
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
“பெரியவா நடத்தி வச்ச ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்”*
நான் தான் அடிக்கடி சொல்வேனே. சனிக்கிழமை என்றால் ஸ்ரீனிவாசனின் ஞாபகம் விடாமல் என்னை ஆக்ரமிக்கும். ஸ்ரீனிவாசன் மஹிமை சொல்லொணா தது. ஆச்சர்யம் அதிசயம் மிகுந்தது. லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் அவனுக்கு கல்யாணம் நடத்திப்பார்த்து ஆனந்திக் கிறார்கள். நான் பல முறை ஸ்ரீனிவாஸ உத்சவத்தில் கலந்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் எனக்கு தெரிந்து மஹா பெரியவா நடத்தி வைத்த ஸ்ரீனிவாச கல்யாணத்தைப் போல் பிறிதொன்றை இந்த ஜென்மத்தில் பார்க்க முடியாது. இதோ அந்த ஆச்சர்ய மான சம்பவம்.
காஞ்சி மடத்தில் ஒரு சாயங்காலம். மஹா பெரிய வாளை தரிசிக்க ஏகக் கூட்டம். வழக்கமாக உட்காரும் மேடையில் அமர்ந்து சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டார். நமஸ்கரித்த எல்லோரும், தத்தம் குறைகளைத் தெரிவித்துப் பிரார்த்திப்பதை கேட்டு, பொறுமையுடன் பதில் சொல்லி ஆசி வழங்கி, பிரசாதமும் கொடுத்து அனுப்பி வைத்தார் மஹா பெரியவா.
இரவு எட்டரை மணி
.மஹா பெரியவா தனது ஏகாந்த அறைக்கு போக எழுந்த போது வேகமாக ஒரு தம்பதி ஓடிவந்தார்கள். அவர்கள் பின்னால் ஓர் இளம் வயதுப் பெண்ணும் விரைந்து வந்தாள். மூவரும் பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். நான்கு பிக் ஷாப்பர்’ பைகளில் தாங்கள் வாங்கி வந்திருந்த பண்டங்களை அங்கிருந்த பெரிய பெரிய மூங்கில் தட்டுகளில் நிரப்பி, ஸ்வாமிகளுக்கு முன்பாகத் தலைகுனிந்து சமர்ப்பித்து விட்டு நிமிர்ந் தனர்.
பெரியவா எதிரே இருந்த மூங்கில் தட்டுகளைச் சற்று நேரம் உற்றுப்பார்த்தார். கற்கண்டு, முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை, அக்ரூட், பேரீச்சை என பல வகை வஸ்துக்கள். எதிரே நிற்பவர்களை நிமிர்ந்து பார்த்த மகா பெரியவா முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியது.
“அடடே, அமெரிக்கா விஸ்வனாதனா? எப்ப வந்தே? ஆம்படையாளும் வந்திருக்காளா… பேஷ்…பேஷ்! ரொம்ப சந்தோஷம். எல்லாரும் க்ஷேமந்தானே? என்னடா…நீ பாட்டுக்கு ஏகப்பட்ட முந்திரி, திராக்ஷை எல்லாம் எதுத்தாப்ல கொண்டு வந்து வெச்சிருக்கே? ஏதாவது கல்யாண விசேஷமா? இதோ ஒம் பக்கத்திலே நிக்க றாளே…அவ ஒம் பொண்ணுதானே? ஓஹோ.. அவளுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கயாக்கும் ?ஏண்டா விஸ்வனாதா.. ஒரு தட்டுலயும் விவாஹ பத்திரிகை யைக் காணோமே?”
அவ்வளவுதான். எதிரில் நின்றிருந்த மூவரும் மடை திறந்த வெள்ளம் போல் கேவிக்கேவி அழுதபடியே ஆச்சார்யாள் பாதங்களில் விழுந்தனர்.மஹா பெரியவா
மௌனமாக பார்த்தார். பிறகு பேசினார்.
“ஏண்டா விஸ்வநாதா..ஒன்ன நா ஏதாவது பெசகா கேட்டுட் டேனா? இப்டி சின்னக் கொழந்த மாதிரி கேவிக் கேவி அழறேளே” என்று வாஞ்சையுடன் கேட்டார்.
