
நடராஜ ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN
திருவாதிரை என்றால் நடராஜா, சிதம்பரம், பதஞ்சலி என்ற பெயர்கள் உடனே மனதில் தோன்றும். பதஞ்சலி மஹரிஷி எழுதிய நடராஜ ஸ்தோத்ரத்தை திருவாதிரை அன்றே எழுத மனதில் எண்ணம். ஆனால் முன்பு போல் நிறைய எழுத இயலவில்லையோ? என்னவோ? இது ஏனோ தள்ளிப்போய்கொண்டே போய் இன்று கட்டாயம் ஆரம்பித்து விடுவது என்று முடிவெடுத்தேன். ரிஷி யோகசூத்ரம் எழுதிய தத்வ ஞானி. ஆதிசேஷனின் அம்சம். ரிஷி எழுதியதை இனி ரசிப்போம்.
நடராஜ ஸ்தோத்ரம் பதஞ்சலி ரிஷி இயற்றி சிதம்பரத்தில் நடராஜாவை தரிசிக்க நந்தி மறுத்த போது சிவனை போற்றி பாடியது. இந்த ஸ்தோத்ரம் நடராஜாவுக்கு பிடித்து முனிவருக்கு ஆனந்த நடனம் ஆடி தரிசனம் கொடுக்கிறார். பல ஸ்ருதியோடு பத்து ஸ்லோகங்களை கொண்டது: சுருக்கமாக அர்த்தம் சொல்கிறேன். ஒரேயடியாக எல்லா ஸ்லோகங்களையும் எழுதினால் நீளாமாகிவிடும். மொத்தம் 10 ஸ்லோகங்கள். இன்று 3.
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम् पतञ्जलि दृगञ्जन मनञ्जन मचञ्चलपदं जनन भञ्जन करम् ।
कदम्बरुचिमम्बरवसं परमम्बुद कदम्ब कविडम्बक कगलम् चिदम्बुधि मणिं बुध हृदम्बुज रविं पर चिदम्बर नटं हृदि भज ॥ १॥
sadañcita-mudañcita nikuñcita padaṁ jhalajhalaṁ-calita mañju kaṭakaṁ | patañjali dr̥gañjana-manañjana-macañcalapadaṁ janana bhañjana karam |
kadambarucimambaravasaṁ paramamambuda kadamba kaviḍambaka galam cidambudhi maṇiṁ budha hr̥dambuja raviṁ para cidambara naṭaṁ hr̥di bhaja || 1 ||
ஸத³ஞ்சித-முத³ஞ்சித நிகுஞ்சித பத³ம் ஜ²லஜ²லம்-சலித மஞ்ஜு கடகம் । பதஞ்ஜலி த்³ருக³ஞ்ஜன-மனஞ்ஜன-மசஞ்சலபத³ம் ஜனந ப⁴ஞ்ஜன கரம் ।
கத³ம்ப³ருசிமம்ப³ரவஸம் பரமமம்பு³த³ கத³ம்ப³ கவிட³ம்ப³க க³லம் சித³ம்பு³தி⁴ மணிம் பு³த⁴ ஹ்ருத³ம்பு³ஜ ரவிம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 1 ॥
இடது பாதத்தை மேலே தூக்கி நின்று பிரபஞ்சத்தையே ஆட்டிவைத்து அசைந்தாட வைப்பவன், அனந்த நடமிடுபவன், காலனைச் சம்ஹாரம் செய்த காலகாலன், பக்தர்களைக் காக்க சூலம் தாங்கியவன், திருபுராந்தகனை சம்ஹாரம் செய்தவன், மனக்கவலைகளைப் போக்குபவன், கருணா மூர்த்தி, கபாலம் ஏந்திய சிதம்பரேசனைப் போற்றி நமஸ்கரிக்கிறேன். இடது பதம் தூக்கி ஆடும்போது திருவடிகளில் அணிந்த தண்டை கொலுசுகள் கிணுகிணு வென ஒலிக்கும் சப்தம் வேதத்தின் நாதம். பிறப்பு இறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் ஆட்டத்திற்கு ஒரு தனி நாதம், ஓசை உண்டு. மஹ ரிஷி பதஞ்சலி பாக்யவான். ஆடலரசனின் தாண்டவத்தை நேரில் கண்டவர். தண்டை ஒலியை காதால் கேட்டவர். நீல வானமே ஆடையாக, கதம்ப வன பொலிவு. கார்மேகங்கள் சூழ்ந்தது போல் ஹாலஹால விஷம் நிறைந்த கழுத்து, நீலகண்டனே, ஞானக்கடலே, பக்தர்கள் மனத்தில் வாசம் செய்யும் மஹேஸ்வரா உன்னை நமஸ்கரிக்கிறேன்.
