YOGIS OF INDIA J K SIVAN

பாரத தேச யோகிகள் – நங்கநல்லூர் J K SIVAN
மெஹர் பாபா
பாரத தேசம் எத்தனையோ ஆன்மீக யோகிகளை, ஞானிகளை, சாதனையாளர்களை கண்டிருக்கிறது. சிலரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. மெஹர் பாபா என்ற பார்ஸீக்காரர் (25.2.1894-31.1.69) தன்னை கடவுள் அவதாரம், கடவுளின் தூதன் என்று சொல்லிக்கொண்டவர்.லக்ஷக்கணக்கான பக்தர்கள் அவருக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் உண்டு. தனிப்பட்ட மதம் ஒன்றும் இல்லை. எல்லோருக்கும் ஒரே கடவுள் தான் என்பார். 44 வருஷம் மெளனமாக பேசாமலேயே சைகை, பலகையில் எழுதிக் காட்டுவதன் மூலம் எண்ணங்களை பரிமாறிக் கொண்டவர். பாபா ஜான் என்ற வயதான முஸ்லீம் சன்யாசினி மூதாட்டி ஒருநாள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 19வயது மெஹெர்பாபா அவள் தங்கியிருந்த வேப்ப மரத்தடி பக்கம் வந்தபோது கூப்பிட்டு கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். அப்போதிலிருந்து மெஹர் பாபாவுக்கு ஆன்மீக எண்ணங்கள் தெய்வீக சக்தி, தோன்ற ஆரம்பித்ததாம் .பிறகு தாஜூடீன் பாபா, நாராயண மஹாராஜ், ஷீர்டி பாபா, உபாசனி மஹாராஜ் என்று பல சித்த புருஷர்களை சந்தித்தார். பால் ப்ரண்டன் இந்தியா வந்தபோது அஹமத் நகரில், ஆரம்காவ்ன் கிராமத்தில் குகை போன்ற ஒரு தனி வீட்டில் சந்தித்த முதல் யோகி இந்த மெஹர்பாபா. அவர்கள் சம்பாஷணை;பாபா பலகையில் எழுத்துக்கூட்டி காட்டிய சொற்கள் அருகில் ஒரு உதவியாளரால் ஆங்கிலத்தில் விளக்கப்பட்டு சம்பாஷணை தொடர்கிறது. சுற்றிலும் இயற்கை வளம் சூழ் வயல்கள், மரங்கள், குட்டையில் எருமைகள் அரைத் தூக்கத்தில். வாசலிலேயே செருப்பை கழற்றி விட்டு பாதி சிகரெட்டை தூக்கி போட்டு விட்டு உள்ளே பால் ப்ரண்டன் நுழைகிறார். பாபாவை வணங்குகிறார்
கடோதகஜன் ரங்கராவ் போன்ற முகம். பின் கழுத்து வரை நீண்ட முடி.வளைந்த மூக்கு. பிரவுன் மீசை. ஒளி மிக்க கண்கள். மௌனம்.வெள்ளை ஜிப்பா மாதிரி ஆடை. சிவப்பான நிற நாற்பது வயதுக்குள்ளான மனிதர் இந்த மெஹர் பாபா.
”ரொம்ப சந்தோஷம் உங்களைப் பார்த்ததற்கு’
என்றேன்.
.”எனக்கும் உங்களை பார்த்ததில் சந்தோஷம். வெளியூர் காரர் உங்களுக்கு முதலில் உணவு,= நீர், ஒய்வு முக்கி யம்”’
எனக்கு ஒரு பழைய அறை ஒதுக்கப்பட்டது. ஒரு கட்டில், சிப்பாய்க் கலக கால நாற்காலி. கால்கள் ஆடியது. ஒரு விரிசல் மர மேஜை. ஜன்னல் வழியே நல்ல காற்று. பச்சைப்பசேல் வயல்கள். சாயந்திரம் மறுபடியும் மெஹர்பாபாவை சந்தித்த போது பேச்சு தொடர்த்தது.