விஸ்வநாதன் கைகளால் கன்னத்தில் போட்டுக் கொண்டு பதறியபடியே, “சிவ சிவா! அபசாரம்.. அபசா ரம்… அப்டியெல்லாம் ஒண்ணும் இல்லே பெரிய வா. ‘பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிருக் கியா?பத்திரிகை எங்கே?”னு நீங்க கேட்ட தும் எங்க மூணு பேராலயும் துக்கத்தைக் கட்டுப் படுத்த முடியலே பெரியவா. இவளுக்கு இப்ப இருவத்தஞ்சு வயசாறது. இவளோட பதினேழாவது வயசிலேர்ந்து ஒவ்வொரு வருஷமும் அமெரிக்காவிலேர்ந்து இங்க வந்து ரெண்டு மாசம் தங்கி முயற்சி பண்றோம் பெரியவா. ஒரு வரனும் குதிரலே, தட்டிப் போயிண்டே இருக்கு. நன்னா படிச்சி ருக்கா, அழகா இருக்கா …பணம் இருக்கு, இதெல்லாம் இருந்தும், அதிர்ஷ்டமில்லே” என்று மீண்டும் அழ ஆரம்பித்தார் விஸ்வநாதன்.
இரவு மணி ஒன்பதரை.
நிலைமையைப் புரிந்துகொண்ட பெரியவா கையை உயர்த்தி சமாதானப்படுத்தியவாறு “சரி…சரி..வருத்தப்
படாதீங்கோ, மூணு பேரும் இப்டி ஒக்காருங்கோ” என எதிரில் கை காண்பித்தார். மூவரும் பவ்யமாக அமர்ந் தனர்.
“விஸ்வநாதா, நீ கோயில் குளங்களுக்கும் ஏழை பாழை களுக்கும் நெறைய தான தர்மம் பண்றேனு நேக்கு நன்னா தெரியும். உனக்கு இப்டி ஒரு மனக்கஷ்டமா? அது சரி…நீ….. அமெரிக்கா போய் செட்டிலாகி எத்தனை வருஷமாகிறது!”
“இருவது வருஷமாகிறது பெரியவா”.
அந்தப் பொண்ணை சுட்டிக்காட்டி, “இவ உனக்கு ஏக புத்ரிதானே, என்ன பேரு?”
விஸ்வநாதன் வாய் பொத்தியபடியே, “இவ பேரு அபர்ணா, எங்களுக்கு ஏக புத்ரிதான் பெரியவா”
“ஜோஸ்யாள்ட்ட இவ ஜாதகத்தைக் காமிச்சியோ?”
“ஏகப்பட்ட ஜோஸ்யாளைப் பாத்துட்டேன் பெரியவா, ஒவ்வொர்த்தரும் ஏதேதோ தோஷங்கள் இருக்குன்னு சொல்லி .பரிகாரங்களும் சொல்றா.. எல்லாமே பண்ணிட்டேன்.”
“என்னென்ன பண்ணினே?” என்றார் ஆவலுடன்.
“ராமேஸ்வரத்திலே தில ஹோமம்,பித்ரு தோஷ பரிகா ரம், கஞ்சனூரில் சுக்ர ப்ரீதி, திருநாகேஸ்வரத்தில் ராகு ப்ரீதி, ஆலங்குடியில் குரு ப்ரீதி, குத்தாலத்துக்குக் கிட்டே திருமணஞ்சேரியிலே விசேஷ பூஜா பரிகாரம், திருநள் ளார்லே நள தீர்த்த ஸ்நானத்தோடு சனி ப்ரீதி.. இப்படி நெறையப் பண்ணிப்டோம் பெரியவா”
“ஓஹோ அப்போ, பல ப்ராப்திதான் [பிரயோஜனம்] இல்லேங்றேயா நீ?”.
பெரியவாளின் பார்வை விஸ்வநாதனின் மனைவி மேல் பாய்ந்து அவளை கேள்வி கேட்டார்.
“பொண் கல்யாணத்துக்கு நகை நட்டெல்லாம் ரெடியா வாங்கி வெச்சுட்டியோ?”
“எல்லாம் ரெடி பெரியவா” என்றாள் அம்மணி.
“பேஷ்…பேஷ் எத்தனை பவுன் போடறே?” “எங்க பொண் ணுக்கு முப்பது பவுன் பெரியவா, அதோட சேர்த்து தனித் தனியா ரெண்டு இருபது பவுனுக்கு “செட்டா நகைகள் பண்ணி வெச்சுருக்கு” என்கிறார் விஸ்வ நாதன்.
“அது எதுக்குடா இருவது பவுன்ல தனியா ரெண்டு செட்டு?”