हरं त्रिपुर भञ्जनं अनन्तकृतकङ्कणं अखण्डदय मन्तरहितं विरिञ्चिसुरसंहतिपुरन्धर विचिन्तितपदं तरुणचन्द्रमकुटम् ।
परं पद विखण्डितयमं भसित मण्डिततनुं मदनवञ्चन परंचिरन्तनममुं प्रणवसञ्चितनिधिं पर चिदम्बर नटं हृदि भज ॥ २॥
haraṁ tripura bhañjana-manantakr̥takaṅkaṇa-makhaṇḍadaya-mantarahitaṁ viriñcisurasaṁhatipurandhara vicintitapadaṁ taruṇacandramakuṭam |
paraṁ pada vikhaṇḍitayamaṁ bhasita maṇḍitatanuṁ madanavañcana paraṁ cirantanamamuṁ praṇavasañcitanidhiṁ para cidambara naṭaṁ hr̥di bhaja || 2 ||
ஹரம் த்ரிபுர ப⁴ஞ்ஜன-மனந்தக்ருதகங்கண-மக²ண்ட³த³ய-மந்தரஹிதம் விரிஞ்சிஸுரஸம்ஹதிபுரந்த⁴ர விசிந்திதபத³ம் தருணசந்த்³ரமகுடம் ।
பரம் பத³ விக²ண்டி³தயமம் ப⁴ஸித மண்டி³ததனும் மத³னவஞ்சன பரம் சிரந்தனமமும் ப்ரணவஸஞ்சிதனிதி⁴ம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 2 ॥
நடராஜனின் இன்னொரு பெயர் ஹரன். சிதம்பரேசன். நெற்றியில் ஒளிவீசும் சூர்ய , சோம , அக்னியை கண்களைக் கொண்டவன். வியாக்ரபாதர், பதஞ்சலி போன்ற மஹரிஷிகளால் வில்வம் போன்ற பூஜா திரவியங்களால் அர்ச்சிக் கப்படுபவன். திரிபுராந்தகனை, திரிபுரத்தை, ஸம்ஹாரம் செய்தவன். அனந்தன் எனும் சர்ப்பத்தை கங்கணமாக தரித்தவன்.எல்லையற்ற கருணை கொண்டவன். இந்திராதி தேவர்கள், பிரம்மாவால் தொழப்படுபவன். சந்திர சூடி. புலித் தோலை ஆடையாக உடுத்தவன். காலனைக் காலால் உதைத்தவன். மன்மதனை நெற்றிக்கண்ணால் வினாடியில் எரித்து சாம்பலாக்கியவன். ஓம் எனும் மந்திரத்தில் அகப்படும் பரமேஸ்வரா உன்னை தியானிக்கிறேன்.
अवन्तमखिलं जगदभङ्ग गुणतुङ्गममतं धृतविधुं सुरसरित्-तरङ्ग निकुरम्ब धृति लम्पट जटं शमनदम्भसुहरं भवहरम् ।
शिवं दशदिगन्तर विजृम्भितकरं करलसन्मृगशिशुं पशुपतिं हरं शशिधनञ्जयपतङ्गनयनं परचिदम्बर नटं हृदि भज ॥ ३॥
avantamakhilaṁ jagadabhaṅga guṇatuṅgamamataṁ dhr̥tavidhuṁ surasarit- taraṅga nikurumba dhr̥ti lampaṭa jaṭaṁ śamanadambhasuharaṁ bhavaharam |
śivaṁ daśadigantara vijr̥mbhitakaraṁ karalasanmr̥gaśiśuṁ paśupatiṁ
haraṁ śaśidhanañjayapataṅganayanaṁ para cidambara naṭaṁ hr̥di bhaja || 3 ||
அவந்தமகி²லம் ஜக³த³ப⁴ங்க³ கு³ணதுங்க³மமதம் த்⁴ருதவிது⁴ம் ஸுரஸரித்-தரங்க³ நிகுரும்ப³ த்⁴ருதி லம்பட ஜடம் ஶமனத³ம்ப⁴ஸுஹரம் ப⁴வஹரம் ।
ஶிவம் த³ஶதி³க³ந்தர விஜ்ரும்பி⁴தகரம் கரலஸன்ம்ருக³ஶிஶும் பஶுபதிம்ஹரம் ஶஶித⁴னஞ்ஜயபதங்க³னயனம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 3 ॥
சதா ஆனந்தத்தில் திளைத்தவன், தாண்டவமாடும் சிற்சபேசன் நடராஜன். நம்மால் புரிந்து கொள்ள முடியாத உயர்ந்த ப்ரம்மம் .விரித்த செஞ்சடையாட, விரி கமல நயனமாட சந்திரனைச் சூடியவன். கங்கையை முடியில் அணிந்தவன். மான் மழு வேந்திய மஹேசன். அக்னி ஸ்வரூபனே உன்னை நமஸ்கரிக்கிறேன்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




அருமையான விளக்கம்.மற்ற வரிகளின் விளக்கம் தேவைக்காக…