
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
ஒரு சம்பாஷணை
மஹா பெரியவாளை நினைக்காத நேரமே கிடையாது. எதிரே படங்களில் காவி உடையோடு அபயஹஸ்தம் காட்டுகிற அவர் கண்களில் காணும் ஞான ஒளி உள்ளத்தில் கூரான வேல் போல் துளைத்து ஆனந்த மான நிலையை தருகிறது. இது எத்தனையோ லக்ஷம் பக்தர்களின் அனுபவம். என்னுடையது மட்டும் அல்ல.
நான் அவரோடு நேரில் நிறைய பேசியவன், அவர் படத்தோடும் மனதில் இன்றும் பேசுபவன்.
இதோ நிசப்தமான என் அறையில் எனக்கு எதிரே மஹா பெரியவா அசையாமல் படமாக. என் கண்கள் அவரை நோக்குகின்றன. எண்ண அலைகள் பாய்கிறது. தீபம் மெல்லிசாக எரிந்துகொண்டிருக்க மனதால் மஹா பெரியவாளை த்யானிக்கிறேன். என் கண்கள் அளவுகடந்த பக்தி மரியாதையால் மூடுகிறது. அசையாது அமர்ந்தி ருக்கிறேன்.
என்னுள் வழக்கமான எனக்கு பழக்கமான அந்த பாசக் குரல் வாத்சல்யத்தோடு கேட்கிறதே.
“என்னடா ஏதோ தயங்கி தயங்கி மென்னு முழுங்கறே. சொல்லு ?”
”இல்லே பெரியவா, உங்களை சிலது கேக்கணும்”
”எனக்கு தெரிஞ்சதெல்லாம் நிறைய சொல்லியிருக் கேனே. கணபதி தடிமன் தடிமனா ஏதோ குரல் னு நிறைய புஸ்தகங்களை வேறே போட்ருக்கானே .
”அதுலே சிலதை படிச்சுட்டு தான் உங்க கிட்டே கேக்கணும்னு ஒரு அபிலாஷை.
”எனக்கு தெரியும்டா. உன்னைப்பத்தி. நீ எதையும் உனக்குன்னு கேக்கறவன் இல்லே. எல்லோருக்கும் கொடுக்கணும் தான் கேப்பே, இல்லையா?”
”ஆமாம் பெரியவா, உங்க ஆசிர்வாதம் அதை நான் நிறைய தொடர்ந்து கடைசி வரை பண்ணனும்னுதான் எப்பவும் உங்களை வேண்டிக்கறேன் ”
”சரி கேளு”
”எனக்கு கிருஷ்ணனை ரொம்ப பிடிக்கும். நீங்க கிருஷ்ணனை பத்தி நிறைய சொல்லியிருக்கேள். மறுபடியும் கேட்க சின்ன ஆசை. உங்க வாயாலே கிருஷ்ணன் சொன்ன கீதையை பத்தி சில வார்த்தை கள் சொல்லுங்கோ”
”கிருஷ்ணன் சொன்னதுலே ஆத்மா பத்தி தான் அதிகம். ஆத்மா தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அதையெல்லாம் கடந்திருக்கிறது என்றால், அதெப்படின்னு குழப்பமாயிருக்கா?.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இந்த குழப்பத்தை தீர்த்து தெள்ளத் தெளிவாகப் பண்ணியிருக்கார் தெரி யுமா உனக்கு?
ஒரு ஸ்லோகம் சொல்றேன் அது புரிஞ்சுதுனா உனக்கு எல்லாமே புரியும்.
‘நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன’ என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் சொல்றார்:
यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति। तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति।।6.30।।
yo māṁ paśhyati sarvatra sarvaṁ cha mayi paśhyati tasyāhaṁ na praṇaśhyāmi sa cha me na praṇaśhyati
யோமாம் பஸ்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பஸ்யதி. தஸ்யாஹம் ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி”
எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கு ன்னா என்ன அர்த்தம்?