”நான் இந்த உலக சரித்திரத்தையே மாற்றி காட்டப் போகிறேன்’
‘(நான் எழுதிக் கொள்ளும்போது இப்போது எழுத வேண்டாம்..நமது சந்திப்பு முடிந்ததும் நீங்கள் எழுதலாம்…)
” ஏசுவுக்கு பிறகு ஒரு ஆன்மீக வீச்சு ஏற்படுத்த நான் அவதரித் திருக்கிறேன். அதற்கு தக்க காலம் வரும் வரை காத்திருக்கிறேன்..எதற்கும் நேரம் காலம் உண்டு. இப்போதுள்ள மதங்கள் நம்பிக்கைகள் வித்யாசங் கள் எல்லாம் மாற்றுவேன் .எல்லோர் மனத்திலும் ஒரே கடவுள் என்று வழி வகுப்பேன் .
”எப்போது உலகத்துக்கு உங்கள் விஜயத்தை அறிவிப்பீர்கள்?”
‘எங்கும் கலவரம், பீதி, குழப்பம், நிம்மதியின்மை உண்டாகும். அப்போது தான் உலகம் என்னைத் தேடும்..புயல், பூகம்பம், கிழக்கும் ஏற்கும் மோதும் யுத்தம்..அப்போது அதெல்லாம் அடக்கி நான் மக்களை வழி செலுத்தி அமைதி தருவேன்’
”’அது எப்போது நடக்கும்?”
‘அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை”
”நீங்கள் சொல்வது ரொம்ப அதிர்ச்சியான எதிர்கால மாக இருக்கிறதே!”’
‘ஆமாம். அப்போது நான் சகல இடர்பாடுகளையும் நீக்கி கடவுளின் தூதனாக அமைதியை அளிப்பேன். உலகெங்கும் செல்வேன். எல்லா நாடுகளும் மக்களும் என்னை ஆவலாக வரவேற்பார்கள். உலக சகோதரத் வம் தருவேன்.
“உங்கள் தேசம், இந்த இந்தியாவில் நடக்காதா?’
‘”இங்கு ஜாதி வித்யாசம் முதலில் நீக்கிவிட்டு தான் மற்றதெல்லாம்..’
‘”அப்போது இந்தியாவின் எதிர்காலம்?’
‘”இந்தியா உலகநாடுகளில் சிறந்த ஆன்மீக நாடு. ஒரு சிறந்த நீதிமானை தலைவராக ஏற்கும். இங்கே தான் பல மத போதகர்கள் ஒளி காட்ட பிறந்தவர்கள்.’
”நீங்கள் சொல்வது மேலை நாடுகளுக்கு ஏற்கனவே தெரிந்தது. புதிதாக என்ன சொல்வீர்கள்?”
”என் வார்த்தைகள் பழைய நீதி நெறிமுறைகளை, நேர்மை , அன்பை, எதிரொலிக்கும். உலக வாழ்வில் ஒரு புதிய திருப்பம் உண்டாகும்”’
‘ஐரோப்பா எல்லாவற்றையும் யோசிக்கும் நாடு. எளிதில் எதையும் ஏற்காது. சிரிக்கும். தெய்வீக உரிமையோடு, அதிகாரத்தோடு நீங்கள் சொல்வதை எப்படி நிரூபிப்பீர்
கள்?’
‘உலகம் எப்படி மாறபோகிறது என்பதை நீங்கள் அறிய வில்லை. உணரவில்லை. நான் கடவுளால் அனுப்பப்
பட்ட தூதன் என்று வெளியுலகு அறியும். ஒப்புக் கொள் ளும்.. என் அதிசயங்கள் அவர்களை நம்ப வைக்கும்’
‘(மாலை விளக்கேற்றும் நேரம், அநேக சீடர்கள் விளக்கேற்றி பாபாவுக்கு ஹாரத்தி காட்டினார்கள், அநேகர் அவர் காலடியில் விழுந்து காலைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார்கள். மேள தாளங்கள் ஒலித்தன. பாபா பாபா என்ற அவர் பெயர் மட்டும் எனக்கு புரிந்தது ஸ்லோகங்களை பாடினார்கள்.).
