VIVEKANANDA’S MY MASTER 2 j k SIVAN

என் குருநாதர்  – நங்கநல்லூர்  J.K. SIVAN
ஸ்வாமி  விவேகானந்தர்.
பதிவு 2
மனதை கட்டுப்படுத்தி ஆளுமைக்குள் கொண்டு வரும் ஞானி உலகையே வென்றவன். அப்படிப்பட்டவனுக்கு வேறு என்ன வேண்டும்? பிரபஞ்சமே அவன் கைக்குள். தன்னை வென்றவன்  எல்லாம் வென்றவன்
மேலைநாடுகள் இயற்கை என்றால் வெளியே கண்ணுக்கு தெரிபவை அத்தனை மட்டுமே என்று நம்புகிறார்கள். அது மிகக் குறைவானது. கன்னுக்குத் தெரியாத மனதில் பதிந்திருப்பதை பல உலகங்கள். அவற்றை அறிந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்தவன் அல்லவோ இறைவனுக்கு சமமானவன். உன் காரியங்களுக்கு மட்டுமே நீ பொறுப்பு. அதன் பலன் உனதல்ல என்பதை புரிந்து கொள்ளவே சிந்திக்கவேண்டும்.
மேலை நாட்டு  நாகரீக மாற்றம், உலகத்தை  விழுங்கி வரும் பொருள்முதல் வாதம், பாரதத்திலும் மேற்கத்திய அரசினால் பரவ  ஆரம்பித்தது. எளிய அப்பாவி மக்கள் அதனால் ஈர்க்கப்பட்டு மாற்றம் அடைய வாய்ப்பு மிகுந்தது. எனினும் இது போல் பல ஆக்ரமிப்புகளை இந்த தேசம் இதற்கு முன் சந்தித்து தன்னை பாதுகாத்துக் கொண்டு தான் வளர்கிறது. மத வாதிகள், மத வெறியர்கள் எண்ணற்ற உயிர்ச்சேதம் பொருட் சேதம் எல்லாம் ஏற்படுத்தியும் பாரத சனாதன தர்மம் அழியாமல் இருக்க  ஆன்மீக பலம்  நிறைந்த ஞானிகள் ரிஷிகள்  மஹான்கள் தான் காரணம். பிறருக்கு அன்னம் ஆகாரம்  கொடுக்காமல் உண்பது இந்துக்களுக்கு வழக்கமில்லை. அதிதி உபச்சாரம் என்று இதற்கு பெயர். கோவில் இறைவன் வழிபாடு தொன்று தொட்டு பாரம்பரியமாக தொடர்ந்து வரும் வழக்கம் உள்ளவர்கள். பெரியோரை மதிப்பது, ஆச்சார்யர்கள், குருமார்கள் ஆசிரியர்களை தெய்வமாக மதிப்பவர்கள். கூட்டுக்குடும்பமாக ஒழுக்கம், நித்ய கர்மாக்கள் கைங்கர்யங்கள் விடாமல் பின்பற்றுபவர்கள். அமைதியான, எளிமையான வாழ்க்கை மேற்கொள்பவர்கள்.வேத சாஸ்திரங்கள், புராணங்களை பின்பற்றுபவர்கள். மஹா பாரதத்தில் ஒரு ஏழை பிராமணன் குடும்பத்தில் அத்தனைபேரும் தங்களுக்கு அன்று உணவாக கிடைத்த்த ஒரு சில அரிசிகளை சாதமாக்கி  அனைவருமே  பட்டினி கிடந்தாலும் அத்தனை உணவையும் வந்த அதிதி ஒருவனுக்கு அளித்து அவன் திருப்தியாக ஆசி அளித்து சென்றதும் அவர்கள் அத்தனைபேரும் பசியால் பட்டினியால் உயிரிழந்த  கதை உள்ளது.  இப்படிப்பட்ட ஒரு   ஏழை பிராமண குடும்பத்தில் தான் எனது குருநாதர் பிறந்தவர்.  அவரது அம்மா  எத்தனையோ நாட்கள் தான் பட்டினி கிடந்து இருக்கும் உணவை வீட்டுக்கு வந்த அதிதிகளுக்கு திருப்தியாக அளித்தவர். இத்தகைய  பெற்றோருக்கு பிறந்த அதிசய குழந்தை தான் ராமகிருஷ்ணர்.  பிறந்ததிலிருந்தே தனது முன்ஜன்மம் பற்றி தெரிந்தவர் , எதற்காக அவதரித்திருக்கிறோம் என உணர்ந்த  விசித்திர குழந்தை.இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். பள்ளிக்கு அனுப்பினார்கள். வேத காலத்தில் குருவின் வீட்டிற்கு சிறுவனின்  உபநயனம் ஆனவுடனேயே கல்வி கற்க  சில வருஷங்கள் அங்கேயே இருக்க அனுப்பி விடுவார்கள்.   குருகுல வாசம் என்று அதற்குப் பெயர்.  கல்வியை விற்பது பாபம். சிஷ்யர்கள், மாணாக்கர்களுக்கு உணவு உடை, தங்குமிடம் எல்லாம் இலவசமாக  குருவின் வீட்டிலேயே. தனவந்தர்கள் குருக்கள் வீட்டில் விசேஷம் என்றால் இத்தகைய குருமார்களுக்கு நிறைய பொருள் நிதி உதவி செய்து ஆதரித்தார்கள். சில பிரபுக்கள் வீட்டில் இப்படி கற்றவர்கள் பெரியவர்கள் சேர்ந்து பல விஷயங்களை அலசுவார்கள் வாதம் செய்வார்கள். தங்களது அறிவை, ஞானத்தை வெளிப்படுத்துவார்கள். பொருள் பரிசுகள் அவர்களுக்கு கிடைக்கும்.  இப்படி ஒரு ஸதஸ் ஒரு பிரபுவின் வீட்டிலோ குருவின் வீட்டிலோ நடக்கும்போது ராமகிருஷ்ணன் என்ற இந்த சிறுவனும் சென்றான். அவர்கள் பேசுவதெல்லாம் கவனித்தான். அதிலிருந்து அவன் புரிந்து கொண்டது; ”இது தான் அவர்களின் ஞானம். எதற்கு ஒருவரை ஒருவர் சாடி, சண்டை போடவேண்டும்.தனது முக்கியத்தை வெளிப்படுத்த அவஸ்தை படவேண்டும்.? எல்லாம் பணத்துக்காக. எவன் அதிகம் படித்த பண்டிதன் என்று கடைசியில் அவரப்பிகளுக்குள்  தேர்வு செய்யப்படுகிறானோ அவனுக்கு  வேஷ்டி வஸ்திரங்கள், பொருள் பொற்காசு கிடைக்கும் அதற்காகவே”இனிமேல் நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று முடிவு செய்துவிட்டான். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;