“அது ஒண்ணு மில்லே பெரியவா, அபர்ணவுக்குக் கல்யாணம் நிச்சயமானா, அந்தக் கல்யாணத்தோடு ரெண்டு ஏழைப் பெண்களுக்கும், எல்லாச் செலவும் ஏத்துண்டு விவாஹம் பண்ணி வைக்கிறதா தீர்மானம். அதுக்காகத்தான் பெரியவா அந்த ரெண்டு செட் நகை கள். ஆனா, அபர்ணாவுக்கே நிச்சயம் ஆக மாட்டேங் கறதே பெரியவா நான் என்ன பண்ணுவேன்?”
.கண்களில் நீர் துளிர்க்க விஸ்வநாதன் குரல் தழுதழுத்தது.
இரவு மணி பத்தரை.
“விஸ்வநாதா, நீங்கள்ளாம் இன்னும் எத்தனை நாளுக் குள் ள அமெரிக்கா திரும்பியாகணும்?”
“இன்னும் இருபது நாள் இருக்கு பெரியவா.”
“பேஷ்…பேஷ்..” சரி நீங்கள்லாம் சாப்டாச்சோ?”
“இன்னும் இல்லே பெரியவா’
‘பெரியவா அருகே இருந்த சிப்பந்தியிடம் உக்ராணத் திலிருந்த சமையல்காரரை அழைத்து வரச் சொல்லி, “என்ன இருக்கு சாப்பிட ?” என்று கேட்டார்.
” அரிசி உப்புமாவும், பரங்கிக்கா சாம்பாரும் இருக்கு பெரியவா”’
‘ விஸ்வநாதா நீங்க மூணுபேரும் இவரோடு போய் உள்ளே போய் சாப்பிட்டுட்டு வாங்கோ”
இரவு மணி பதினொன்று.
“விஸ்வநாதா, உனக்கு ஒசந்த மனசுடா. ஒம் பொண் கல்யாணத்தோட இன்னும் இரண்டு ஏழைப் பொண்க ளுக்கும் தர்மமா விவாஹம் பண்ணி வெக்கணும்கிற துக்காக நகை நட்டெல்லாம் முன்கூட்டியே பண்ணி வெச்சுக் காத்துண்டிருக்கியே.. என்ன பரந்த மனசுடா நோக்கு! கவலையே படாதேடா. காமாக்ஷி காப்பாத்து வாடா. ஒரு கார்யம் பண்ணு, நாளக்கி கார்த்தாலேயே ஒங் குடும்பத்தோட திருவானைக்காவல் போ. அங்கு அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கும், ஜம்புலிங்கேஸ் வரருக்கும் அபிஷேக ஆராதனையெல்லாம் பண்ணி வெச்சுப் பிரார்த்தனை பண்ணுங்கோ. ஒம் பொண்ணு அபர்ணாவை அகிலாண்டேஸ்வரிக்கு பளபளனு காதுல ‘தாடங்கம்’ சாத்தியிருப்பா, அத வெச்ச கண் வாங்காம கொஞ்ச நாழி தரிசனம் பண்ணிண்டே, ‘சீக்கிரம் நேக்கு கல்யாணமாகணும்னு’பிரார்த்திக்கச் சொல்லு. இதப் பண்ணிட்டு…”விஸ்வநாதன் குறுக்கிட்டு, “பெரியவா…எங்களுக்குக் குலதெய்வமே திருவானைக் காவல் அகிலாண்டேஸ்வரி தான்” என்று குதுகலத்துடன் கூறினார்.
“பேஷ்! ரொம்ப நல்லதா போச்சு. அப்போ நாளைக்கே நீ குடும்பத்தோட போய் இதப் பண்ணிடு. இத பண்ணிப்ட் டு நேரா திருப்பதிக்குப் போங்கோ. அங்கே ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு ஒரு திருக்கல்யாண உற்சவம் பண்ணி வெச்சுப் பிரார்த்தனை பண்ணுங்கோ. எல்லாம் க்ஷேம மா நடக்கும்.
