
தினசரி பிரார்த்தனை.– நங்கநல்லூர் J K SIVAN
நாம் எதற்கு கடவுளை பிரார்த்திக்கிறோம்? நமது கஷ்டங்கள், குறைகள், துன்பங்கள் தீர்வதற்கு. கண் வலித்தால் டாக்டரிடம் போய் கண்வலிக்கு அவர் தரும் மருந்தை நம்பிக்கையோடு வாங்கி, நேரம் தவறாமல் வேளா வேளை , சொட்டு சொட்டாக கண்களில் விட்டுக்கொள்கிறோம். நோய் தீர்க்கிறது. டாக்டருக்கு அதற்காக FEES தருகிறோம். வேறே என்ன அவர் எதிர்பார்க்கிறார்? காசு தானே.
பகவான் நம்மிடம் எதையும் எதிர்பாராத மஹா வைத்யநாதன். அவரிடம் பிரார்த்தனை பண்ணினாலே போதும். பக்தியோடு, நம்பிக்கையோடு வேண்டினால் யாராக இருந்தாலும், கைமேல் பலன். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பிரார்த்தனை ஸ்லோகம், ஸ்தோத்ரம் எனக்கு எளிமைப்படுத்தி, நமது முன்னோர்கள் அனுபவ பூர்வமாக அனுபவித்து நமக்கு வசதியாக இருக்க அளித்திருக்கிறார்கள்.
நம்பிக்கை பரிபூர்ணமாக இருக்க வேண்டியது அவசியம். லோக க்ஷேமார்த்தம் எல்லோரும் பிரார்த்தனை செய்வதால் அனைவருமே சௌக்யமாக, சுபிக்ஷமாக இருப்போம்.
எல்லாவற்றுக்கும் பொதுவான விநாயகனை, கணேசனை தான் முதலில் நாம் பிரார்த்திப் பது வழக்கம்.
वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ । निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ॥
Vakratunda Mahakaya Suryakoti Samaprabha Nirvighnam Kuru Me Deva Sarva-Karyeshu Sarvada
வக்ரதுண்ட மஹா காய சூர்யகோடி சமப்ரபா நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா
ரொம்ப குட்டியான இந்த ஸ்தோத்ரத்தின் அர்த்தம்;
ஒன்று முழுஸு, ஒன்று துண்டு, என இரு வெள்ளை தந்தங்களை உடைய கணேசா, பெரிய உருவம் கொண்டவனே, கோடி கோடி சூரியனின் பிரகாசத்தோடு ஒளிர்பவனே, அப்பா கணேசா, என் எல்லா காரியங்களும் எப்போதும் தடை, இடையூறு இல்லாமல் நிறைவேற நீதான் காத்தருளவேண்டும்.
அடுத்தது நமது குரு, நமது வாத்யார், நமக்கு வித்தை சொல்லித்தந்தவர்.அப்பா முதல், பள்ளிக்கூடம், ஆபிஸ், தொழில் சகலத்திலும் ஆசானாக இருந்தவரை, இருப்பவரை, மனதால் நன்றியோடு வணங்கவேண்டும்.
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः । गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः ॥
Gurur Brahma Gurur Vishnu Gurur Devo Maheshwarah Guruh Saakshaat Param Brahma Tasmai Shri Gurave Namah
குருர் ப்ரம்ம, குருர் விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வரா, குரு சாக்ஷாத் பரம் ப்ரம்ம, தஸ்மாய் ஸ்ரீ குரவே நம;
குருவே, நீங்களே , எனக்கு ப்ரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன், ஏன் பரப்பிரம்மம் கூட, நீங்கள் தான். குருவாக எனக்கு சமூகத்தில் அந்தஸ்து அளித்தவரே எனக்கு ஞானம் அளித்த உங்களுக்கு நமஸ்காரம். நமக்கு பொதுவான குரு தக்ஷிணாமூர்த்தி இவரை கோவிலில் சந்நிதியில் வணங்கும்போது கூட இந்த ஸ்தோத்ரம் சொல்கிறோம்..
விடிகாலை படுக்கையை விட்டு எழும் முன், கண்ணை திறந்தவுடன், முதலில் இரு உள்ளங்கைகளையும் கண்ணெதிரே வைத்து வணங்க ஒரு குட்டி ஸ்தோத்ரம்:\
कराग्रे वसते लक्ष्मीः करमध्ये सरस्वती । करमूले तु गोविन्दः प्रभाते करदर्शनम् ॥
Karāgre Vasate Lakshmi Karamadhye Saraswati Karamūle Tu Govinda Prabhāte Karadarshanam
கராக்ரே வசதே லக்ஷ்மி, கரமத்யே சரஸ்வதி, கரமூலே து கோவிந்த, ப்ரபாதே கரதர்ஷனம்
நமது கரங்களின் விரல்களில் மஹாலக்ஷ்மி வசிக்கிறாள். விரல்கள் தான் சம்பளம், லஞ்சம் எல்லாமே வாங்குகிறது. பணம் வாங்கி எண்ணுகிறது, மடித்து பையில் கட்டி பெட்டியில் வைக்கிறது. வோட்டு போடுகிறது. நல்லவர் ஒருவரை நமக்கு ஆள்வதற்கு தேர்ந்தெடுக்
கிறது.. இதில் கவனம் தேவை.
