VIKRAMADHITHYAN VEDHALAM STORIES J K SIVAN

முன்கதை சுருக்கம்

சந்திர குப்த விக்ரமாதித்யன்  2066 வருஷங்களுக்கு முன்  உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு ஆண்ட குப்த மன்னன் அவன் வீர தீரன். புத்திசாலி.  நீதிமான். இதெல்லாம்  ஒருசேர அமைவது அபூர்வம். இந்திரனே அவன் புகழ் கேள்விப்பட்டு தேவ சபையில் ரம்பை ஊர்வசி நடனமாட யார் சிறந்த நாட்டிய மணி என்று கண்டுபிடித்து சொன்னதை உங்களுக்கு முன்பே கதையாக சொல்லி இருக்கிறேன். இந்திரன் மகிழ்ந்து ஒரு  ஸிம்ஹாஸனம் ஒன்றை விக்ரமாதித்யனுக்கு
பரிசளித்து அது காலப்போக்கில் பூமியில் புதைந்து போஜனிடம் கிடைக்கிறது. போஜன் அதை பூஜித்து அதில் அமர முற்படும்போது 32 படிகள் கொண்ட அந்த சிம்ஹாசனத்தில் ஒவ்வொரு படியிலும் 32 உள்ள பொம்மைகளும் அந்த சிம்ஹாஸனத்தில் உட்கார ” போஜா,உனக்கு  என்ன தகுதி?”  என கேள்வி கேட்டு 32 ஸ்வாரஸ்ய கதைகள் நமக்கு கிடைத்துள்ளது.