”இதோ எனக்கு எதுத்தாப்ல தட்டுகள்லே கல்யாண சீர்வரிசை மாதிரி ஜமாய்ச்ருக்கியே முந்திரி, திராட்சை, கல்கண்டு இது எல்லாத்தையும் அப்டியே எடுத்துண்டு போய், அகிலாண்டேஸ்வரிக்கு அர்ப்பணம் பண்ணு போ “
பெரியவா இடத்தை விட்டு எழுந்தார். பெரியவாளை நமஸ்காரம் பண்ணிய விஸ்வநாதன்
”பெரியவா எம் பொண்ணு அபர்ணாவோட பதினேழா வது வயசுலேர்ந்து இங்கே வரன் தேடி வர போதெல்லா ம்.. வருஷா வருஷம் திருமலை ஸ்ரீ நிவாஸப் பெருமா ளுக்கு திருக்கல்யாணம் பண்ணி வெச்சுருக்கேன். இது வரைக்கும் எட்டு தடவை திருக்கல்யாணம் நடத்தி இருக்கோம் பெரியவா”
“சரிடா விஸ்வநாதா! அதனாலென்ன கொறஞ்சுடப் போறது.?. இந்த ஸன்யாஸி சொல்றதுக்காக ஒம்பதாவது தடவையா திருக்கல்யாணம் இப்போ நடத்தி வை யேன்” .
சிரித்தபடி சொல்லிவிட்டு மஹாபெரியவா வேகமாக உள்ளே சென்றுவிட்டார்.
அடுத்த இரண்டு நாட்களில் விஸ்வநாதன் குடும்பம் திருவானைக்காவல் அபிஷேக ஆராதனைகளையும், தாடங்க தரிசனத்தையும் முடித்துக்கொண்டு நேராக திருமலை வந்து சேர்ந்தது. அன்று ஸ்ரீ நிவாஸ திருக் கல்யாண வைபவத்துக்கு பணம் செலுத்திவிட்டு காத்திருந்தார்கள்.
திருக்கல்யாண மண்டபத்தில் ஏகக் கூட்டம். ஓரமாக விஸ்வநாதன் குடும்பம் உட்கார்ந்திருந்தது. . விவாஹ மந்திரங்கள் முழங்க ஸ்ரீ நிவாஸன் திருக்கல்யா ணத் தை விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. வைகானச பட்டர்கள் குரல்கள் உச்ச ஸ்தாயியில் ஒலித்தன.
“அப்பா ஸ்ரீ நிவாஸா, இது தர்ம நியாயமா? நீ மாத்திரம் தினம் தினம் கோலாகலமா இப்டி கல்யாணம் பண்ணிக் கறயே! எம் பொண் அபர்ணா என்ன பாவம் பண்ணா ? அவளுக்கு ஏன் ஒரு வரன் பாத்து கல்யாணம் பண்ணி வெக்க மாட்டேங்கறே? சொல்லு..” — விஸ்வனாதன் மனதுக்குள் குமைந்தார்.கண்களில் தாரைதாரையாக ஜலம் .அதைப் பார்த்துவிட்டு அவரது மனைவியும், மகளும் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தனர். விஸ்வ நாதனுக்குப் பக்கத்தில் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. அந்த குடும்பஸ்தருக்கு ஐம்பது ஐம்பத்தைந்து வயதிரு க்கும். விஸ்வநாதனின் முதுகை பரம ஆதரவு டன் தடவிக் கொடுத்த அவர்,
“சார் எம் பேரு வைத்யநாதன், மெட்ராஸ். தமிழ்க்காரா நாங்க. நானும் ரொம்ப நாழியா பாத்துண்டு வரேன். சந்தோஷமா ரசிச்சு தரிசனம் பண்ண வேண்டிய இந்த ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணத்துலே ஏன் இப்படி நீங்க மூணு பேரும் கேவிக் கேவி அழுதுண்டிருக்கேள். பார்க்கவே என்னமோ போல் இருக்கு எனக்கு. மனசை என்னவோ பண்றது.” என்று சன்னமான குரலில் நாசூக் காகச் சொன்னார்.
இப்படி ஒருவர் ஆதரவோடு முதுகைத் தடவிக் கொடுத் துப் பேசியதும், நெகிழ்ந்து விட்டார் விஸ்வநாதன். , அந்த வைத்யநாதனிடம் தன் கவலையை எல்லாம் சுருக்கமாகக் கொட்டித் தீர்த்துவிட்டார்.
வைத்யநாதன், அபர்ணாவைத் திரும்பிப் பார்த்தார் ”ரொம்ப லட்சணமா இருக்காளே உங்க பொண்ணுஒங்க கோத்ரம் என்ன ?”
“வாதூல கோத்ரம்” –விஸ்வநாதன் .
“நாங்க ஸ்ரீவத்ஸம், அது சரி! பொண்ணுக்கு என்ன வயசு..?”
“இருபத்தஞ்சு ஆறது..”
