
கடன் அடைந்தது .. நங்கநல்லூர் J K SIVAN
மாஸ்டர் மஷாய் என்று தாகூர் எழுதிய ஒரு மனதை வருடும் கதை நேற்று இரவு படித்தேன். வங்காளியில் படிக்க அருகதை இல்லை என்பதால் ஆங்கிலத்தில் தான் படிக்க முடிந்தது. இது தான் கதை சுருக்கம்.
வங்காள செட்டியார் ஒருவர் பரம்பரை பணக்காரர். வட்டியில் பல சொத்துக்கள் சேர்த்தவர். தான தர்மம் என்றால் யாரையும் கிட்டவே சேர்க்காதவர். பல வருஷங்களுக்கு பிறகு ஒரு பிள்ளை பிறந்தது. செல்லமோ செல்லம். செட்டியார் மனைவிக்கு பிள்ளை தான் உலகம். அவனைப் படிக்க வைக்க பல பேரை வீட்டுக்கு வந்து பாடம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார். படிப்பைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் பிள்ளைக்கு பிரியம். பல வாத்தியார்கள் ஏமாற்றத்தோடு திரும்பி போனார்கள். யாரும் மூன்று நாளுக்கு மேல் நிலைத்ததில்லை. பையனை தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஹிராலால் என்று ஏழை வாலிபன். அப்பா இளம் வயதில் இறந்து அம்மா பல வீடுகளில் வேலை செய்து அவனைப் படிக்க வைத்தாள் . B A வரை எப்படியோ கடன் உடன் வாங்கி பல கஷ்டங்களுக்கு இடையே அவனைப் படிக்க வைத்தாள் . அவனுக்கு வேலை கிடைக்க வில்லை. அவன் செட்டியார் வீட்டில் டியூஷன் வாத்யார் வேலை கிடைக்கும் என்று கேள்விப்பட்டு வந்து சேர்ந்தான். வாசலில் நின்ற கணக்குப்பிள்ளை ராம் காந்த் அவனை நிறுத்தி விசாரித்தான்.
”இங்கே ட்யூஷன் வாத்தியார் வேணும் என்று கேள்விப்பட்டேன். செட்டியாரை பார்க்கணும்”
”செட்டியாரை நீ பார்க்க முடியாது. திரும்பிப் போ. இங்கே உனக்கு வேலை கிடையாது ”
ஹீராலால் திரும்பி போகும் நேரம் எங்கிருந்தோ தோட்டத்தில் இருந்து ஒன்பது பத்து வயதுள்ள செட்டியார் மகன் ஓடிவந்தான். அவனுக்கு ஹீராலாலைப் பார்த்தபோதே பிடித்து விட்டது .”வா, அப்பாவிடம் அழைத்து போகிறேன்” என்று கையைப் பிடித்து தரதர வென்று உள்ளே இழுத்துச் சென்று செட்டியார் கூடத்தில் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டிருந்த போது அவர் முன் நிறுத்தினான்.
செட்டியார் சாமர்த்தியமாக ஹீராலாலுடன் பேரம் பேசி ‘மாதம் ஐந்து ரூபாய் சம்பளம்.மாடியில் ஒரு அறையில் பாதி இடம். அங்கே ஒரு ஒத்தை பெஞ்ச் தான் படுக்கை. ஒரு பழைய மர நாற்காலி. மேசை. செட்டியார் வீட்டிலேயே சாப்பாடு” என்று ஹீராலாலை மடக்கி விட்டார். மறுநாள் காலையில் ஒரு பழைய நசுங்கிய தகரப்பெட்டியில் ரெண்டு மாற்று வேஷ்டி சட்டைகளோடு ஹீராலால் வேலைக்கு வந்து விட்டான்.
ஹீராலால் சிறுவயதிலேயே தனியாக யாருடனும் விளையாடக்கூட போகாமல் படிக்க வைக்கப்பட்டவன். ஆகவே செட்டியார் மகனுடன் விளையாடுவது பிடித்தது. பையனுக்கும் ஹீராலாலை பிடித்து விட்டது. படிப்பு நேரம் போக மற்ற நேரம் ஹீராலாலுடனே சுற்றிக்கொண்டிருப்பான். தோட்டத்தில் விளையாட்டு. நீச்சல், மீன் பிடித்தல், காற்றாடி விடுதல் எல்லாவற்றியிலும் வாத்தியார் ஹீராலால் தான் அவனுக்கு உயிர்த் தோழன்..
