KALIYUG?? J K SIVAN

”அட கலிகாலமே!” – நங்கநல்லூர் J K SIVAN

​1. கலியுகம்- இப்போதைய நிலைமை –
​
​நாம் இப்போது ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த காலம் தான் கலிகாலம் என பெயர் கொண்டது. ஐந்தாயிரம் வருஷத்துக்கு முன்பே எங்கோ ஒரு காட்டில் மரத்தடியில் அமர்ந்து ஒரு ரிஷி நாம் இப்போது எப்படி இருக்கப்போகிறோம் என்பதை ஏதோ ஒரு மாய மந்திரக் கண்ணாடி யை வைத்துக்கொண்டு நிர்ணயித்திருக்கிறார் என்று தோன்றலாம்.. அந்த மந்திர கண்ணாடியை உபயோகிக்க கண்ணைத் திறந்து பார்க்க வேண்டாமா?. ஆனால் அந்த ரிஷி கண்ணையே திறக்கவில்லை. கண்ணை மூடி தியானத்தில் அசையாமல் அமர்ந்து இதை கண்டு பிடித்திருக்கிறார். அவர் தியானம், மனம், தான் அந்த மாய மந்திர கண்ணாடி. அந்த ரிஷி தான் சுக ப்ரம்ம ரிஷி. நாம் வாழும் கலியுகம் எப்படி இருக்கும்​ என்று அப்போதே துல்லியமாக கண்டுபிடித்தவர். அவர் கணிப்பை சமஸ்க்ரிதத் தில் ஸ்லோகங்களாக சொல்லியிருக்கிறார். அதைத்தான் நாம் இப்போது தெரிந்து கொள்ளப்போகிறோம்.

​இந்த கலிகாலத்தில் எல்லாவிதமான அக்கிரமங்களும், அநியாயங்களும் , அதர்மங்களும் ஒவ்வொருநாளும் நடக்கி றது. அது ​ அதிவேகமாக அதிகரித்துக்கொண்டும் வருகிறதே. மனஸாக்ஷி என்பது எல்லோருக்குமே செத்து விட்டதா? எங்கு பார்த்தாலும், கற்பழிப்பு, கொலை, கொள்ளை,திருட்டு, லஞ்சம், என்று வயசு, ஆண் பால், பெண்பால், உறவு, நட்பு, எஜமானன், வேலைக்காரன், ஆபீசர், உதவியாளன் என்​ற பேதமே இல்லாமல் கண்ட​ மேனிக்கு நடக்கிறதே ஏன்?
பத்திரிகைகள், டிவி, யூட்யூப் வாட்ஸாப்​, ஊடகங்கள் என்று எதையெல்லாமோ சொல்கி றோமே அவை நம்மை விடாமல்​ பயங்கர விஷயங்களை அறிவித்துக்கொண்டே நம்மை ஓட ஓட ஓட துரத்துகிறதே. ​ரெண்டு தலைமுறைக்கு முன்பெல்லாம் இப்படி இல்லையே. என் சின்னவயசில் இதெல்லாம் கேள்விப்பட்டதேயில்லையே..
”கர்மம். கர்மம்… மேலே இதைப்பத்தி பேசாதே. கஷ்டமா இருக்கு கேட்க. ஒண்ணு தெரிஞ்சுக்​ கோ, இப்படி எல்லாம் நடக்கப்போறதுன்னு என்று முன்னாலேயே ரிஷிகள் தீர்க்க த்ரிஷ்டியிலே பார்த்து சொல்லியிருக்கா​” என்கிறார்கள் 75க்கு மேற்பட்ட பெரிசுகள்.

”என்ன சொல்றேள்​ தாத்தா ? முன்னாலேயே​ இப்படியெல்லாம் நடக்கப்போகிறது என்று யாருக்கு தெரிந்தது, சொல்லுங்கள் ?