“திருக்கல்யாணம் முடியட்டும்.உங்களோடு கொஞ்சம் விவரமா பேசறேன்” என்றார் வைத்யநாதன்.ஸ்ரீ நிவாஸ கல்யாணம் பூர்த்தியானது. பிரசாதம் வழங்கப்பட்டது. ”என்னோடு வாங்கோ”என்று விஸ்வநாதன் குரும்பத்தை அழைத்துப் போனார் வைத்யநாதன். அவர் தங்கி இருந்த இடத்தில் பேச்சு தொடர்ந்தது.
”விஸ்வநாதன் ஸார் ,எனக்கு ஒரே பையன், வயசு இருவத் தாறு . அவன் பேரும் ஸ்ரீ நிவாஸன். நாங்கல் லாம் தஞ்சாவூர் பக்கம். மெலட்டூர். இப்போ மெட்ராஸ். நான் டிஃபன்ஸ் அக்கவுண்ட்ஸ்ல வேலை பண்றேன். பையன் அமெரிக்காவுல ஃபோர்டு மோட்டார் கம்பெனிலே நல்ல சம்பளத்தில் இருக்கான். அவன் நாளக்கி லீவுலே மெட்ராஸ் வரான். அவனுக்கு மூணு வருஷமா கல்யாணத்துக்குப் பொண் பாத்துண் டிருக் கேன். ஒண்ணுமே தகையலே. ஜாதகம் கூடி வரலே. நாங்கல்லாம் காஞ்சி காமகோடி மடத்து பக்தாள். மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் காஞ்சி பெரியவாளை தரிசனம் பண்ணி, பையனுக்குக் கல்யாணம் தட்டிண் டே போறதென்னு மனக் குறையை நானும் என் மனைவி யும் சொல்லிப் பிரார்த்திச்சோம். அவர்தான் ” திருமலைலே ஸ்ரீ நிவாஸனை பிரார்த்திச்சுண்டு ஒரு கல்யாண உற்சவம் பண்ணிவை. ஒடனே ஆயிடும்”னார். அதை நடத்தி வைக்க இன்னிக்கித்தான் பிராப்தம் வந்தது. அந்த பெரியவா அனுக்ரஹம் இருந்தா ஒங்காத் துப் பொண்ணே கூட எங்க அகத்துக்கு மாட்டுப் பெண்ணா வந்துடலாம்” என்று சொல்லி முடித்தார் வைத்யநாதன்.
திருப்பதியில் விஸ்வநாதன் தங்கியிருந்த காட்டேஜி லேயே பரஸ்பரம் இருவரும் ஜாதகப் பரிவர்த்தனை செய்து கொண்டு, திருமலையிலேயே ஒரு பெரிய ஜோஸ்யரிடம் கொண்டு போய் ஜாதகங்களைக் காண்பித்தனர். ஜோஸ்யர் பத்துப் பொருத்தங்களும் தீர்க்கமாக அமைந்துள்ளதாகக் கூறினார். ரெண்டு குடும்பத்தாருக்கும் பரம சந்தோஷம். அன்றிரவே எல்லோரும் சென்னை திரும்பினர். அடுத்த நாள் மாப்பிள்ளை ஸ்ரீ நிவாஸன் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தான். அவனுக்கு அபர்ணாவைப் பிடித்து விட்டது. அபர்ணாவுக்கும் அவனை ரொம்பப் பிடித்துவிட்டது. பதினைந்து நாட்களுக்குள் ஒரு சுபமுகூர்த்தம் பார்த்து சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தை ஏற்பாடு செய்துவிட்டார் விஸ்வநாதன்.
கல்யாண ஏற்பாடுகள் சகலமும் முடித்து இரு வீட்டாரும் காஞ்சிக்கு மஹா பெரியவாளை தரிசிக்க புறப்பட்ட னர். வழக்கம் போல அன்றும் தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். இரவு ஒன்பது மணி.விஸ்வநாதன் குடும்பமும் வைத்யநாதன் குடும்பமும் மகா பெரியவாளை நெருங்கியது.
பெரியவா தன் புருவங்களுக்கு மேலே இரண்டு கைக ளையும் வைத்துக் கொண்டு அவர்களைக் கூர்ந்து நோக்கினார். ரெண்டு குடும்பமும் மஹா பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தது. விஸ்வநாதனுக்கு பின்னால் வைத்யநாதன் கையைக் கட்டிக்கொண்டு நின்றார். முன்பு போலவே அபரிமிதமாக வாங்கிச் சென்றிருந்த கல்கண்டு, திராக்ஷை. முந்திரி இத்யாதிகளை மூங்கில் தட்டுகளில் வைத்து சமர்ப்பித்து விட்டு கைகட்டி நின்றார் விஸ்வநாதன்.
