PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN

மண்டை பிளந்து ஆபரேஷன்

சிவன் சார் ஒரு விஷயம் கவனித்தீர்களா? மூக்குப்பொடியை ஒரு சிட்டிகை வலது மூக்குக்குள் கைவிட்டு உறிஞ்சிவிட்டு கையை உதறினது போதாது என்று மேல் துண்டால் மார்பில் சட்டையில் விழுந்த மூக்குப்பொடி தூளை வீசினார் மார்க்க பந்து. உதறிய கையிலிருந்தும் மேல் துண்டிலிருந்து கொஞ்சம் மூக்குப்பொடி தூள் காற்றில் பறந்து ரெண்டு தும்மல் போட்டேன். அவரால் பொடி போடாமல் இருக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பழக்கம். என்ன செய்வது.
”என்ன விஷயம் நான் கவனிக்கவேண்டும் னு சொல்லுங்கோ”
”சிவன் சார், யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது மட்டும் தெரிந்து விட்டால் எப்படி இருக்கும்? உதாரணமாக, ஒருத்தனுக்கு இன்னும் ரெண்டு மூன்று மாதங்களில் சம்பள உயர்வு, 150 ரூபா , சுப்பரின்டென் டென்ட் பதவி இன்னும் என்று தெரிந்துவிட்டால் என்ன ஆகும்? இப்போதே அதிகாரம் பண்ண ஆரம்பித்து விடுவான். கையில் இருப்பதை தாம் தூம் என்று செலவழித்து விடுவான். அந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அவனது செய்கையால், நடத்தையால் உத்யோக உயர்வும் அதை தொடர்ந்து வரும் பண வசதியும் பயனற்று போகும். பொட்டை கார்வார் அதிகாரம் பண்ணி விரோதம் சம்பாதித்துக் கொள்வான்.

”அதே மாதிரி இன்னும் 97 நாள் தான் ஒருவனுக்கு இந்த உலக வாழ்வு” என்று தெரிந்து விட்டால் ஆஹா, அந்த நேரத்திலேயே துடிக்க ஆரம்பித்து விடுவான். அன்ன ஆகாரம் வெறுத்து தூக்கம் இழந்து, எதிலும் சோகம், ஏமாற்றம் அவனை 86 நாள் முன்பாகவே அவனை சிறுக சிறுக கொன்றுவிடும்”

எதிர்காலம் மனிதனால் அறியக்கூடாத ஒன்று என பிரம்மதேவன் நன்றாக புரிந்து கொண்டு தான் அதை இருட்டடித்து வைத்திருக்கிறான். எந்த விஞ்ஞானத்தா லும் சாமர்த்தியத்தாலும் வரப்போவதை முன் கூட்டியே அறிய முடியவில்லை.”
மார்க்க பந்து பெரிய லெக்சரே அடித்து ஓய்ந்தார்.
”என்ன சொல்கிறீர்கள் சிவன் ஸார் ?”
” வாஸ்தவம் நீங்க சொல்றது. நாம் எதிர்காலத்தை நினைக்கவேண்டாம். நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும் தெய்வ நம்பிக்கை இருந்தால் போதும். ஆச்சார்யாள் மாதிரி குரு கிட்டே சரணாகதி அடைஞ்சா போதும். அவா காப்பாத்திடுவா. நாம் அட்வான்ஸா தெரிஞ்சுண் டு எதுக்கு ப்ரயோஜனமில்லாம கஷ்டப்படணும். இது சம்பந்தமா ஒரு மஹா பெரியவா சம்பவம் நான் படித்ததைச் சொல்லட்டுமா? என்று ஆரம்பித்தேன்.

”நான் அதுக்கு தானே உங்க கிட்டே வருகிற காரணம். சொல்லுங்கோ. நான் நாலுபேருக்கு அதை சொல்லு வேனே”
நான் மார்கபந்துவுக்கு சொன்ன சம்பவம் சுருக்கமாக இது தான்.

