
ஒரு அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN
உலகத்தில் மனிதன் பேச ஆரம்பித்ததிலிருந்து அவன் கேட்கும் ஒரு கேள்வி ”கடவுள் இருக்கிறாரா? இன்று வரை அதற்கு ”ஆமாம், இல்லை” என்ற ரெண்டு பதில்களும் தான் விடாமல் கிடைக்கிறது. அதில் ”கடவுள் உள்ளார்” என்பதும் அதை நம்புபவர்களும் அதிகமாக இருப்பதால் தான் இவ்வளவு மதங்கள், கோவில்கள் கண்ணில் படுகிறது. என் பதில் எப்போதும் ”ஆமாம், கடவுள் இருக்கிறார்” ஒரு உண்மை நிகழ்ச்சியை சொல்கிறேன். கேளுங்கள்.
வெள்ளைக்காரன் இந்த தேசத்தில் அழையாத விருந்தாளியாக புகுந்து வியாபாரத்தில் தொடங்கி மெதுவாக நாட்டையே ஆழ நேரிட்டதற்கு காரணம் இன்றுபோல் அன்றும் நம்மிடையே ஒற்றுமை இல்லை. தனது ஆயுத பலத்தால் இங்கிருந்த குட்டி குட்டி ராஜாக்களை வென்று ராஜ்ஜியம் ஸ்தாபித்தான். நாட்டை ஆள ஆங்காங்கே கலக்டர்கள், கவர்னர்களை நியமித்தான். அந்த கலக்டர்களில், கவர்னர்களில் நல்ல இதயம் கொண்டவர்களும் ஒரு சிலர் இருந்தார்கள்.
என்னுடைய முதலிய கட்டுரைகளில் மதுரை மீனாட்சி தரிசனம் பெட்ரா கலக்டர் பீட்டர், மதுராந்தகத்தில் ராமர் தரிசனம் பெற்ற கலெக்டர் லயனல் பிளேஸ், மந்த்ராலயத்தில் ராகவேந்திரரை சந்தித்த கலெக்டர் மன்றோ பற்றிய சம்பவங்களை எழுதி இருக்கிறேன்.
ஏழு வருஷங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் இன்னொரு சம்பவம் எழுதியதை இப்போது தமிழில் சொல்கிறேன். நான் மேலே சொன்னதெல்லாம் புருடா இல்லை. சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள உண்மை நிகழ்வுகள்.
மத்திய பிரதேசத்தில் அகர் மால்வா எனும் இடத்தில் ஒரு சிவாலயம். பைஜ்நாத் மஹாதேவர் என்று சிவனுக்கு பெயர். வெள்ளைக்காரர்கள் ராஜ்யத்தில் அவர்கள் கட்டிய ஒரே கோவில், சிவாலயம் இது தான். இதற்கு காரணம். லெப் டினண்ட் கர்னல் மார்ட்டின் என்பவரும் அவர் மனைவியும் தான். 1879ல் ஆப்கனிஸ்தானோடு வெள்ளைக்காரர்கள் யுத்தம் செய்தார்கள். அகர் மால்வாவில் இருந்த மார்ட்டின் மனைவியை விட்டுவிட்டு போருக்கு சென்றான். இருவரும் கடிதம் மூலமாகத் தான் சம்பாஷித்துக் கொண்டார்கள்.
சில மாதங்களாக மார்டினிடமிருந்து அவன் க்ஷேமலாபங்களைப் பற்றி கடிதங்கள் வரவில்லை. மனைவி தவித்தாள். கணவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று கவலை. வழக்கமாக குதிரைமேல் சவாரி செய்து கொண்டு செல்பவள் ஒருநாள் மால்வாவில் போகும் வழியில் உள்ள அந்த பழைய 15ம் நூற்றாண்டு மஹாதேவன் சிவாலயத்தை பார்த்தாள் . ஆர்த்தி நேரம். அர்ச்சகரின் மந்த்ர சப்தம், சங்கு, டாண் டாண் என்ற மணி சத்தம் அவள் மனதுக்கு தெம்பளித்தது. குதிரை மேலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டாள் . மார்ட்டின் பற்றிய கவலை கண்களில் நீராக பெருக அதை அர்ச்சகர் கவனித்துவிட்டு வெளியே அவள் அருகில் வந்து ”உனக்கென்னம்மா கவலை . சொல். மஹாதேவன் தீர்த்துவைப்பார்” என்று ஆறுதல் அளித்தார். அவள் மார்ட்டின் உயிரோடு இருக்கிறானா என்று தெரியவில்லை என்று அழுதாள்”அம்மா, கண்ணீர் விடாதே, எந்த ஆபத்தையும் மஹாதேவன் தீர்த்து வைப்பார். உன்னால் முடிந்தால் ”ஓம் நமசிவாய” என்று பதினோரு நாள் சொல். நல்ல சேதி உனக்கு கிடைக்கும் ” என்று பிரசாதம் அளித்தார்.