பெரியவா முகத்தில் அமானுஷ்யமான ஒரு சந்தோஷம், விஸ்வநானையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவர் திடீரென சற்று உரத்த குரலில்,
“ஏண்டா விஸ்வநாதா, இந்த ஸந்யாஸிக்காக ஒம்பதா வது தடவையா ஸ்ரீ நிவாஸனுக்கு திருக்கல்யாணத்தை நடத்தி வெச்ச ஒடனேயே பலப்ராப்தி [கார்ய ஜெயம்] ஏற்பட்டுதோல்லியோ? பேஷ்! ஒம் பொண் அபர்ணா குடுத்து வெச்சவதான்!” என்று சொல்லிட்டு புன்னகைத்தார். ரெண்டு குடும்பத்துக்கு வாயில் பேச்சு எழ வில்லை. நா தழுதழுத்தது. விக்கித்து நின்றார்கள்.
“விஸ்வாநாதா… அன்னிக்கு நீ ரொம்பவும் தாபப்பட்டு அப்டி அழுதியே. ஒம் பொண்ணுக்கு ஜன்மாந்த்ரி யமான [பூர்வ ஜன்ம] விவாஹ ப்ரதிபந்தக [விவாஹம் நடைபெறுவதைத் தடுக்கக்கூடிய தோஷம்] இருக்குன்னு மனசுலே பட்டது. அந்த தோஷ நிவர்த்திக்காகத்தான் அகிலாண்டேஸ்வரியின் தாடங்க தரிசனத்தையும், ஒம்பதாவது தடவையா ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாணத் தையும் பண்ணச் சொன்னேன். இப்பப் புரியறதா நோக்கு!”
பூர்ண அமைதி நிலவியது.
“ஒன் சம்பந்தியா வரப்போறது யாரு? அவருக்கு எந்த ஊரு? என்று கேட்டார்.
விஸ்வனாதனுக்குப் பின்னால் நின்றிருந்த வைத்ய நாதன் முன்னால் வந்து ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தார்.
“நான்தான் பெரியவா அவருக்கு சம்பந்தியா வரப் போறவன்.. எல்லாம் ஒங்க அனுக்கிரகம்” என்று குழைந்தார்.
உற்றுப்பார்த்த மஹா பெரியவா “யாரு? மெலட்டூர் வைத்யநாதனா? ஏண்டா வைத்யநாதா.. மூணு மாசத்து க்கு முன்னாடி, “அமெரிக்காவுல வேலை பாக்கற எம் பையனுக்கு ஒரு பொண் ஜாதகமும் சரியா பொருந்த மாட்டேங்கறது’னு குறைப்பட்டுண்டு வந்து சொன்னே. ஒன்னையும் “திருமலை ஸ்ரீ நிவாஸனுக்குத் திருக்கல்யா ணம் பண்ணி வெச்சு பிரார்த்திச்சுக்கோ “னு சொன்ன தா எனக்கு ஞாபகம். அது சரி நீ எப்ப திருக்கல்யாண உற்சவம் பண்ணினே?”
“ரெண்டு பேரும் ஒரே நாள்ல தான் திருக்கல்யாணம் பண்ணினோம் பெரியவா. அங்கே தான் ஒருத்தரை ஒருத்தர் முதல்தடவையா பார்த்தோம். திருமலைலேயே பேசி முடிவு பண்ணிட்டோம். எல்லாம் ஒங்க ஆசீர்வாதம் தான் பெரியவா” என்றார் வைத்யநாதன் நா தழுதழுக்க.
“க்ஷேமமா இருங்கோ”. ஆசீர்வதித்தார் மஹா பெரியவா
இரவு மணி பத்து.
”மணியாயிடுத்து விஸ்வநாதா, இன்னிக்கும் நம்ம மடத்துலே அரிசி உப்புமாவும், பரங்கிக்கா சாம்பாரும் தான் னு பேசிண்டதை கேட்டேன். எல்லாருமா போய் பலகாரம் பண்ணிட்டுப் போங்கோ” – மஹா பெரியவா எனும் காமாக்ஷி ஜகன்மாதா கருணையோடு விடை கொடுத்தார்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



