PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்    –   நங்கநல்லூர்  J.K. SIVAN
ஒருமித்த  மனசு

மூன்று நாட்கள் எல்லோருமே  தண்ணீருக்குள் முழுகப்போகிறோம் என்று பயந்து கொண்டிருந்தோம். நேற்று  மொட்டை மாடியில்  வடகம் காயப்போடும் அளவு  வெயில் சுள்ளென்று இருந்ததே.  குழந்தை பள்ளிக்கூடம் காலை ஆறரை மணிக்கே போய்விட்டதே.  அரசியலோ, பெங்களூர்  கிரிக்கெட் மேட்சோ , கோவில்கள் விஷயமோ,  தங்கம் வெள்ளி விலையோ, ஷேர்  மார்க்கெட்டோ, இப்போது  நடக்கும் எதற்குமே காரணம் தெரியவில்லை”
மனசு மஹா பெரியவாளை நினைக்கிறது. எவ்வளவு பார்த்திருக்கிறார் அவர். எத்தனை பேர் துன்பங்களை தீர்த்திருக்கிறார். கொஞ்சம் கூட பதட்டம் இல்லாமல், சலனமே  இல்லாமல், அமைதியாக, புன்சிரிப்பு டன்,கண்ணாடியை தூக்கி விட்டுக்கொண்டு கையை நெற்றிக்குமேல்  சல்யூட் அடிப்பது போல் குவித்துக் கொண்டு  அந்த வயதிலும்  எதிரே   யார் என்ன என்று பார்க்க முடிந்தவரை பார்த்து ஞாபகம் வைத்துக் கொண்டு மெதுவாக, மிருதுவாக பேசுவாரே . அவரைப் பற்றி வெள்ளமாக  பக்தர்கள் சொல்கிறார்கள் ,எழுதுகிறார்களே. ஒவ்வொருவருக்கும்   ஏதோ ஒரு அதிசய அநுபவம்  மஹா பெரியவாளிடம்   இருப்பதே அதற்கு   காரணம்.
”ஆஹா, அற்புதமான கற்பனை வளம் கொண்ட ஞானி அந்த  பேசும் தெய்வம் மஹா பெரியவா: இதோ நீலகண்ட தீக்ஷிதரின் ஆனந்த சாகரஸ்தவம் ஸ்லோகம் பற்றி அலசுவது: அவர் வார்த்தைகளில் சில:
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று ஒளவைப்பாட்டி சொல்கிறார் என்றால், அந்தத் தெய்வமே அன்னையும் பிதாவுமாகி – ஒரு பாதி அன்னை, ஒருபாதி பிதா என்று அர்த்தநாரீசுவரராக உட்கார்ந்திருக் கிறது. இது நமக்குப் பரம லாபம் என்று கிட்டே போகிறோம். போனால் அப்புறம் இதனாலேயே சில குள றுபடிகள், சண்டைகள் கூட, உண்டாகிவிடுகிறது. காலில் போய் விழலாம் என்றால், ஒரு கால் ஈஸ்வரனு டையது, மற்றது அம்பாளுடையது என்று இருக்கிறதே . இப்படிக்கு ஒன்றுக்கு மேல் ஒரு  ஆசாமி இருந்தால், உடனே நம்மையறியாமல் இது உசத்தியா அல்லது அது உசத்தியா, என்று  கம்பேர் COMPARE பண்ணிப்  பார்க்கிற எண்ணம்  வந்துவிடுகிறது.   இது உண்டானால் அப்புறம்  அனர்த்தம் தான். எந்தக் காலில் விழுவது? அம்மா காலிலா, அப்பா காலிலா?  அர்ச்சனை  பண்ணுவோம்  என்றால்  அப்பாவுக்கு ஒரு தினுசு புஷ்பத்தால் அர்ச்சனை பண்ண வேண்டும்; அவளுக்கு இன்னொன்றால் பண்ணவேண்டும் என்கிறார்களே,
 ‘இந்தப் பக்கத்துப்பூ அந்தப் பக்கத்தில் விழுந்தால் அபசாரமாகி  விடுமோ?’ என்று  ஒரு கலக்கம் உருவாகுமே . ‘கடாக்ஷம் வேண்டும்’ என்று கேட்கிற போதே வலது கண்ணா,இடது கண்ணா?  எதைக் கேட்பது? இப்படியும் ஒரு குழப்பம். இது விஷயமாக  ஒரு  சண்டையே மூட்டி விடுகிறார்  நீலகண்ட தீக்ஷிதர். அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் பிறந்தவர்.  மதுரையில் மந்திரியாகப் பரிபாலனம் செய்தவர்.
 “ஆனந்த ஸாகர ஸ்தவம்” என்று  மீனாக்ஷியைத் துதிக்க ஆரம்பித்தவர், பார்வதீ பரமேசுவரர்களான தம்பதியருக்குள் கலகம் மூட்டி சந்தோஷப்படுகிறார்.
 “அம்மா! இதென்ன உன் பதி அக்கிரமக்காரராக இருக்கிறாரே? உன் புகழையெல்லாம் அவர் அல்லவா அபேஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்? காம தகனர், மன்மதனை எரித்தவர் என்று பெயர் வாங்கியிருக் கிறாரே, எரித்தது நெற்றியின் நடுவில் இருக்கிற மூன்றாவது  கண் அல்லவா? அது வலது கண்   இடது கண் ரெண்டுக்குமே  பொது.  ஆகவே உனக்கும் அந்த நெற்றிக் கண்ணில் பாதி உரிமை உண்டு. அதன் வெற்றியிலும் பாதி உன்னுடையதாக இருக்க, அவர் மட்டுமே முழுசாக  பேரை அடித்துக்  கொண்டு போய் விட்டாரே! போனால் போகிறது. இதிலாவது பாதி உரிமை அவருக்கு  இருக்கிறது.
இதைவிட, அநியாயம் அவரைக் ‘காலகாலன்’ என்பதுதான். காலனை உதைத்தது எந்தக் கால்? இடது கால் அல்லவா! அது முழுவதும், நூறு பெர்ஸெண்டும் உன்னுடைய  கால் தானே தாயே?  நீ செய்த காலசம்ஹா ரத்தை, அவர் தமதாகத் தஸ்கரம் பண்ணியிருக்கிறாரே!” என்கிறார் தீக்ஷிதர்.
 ஜனனம், மரணம் இரண்டையும் கடக்க முறையே காமஜயம், காலஜயம் பண்ண வேண்டுமானால், அம்பாள் அருள் இன்றி முடியாது என்கிற  பெரிய தத்வத்தைக் கவித்வ ஸ்வாதந்திரியத்தோடு, ஸ்வாதீனத்தோடு   எவ்வளவு  அழகாக சிந்தித்து இப்படிச் சொல்கிறார் நீலகண்ட தீக்ஷிதர்..