செட்டியார் அம்மாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
”ஐயையோ, இந்த வாத்யார் ராஸ்கல் என் பையனை அம்மா அப்பாவுடன் சேரவிடாமல் தன்னோடயே மடக்கி போடுகிறானே. பையன் எப்போதும் வாத்யாரைத்தானே தேடுகிறான்” என்று சந்தேகம், கவலை, கோபம்…. பொறுக்கமுடியாமல் ஒருநாள் ஹீராலாலை தனியாக கூப்பிட்டு கத்தினாள்
” நீ இங்கே வந்தது பாடம் சொல்லிக் கொடுக்க மட்டும் தான். அதுக்கு தான் உனக்கு சம்பளம், சாப்பாடு இருக்க இடம் எல்லாம் தரோம் . எங்க பிள்ளையை எங்க கிட்டேஇருந்து பிரிச்சு எங்க சொத்தை ஆட்டையை போடலாம்னு பார்க்கிறியா? ஜாக்ரதை. சீட்டைக் கிழிச்சுடுவேன். ‘வந்தியா, போனியா’ னு அனாவசியமா என் பிள்ளைகூட ஒரு வார்த்தை பேசாமல் பாடம் மட்டும் சொல்லிக்கொடு.” என்று கத்தினாள்.
ஹீராலால் வயதான அம்மாவை காப்பாற்ற வேறு நல்ல வேலை கிடைக்கும் வரை இந்த செட்டியார் வீட்டை உதறி விடக்கூடாதே என்று புரிந்து கொண்டு அன்று முதல் படிப்பு நேரத்தில் மட்டும் பையனோடு உட்கார்ந்
தான். பையனுக்கு ஹீராலால் அதற்கப்புறம் பையனுக்கு விளையாட கிடைக்கவில்லை. ஹீராலால் அறையில் அதிக நேரம் இருப்பதில்லை.வேறு எங்கெல்லாமோ வேலை தேடி அலைந்தான். அம்மா தங்குவதற்கு மாதம் ரெண்டு ரூபா வாடகைக்கு ஒரு சிறு அறை பிடித்திருந்தான். அதில் போய் தங்குவான்.
செட்டியார் மகன் புழுவாய்த் துடித்தான். ஏன் இப்போதெல்லாம் வாத்யார் அறையில் இல்லை?. ஏன் என்னோடு தோட்டம், குளம் என்று பல இடங்களில் வழக்கம் போல் விளையாடுவதில்லை? . கதைகள் பேசுவதில்லை?
ஒருநாள் காலை ராம் காந்த் திட்டப்படி, வீட்டில் பணம் 300 ரூபாய் திருடு போய்விட்டது என்று நாடகம் ஆடி புரளி பண்ணினாள். சந்தேகம் ஹீராலால் மேல் என்று செட்டியார் போலீசில் பிராது கொடுத்தார். போலீஸ் வந்தது. மேலே உள்ள சின்ன அறையில் ஹீராலால் வைத்திருந்த பழைய தகரப்பெட்டியை சோதனை போட்டது. அதில் பணம் இல்லை. ஹீராலாலை திரும்ப திரும்ப கேள்விக்கணைகள் தொடுத்து குடைந்தது. அவன் நிரபராதி என்று புரிந்து திரும்பி போய் விட்டது.அன்றே ஒரு கால் கடுதாசி கொடுத்து ஹீராலால் செட்டியார் வீட்டிலிருந்து தனது பழைய தகர பெட்டியைக் கூட எடுத்துக்கொள்ளாமல் திரும்பிவிட்டான்.
ஹீராலாலை வீட்டை விட்டு வெளியேற்றியதில் செட்டியாரம்மாவுக்கு பரம சந்தோஷம். ராம் காந்த் யோசனை நல்ல பலனை கொடுத்ததல்லவா?
பையன் ஹீராலால் இல்லாமல் ரொம்ப வாடினான். உடல் இளைத்தது . இப்போது அவன் பழைய துறுதுறு பையன் இல்லை.
வருஷம் பல ஓடியது.
