
என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVAN
சுவாமி விவேகானந்தா இருநூறு வருஷங்களுக்கு முன்பே அமெரிக்காவில் தனது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி அமெரிக்க மக்களுக்கு அற்புதமான ஆங்கிலத்தில் வெள்ளம்போல் ப்ரவாஹித்து ஆச்சார்யப்படுத்தியதில் சிலவற்றை தமிழில் என் வார்த்தைகளாக தர முயற்சிக்கிறேன்.
”கீதையில் கிருஷ்ணன் சொன்னது நினைவிருக்கிறதா?எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்கி தர்மத்தை குலைக்கிறதோ அப்போதெல்லாம் நான் தர்மத்தை நிலைநாட்ட, லோகக்ஷேமத்துக்காக அவதரிப்பேன்”.
மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். மனிதன் ஆன்மீகத்தில் தொடர்ந்தும், அதே சமயம் உலகத்தின் ஈர்ப்புகளில் சிக்கியும் இருவிதமாக செயல்படும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவில் நவீன விஞ்ஞான வளர்ச்சியில் , தொழிற் புரட்சியில், மக்கள் மனதை உலக விஞ்ஞான வளர்ச்சி இழுக்கிறது. அதே நேரத்தில் ஆசிய கண்டம் புராதனமான தொடர்ந்து வரும் ஆன்மீகத்தில் தழைத்துக் கொண்டு மாறாமல் இருக்கிறது.
உலக நாகரீக சுகபோக வளமையில், சக்தியில், மனம் கவரப்பட்டால் மனதில் அங்கே ஆன்மீகத்துக்கு இடம் ஏது? பணம் மனதை ஆக்கிரமிக்கும்போது மனிதன் பணம் பண்ணும், எண்ணும் இயந்திரமாக மாறுகிறான். இதிலிருந்து அவனை மீட்க எது சக்தி கொண்டது? துண்டு துண்டாக பணியாளர்கள் உழைத்து ஒட்டு மொத்தமாக ஒரு தொழில், வாணிபம் வளரும்போது மனிதனுக்கு அவன் சம்பந்தப்பட்ட பகுதி தான் தெரியும். ஆகவே யாருக்கும் முழுமையாக எதுவும் புரியாது. தெரியாது. கருமமே கண்ணாயினார்என்று அந்த குட்டையிலேயே ஊறிய மட்டையாக தான் உள்ளான் .அதிலேயே சந்தோஷம் அடைகிறான். சின்ன குழந்தை தன் கையிலுள்ள பொம்மை தான் அதன் உலகம் என்று நினைப்பது போல. அவ்வளவு தான்.
எது சாஸ்வதம், எது உண்மை, எது நிரந்தரம், எது முழுமை என்று உணர்ந்தவர்கள் ஆசிய கண்ட ஞானிகள். இந்த நேரத்தில் தான் கிழக்கே இருந்து ஒரு குரல் கேட்டது.
”உலகத்திலே எதெல்லாம் நாம் காண்கிறோமோ அது அத்தனையும் சொந்தமாக்கிக் கொண்டாலும் ஒருவனிடம் ஆன்மீக உணர்வு இல்லையென்றால் அவ்வளவும் வீண். வெறும் லோகாயத விஞ்ஞான அறிவால் நாகரீக வளர்ச்சியால் ஒரு பயனுமில்லை. தண்டம்.’
கிழக்கத்திய ஞானியை மேற்கத்திய தொழில் வளர்ச்சி மனிதன் ”வெறும் கனவு காண்பவன்” என்று எள்ளி நகையாட கிழக்கத்திய ஞானியோ, ”இயந்திரம் சந்தோஷம் தராது, மனத்தை வளரச்செய், மனதை அடக்கி வெல்பவன் தான் சந்தோஷமாக இருக்கமுடியும். பணத்தால் அல்ல. உன்னை நீ ஜெயித்தால் தான் உலகத்தை ஜெயித்தவன்” என்று அறிவுரை சொல்லியும் யார் செவியில் அது விழுந்தது ? கிழக்கே இருந்து தான் உலகமே பயன் பெறும். ஆத்ம ஞானம் மற்ற விஞ்ஞானங்களை விட உயர்ந்தது. இப்படிப்பட்ட உயர்ந்த ஞானம் கொண்ட, மண், பெண், பொன், எனும் மூவாசைகளை வென்ற பரம ஞானி ஒருவரைப் பற்றி தான் இந்த கட்டுரை.
உலகம் அஞ்ஞான இருள், மாயை, சுயநல மோகம், கோபம், பொறாமை, அகம்பாவம், மண் பெண் பொன் ஆசை,இதில் எல்லாம் மூழ்கி வாடுகிறதே, கை தூக்கி விட யார் இருக்கிறார்கள்? இப்படிப்பட்ட நிலையில் மேலை நாடுகள் சிக்கி தவிக்கும்போது பாரத தேசம் தனிப்பட்டு நிற்கிறது. காரணம், இன்னும் அங்கே சில ஞானிகள், உலக நன்மைக்காக, எல்லா மக்களும் இன்பமுற வாழ இரவும் பகலும் தியானத்தில் தவத்தில் தங்களை வருத்திக்கொண்டு வாழ்கிறார்கள். மேற்கத்திய மக்களுக்கு இந்த வேகமான இயந்திர, அசுர, போட்டா போட்டிக்கு பின்னால் என்றும் சாஸ்வதமான உண்மை சுகம் ஒன்று இருப்பது ஒருநாள் தெரியவரும். என்றோ ஒருநாள் உலகம் முழுதும் ஆன்மாவை உணரும் காலம் வரும் என்ற நம்பிக்கை உண்டு. பாரத தேசத்தின் புகழ் ஓங்கும். தாமும் இன்புற அங்கே ஓடுவார்கள். வெறும் படிப்பு அறிவானது. ஞானமாகாது, மரணத்தை கண்டு அஞ்சவேண்டாம், இந்த உடம்பு, பெயர்,உருவம் எல்லாம் நாம் அல்ல என்று புரியும். பாரதம் ஏன் எல்லோரையும் உடன்பிறவா சகோதரர்களாக நினைக்கிறது என்று உணர்வார்கள். நமக்கு உண்மையில் எது தேவை என்று புரியும். மனம் திருப்தி அடைய கற்றுக்கொள்ளும்.’
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