பதினோரு நாள் மார்ட்டின் மனைவி அப்படியே ஜபித்தாள் . என்ன ஆச்சர்யம் பாருங்கள். பதினோராம் நாள் சாயந்திரம் அவள் வீட்டு வாசல் கதவை ஒருவன் தட்டினான். ஆப்கானிஸ்தானிலிருந்து ஒரு ராணுவ சிப்பாய், மார்ட்டின் அவளுக்கு எழுதியிருந்த கடிதம் ஒன்றை கையில் கொடுத்தான். அதில் மார்ட்டின் மயிர்கூச்செரியும் சம்பவம் ஒன்றை பற்றி என்ன எழுதியிருந்தான் தெரியுமா?”
”……. பதினைந்து நாட்களாக இங்கே பிரிட்டிஷ் வீரர்களுக்கும் ஆப்கானியர்களுக்கும் கடுமையான யுத்தம். நான் தலைவனாக இதில் முக்கிய பொறுப்பை வகிப்பதால் நகர முடியவில்லை. உயிருக்கே சவால். ஒரு சமயம் ”இனி தப்ப முடியாது. மரணம் ஒன்றே முடிவு” என்ற நிலைமை. நம்பிக்கை, உன்னை பார்க்க முடியாதோ? என்ற ஏக்கம்….இருந்தும் கடைசி நிமிஷ போராட்டம். அப்போது தான் திடீரென்று யாரோ ஒருவன் தோன்றினான். விசித்திரமான ஆள். இடுப்பில் புலித்தோல் வேஷ்டியாக கச்சை கட்டிக் கொண்டிருந்தான். விரித்த சடையன். கையில் நீளமான கனமான ஒரு திரி சூலம். அதால் என்னமாக தாவித் தாவி ஆப்கானியர்களை தாக்கினான் என்கிறாய்! ஓட ஓட அவர்களை விரட்டி கொன்றான். தாக்கினான். பயந்து போய் எல்லோரும் ஓடிவிட்டார்கள். அதற்குள் எனக்கு பக்க பலமாக ராணுவ வீரர்களும் சேர்ந்து விட்டார்கள். யுத்தத்தில் எங்கள் ராணுவ படை வென்றுவிட்டது. அப்பாடா என்ன ஒரு நிம்மதி.! அந்த விசித்திர வீரன் என்னை நெருங்கினான். முகத்தில் நட்புறவோடு ஒரு புன்னகை. பேசினான். அவன் ஜாடையிலுருந்து, பேச்சிலிருந்து ”நீ கவலையை விடு” என்று சொன்னதைப் புரிந்துகொண்டேன்… அவன் வந்தமாதிரியே திடீரென்று சென்றுவிட்டான். அவனை அப்புறம் பார்க்கவே இல்லை. ”
மார்ட்டின் மனைவிக்கு மால்வா மஹாதேவன் படம் தெரியும். இடுப்பில் புலித்தோல், கையில் திரிசூலம் பார்த்திருக் கிறாளே . இங்கே தான் இந்த பதினோரு நாள் ”ஓம் நமசிவாய” சொன்னதன் பலன் அங்கே ஆப்கானிஸ்தானில் கணவன் மார்டினுக்கு பலன் அளித்திருக்கிறதே!”
வெற்றிகரமாக யுத்தம் முடிந்தது. மார்ட்டின் திரும்பி மால்வா வந்தான். தம்பதிகள் இருவருக்கும் மால்வா மஹாதேவன் மேல் பக்தி அதிகரித்து ஆழ்ந்த பக்தர்களானார்கள். 1883ல் மார்ட்டின் அந்த பழைய கோவிலின் புணருத்தானத்துக்கு அக்காலத்திலேயே ரூபாய் 15000 தானமாக கொடுத்தான். பின்னர் கப்பல் ஏறி லண்டன் போனாலும் கடைசிவரை இருவரும் மஹாதேவ பக்தர்கள் தான். இந்த சம்பவம் கல்வெட்டில் மால்வா அகர் மஹாதேவன் கோவிலில் காணப்படுகிறது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