தீக்ஷிதர்  ரொம்ப பெரியவர். சண்டை மூட்டினதோடு நின்றுவிடவில்லை. எல்லாச் சண்டைகளும் (வாழ்க்கைப் போராட்டமே) தீர்த்து போகும்படியான பரமப் பிரேமை, இந்த அர்த்தநாரீ சுவரருக்குள் எங்கே ஊற்றெடுக் கிறது என்பதையும், ‘சிவ  லீலார்ணவ’த்தில் சொல்கிறார். (‘அசக்ய மங்காந்தர’ என்று தொடங்கும் சுலோகம்). பரமாத்மாவின் அன்பு ஊற்றெடுக்கும் அந்த இடத்தை நினைத்து விட்டால் நமக்கு ஒரு குழப்பமும், குறைவும் உண்டாகாது. அப்படியே அதில் ஊறிப்போகவே தோன்றும். கொஞ்சம் விவரமாக சொன்னால் தான் நமக்குப் புரியும்.

அர்த்தநாரீசுவர ரூபத்திலிருந்து பார்வதி – பரமேசு வரர்களின் எல்லா அங்கங்களையும் பிர்த்துப் பிரித்து பாகம் பண்ணுகிறோம். ‘மாதொரு பாகன்’ ‘உமையொரு பாகன்’ என்றெல்லாம் அவருக்கும், ‘பாகம் பிரியாள் ‘ என்றே அம்பாளுக்கும் பெயர்கள் இருந்தாலும் கூட, இது  அப்பாவின் கண்- அது அவள் கண்; இது இவர் காது – இது அவள் காது என்று இப்படிப் பாகம் பிரிக்க  முடிகிறது. இந்தக் கூறு, பாகம், இவருடையது; அந்தக் கூறு இவளுடையதுஎன்று மொத்தத்தையும் பப்பாதியாக பிரிக்க முடிகிறது. இப்படி இரண்டு பேராக அவர்களை தனித்  தனியா கொண்டு வந்தவுடனேயே ‘கம்பேர்’ பண்ணுகிற அனர்த்தம் ஆரம்பிக்கிறது. ‘அடாடா, அப்படியானால் பிரித்துச் சொல்ல முடியாமல் ஒரிடம் கூட  இவர்களிடம் இல்லையா?’ என்று தேடுகிறோம்.

