
ஒரு கிருஷ்ண விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN
நேற்று என்ன செய்தோம், என்ன சாப்பிட்டோம், யாரைப் பார்த்து என்ன பேசினோம், எங்கே போனோம், என்பதே மறந்து விடுகிறது. ஆனால் ஐந்தாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் சற்றும் மறக்கவே இல்லை. அடிக்கடி நினைவில் வந்து கொண்டே இருக்கிறது. அவனைப் பற்றி எழுத வைக்கிறது. இதில் எனக்கு பரம சந்தோஷம்.
அவனைப் பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன். ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருந்தாலும் மீண்டும் அதை நினைவூட்ட உபயோகமாக இருக்கும். தெரியாதவர்களுக்கு ஒரு குட்டி விருந்து.
ஸ்ரீ மந் நாராயணன் கிருஷ்ணனாக அவதாரம் பண்ணுவதற்கு முன் கபில முனிவராக அவதரித்தார் என ஒரு ஐதீகம். கர்தம ரிஷிக்கும் தேவஹூதிக்கும் மகனான கபில முனிவர் பெரிய யோகீஸ்வரர். சாங்க்ய யோகத்தை போதித்தவர். தனது தாய்க்கு “ஆத்ம போதனையும் சாங்க்ய யோகமும் ” உபதேசித்தவர். இந்த மாதிரி ஒரு அருமையான பிள்ளையைப் பெற்ற தாய் என்னதான் வாழ்க்கை நிலையாமை, யோகம், ஆன்ம போதம் அறிந்தாலும் தன்னுடைய ஒவ்வொரு பிறவியிலும் அவனே மகனாக வேண்டும் என்று ஆசைப்படுவாள் இல்லையா. ஆகவே கடவுளை வேண்டி அவனே தனக்கு மகனாக பிறக்க ஒரு வரம் பெற்றாள் .
கபிலரின் அப்பா கர்தம ரிஷி கபிலன் பிறந்ததும் காட்டுக்கு தவம் செய்ய சென்றுவிட்டார். அந்த பக்கமாக அரசன் அனுப்பிய காணாமல் போன யாக குதிரையைத் தேடிக்கொண்டு ராஜாவின் பிள்ளைகள் வந்தார்கள், ஒருவர் இருவர் இல்லை. 60000 ஆசாமிகள் (சகரர்கள்). காணாமல் தேடிவந்த ராஜாவின் யாக குதிரை கர்தம ரிஷி ஆஸ்ரமத்தில் தவம் செய்யும் கபில முனிவர் அருகே ஒரு மரத்தில் கட்டபட்டிருந்ததைக் கண்டு ஆச்சர்யமும் கோபமும் அடைந்தார்கள். ஓஹோ இது இந்த ரிஷியின் வேலை என்று கருதி அவரை சத்தமாக மரியாதை இன்றி ஏசினர். தவம் கலைந்து கண் திறந்த கபிலரின் பார்வை சகரர்கள் மேல் பட்ட அக்கணமே அவர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாயினர்.
காணாமல் போன குதிரையை தேடப்போய், காணாமல் போன அத்தனை பிள்ளைகளையும் தேட ராஜா தனது பேரன் அன்சுமானை அனுப்பினான். அவன் அலைந்து திரிந்து கடைசியில் கபிலர் ஆச்ரமத்தருகே ஒரு சாம்பல் மலையை கண்டு விசாரித்து அவையே அவன் தேடிவந்த சகரர்களின் சாம்பல் என அறிந்து கொண்டான். கபிலரைக் கண்டு அவர் காலில் விழுந்தான்.
”மகரிஷி, சாம்பலாகிக் கிடக்கும் என் முன்னோர்கள் உயிர் பிழைக்க வழி சொல்ல வேண்டும்” என வேண்டினான் .
”ஆகாச கங்கை நீர் ஒன்றே சகரர்களை மீட்டுத் தர முடியும். முடிந்தால் கொண்டுவா” என்கிறார் கபிலர்.
அன்சுமான் தவமிருந்தான். பகீரதன் என்ற பெயர் கொண்டான் என்பது வேறு கதை. உங்களுக்கு தெரிந்தது.
கிருஷ்ணன் குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்தபோது முனிவர்களில் ரிஷிகளில் நான் கபிலர் என்று சொன்னது) நினைவுக்கு வருகிறதா?
अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः । गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥ १०-२६॥
aśvatthaḥ sarvavṛkṣāṇāṃ devarṣīṇāṃ ca nāradaḥ gandharvāṇāṃ citrarathaḥ siddhānāṃ kapilo muniḥ 10-26
சித்தர்களில், முனிவர்களில் நான் கபில முனி.
கபிலனின் தாய் தேவஹூதியின் விருப்பம் வீண் போகவில்லை.அடுத்த பிறவியில் கபிலமுனிவரின் தாய், தேவஹுதி, தான் வேண்டியபடியே துவாபரயுகத்தில் கிருஷ்ணனின் தாய் யசோதை யானாள். இதில் என்ன வேடிக்கை என்றால், யசோதை மகனாக வளர்ந்த கிருஷ்ணன் அவளுக்கு எந்த வேதாந்தமும் உபதேசிக்க வில்லை. நிறைய விஷமங்கள் தான் செய்து மகிழ்வித்தான். இதுவே ரகசியம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