கிருஷ்ணன் எல்லாத்துக்குமே ஆதாரமானவர் னு ஆகிறது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்கி
றது இது தானே. எல்லா உடல்களிலேயும் ஜீவனாக உள்ளே இருக்கும் ஆதாரமான ஆத்மா அவர் தான்னு சொல்றது புரியறதா?. எல்லாமே அவருக்குள்ளே தான் இருக்குன் னா இன்னும் கொஞ்சம் பெரிய பரிமாணம். அவர்தான் எல்லாத்துக்குமே ஆதாரம்னு விளங்க வைக்கத்தான் அந்த வாக்கியம். எல்லாம் அவரே தான். வெவ்வேறு ரூபத்திலேங்கறதாலே அவருக்குன்னு தனியா எந்த ஒரு ரூபமும் இல்லேன்ங்கிறது புரியும். குழப்பம் நாம் சரியா புரிஞ்சுக்காததாலே தான்.
ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுள்ளும் இருக்கிறார் என்பதால் அவைஎல்லாம் இவரைத் தாங்குகின்றன என்று ஆகாது. இவரால்தான் அவற்றுக்கு உருவமும் உயிரும் கிடைக்கிறது. அதனால் தான் ஜீவன் என்கிற உயிர்ச்சத்து பகவான் னு சொல்றேன்.இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமல்ல. இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர், இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
‘பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளுக்குள்ளேயும் இருந்து கொண்டு ஈஸ்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.’ [ஈச்வர: ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா] என்கிறார்.
(இன்னும் தெளிவாக கண்ணதாசன் பாடியதை நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா)…
இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் ஒரு குழப்பம் செய்கிறார்.
‘எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன’ என்று சொல்லு கிறவரே இன்னொரு இடத்தில் ‘என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும் ஒரு பொருளிலும் இல்லை’ அப்படிங்கிறாரே.
मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना | मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थित: || 4||
mayā tatam idaṁ sarvaṁ jagad avyakta-mūrtinā mat-sthāni sarva-bhūtāni na chāhaṁ teṣhvavasthitaḥ maya tatam idam sarvam jagad avyakta-murtina mat-sthani sarva-bhutani na chaham teshvavasthitah
உலகம், பிரஞ்சம் எல்லாமே கடவுள் என்று சொல்லும் போது எல்லாமே கடவுளுக்குள்ளே தானே இருக்கும். வேறெதுவும் இல்லை என்று தானே அர்த்தம். அப்படி யென்றால் கடவுள் என்னைத்தவிர வேறெதுவும் இல்லை. ஆகவே நான் வேறெதிலும் இல்லை என்று சொல்வது சரிதானே. என்னுள்ளே தான் எல்லாம் இருக்கிறது. நான் வேறெதனுள்ளும் இல்லை என்று சொல்வது எப்படி முரண்பாடாகும். அற்புதம் கிருஷ்ணன் சொல்வது.
‘நான் ஒருவருக்கும் விளங்க மாட்டேன்’ என்று பகவான் சொல்லியிருந்தால், ‘ஆயிரம்பேர் இருந்தால், ஆயிரம் பேருக்கும் விளங்க மாட்டேன்’ என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, ‘நான் எல்லோருக்கும் விளங்க மாட்டேன்’ என்றால், ‘ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம்;
ஒருவனுக்காவது விளங்குவேன்’ ன்னு தானே அர்த்தம். பகவான் ‘எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன்’ ன்னு சொன்னாரே தவிர ஒத்தருக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன்’ ன்னு சொல்லலியே. அப்படி
யானால் சிலருக்கு அவர் விளங்குகிறார் என்றாகிறது இல்லையா?
”பெரியவா, அந்தச் சிலர் யார்?”
‘அப்படிக்கேளுடா. அந்த சிலர் யார் என்றால் கிருஷ் ணன் சொன்ன யோக மாயையால் பாதிக்கப் படாத ஞானிகள். ‘நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன்: ஒரு பொருளும் என்னிடம் இல்லை’ என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவ தற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.
தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, “ஐயோ, பாம்பு, பாம்பு!” என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்று தான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக் குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலை தான்.
மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞா னிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்ச மாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத் துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.
“இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன்; பிரபஞ் சம் என்னிடத்தில் இருக்கிறது” என்று சொன்னால் என்ன அர்த்தம்? மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது; பாம்புக் குள் தான் மாலை இருக்கிறது என்கிறது எப்படியோ அப்படித் தான். இரண்டும் உண்மைதானே?
பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள் ‘விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில் ஆதார மாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி ‘இது மாலை தான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.
மாயையினால் மூடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன்தான். எல்லாமே ஈஸ்வரமயமாக தோன்றுகிறது ஞானிக்கு.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