பிரிக்க முடியாமல் இருப்பது எது? அணு (Atom) தான். அதற்கு மேலே பிரிக்கவே  முடியாது என்று ஸ்டாப் STOP பண்ணுவது  அணுதான்.  அதையும்  பிளந்துதான் இப்போது எத்தனையோ உற்பாதங் களைப் பண்ணியி ருக்கிறார்கள்! இப்படி உற் பாதம் பண்ணுவதால் எதிர்த்தரப்பு, சுய தரப்பு என்ற பேதமில்லாமல் எல்லாமே  சர்வ நாசமாகிவிடும் என்று இரண்டு கட்சிக்காரர்களுக்கும் தெரிந்தும்கூட, ‘அப்படியும்  உண்டாகி விடுமோ?’ என்று பீதியையாவது உண்டாக்கலாமே என்று நினைக்கிறார்கள். இப்படி அணு மாத்திரமாக ஒன்று அர்த்த நாரீசுவர ஸ்வரூபத்தில் இருந்து விட்டால் போதும்,பிரச்சனை தீர்ந்தது. அதை ஸ்மரித்து விடலாம். ஏனென் றால் ‘இவளுக்கு அவருக்கு’ என்று இதை பாகம் போட முடியாது. அது இரண்டு பேருக்கும் சொந்தமானது. ஒப்பிடுவதால்  ஒருத்தரை விட்டுவிட்டோம்,ஒருத்தருக்கு அபச்சாரம் செய்தோம் என்கிற தோஷங்கள் உண்டாக  சான்சே  CHANCE  இல்லை.  அணுப்ரமாணமாக ஒன்று இந்த இரண்டுக்கும் மத்யஸ்தானத்தில் இருந்து  விட்டால் போதும். எவ்வித குழப்பமும் இல்லாமல்  அதைப் பிடித்துக் கொண்டு அம்மை அப்பனின் கூட்டு அநுக்ரஹத்தைப் பெற்றுவிடலாமே என்று தேடுகிறோம்.

 நீலகண்ட தீக்ஷிதர் நமக்கு ஒரு  சகாயம் பண்ணுகிறார். ஒரு சரீரத்துக்கு மத்தியில் இருக்கிற இருதயத்துக்கு மத்தியில் ஒரு அணு  நிச்சயம் இருக்கிறது. அணுவை விட சின்னது. அணுவையாவது நுண்ணிய மைக்ரோஸ் கோப்பில் பார்த்து விடலாம். உடனே மானஸிகமாகவாவது அதை ரெண்டாக பிரித்து பங்கு போடலாம்.  ஆனால்  தீக்ஷிதர் சொல்கிற இருதய மத்தியில் இருக்கிற இந்த   சின்ன ‘அணு’  வை எந்த டெலெஸ் கோப்பா லும்   மைக்ரோஸ்கோப்பாலும்  பார்க்க முடியாது. ரெண்டாக பிரிக்க முடியாது.  இது இல்லாவிட்டால் மநுஷ்யனுக்கு எண்ணமே இல்லை. உணர்ச்சியே இல்லை. அந்த சின்ன அணு பேர்  தான்   ”மனசு”?
அர்த்தநாரீசுவரர் மட்டும் இல்லை, எந்த  ஸ்வாமியானாலும் அதற்கு மனசு என்று  ஒன்று இருக்கிறதே அதைத் தியானிப்பதுதான் விசேஷம். உருவத் தியானம் ரொம்ப அழகு.  ஆரம்பத்திலே  அது  அவசியம். இப்படி மூர்த்தியாக உருவ த்யானம் பண்ணும்போது கூட நம்முடைய  மனசு அந்தண்டை இந்தண்டை அசையாமல் ஒருமுகப் படுவதில்லை.  அலை பாய்கிறது, ஓடுகிறது. த்யானத்தில் புத்தி போகவில்லை.. பரமேஸ்வர ஸ்வரூபம் என்றால் ஜடை,   கங்கை,  சந்திரன், நெற்றிக்கண், நீலகண்டம் இப்படி எண்ணமானது எதன் மேல்  நிலைத்து நிற்பது என்று தெரியாமல் சலித்துக் கொண்டே இருக்கிறது. பரமாத்மாவின் மனசு என்று எடுத்துக் கொண்டாலோ அது  எப்போதும்  ஒன்றாகவே இருக்கிறது. நம் மனசிலே நூறு கோடி எண்ணங்கள். அதில் முக்கால்வாசி தேஹ மயமாகவே இருக்கும். தாயும் தந்தையுமாக இருக்கப்பட்ட அர்த்த நாரீசுவர மனசு இப்படியா இருக்கும்? அதில்  பிரேமை என்கிற ஒரு எண்ணம் தவிர வேறென்ன இருக்கும்? கருணை ஒன்றே  நிறைந்த அணு மாத்ரமான மனசு அது. அதை  கெட்டியாக  பிடித்துக் கோ” என்கிறார்தீக்ஷிதர். அதிலே நம்மைக் கொண்டு போய் நிறுத்துகிறவர் தான் குமாரஸ்வாமி. சிவ சக்திகளின் ஐக்கியத்தில் தோன்றிய அன்புக் குழந்தை.”

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;