Q&A WITH RAMANA MAHARSHI J K SIVAN

மகரிஷியிடம் கேள்வி.. பதில்…   நங்கநல்லூர்  J K SIVAN
பகவான் ரமண மஹரிஷி  ஒரு ஸ்வயம்பு. குருவைத்  தேடாதவர், தனது ஆத்மாவே குரு என கண்டவர்,கொண்டவர்.  பதினாறு வயதிலே திடீரென்று ஒருநாள் பகலிலேயே  மரணானுபவத்தால்  ”நான்” என்பது யார் என ஆராய்ந்து ஆத்மா விசாரத்தில் மூழ்கி,  உடல் ஆத்மா இல்லை, நான்  என்பது உடல் இல்லை, ஆத்மாவே  என முடிவு கண்டவர்.
உலக முழுதும் பக்தர்களைக்  கொண்ட மஹரிஷியை 1902ல்  சிவப்பிரகாசம் பிள்ளை எனும் பக்தர் சில கேள்விகள் கேட்டு பதிலைப் பெற்றார். அந்த கேள்விகளும் பதிலும் என்றும் நமக்கு வழிகாட்டுபவை. ஆத்ம விசாரத்தை தொடர்வதற்கு  உபயோகமானவை.
மௌனமாகவே  அநேக நேரம் மகரிஷி இருப்பதால் பேசமாட்டார். யாராவது கேள்விகள் கேட்டால் எழுதிக்கொடுக்க சொல்வார். அதற்கு பதில் எழுதிக் கொடுப்பார்.   சிவப்பிரகாசம் பிள்ளை  ரொம்ப கெட்டிக்காரர். எல்லோருக்கும் பயன்படும்படியாக தான் சேகரித்த கேள்விகள் பதில்களை  புத்தகமாக பண்ணிவிட்டார்.++

1. இந்த தேகம் என்பது என்ன? இது நான் இல்லையா?

இந்த தேகம்  ஏழு தாதுக்களால் ஆனது. புலனுணர்வான  கேட்பது, தொடுவது, பார்ப்பது, நுகர்வது, ருசிப்பது போன்றவை,  சப்தம், ஸ்பரிசம், வண்ணம், ருசி, நாற்றம்  போன்ற கர்மேந்திரிய, ஞானேந்திரிய அனுபவங்களை  பற்றி அறிவது சம்பந்தமான  நிறைய விஷயங்களை அதில் அறியலாம். தன்னை அறிவதன் மூலம்  பேச்சு, அசைவு,உடலின் கழிவுகள் அகற்றல், உற்பத்தி போன்ற விஷயங்கள்  ‘நான்” என்பதோடு சம்பந்தம் இல்லாதவை என அறியலாம். மனம் நானல்ல என உணரலாம். தேகமே நான் அல்ல என்பது புரிந்து கொள்ளலாம்.
2.  மேற்சொன்னதெல்லாம்  நான்  இல்லை என்றால்  நான் அப்போது யார்?நான் இதல்ல, அதுவல்ல என ஒவ்வொன்றாக விலக்கப்பட்டு  எது முடிவில் மிஞ்சுகிறதோ அது தான் நான்.
3. அந்த ஞானத்தின்  தன்மை என்ன?சத் ஆக, சித்  ஆக, ஆனந்தமாக  இருப்பது.
4. ஆத்ம ஞானம் எப்போது பெறலாம்? காணும் உலகை கண்ணிலிருந்து  கவனத்திலிருந்து நீக்கினால், ஆத்ம ஞானம் சாதகமாகும்.கண்ணும் உலகம் தான் காண்பவன். 

5.உலகம் மனதில், கண்ணில் பட்டுக்கொண்டிருந்தால் அது உண்மையில்லையா, ஆத்ம ஞானம் பெறமுடியாதா?முடியாது. 

6.  காண்பவனும் காட்சிப்பொருளும்  கயிறும் பாம்பும் மாதிரியா? ஏன்?   பாம்பை உண்மையாக  காணும்போது, அதன் ஆதியில், ஆதாரமாக இருப்பது வெறும் காற்றில் ஆடும் கயிறு அறியப்படுவதில்லை.  பொய்  நிஜம் போல் கான்கிறதல்லவா.  மாயையான பாம்பு மறைந்தாள் தான் சாத்தியமான கயிறு புலப்படும்.  உலகம் சாஸ்வதமாக தென்படும் மாயை அது போல்  மறைந்தால் தான் உண்மையான ஆத்மா இருப்பதை  உணரமுடியும்.
7. நான் உண்மையானதாக காணும் உலகம் எப்போது காட்சியில், கவனத்திலிருந்து மறையும்?சகல வித  உணர்வுகளும், காட்சியாக  உருவாவது மனதில் தான், சகல செயல்களும் அதிலிருந்தே புறப்படுகிறது. அடையாளங்கள் எல்லாம்  அங்கிருந்தேன்.மனது எண்ணங்களிலிருந்து விடுபட்டு விட்டால் உலகம் தோன்றாது.
8.மனதின் குணம் , தன்மை என்ன?
மனம் என்பது ஒரு அபூர்வ, அதிசய சக்தி சாதனம். ஆத்மாவை சுற்றி வளைத்துக்கொண்டிருப்பது. எல்லா எண்ணங்களும் உருவாகும் உற்பத்தி ஸ்தலம். எண்ணங்களின் குப்பை மேடு தான் மனம்.  எண்ணங்கள் இல்லையென்றால் மனம் என்பது இல்லை. ஆகவே மனம் எண்ணத்தின் உருவகம். எண்ணங்கள் இல்லை என்றால் மாயையான உலகமே இல்லை. ஆகவே தான் மனம் இயங்காத ஆழ்ந்த நித்திரையில் உலகம் இல்லை. விழிபோப்பு, கனவு நிலைகளில் மனம்  எண்ணங்களாக  இயங்குகிறது. ஆகவே உலகம் உள்ளது.  சிலந்தி தனது எச்சிலிலிருந்து வலை பின்னி அதில் உறைவது போல், வேண்டாமென்றால் அதை அதுவே அழித்து விடுவது போல், மனம்  உலகத்தை உருவாக்கி காட்டுகிறது. மனம் விலக்கினால் உலகம் இல்லாமல் போகிறது.  உலகம் இருந்தால் ஆன்மா இல்லை. ஆன்மா இருந்தால் உலகம் இல்லை.  மனதை விடாமல் அலசி விசாரம் செய்யும்போது மனம் காணாமல் போகும். மனம் காணாமல் போனால் அதோடு அது உருவாக்கும் உலகமும் இல்லாமல் போகும். மனதுக்கு பிடித்துக்கொள்ள ஏதாவது வேண்டும். எண்ணங்கள் அப்படித்தான் உலகை ஸ்ரிஷ்டிக்கிறது. 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;