இதல்லவோ குருபக்தி – நங்கநல்லூர் J K SIVAN
மஹா பாரதத்தில் வரும் ஒரு மறக்க முடியாத பாத்திரம் ஏகலைவன். வடக்கே ஏகலவ்யன். அருமையான வில்வித்தை நிபுணன். குரு இல்லாமல் குருபக்தி ஒன்றினாலேயே தனுர் வித்தை கற்றவன். ஜராசந்தனின் தளபதி. நிஷாதர்கள் தலைவன் ஹிரண்யதனுஸ் என்பவனின் வளர்ப்பு மகன். ருக்மணியை கடத்தி கிருஷ்ணன் காப்பாற்றியபோது,ல் ருக்மி யோடு சேர்ந்து இக்கலவைனும் கிருஷ்ணனை தாக்கிக் கொல்ல முயற்சித்தபோது ஏகலைவன் கிருஷ்ணனால் கொல்லப்பட்டான்.
அவனுக்கும் த்ரோணருக்கும் உண்டான சம்பந்தம் ஒரு அற்புத நிகழ்ச்சி.
”துரோணாச்சார்யாரே , எனக்கு நீங்கள் வில் வித்தை கற்றுத் தரவேண்டும்” என்று அவரை அணுகி வணங்கி வேண்டினான் ஏகலவ்யன்.
”அப்பனே, பீஷ்மரால் நான் கௌரவ ராஜகுமாரர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்றுத்தர நியமிக்கப்பட்டவன் . வேறு யாருக்கும் நான் குருவாக கற்றுத்தர வழியில்லை” என்கிறார் துரோணர்.
காட்டில் மறைவிடத்திலிருந்தே ஏகலைவன் துரோணர் கௌரவ பாண்டவ ராஜகுமாரர்களுக்கு வில்வித்தை கற்பிப்பதை கண்டு மகிழ்கிறான். அவர்கள் சென்றதும் அங்கே சென்று துரோணர் நின்ற இடத்தில் மண் எடுத்து அதையே துரோணர் உருவாக அமைத்து அந்த பதுமையையே தன் குருவாக ஏற்று அதன் முன்னிலையில் தனது வில்வித்தையைத் தானே பழகிக் கொள்கிறான்.இப்படியே ஒவ்வொருநாளும் அவன் தனுர் விததையில் தெரிந்தான்.
ஒருநாள் துரோணர் தனது மாணவர்களுடன் ஏகலைவன் இருந்த காட்டுக்கு வருகிறார். அவருடன் அரண்மனை வேட்டை நாயும் வருகிறது. எதையோ பார்த்து விட்டு விடாமல் குரைத்த நாய் திடீரென்று மௌனமாகிறது. கௌரவர்கள் பாண்டவர்கள் ஏன் நாய் குலைக்கவில்லை என்று கவனிக்கும்போது அர்ஜுனன் கண்களில் ஒரு விஷயம் ஆச்சர்யமாக தென்பட்டது. நாயின் உடலில் எந்த காயமும் இல்லை. ஆனால் வாய் ஒரே அளவு சிறிய அம்புகளால் துணியில் ஊசி தைப்பது போல் இறுக்கமாகி பிணைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிசயிக்கிறான். எல்லோருமே திகைக்கிறார்கள். யார் இப்படி வில்லில் அம்பு தொடுத்து வியக்க வைத்தவன். யார் இப்படி அற்புதமாக அம்பு செலுத்தியது என்று துரோணர் வியந்து காட்டில் தேடும்போது தனது பொம்மையை காண்கிறார். அதன் எதிரே ஏகலைவன் வில்லோடு நிற்கிறான். த்ரோணரைக் கண்ட ஏகலைவன் விழுந்து வணங்குகிறான்.
” நீயா இந்த நாயின் வாயை பூட்டியவன். யார் நீ, எங்கே கற்றாய் இந்த வித்தையை?
”குருநாதா, நான் ஏகலைவன், நிஷாத வேடுவர்கள் தலைவன். உங்களையே குருவாக ஏற்று வில் வித்தைகளை மானசீகமாக உங்களிடமிருந்து கற்றவன்?
” நானா உனக்கு கற்பித்தேன்?”
”ஆமாம் குருவே, இதோ பாருங்கள்…”
ஏகலைவன் துரோணர் சிலையை காட்டி மீண்டும் வணங்கினான்.
துரோணர் சிந்தித்தார். ஏகலைவனின் வித்தை தவறான வழியில் தவறானவர்களோடு சேர்ந்து உபயோகப்பட வாய்ப்பு அதிகம். இந்த சிறந்த வில்வித்தை அதர்மத்துக்கு பயன்படக்கூடாது என்ற கவலை அவரை அரித்தது. இதற்கு என்ன வழி? துரோணருக்கு ஒரு எண்ணம் மனதில் தோன்றிவிட்டது.
”ஏகலைவா நீ கற்ற கல்வி என்னை குருவாக ஏற்று தானே?”
”ஆமாம் குருதேவா”
”அப்படி என்றால் குருவுக்கு நீ தக்ஷிணை கொடுக்கவேண்டாமா , அது தானே தர்மம் நியாயம்?”
”ஆமாம் குருதேவா. என்ன குருதக்ஷிணை கொடுக்கட்டும் நான். கேளுங்கள் ”
”ஏகலைவா, உன் வலது கட்டைவிரலை எனக்கு தக்ஷிணை யாக கொடு. போதும். ”
துரோணர் வில்வித்தையில் ஆசார்யன். அவருக்கு தெரியாதா கட்டை விரல் இல்லாமல் வில்லிலிருந்து அம்பு செலுத்த முடியாது என்று’
ஏகலைவன் துளியும் யோசிக்கவில்லை. அடுத்த கணமே வாளால் தனது வலது கட்டை விரலை முழுதும் வெட்டி துரோணர் முன் சமர்ப்பித்தான். ”ஆச்சார்யரே, சந்தோஷமாக அளிக்கிறேன். இதோ என் குருதக்ஷிணை காணிக்கை”
”உன்னைக் கண்டால் பெருமையாக இருக்கிறதப்பா”
துரோணர் கண்களில் ஜலம் . அவன் குரு பக்தியை உள்ளூர மெச்சினார். ஆனால் அவரால் வேறெந்த விதத்திலும் உள்ளுணர்ச்சியை வெளிப்படுத்த வழியில்லை.
ஹரியானாவில் கண்ட்ஸா, குரு க்ராம் (sector 37ல்) கிராமத்தில் அவன் வலது கட்டைவிரலை காணிக்கையாக அளித்த இடத்தில் இன்றும் ஏகலைவன் கோவில் இருக்கிறது. பாரத அரசாங்கம் விளையாட்டுத்துறையில் சிறந்த வெற்றி வீரர்களுக்கு ஏகலவ்ய விருது அளிக்கிறது. அவன் பெயரில் ஒரு கல்விச்சாலையும் உள்ளது. ஏகலவ்யன் பேரில் ஒரு stadium விளையாட்டு மைதானமும் உள்ளது.
3. இதல்லவோ குருபக்தி – நங்கநல்லூர் J K SIVAN

DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.