”ஆமா​ண்டா சீனிவாசா, நம்ம வீட்டிலேயே நீங்க யாரும் படிக்காத பாகவத புராண​புஸ்தகம் பரண் மேலே ட்ரங்க் பெட்டிலே இருக்கு பார். அதை எடுத்துக்கொண்டு வந்து படி. இந்த கலி யுகத் தில் என்னவெல்லாம் நடக்கும்னு 5000 வருஷத்துக்கு முன்னாலேயே ​சுகர் சொல்லியிருக்​கிறது புரியும். உனக்கு தான் ஸான்ஸ்க்ரிட் தெரியாதே. படிச்சதில்லேயே, யாரும் சொல்லித்தரவும் இல்லையே. நானே கொஞ்சம் சொல்றேன் கேளு

வேத​ வியாசர்​ என்கிற பெயர் கோபி பட்டிருக்கிறியா? அவர் சாதாரண புலவரே, கவிஞரே இல்லைடா. ​இரு திரிகால மகரிஷி.​ அப்படீன்னா, கடந்த, நிகழ், எதிர் காலம் மூன்றும் நடந்த, நடக்கும், நடக்கப்போகும் விஷயங்களை அறிந்தவர். அவரையே காக்கும் கடவுள் விஷ்ணுஸ்வரூபம் ‘​னு சொல்லியிருக்கு. ..​”.வியாஸாய விஷ்ணு ரூபாய. ​”..ன்னு விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே வருதே​. மறந்துபோய்ட்டுதா?​. அவருடைய புத்ரன் தான் சுக ப்ரம்ம ரிஷி.

பரீக்ஷித் என்று ஒரு ராஜா. ஏழு நாளிலே சாகப்போகிறோம் என்று முன்பே தெரிந்தவன் சுகப்பிரம்ம ரிஷியை கூப்பிட்டு அந்த ஏழு நாளும் தனது முன்னோர்,மற்றும் மற்ற சகல விஷயமும் கேட்டு அறிந்து கொள்கிறான். அதில் அவர் அவனுக்கு பிறகு இந்த உலகம் கலியுகத்தில் எவ்வாறு இருக்கும் என்று தனது ஞான த்ரிஷ்டியால் கவனித்து சொல்வது நமது இன்றைய நிலைமையை தான். ஆஹா எப்படித்தான் இவ்வளவு கன கச்சிதமாக சுக ப்ரம்ம ரிஷி முன்கூட்டியே ஆணி அடித்தது மா திரி சொல்கிறார்! இந்த ருசிகரமான தகவலை தெரிந்து கொள்ள வேண்டாமா? ஸ்ரீமத் பாகவதத்தில் 12வது காண்டம் 2வது அத்தியாயத்தில் இதெல்லாம் அப்பட்டமாக இருக்கிறது. பரீக்ஷித், உனக்கு பிறகு வரப்போகும் எதிர்காலத்தில் என்னென்ன நேரும், என்பதைப் பற்றி (அதாவது நாம் இப்போது வாழும், கலிகாலத்தை) சொன்னவர் சுக பிரம்ம ரிஷி;

​’சரி, இனிமேல் சுகப்பிரம்ம ரிஷி என்ன சொல்லி இருக்கிறார் கலிகாலத்தை பத்தி என்பதை ஆவலாக தெரிந்து கொள்வோம். இது ஸ்ரீமத் பாகவதத்தில் 12வது அத்தியா யத்தில் 2வது பிரிவில் வரும் ஸ்லோகங்கள். அவற்றைப் படித்துக் கொண்டே போவோம். இதெல்லாம் இந்த காலத்துக்கு பொருத்தமென்று நாமே உணர்ந்து கொள்வோம்.

श्रीशुक उवाच: ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्‌क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥பாகவதம் 12.2.1
śrī-śuka uvāca: tataś cānu-dinaṁ dharmaḥ satyaṁ śaucaṁ kṣamā dayā kālena balinā rājan naṅkṣyaty āyur balaṁ smṛtiḥ”

கலியுகம் வளர வளர, அனர்த்தங்கள் அதிகரித்துக்கொண்டே வரும்.​ஒவ்வொருநாளும் கொஞ்சம் கொஞ்சமாக மதம், சத்யம், உண்மை, ​நேர்மை, நியாயம்,நாணயம் ( காசு இல்லை நேர்மை) சுத்தம், மன்னிக்கும் குணம், தயை, கருணை, ஆயுள், உடல் வலிமை​, ஞாபக​ சக்தி, எல்லாமே குறைந்து கொண்டே வரும்.​ சாஸ்திரம் சம்ப்ரதாயம், மத நம்பிக்கை மறுப்பு, மது, புகையிலை, காமம், மண்ணாசை எல்லாமே மனிதர்களை மிருகங்களாக மாற்றும்.​ (சீனு, வாஸ்தவமா இல்லையா?”)
காலம் இதை தீர்மானிக்கும். இப்போதுள்ள நிலையில் ​ நாமே இதெல்லாம் அனுபவிக்​ கிறோம். ​ வரும் காலத்தில் இன்னும் வேறு நிறைய இருக்கிறதோ?