செட்டியாரம்மாள் இறந்து விட்டாள் என்ற சேதி கேட்டு ஹீராலால் செட்டியார் வீட்டுக்கு சென்று துக்கம் கேட்டான். ஹீராலால் அவனை ஆசையோடு கட்டிக்கொண்டான். அவன் வீடு எங்கே என்று தெரிந்து கொண்டு ஒருநாள் நேரே வந்து விட்டான். அடிக்கடி வர ஆரம்பித்தான். ஹீராலாலுக்கு அந்த பையனை ரொம்ப பிடிக்குமே. அவனுக்கு ஹீராலால் அம்மா சாப்பாடு போடுவாள். ஹீராலாலை தேடி பையன் வரும்போதெல் லாம் அவன் எங்கோ ஒரு வேலைக்கு சென்று இரவு நெடுநேரம் கழித்து தான் திரும்பி வருவான் என்பதால் ஒரு நாள் அவனுக்காக காத்திருந்தான்.
”என்னடா பையா ரொம்ப இளைத்துவிட்டாய்? என்ன செய்கிறாய் இப்போது? ”
”அது இருக்கட்டும் சார், உங்களுக்கு தினமும் இவ்வளவு நேரம் ஆகுமா வீட்டுக்கு வர? வேலை ரொம்ப ஜாஸ்தியா?”
‘ஆமப்பா. நீ பள்ளிப்படிப்பு முடித்துவிட்டாயா?”
‘இல்லை சார். ஒரே கிளாஸ்லே 4 வருஷம் பெயில். நான் தான் பெரிய பையன். நாலுவருஷமா படித்ததையே திரும்ப திரும்ப படிக்க பிடிக்கவில்லை. லண்டன் போகணும்னு ஆசை. அப்பா பணம் கொடுக்க மாட்டேன் என்கிறார். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ள ஏற்பாடு பண்ணுகிறார்.அவர் கல்யாணம் பண்ணிக் கொண்டால் நான் அந்த வீட்டில் அப்பாவோடு இருக்க மாட்டேன்.” பையன் அழுதான்.
”அழாதேடா என்று அவன் தலையைத் தடவி அணைத்துக்கொண்டான் ஹீராலால்.
” நான் உங்களோடு இங்கேயே இருக்க போகிறேன்”
”இல்லேப்பா அது தப்பு. நான் செட்டியாரை நேரில் பார்த்து உனக்கு லண்டன் போக ஏற்பாடு பண்ண சொல்லட்டுமா’
”வேண்டாம் சார், தலை கீழே நின்னாலும் அப்பா சல்லிக்காசு தரமாட்டார் ”
அடிக்கடி பையன் ஹீராலால் வீடு போகிறான் என்று கேள்விப்பட்ட செட்டியார் ராம் காந்த்துடன் ஒரு நாள் ஹீராலால் வீட்டில் பையன் இருக்கும் நேரம், குதிரை வண்டியில் வந்து இறங்கினார். வாய்க்கு வந்தபடி ஹீராலாலைத் திட்டினார்.
”என் மைனர் பையனை , மனசை மயக்கி என் சொத்தை அபகரிக்க பாக்கிறாயா? உன் மேல் போலீசில் கம்ப்ளெய்ன் பண்ணி ஜெயில்லே போடறேனா இல்லையா பார்” என்று கத்தி மிரட்டி விட்டு போனார். ”வாடா என்னோடு” என்று பையன் கையை பிடித்து இழுத்தார். பையனும் தலை குனிந்து அப்பாவோடு வீட்டுக்கு குதிரை வண்டியில் போய்விட்டான்.
பல நாட்கள் ஓடியது. பையன் வருவது நின்று விட்டது.ஹீராலாலுக்கு ஒரு பஞ்சாபி சினிமா கொட்டகை வியாபாரி இடம் வேலை கிடைத்தது. அன்றாடம் நிறைய ரூபாய் சில்லறைகள் சேரும். இரவு அதை எடுத்துக் கொண்டு வந்து அடுக்கி கணக்கு சரி பார்த்து மறுநாள் காலையில் முதலாளி அனுப்பும் ஆளுடன் மார்க்கெட் சென்று படவாடா பண்ணவேண்டும். ரொம்ப பொறுப்பான வேலை. ஹீராலால் நேர்மையானவன் பொய் சொல்லமாட்டான் என்று பஞ்சாபிக்கு தெரிந்து அவன் மேல் நம்பிக்கையோடு ரெண்டு வருஷம் இந்த வேலை மாதம் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் நிலைத்தது. அம்மாவை ஜாக்கிரதையாக வசதியோடு பார்த்துக் கொண்டான் ஹீராலால்.