விக்ரமாதித்யன் கதைகள் 2000 வருஷம் வயசானவை. சமஸ்க்ரிதத்தில்  பவபூதி  எழுதியது என்று  சொல்வதுண்டு உலகத்தின்‌ கிரீடம்‌ போல்‌ அமைந்தது உஜ்ஐயினிப்‌ பட்டணம்‌, விக்ரமாதித்தன் ராஜ்ஜியம். நீலவானத்தை  முத்த மிடும்‌ பட்டுக்‌  கொடிகளும்‌, நிலா உப்பரிகைகளும்‌ மாட மாளிகைகளும்‌, மணிக்கோபுரங்களும,தந்த ஸ்தூபிகளும்‌, நந்தவனங்களும்‌,  விசாலமான நவமோகன வீதிகளும்‌,  சிருங்கார மண்டபங்களும்‌, சிந்தையைக்‌கவரும்‌ விசித்ர வினோதங்களும்‌ நிறைந்து எந்நேரமும்‌ ஜேஜே என்று விளங்கும்‌ உஜ்ஜயினி ஒரு மாயா புரி.. பின்னல் போஜன் அதற்கு ராஜா. அப்போது உஜ்ஜயினிக்கு தர்மபுரி என்றும் பேர். போஜராஜன்‌ குடிஜனங்களின்‌ நலத்திலே கண்ணுங்‌ கருத்தும்‌  கொண்டு ஆட்சி புரிந்தவன்.  விக்ரமாதித்தன் மந்திரி பட்டி. போஜனின் மந்திரி நீதிவாக்கியன். காட்டு மிருகங்கள் தொந்தரவு அதிகம் என்பதால் அப்பப்போ ராஜ வேட்டையாட செல்வான்.
ஒரு தடவை வேட்டையாட போன சமயம்  வெகுநேரம் வெயிலில் வாட  நீர் குடிக்க  அங்கே இருந்த  கம்பங் கொல்லைக்கு செல்கிறான் போஜன் மந்திரி படைகளோடு.  அது சரவணப்பட்டன்‌ எனும்‌ ஓர்‌  பிராமணன் கொல்லை. அவன் வயலில் பரண் கட்டி அதன் மீது உட்கார்திருக்கும்போது தாராள மனத்தோடும் கீழே இறங்கினால் எதிர்மாறாகவும் பேச, அங்கே ஏதோ ரஹஸ்யம் இருப்பதை உணர்ந்து போஜனின் மந்திரி சரவணனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து அந்த கொல்லையை வாங்கி தோண்டும்போது  அங்கே விக்ரமாதித்தனின்  கனகமணி ஸிம்ஹாசனம் புதைந்திருப்பது தெரிகிறது. அதை  எடுத்துவந்து பூஜித்து அமரலாம் என்று நெருங்கும்போது  32 படிகள் கொண்ட அந்த  ஸிம்ஹாஸனத்தின்  ஒவ்வொரு படியிலுமிருக்கும் ஒரு பொம்மை அவனை தடுத்து  நிறுத்தி ஒரு கதை சொல்கிறது.   கதைகளின் நடுவே அற்புத வாக்கியங்கள் சில கிடைக்கிறது;
”ராஜா மற்றவர்கள் கெடுதல் செய்யும்போது உங்களிடம் முறையிடலாம். மன்னரே கெடுதல் செய்யும்போது யாரிடம் சொல்வது/”
மதம்‌ பிடித்த யானையையும்‌ முறை தவறி நடக்கும்‌ ஆட்சியாளனையும்‌ தவறு செய்யும்‌ அறிவாளியையும்‌ யாரால்‌
நிறுத்த முடியும்‌?
எல்லா நீதி சாஸ்திரங்களும் கற்றவர். அந்தணன்‌ சொத்துதான்‌ உண்மையான விஷம்‌ என்று தெரியாதா? விஷம் அதை உண்டவனை மட்டுமே  கொள்ளும், ஆனால்  அறி ஞன்‌ சொத்தோ அபகரித்தவனின்‌ சந்ததியையும்‌, அவர்களின்‌ சந்ததி களையும்‌ கூட அழித்துவிடும்‌”.தண்ணீரில்‌ எண்ணெயும்‌ ஒற்றனிடம்‌ இரகசியமும்‌ தகுதிபடைத்த மனிதனுக்கு சிறு பரிசும்‌ புத்தி கூர்மையுள்ளமனிதனிடம்‌ அறிவும்‌ தானாகவே பரவும்‌’இந்திரன் எப்படி மழையினால் பூமியை வளம்பெற செயகிறானோ அப்படி  ராஜா செல்வம் சேர்த்து மக்களை சந்தோஷமாக வாழ செய்யவேண்டும்.’சூரியனின் ஒளி எப்படி எல்லா வஸ்துக்களும் சரியான ஒரே அளவில் உஷ்ணத்தையும் ஊட்டத்தையும் தருகிறதோ அப்படி ராஜா எல்லா குடிமக்களையும் சமமாக நடத்தி நேர்மையாக ஆட்சி புரியவேண்டும்”வாயு எப்படி எல்லா இடத்திலும் பரவி இருக்கிறதோ அப்படி ராஜா ராஜ்யத்தின் எல்லா மூலை  முடுக்கிலும் இருக்கும் மக்களின் நலனை நன்றாக அறிந்தவனாக இருக்க வேண்டும் ‘யமன் எப்படி ஒவ்வொருவர் செய்த கர்மத்துக்கு ஏற்ப தண்டனை கொடுக்கிறானோ, அது போல் ராஜா பாரபக்ஷம் இன்றி நீதி வழங்கவேண்டும்’சந்திரன் எப்படி குளிர்ந்த பால் நிலவை எங்கும் பொழிகிறானோ, அது போல் ராஜா கருணையோடு அன்போடு மக்களை ரக்ஷிக்க வேண்டும்’பூமியைப் போல் ராஜா பொறுமையோடு ஒவ்வொருவரின் குறையையும் அணுகி நேர்மையாக நீதி அளிக்கவேண்டும்’
 ”ஓலைக்‌ குடிசை நெருப்‌பில்‌ பற்றி எரிவது போல்,  காதல்‌ தீயிலே உள்‌ளம்‌ தவிக்‌கும்‌ போது ஒருவன்‌ எவ்வளவுதான்‌ அறிவாளியாக   இருந்தாலும் எது சரி எது இல்லை, என்று எப்படி உணர்வான்?”
“பால்‌ போன்ற வெண்மை நுரைகளுடன்‌ கூடிய கடற்‌கரையில்‌ வந்து மோதும்‌ அலைகளைப்போன்று, சலன புத்தியுள்ள
பெண்களுடைய கண்களின்‌ அசைவுகளினால்‌  ராஜாவின் உள்ளம்‌  தாக்கப்படும், கலைகளில்‌ சிறந்து விளங்குபவனையும்‌ மோகம்‌ வருத்தும்.  கட்டுப்பாடோடு இருக்கவேண்டும்’
‘ ராஜா. மனதைக்‌ கட்டுப்படுத்தி  நீதி சாஸ்திரங்க சொல்லப்பட்ட  வழிகளின்படி  நடந்து  பூலகத்தின்‌  உயர்ந்த பிரகாசம்‌ அவனுடைய உள்ளத்திலே பிரகாசிக்க வேண்டும்.
“அரசன் அனைத்தும்‌ அறிந்தவனாக எது செய்யலாம்‌, எது செய்யக்‌ கூடாதென்பதைத்‌ தெரிந்தவனாக இருக்கவேண்டும்.
பகவானின்‌ கடைக்கண்‌ பார்வை விழுந்ததால்‌ எவன்‌தரித்திரமும்‌ துன்பமும் இருந்த இடம்‌ தெரியாது ஒழிந்து போகும்.”“அறநெறி நூல்கள்‌ நேர்மை, துறவு, தர்மம்‌, அறிவு ஆகியவற்றை விறகுகளாக்கிக்‌ கொண்டு எரியும்‌ மோக வெறித்‌ தீயில்  முட்டாள்‌ ஒருவனே நுழைவான்.  அவனுடைய செல்வமும்‌ செல்வாக்கும்‌ கரைந்துவிடும்.   குடும்பத்துக்கு கெட்ட பெயர்‌ உண்டாகும் . மரணமும்‌  சம்பவிக்கும்.  மோகத்தில்‌ சிக்கியுள்ள தருவன்‌ இவைகளைக்‌  கொஞ்சமும்‌ நினைப்பதில்லை”
இதெல்லாம் அப்போதைய எதிர்பார்ப்பு உண்மையில் நடந்தது. இதை இப்போது நம்மை ஆள்பவர்களிடம் நீயும் அப்படி இரு என்று கேட்கவோ எதிர்பார்க்கவோ முடியுமா?
++விக்ரமாதித்தன் அரச சபையில் நவரத்னங்கள் எனப்படும்  தன்வந்திரி, க்ஷபணகர், அமரசிம்மன், காளிதாசன் , பட்டி, தண்டி, வரருசி, வராஹமிஹிரர்,  பவபூதி   போன்றோர் இருந்தார்கள்.
ராஜா பர்த்ருஹரி மனைவியால் ஏமாற்றப்பட்டு விரக்தி யடைந்து நாட்டையும் வீட்டையும் விட்டு வெளியேறும்போது சகோதரன் விக்கிரமாதித்தனை ராஜாவாக்கி விட்டு செல்கிறான். குப்தர்களின் காலம் பாரத சரித்திரத்தில் பொற்காலம்.
இது வரை  பொம்மைகள் சொன்ன சில கதைகள், மந்திரி பஹுஸ்ருதன் சொன்னது, திரைச்சீலை  சொன்னது,   பேசாமடந்தை சொன்னது வரை விறுவிறுப்பாக  போய்க்கொண்டிருக்கிறது..

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;