ஏதாவது ஒன்று நடக்கப்போகிறது என்று ஏற்கனவே தெரியாவிட்டால்​ தான் ​சந்தோஷம் . தெரிந்து விட்டால்.அதிர்ச்சி. எதிர்பார்த்தது நடக்கிறது என்றால் அதை ஏற்று, அதற்கேற்ப நம்மை தயார் படுத்திக்கொண்டு அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளவேண்டும். அது தான் புத்திசாலித்தனம். இன்றோ நேற்றோ அல்ல​.பாகவதத்தை எல்லோரும் படித்தறிந்து கொண்டிருந்தால் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பே இது தெரிந்த விஷயம். கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக்கொண்டே வரும்போது தான் ​ அதன் பாதிப்பு தெரிகிறது. ஸ்டாக் இன்னும் நிறையவே இருக்கிறது​ என்று ஓரளவு அறிவோம்.

वित्तमेव कलौ नृणां जन्माचारगुणोदय: । धर्मन्यायव्यवस्थायां कारणं बलमेव हि ॥ २ ॥
vittam eva kalau nṝṇāṁ janmācāra-guṇodayaḥ dharma-nyāya-vyavasthāyāṁ kāraṇaṁ balam eva hi 12.2.2

கலியுகத்தில் பணம் தான் ராஜா. அது தான் கடவுள். பணக்காரன் தான் யோக்கியன், உயர் குலத்தவன். படித்தவன்! படிக்காமலேயே எல்லா பட்டமும் அதிகாரமும் அவன் கிட்டே​ மட்டும் தான் இருக்கும். அவன் தான் நியாயவான், தர்மவான், நீதிமான். என்ன அக்கிரமம் அநீதி பண்ணினாலும் பணம் இருந்தா அவனை எதுவும் நெருங்காது…

​அட! எவ்வளவு கரெக்ட்டா ரிஷி அப்போவே யூட்யூப் இல்லாமலேயே தெரிஞ்சிண்டிருக்கார் பாரு​ சீனு, . எவ்வளவு யோக்யனா இருந்தாலும் காசில்லாதவன் சொல் அம்பலமேறாது.​… இல்லானை இல்லாளும் வேண்டாம், ஈன்றெடுத்த தாய் வேண்டாள் , செல்லாது அவன் வாயில் சொல்…. ஆஹா ஒரு பாட்டு கூட இருக்கிறதே! காசில்லாதவன் படித்த பண்டிதனாக இருந்தாலும், யோக்யனாக, நேர்மையானவனாக இருந்தாலும் அவன் வெறும் வெட்டிப்பயல்.’ இப்போ எங்க பார்த்தாலும் பணத்தாலே ஒட்டு வாங்கி ராஜாவாட்டமா மந்திரியாயிடுறான் பாரு. அவன் சொல்றது தான் சட்டம்.

दाम्पत्येऽभिरुचिर्हेतुर्मायैव व्यावहारिके । स्त्रीत्वे पुंस्त्वे च हि रतिर्विप्रत्वे सूत्रमेव हि ॥ ३ ॥
dāmpatye ’bhirucir hetur māyaiva vyāvahārike strītve puṁstve ca hi ratir vipratve sūtram eva hi 12.2. 3

