V O C J K SIVAN

அதிகம் அறியாத ஒரு அற்புத தியாகி J K SIVAN
வ.உ. சி – நங்கநல்லூர் J K சிவன்
ஐயா வ உ சி, இன்று உம்மை எத்தனை பேர் நினைப்பார்கள்? இன்று தானே 64 வது வயதில் நீங்கள் மறைந்தீர்கள். உங்களை கப்பலோட்டிய தமிழன் என்பார்கள். நானும் கப்பல் கம்பெனிகளில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக உயர் பதவிகளில் பல வெளிநாடுகளில் பேரும் புகழும் பெற்று வாழ்ந்த தமிழன். உம்மைப்போல் தூத்துக்குடியில் கப்பல் சரக்கு வியாபாரம் சில வருஷங்கள் எனக்கும் நடந்தது. யார் மறந்தாலும் நான் உம்மை மறவேன் ஐயா. நீரும் நானும் கடலையும் கப்பலையும் நம்பி வாழ்ந்தவர்கள் இல்லையா? ஒரே வித்யாசம் நீர் முதலாளி நான் தொழிலாளி.
வஉசி (5 .9.1872- 18.11.36) தொழில்: வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், கப்பல் தொழிலதிபர், இந்திய தேசிய காங்கிரஸ் அணி ஆதரவாளர். அவரது கப்பல் கம்பெனி swadesi steam navigation company யின் தூத்துக்குடி- கோழிக்கோடு போக்குவரத்து, சரக்கு கப்பல் வியாபாரம் பிரிட்டிஷ் கம்பெனியான A & F Harvey Company-க்கு போட்டியாக கருதப்பட்டு ஆங்கில அரசு அவரை நசுக்கியது. வேண்டுமென்றே கட்டணத்தை மலிவாக செய்து வஉசி கம்பனிக்கு நஷ்டத்தை அளித்து அவர் கப்பல்களை விற்க வைத்தது. அவர் மேல் பல தேச துரோக குற்றம் சாட்டி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது. சித்ரவதை செய்தது. மனிதர் இதற்கெல்லாம் அஞ்சி மன வலிமை குன்றாமல் இருந்தார். சிறந்த எழுத்த்தாளர் வழக்கறிஞர் என்பதால் ஆங்கில அரசை எதிர்த்து கட்டுரைகள் எழுதினர்.
இதே நாளில் நவம்பர் 18 அன்று 1936ல் மறைந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ .சி. யின் நண்பர்கள் சுப்ரமணிய சிவா, பாரதியார்.
வஉசி யை ஆங்கிலேய அரசு பல குற்றச்சாட்டுகள் சுமத்தி நீதிமன்றத்தில் நிற்க வைத்து தண்டனை வழங்கியது என்றேனே ஒரு நீதிமன்ற காட்சியை அளிக்கிறேன்;
தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஒரே கசமுசா கூட்டம். வெள்ளைக்கார நீதிபதி நுழைந்ததும் அனைவரும் எழுந்துநின்று அமைதியாக அவர் அமர்ந்த பின்னர் அமர்கிறார்கள். டவாலி அன்றைய நீதி மன்ற வழக்கில் ஆஜராக குற்றவாளியை அழைக்கிறான். குற்றவாளி கூண்டிலே வ.வு.சி. நிற்கிறார். வெள்ளை நீதிபதி பின்ஹே அவர் செய்த குற்றத்திற்கு தண்டனை வழங்குகிறான்.
”தேச விரோதி சுப்ரமணிய சிவாவுக்குத் தங்க இடம் தந்து, உணவு தந்து உபசரித்த பெருங் குற்றத்திற்காக வ.உ.சிக்கு மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கிறேன் ” .
சுப்ரமணிய சிவா ஒரு தியாகி. வறுமை நோய் என்ற இருபுறத் தாக்குதலுக்கு அஞ்சாமல், தேச பக்திக்கனலை மூட்டி அந்த தியாக வேள்வியில் கற்பூரமாகக் கரைந்தவர. பிரிட்டிஷ் அரசுக்கு அடிமடியில் கட்டிய நெருப்பாகவே இருந்தார்.
4.10.1884 வத்தலகுண்டு எனும் ஊரில் பிராமண குடும்பத்தில் நாகப்பையர் நாகலட்சுமி அம்மாளின் மகன் சுப்பிரமணியனாக பிறந்து, 12 வயது வரை மதுரையில் வாசம். பின் ஊட்டுப்புறை (ஏழை அந்தணப் பிள்ளைகளுக்கு உணவு தந்து படிக்க உதவும் கேரளத்துச் சத்திரம்)யில் திருவனந்தபுரத்தில் தங்கி, கோவை புனித மைக்கேல் கல்லூரியில் ஒரு வருடம் படிப்பு முடிந்து 1899-ல் மீனாட்சியுடன் திருமணம்..
லார்டு கர்சன் (பாரதி வாக்கில் கர்சான் குரங்கு) வங்காளப் பிரிவினைத் திட்டம் கொணர்ந்தபோது வங்கம் மட்டுமல்ல இந்திய தேசமே கிளர்ந்தெழுந்தது. வறுமை ஓர்புறம் வாட்ட தேசப்பற்று மறுபுறம் இழுக்க, தேச பக்திக்கனல் மூண்டபோது வயிற்றுத்தீயைப் பொருட்படுத்தினாரா சுப்ரமண்ய சிவா ? ’ …..இல்லை.
லால், பால், பால் (லாலா லஜபத்ராய், பாலகங்காதர திலகர், விபின் சந்திபால்) என்ற முத்தலைச் சூலம் ஆங்கிலேயரை எதிர்த்து நின்றது. திருவனந்தபுரத்தில் இளைஞர்களைத் திரட்டிய சுப்பிரமணிய சிவா ‘தர்ம பரிபாலன சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். திருவாஞ்கூர் சமஸ்தானம் அவரை அங்கிருந்து விரட்டிற்று. 1908-ல் தூத்துக்குடி வந்தார். வ.உ.சி என்ற வேளாளன் (உபகாரி என்ற பொருள்) நாட்டு விடுதலை, தொழிலாளர் நலன் என்ற இரண்டையும் இரு கண்களாகக் கொண்ட சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் தந்தார். அது தான் அவர் மேல் தேசத்துரோக குற்றம்.
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2563

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;