வழக்கம் போல் ஒருநாள் இரவு ஒரு சாக்குப் பையில் ரூபாய் நோட்டுகள் காசுகளோடு ஹீராலால் வீட்டுக்கு இரவு லேட்டாக வந்தபோது செட்டியார் பையனும் வீட்டில் காத்திருந்தான். அவனும் ஹீராலால் அம்மாவும் ஹீராலாலுக்கு உதவியாகி ரூபாய் நோட்டுகளை ரகம் வாரியாக பிரித்து அடுக்கி கணக்கு எழுதி, சில்லறைகளை எண்ணி டப்பாவில் போட்டு உதவினார்கள்.
”என்னடா பையா இப்போது படிப்பை முடித்துவிட்டாயா, எங்காவது வேலை பார்க்கிறாயா, அப்பாவோடு பிசினஸ் பண்றியா?
”அப்பா கல்யாணத்துக்கு நாள் பார்த்து விட்டார். நான் லண்டனுக்கு போக முடிவெடுத்துவிட்டேன். ரெண்டா யிரம் ரூபா கப்பலுக்கு கட்டணும். அப்பா கொடுக்க மாட்டேன் என்கிறார். அம்மாவுடைய நகைகள் இதோ இந்த பொட்டலத்தில் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு நீங்க தான் காசு கொடுக்கணும். நான் சம்பாதித்துப்பணத்தை வட்டியோடு கொடுத்து நகையை மீட்டுக்கொள்கிறேன். ”
”பையா, என்னிடம் அவ்வளவு காசு இல்லேப்பா. நான் ஏழை. நீ உங்கப்பாவையே கேள். நான் வேண்டுமா
”அப்பா காது கொடுத்து கேட்க மாட்டார். காசும் தரமாட்டார். உங்க கிட்டே தான் நிறைய காசு தினமும் வருதே அதிலிருந்து கொடுக்க மாட்டீர்களா சார்”
”அப்பா, அது என் உத்யோகம். முதலாளி காசு. எனதில்லை. காசு கணக்கு பார்த்து மறுநாள் எல்லோருக்கும் கணக்கு பார்த்து கொடுக்க வேண்டிய காசு.. அதிலிருந்து தம்பிடி கூட தொட முடியாதுப்பா ”
பையன் போய் விட்டான்.
ரெண்டு நாள் கழித்து இரவு வந்தான். ஆளே மாறி இருந்தான். தலையில் தொப்பி, கையில் ஐந்து விரலிலும் மோதிரங்கள், கழுத்தில் தங்க சங்கிலி. கோட்டில் பையில் தங்க கடிகாரம்.”
”என்னப்பா இங்கே இந்த நேரத்தில் வந்திருக்கிறாய்?’ நீ இங்கே வருவது உங்கப்பாவுக்கு பிடிக்கவில்லை. என்னை கோபிக்கிறார். நீ போய் விடு”
”சார் உங்க கிட்டே சொல்லிட்டு போக தான் வந்தேன். நாளை நான் லண்டன் போகிறேன். இன்றிரவு உங்க ளோடு சிலமணி நேரம் பேசிவிட்டு போக வந்தேன். நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை. ரொம்ப நேரம் ஆகிவிட்டது நான் உங்களுக்காக எல்லா நோட்டுகளையும் பிரித்து அடுக்கி கணக்கில் எழுதி பையில் போட்டு வைக்கிறேன். நீங்கள் போய் அம்மாவோடு சாப்பிட்டு விட்டு வாருங்கள், பேசலாம். ”
ஹீராலாலுக்கு பசி. பையனைக் காசு எண்ண விட்டுவிட்டு அம்மாவோடு சாப்பிட போய் உட்கார்ந்து விட்டு அரைமணி நேரம் கழித்து வந்தான்.
பையன் பையை மூட்டை கட்டி வைத்திருந்து விட்டு காகிதத்தில் நோட்டுகள் கணக்கு எழுதி அவனிடம் காட்டி விட்டு உடனே ”ரொம்ப நேரமாகிவிட்டது செல்கிறேன்” என விடை பெற்று சென்றுவிட்டான்.
