேரும் என்று உணர்ந்தவன். வெளியே எங்கும் சென்று நம்பி தங்காதவன். எல்லோரையும் எப்படி சமாளித்து அவர்கள் மூலம் பயன் பெற முடியும் என்பதை நன்றாக யோசித்து அனுபவித்த காரியவாதி. இந்த திறமைக்கு கல்வி தேவை இல்லை என்று அறிந்தவன். சரித்திரத்தை ஆழமாக தோண்டினால் தான் இந்த மாதிரி திரைமறைவில் குழிதோண்டி வாழ்ந்தவர்கள் அகப்படுகிறார்கள்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;