இரவு பூரா பாபாவைப் பற்றி யோசித்தேன். எங்கோ காட்டு நரிகள் ஓலம் ஜன்னல் வழியாக கேட்டது. கொசுக் கூட்டம். மெஹர் பாபா ஒரு பாரசீக குடும்பத் தவர். பள்ளிப்படிப்பு முடிந்து காலேஜ் படிக்கும்போது ஒருநாள் சைக்கிளில் வந்த மெஹர் வழியில் ஒரு வேப்ப மரத்தடியில் பாபா ஜான் என்கிற வயதான பெண் முஸ் லீம் பக்கீர் துறவியை பார்க்கிறான். கைதட்டி கூப்பிட சைக்கிளை நிறுத்தி அருகே செல்கிறான். அவனை அணைத்து நெற்றியில் முத்தமிடுகிறாள். ஆளே மாறி விட்டான்…அப்புறம் படிப்பு ஏறவில்லை, அதிகம் பேச்சு இல்லை, அன்னம் ஆகாரம் குறைந்து விட்டது. ரெண்டு டாக்டர்களிடம் அப்பா கொண்டு போய் காட்டி ஊசி மருந்து எல்லாம் கொடுத்தும் பயனில்லை…. அப்புறம் அவர் மெஹர் பாபா.
உபாசனி மஹாராஜ் என்கிற துறவி ”மெஹர் பாபா உலகத்தை உய்விக்க கிடைத்திருக்கிறார்” என்று எல்லோருக்கும் அறிவிக்கிறார்.
பாபா பெர்ஷியா நாட்டுக்கு போகிறார். உடனே திரும்புகிறார். சில நாட்களில் பழைய ஷா நீக்கப்பட்டு புது ஷா ராஜாவாக நியமனம். மெஹர் பாபா சீடர்களுக்கு விளக்குகிறார்
”இப்போது தெரிகிறதா எதற்கு நான் பெர்ஷியா சென்று வந்தேன் என்று. ராஜாவை மாற்ற .இனி பெர்ஷியா வுக்கு நல்ல காலம். உலகம் பூரா இப்படி தான் மாறப் போகிறது என்னால்”.
நான் மெஹர் பாபாவிடமிருந்து விடைபெறும்போது கடைசியாக கேட்டது;
‘ ஐயா, நீங்கள் கடவுளின் தூதர் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?”
புருவங்களை உயர்த்தி சிரித்தார். ..
” எனக்கு தெரியும் எனக்கு நன்றாகவே தெரியும். நீ எப்படி மனிதன் என்று உனக்கு தெரியுமோ, அப்படி தான் எனக்கும் நான் கடவுளின் தூதன் என்று தெரியும். ஒரு தெய்வீக காரியம் என்னால் நடக்கப்போகிறது’
‘”ஐயா, பாபா ஜான் என்ற முஸ்லீம் பெண் துறவி உங்களை நெற்றியில் முத்தமிட்டது ஞாபகமிருக்கிறதா? அப்புறம் என்ன நடந்தது?””
“ஆஹா. அதுவரை நான் எல்லோரையும் போல இருந்தேன். பாபா ஜான் அம்மா என்னை விடுவித் தாள். நான்உலகத்திலிருந்து தனியாகிவிட்டேன். பாவம் என் அப்பா ஒன்றும் அறியாதவர் என்னை டாக்டர்க ளிடம் அழைத்து போய் மருந்துகள் எல்லாம் வாங்கி தந்தார். எனக்கும் ஒன்றுமே ஆகவில்லை. நான் மனித குலத்திலிருந்து உயர்ந்து கடவுளை சேர்ந்தது அவருக்கு எப்படி தெரியும்”
“புரிகிறது. நீங்கள் கடவுள் அவதாரம், தூதர் என்று எப்போது உலகத்துக்கு தெரியவரும்?’
”’போகப்போக தெரியும், சரியான நாளை குறிப்பிட்டு சொல்ல மாட்டேன். 33 வருஷங்கள் உலகத்தில் அப்புறம் இருப் பேன்.என்னை சேர்ந்தவர்களே என் அகால மரணத்துக்கு காரணமாக இருப்பார்கள்..என்னோடு பல பிறவிகள் கூடவே இருந்தவர்கள் அவர்கள்.’