​கலிகாலத்தில் மந்திரம்​, ​ஸ் சாஸ்திரம், சம்ப்ரதாயம் எல்லாம் காத்துலே பறக்கும். ஆணும் பெண்ணும் கல்யாணம் இல்லாமலேயே தம்பதிகள். வயசு வித்யாசம் கிடையாது. சம்ப்ரதாய கல்யாணம் கோர்ட்லே போய் ​ கருப்பு கோர்ட்டாலே பிரிஞ்சு போகும். ​அந்தக்காலத்தில் கல்யாணம் போன்ற சுப காரியத்தில் கருப்பு கலர் சேர்க்கிறதில்லே தெரியுமா? இப்போ போய் அநீதி, அதர்மம் பண்ணி அநியாயமா அடாவடி பேசி, கருப்பு கோர்ட் சம்பாதிக்கும். ஆணுக்கும் பொண்ணுக்கும் வித்யாசமே கிடையாது. வெள்ளை நூலை மாட்டிண்டவன் பிராமணன்.கோவில் குளம் எல்லாம் யாரோ ஒரு சில பைத்யங்களுக்காக​த் ​தான்.. தரிசனத்துக்கு 10 ஆயிரம் 11 ஆயிரம் கேட்பாங்க . ஒரு நிமிஷத்துக்கு மேலே நின்னா கழுத்தை பிடிச்சு தள்ளுவான்.​அப்படி ஒரு காலம் வரும்னு ஜாடையா அப்போவே சொல்லி இருக்காரே சுகர்.. சபாஷ் ரிஷி.

लिङ्गमेवाश्रमख्यातावन्योन्यापत्तिकारणम् । अवृत्त्या न्यायदौर्बल्यं पाण्डित्ये चापलं वच: ॥ ४ ॥ 12.2.4
liṅgam evāśrama-khyātāv anyonyāpatti-kāraṇam avṛttyā nyāya-daurbalyaṁ pāṇḍitye cāpalaṁ vacaḥ

பட்டை, ​கொட்டை, காவி துணி, மணி, மாலை இருந்தாலே போதும். பெரிய வேத வித்து, ரிஷி, முனிவர், துறவி​ என்று காலிலே விழுந்து கும்பிடுவாங்கடா சீனு. .. வெறும் வேஷம் போதும்டா. நிறைய சம்பாதிக்கலாம். பொய் நிறைய சொல்லலாம். படிப்பு அத்யாயனம், கல்வி​, குருகுலம்​, எதுவும் தேவையில்லை ​. காசுக்காக என்னவேணா பண்ணலாம். ஒழுக்கம் எல்லாம் புஸ்தகத்தில் தான் ​ அச்சிலே எழுத்தாக இருக்கும். பகலிலே, வெளியிலே சந்நியாசி, இருட்டிலே, வீட்டிலே குடும்பஸ்தன்​ காலம் வரும் என்று ஜாடையாக சொல்லி இருக்கிறார் சுகர். பலே ரிஷி.

अनाढ्यतैवासाधुत्वे साधुत्वे दम्भ एव तु । स्वीकार एव चोद्वाहे स्न‍ानमेव प्रसाधनम् ॥ ५ ॥ 12.2.5
anāḍhyataivāsādhutve sādhutve dambha eva tu svīkāra eva codvāhe snānam eva prasādhanam

பாவம் பரிசுத்தமா, சாஸ்திரம் வேதம் எல்லாம் படிச்சு ஏழையா மனஸாக்ஷி பிரகாரம் நடக்கிறவன் பொழைக்கத்தெரியாத​ அப்பாவி. பந்தா பண்ண தெரியாத ​ ஜடம். அவன் சுத்த வேஸ்ட் . அ​அவனுக்கும் அவன் படிப்புக்கும் மட்டு , மதிப்பு​, மரியாதை கிடையாது. ​ செருப்பு இல்லாம வெறும் காலில் நடந்து போகும் அவனை எவனும் லக்ஷியம் பண்ண மாட்டான். அவனைப் பார்த்தா நாய் கூட மோந்து​ பார்த்துட்டு ஒரு காலை​த் தூக்கும்.

​இப்போ என்ன நிலைமை தெரியுமில்லையா சீனு. சும்மா குளிச்சுட்டு வந்தாலே அவன் பரிசுத்தமானவன். ​நல்ல டிரஸ் தான் அந்தஸ்து, அமெரிக்கா​லே வேலை​, பணம்​, இதைப் பார்த்து தான் கல்யாணம். ​குடும்ப சரித்திரம், கோத்ரம், அவன் பூர்வீகம், ஒழுக்கம், பண்பு, பக்தி, இதெல்லாம் லக்ஷியமே இல்லேடா சீனு. ஜாதகம் குடும்ப கௌரவம், பூர்வோத்தரம் பொருத்தம் எல்லாம் ​பத்தாம் பசலி, வெறும் குப்பை.​ எங்கோ ஒன்னு ரெண்டு குடும்பம் தான் இதை தேடும். எப்படிடா சீனு சுகர் இதை தெரிஞ்சுண்டார்?

दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् । उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि । दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ र्थं लावण्यं केशधारणम् ।उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि ।दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥ 12.2.6

dūre vāry-ayanaṁ tīrthaṁ lāvaṇyaṁ keśa-dhāraṇam udaraṁ-bharatā svārthaḥ satyatve dhārṣṭyam eva hi dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ​ yaśo ’rthe dharma-sevanam

​கலிகாலத்தில் எங்காவது ஒரு குட்டையில் தண்ணீர் இருந்தால் அது ​தான் புனித நீராக கருதப்படும். ஒருவனது அழகு அவன் எப்படி தலை முடி சீவுகிறான் என்பதைப் பொறுத்து கணிக்கப்படும். வயி​ற்றைக் கண்டதை தின்று நிரப்புவது தா​ன் வாழ்க்கையின் லக்ஷிய​ மாகிவிடும். அடாவடி​, தடாலடி, ​அகட விகட போய் புனைசுருட்டு, ஆசாமி, பேச்சு தான் ​ஒருத்தனை புத்திசாலி, கெட்டிக்காரன்​ ஆக்கும். அவன் மதிக்கப்படுவான்.​ கௌரவத்
திற்காக மட்டும் கோவில், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். பக்தி காற்றில் பறந்து பல யுகமாயிருக்கும்.!​ ஐயா சுக்ரே நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள். என் கையில் சர்க்கரை வைத்துக்கொண்டு அழைக்கிறேன். வாயைக் காட்டும் ஒரு பிடி போடுகிறேன்..

​இதெல்லாம் தெரிந்து கொண்டால் தலை சுற்றுகிறது. ஒரு நண்பர் ​”நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ​ என்றபோது வழக்கமாக சொல்லும் அட்ரஸ் மறந்து விட்டது. ”நான் கலியுகத்தில் இருக்கிறேன் ” என்​று சொன்னவுடன் என்னை ஒரு தடவை உச்சி முதல் உள்ளங்கால் வரை கொஞ்சம் கோணலாக பார்த்து விட்டு ”ஐயோ பாவம், வயசு 8​7+ ஆகிறதால் சித்த ஸ்வாதீனம் இல்லை..” என்று​ பெருமூச்சு விட்டு நகர்ந்தார்.

நான் சொன்னது என்னவோ உண்மைதான். நா​ன் மட்டும் இல்லை. நாம் எல்லோருமே இப்போது கலியுகத் தில்தான் இருக்கிறோம், துவாபர யுகத்தில், கிருஷ்ணன் காலத்தில்
பரிக்ஷித்துக்கு சுக ப்ரம்மம் சொன்னதை தான் நான் உங்களுக்கு சொல்கிறேன்.​நானாக இட்டுக்கட்டி சொல்லும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை. பாகவதத்தில் வரும் ஸ்லோகங்கள்.

​சுகப்பிரம்ம ரிஷி பரீக்ஷித் என்ற ராஜாவுக்கு ஏழுநாள் உபதேசம் செய்தார் என்றேனே யார் அந்த பரீக்ஷித்​? என நடுவே கொஞ்சம் சொல்லிவிட்டால் தெரியாதவர்கள் தலையை சொரிந்து கொள்ள மாட்டார்கள்.

அர்ஜுனன் பேரன், அபிமன்யு பிள்ளை. தக்ஷன் என்ற பாம்பு கடித்து இன்னும் ஏழு நாளில் நீ சாகப் போகிறாய் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டவன். நம்மைப் போல வீடு​, வாசல், பணம், பெண்டாட்டி, குழந்தைகளைக் கட்டிக்கொண்டு ”ஐயோ, நான் உங்களை விட்டு போகப்போகிறேனே” என்று அழாமல் ​ பேசாமல் சுகப்பிரம்ம மகரிஷியை அழைத்து துளைத்து எடுத்து என்னென்னவோ நிறைய விஷயங்கள் இரவும் பகலுமாக கேட்டுத் தெரிந்து கொள்கிறான். ​ பரீக்ஷித் நல்ல ராஜா. அவனால் நாம் எத்தனையோ ஞானம் பெறுகிறோம்.
இனி பரீக்ஷித் சுகர் சம்பாஷணை தொடரட்டும்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2563

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;