கையின் நடுவே, உள்ளங்கையில் தான் புஸ்தகம் வாங்கி, தாங்கி, படிக்கிறோம், கையின் நடுவில் ஸரஸ்வதி தேவி இருக்கிறாள் . கலைமகள் . கல்விக்கு தெய்வம் வசிக்கிறாள்.
கையின் அடிப்பகுதியில் மஹா விஷ்ணு, கோவிந்தன், வசிக்கிறார். கைக்கு சக்தியே உள்ளங்கையின் அடிப்பகுதி, அதை காலை எழுந்தவுடன் நன்றியோடு பக்தியோடு பார்க்கவேண்டாமா? சக்தி தெய்வம் பார்வதி என்றும் வணங்குவது உண்டு. எல்லாம் ஒன்றே தானே.
அடுத்ததாக இந்த ஸ்லோகம் அநேகருக்கு தெரியாது. தினமும் விடிகாலை முதலில் சொல்லவேண்டிய ஸ்தோத்ரங்களில் இதுவும் ஒன்று. பூமாதேவியை வணங்கி சொல்வது. அவள் மீது காலை வைத்து தான் நடக்கிறோம். அவள் மஹாவிஷ்ணுவின் பத்னி. கோயிலில் சந்நிதியில் நம்மால் வணங்கப்படுபவள். சகல ஜீவராசிகளையும், தாவர ஜங்கம வஸ்துக்களை தாங்குபவள். நமக்கு ஆகாரம், நீர், சகல சௌபாக்கியங்களையும் தருபவள். அவள் மீது பொழுது விடிந்ததும் முதலில் காலை வைக்கும் முன் வணங்கி ஆசி பெறவேண்டாமா?
समुद्रवसने देवि पर्वतस्तनमण्डले । विष्णुपत्नि नमस्तुभ्यं पादस्पर्शं क्षमस्व मे ॥
Samudra-vasane Devi Parvata-stana-mandale Vishnu-patni Namastubhyam Pada-sparsha Kshamasva Me
ஸமுத்ர வஸனே தேவி. பர்வத ஸ்தன மண்டலே, விஷ்ணுபத்னி நமஸ்துப்யம், பாத ஸ்பர்ஷம் க்ஷமஸ்வ மே,
தாயே, பூமாதேவி, உனக்கு எப்போதும் நீல நிறத்தில் வெள்ளை பார்டர் border கடல் தான் புடவை. வெண்ணிற நுரை அலைகள் தான் தலைப்பு, கரை. மலைகள் தான் மார்பு. ஆறுகள் தான் நெக்லஸ், சங்கிலி. புஷ்பங்கள் தான் ஆபரணம், முத்து பவழம் தங்கம் வைரம் போன்ற நவரத்தினங்கள் உன்னிடமே உள்ளவை. மஹாவிஷ்ணுவின் பத்னியே, உன் மீது காலை வைத்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளேன், என்னை மன்னித்து அருள்வாய். என்னை தாங்கும், தூக்குகின்ற, அன்னையே, உன்னை நமஸ்கரிக்கிறேன்.
இன்னும் ஒரு ஸ்தோத்ரம் சொல்லி இந்த பதிவை இப்போதைக்கு நிறுத்துகிறேன். இன்னும் நிறைய சொல்வதற்கு இருக்கிறது. ஒரே முட்டாக… வேண்டாமே, கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து, புரிந்து, கொண்டு, மனப்பாடம் செய்து, தினமும் சொல்லி பயன் பெறுவோம்.
இது குளிப்பதற்கு முன் சொல்வது. நாம் குளிப்பது ஏதோ கார்பொரேஷன், மெட்ரோ தண்ணீர், கிணற்று நீர் போர் BORE வாட்டர் ஆக இருந்தாலும் அதில் புண்ய நதிகள் நமக்காக வந்து கலந்து கொண்டு நம்மை ஆசிர்வதித்து பாபங்களை நீக்குவார்கள்;
गङ्गे च यमुने चैव, गोदावरी सरस्वति । नर्मदे सिन्धु कावेरी, जलेऽस्मिन् सन्निधिं कुरु ॥
Gange cha Yamune chaiva, Godavari Saraswati, Narmade Sindhu Kaveri, Jalesmin Sannidhim Kuru
கங்கே ச யமுனே சைவ, கோதாவரி சரஸ்வதி, நர்மதே சிந்து காவேரி, ஜலேஸ்மின் சன்னிதிம் குரு
தாய்மார்களே, என் இந்த அரை, முக்கால் பக்கெட் bucket தண்ணீரில் ஹே புண்ய நதிகளே, கங்காமாதா, யமுனா தேவி, கோதாவரி, ஸரஸ்வதிஅம்மா , நர்மதா, சிந்து, காவேரித்தாயே, நீங்கள் அனைவரும் இதில் வந்து கலந்து இருந்து உங்கள் புனித சக்தியை இதில் சேர்த்து வழங்குங்கள். உங்களால் எனது இந்த தேகம், அதற்குள் இருக்கும் ஆத்மாவைப் போல் புனிதம் பெறட்டும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