”’உங்களை மாதிரி கடவுளின் தூதர்கள் வேறு யாரும் இல்லையா?” பாபா. சிரிக்கிறார்.
”ஜே .கிருஷ்ணமூர்த்தி, பெசன்ட் அம்மையார் என்கி றார் கள் ..அவர்களை யாரோ திபெத்திலிருந்து இயக்கு வதாக சொல்லப்படுகிறதே..அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். நான் தான் சிவாஜி மகாராஜாவுக்கு பிறகு மக்களை ஒற்றுமைப்படுத்த வந்தவன்…உலகெங்கும் சென்று எல்லோரையும் ஒன்றி ணைப்பேன். நீங்கள் மேலை நாடுகளில் என் பிரதிநிதியாகப் போய் எல்லோருக்கும் என் வருகை யை அறிவிக்கப் போகிறீர்கள். மனிதகுலம் நன்மை பெறட்டும்”
”ஐயா, என்னை பைத்தியக்காரனாக பார்ப்பார்கள் நான் ஏதாவது அதிசயங்கள் உண்டாக்கிக் காட்டினால் தான் நம்புவார்கள். என்னால் ஒன்றுமே செய்ய முடியா தே. ஆகவே உங்கள் வரவை என்னால் பயனுள்ளதாக அறிவிக்க முடியாதே” என்றேன்..
மெஹர் பாபாவைச் சந்தித்த பிறகு பம்பாயில் ஒரு ஜட்ஜ் கண்டலவாலா என்பவரை சந்தித்தேன். அவர் மெஹர் பாபா, உபாஸனி இருவரையம் அறிந்த பக்தர். உபாசனியைப் பற்றி அவர் அவ்வளவாக சிறப்பாக சொல்லவில்லை. மெஹர் பாபா தெய்வீக சக்தி வாய்ந்த வர் என்று அடிக்கடி சொன்னார்.
பூனா சென்று பாபா ஜான் என்ற கிட்டத்தட்ட நூறு வயதான முஸ்லீம் சன்யாசினியைச் சந்தித்தேன். கண்கள் ஒளி இழந்திருந்தன . விரைவில் மரணம் நெருங்கும் என்று தோன்றியது. என் கைகளை கெட்டி யாக பிடித்துக்கொண்டு என்னை உற்றுப் பார்த்தாள். நெற்றியில் கையால் ரெண்டு மூன்று முறை தடவினாள் . அருகில் யாரிடமோ மெதுவாக பேசினாள். அவள் பேசியதை ஒருவர் ஆங்கிலத்தில் எனக்கு மொழி பெயர்த்தார்.
” இவர் இந்தியாவுக்கு விசேஷமாக அழைக்கப்பட் டுள்ளார். எதற்கு என்று அவரே சீக்கிரம் அறிந்து கொள்வார்”
பாபா ஜானின் கண்கள் அலைபாய்ந்தனவே தவிர என்னை பார்க்கவில்லை… சிலநாட்களில் மறைந்தாள் என்று அறிந்தேன். என்னை யாரும் இந்தியாவுக்கு வா என்று அழைக்க வில்லையே. நானே தானே பணம் சேர்த்து இந்தியாவில் யோகிகளை எல்லாம் சந்திக்க வந்தேன்.
பால் ப்ரண்டன் சென்னை வந்து அங்கிருந்து காஞ்சி புரம் போய் மஹா பெரியவாளை சந்தித்து, அவர் சொற்படி திருவண்ணாமலை சென்று மகரிஷி ராமணரைச் சந்தித்த பிறகு தான் ஒரு உண்மையான ஞானி, யோகி, மகரிஷியை சந்தித்தது புரிந்தது. மேலை நாடுகளில் ரமணா மகரிஷி பெயர் பரவ பால் ப்ரண்டன் ஒரு முக்கிய காரணம். பாபா ஜான் சொன்னது சரிதான் என்று நமக்கு புரிகிறது. பால் ப்ரண்டன் தானாக வரவில்லை ஒரு தெய்வீக சக்தி அவரை இங்கே வரவழைத்து மகரிஷி ரமணரை மேற்கு நாடுகள் அறிய வைத்திருக்கிறதல்லவா?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;