ஹீராலாலும் அம்மாவும் களைத்துப்போய் விளைக்கை அணைத்துவிட்டு தூங்கினார்கள்.
பசி மயக்கம். கால்கள் கடற்கரைப்பக்கம் சென்றது. ஒரு குதிரை வண்டிகாரன் நிறுத்தி கேட்டான்.
”சாமி எங்கே போடறீங்க. கால் தள்ளாடுதே”
”எனக்கு கடற்கரை பக்கம் கப்பல்கள் நிற்கும் இடம் போகணும். இந்தாப்பா ஒரு ரூபாய். வண்டியில்
குதிரை வண்டியில் சில்லென்ற காற்றில் முகத்தை கம்பிக்கு வெளியே தொங்க விட்டுக்கொண்டு ஹீராலால் கண்ணை மூடினான். அம்மா கதறுவது தெரிந்தது. பிதற்றுகிறாள். ஐயோ, என் அம்மா ஏன் இப்படி நிர்க்கதியாக ஓலமிடுகிறாள்? ”நான் ஏழை. என்கிட்டே நகை எதுவும் இல்லையே. இருந்தா, என் செல்லமே, நான் உனக்கு கொடுத்து இப்போ காப்பற்றுவேனே . யாரும் காசு கொடுக்க இல்லையே என்ன பண்ணுவேன்?? அடப்பாவி, வீட்டு வாசலில் வந்து நிற்கிறானே... முதலாளில் கண்களில் தீப்பொறி பறந்தது. அவன் உதவியாளன் கையில் சவுக்கு ஒன்றை வீசிக்கொண்டு ஹீரலாலை அணுகினான்.
காற்று விர் விர்ரென்று வீசியது. இரவு நேரம் குளிர். முகம் உடல் எல்லாம் குளிர்ந்து விட்டது. மண்டை வெடித்து சிதறி மீண்டும் இறுகியது. சிறு மழைத்துளி. கிருஷ்ணனை தியானிக்கிறான்… எங்கே என் உள்ளே இருந்த பயம், கவலை எல்லாம் காணோம்? உடல் சில்லென்று குளிரினாலோ, வியர்வையியாலோ, மழைத்துளியாலோ, அல்லது ரூபாய் போன பயத்தில் குளித்தது போல் ஆகிவிட்டதா? அம்மா எங்கம்மா உன்னை காணோம்?? அதோ அதோ அம்மா….ஹீராலால் எப்படி வானில் பறக்கிறான்? ரெக்கை இல்லையே?. அம்மா அதோ தூர பறக்கிறாளே. சந்திரனுக்கு பின்புறம் இருட்டா? அங்கே தான் தாத்தா பாட்டி, கொள்ளு தாத்தா எல்லாம் இருக்கிறார்களா? அங்கே அம்மாவுமா போகிறாள்? இதோ அவளைப் பிடித்து நிறுத்துகிறேன். ஹீராலால் வேகமாக பறக்க தொடங்கினான். கீழே முதலாளி போலீசிடம் அவனை சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் கையில் விலங்குடன் ஓடிவருகிறார்களே… அவனை பிடித்து உலுக்குகிறார்கள்…குதிரை வண்டி நின்றது. வண்டிக்காரன் ”ஐயா எங்கேய்யா நீங்க இறங்கணும். குதிரை களைச்சு போயிட்டுது. இனிமே நடக்காது. வீட்டுக்கு போய் புல் ஆகாரம் அதுக்கு கொடுக்கணும். ரொம்ப நேரமாயிடுச்சுங்க…
ஹீராலால் பதிலே பேசவில்லை. வண்டிக்காரன் அவனைத் தோளில் தொட்டு அசைத்தான். பதிலே இல்லை. இப்படியா ஒருவன் வண்டியில் தூங்குவான்?? ஐயா ஐயா, என்று வண்டிக்காரன் வேகமாக ஹீராலாலை பிடித்து அசைத்தான். எந்த பதிலும் இல்லை. ஹீராலால் கண்கள் மூடி இருந்தது. மூக்கின் அருகே கையை வைத்து பார்த்த வண்டிக்காரன் ” ஐயோ சாமி…” என்றான்..
ஹீராலால் கடனைத் தீர்த்து விட்டான்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