”பெற்றோர்கள் நிறைய செலவழித்து ரெண்டு குடும்பங்கள் கல்யாணத்தால் இணைந்தன. ராமநாதன் ஹேமா, சந்தோஷமான இளம் தம்பதிகள். எல்லா சௌகர்யங்களும் வசதிகளும் வாழ்க்கையில் இருந்தது. பெண் வீடும் பிள்ளைவீடும் ஆகாசத்தில் பறந்தது.

ஆனால்…. கல்யாணமாகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. ஒரு பேரிடி விழுந்தது! ஆம். அந்த இளம் கணவனுக்கு தலைவலி ஒருநாள் தாங்க முடியாமல் ஆபிஸ்க்கு லீவு போட்டு வீட்டு வைத்தியமாக,ஏதோ பத்து போட்டு கஷாயம் கொடுத்து என்னவோ பண்ணிப்பார்த்தார்கள். வேஸ்ட். பிரயோஜனம் இல்லை. கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து ஒரு டாக்டரை போய் பார்த்தான். அவர் சோதித்து காரணம் சொல்லமுடியாமல் ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். பல டாக்டர்கள் தங்களது சாமர்த்தி யத்தை காட்டினார்கள். எல்லாவித டெஸ்டும் பண்ணி யாகிவிட்டது. மூளைக்குள் ஒரு கட்டி உருவா கியிருந்தது. பெரிதாகிக் கொண்டு வருகிறது.

“மண்டை ஓட்டை துளை போட்டு கழட்டி, ஆபரேஷன் பண்ணி கட்டியை எடுத்துடலாம். ரொம்ப ஈஸி!…” பெரிய டாக்டர் சுப்பராயன் ஈஸியாக, ஏதோ கால் கிலோ கத்திரிக்காய் வாங்குவதைப் போல் சொன்ன பொது அந்த பையனுக்கும் அவன் இளம் மனைவிக்கும் பாதி உயிர் போய் விட்டது.
”உயிருக்கு ஆபத்து இல்லையே?” பையனின் அப்பா கேட்டார்.
‘அதெல்லாம் நம்பிக்கையோடு தான் இருக்கணும். மதில் மேல் பூனை எந்தப்பக்கம் சாயும்னு யாருக்கு தெரியும். பெரிய ஆபரேஷன் என்கிறது ஞாபகம் இருக்கட்டும் ‘ என்றார் சர்ஜன் டாக்டர் சுப்பராயன்.
”பகவானை வேண்டிக்குங்கோ” என்றாள் நர்ஸ் தங்கம். வயதானவள். பிள்ளையின் அப்பா ராமரத்னம் மஹா பெரியவா பக்தர். காஞ்சிபுரம் ஓடினார். ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் இருக்கிறானே அவனே கதி. அவனை சரணடைவோம் என்று பெரியவாளை காஞ்சியில் தரிசிக்க ஓடினார்.
“Honey Moon ” குலு மணாலி போகலாம்னு பிளான் போட்ட இளம் தம்பதிகள் தேனிலவுக்கு பதிலாக தேனம்பாக்கம் போகவேண்டியதாயிற்று. மஹா பெரியவா அங்கே தான் காம்ப். .

வரிசையாக எல்லோரும் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுக்கொண்டிருக்க வரிசை நகர்ந்தது. கண்களில் ஆறாக ராமரத்னம் குடும்பத்தோடு மஹா பெரியவாளுடைய திருவடிகளில் நமஸ்காரம் பண்ணினார் .
ஹேமா, புது கல்யாணப் பெண் முழுதுமாக உடைந்து போய் அடக்கமுடியாமல் ஓவென்று கதறினாள். எல்லோரும் திடுக்கிட்டு நின்றுகொண்டிருக்க அவள் அழுது ஓயும் வரை மஹா பெரியவா மெளனமாக அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

“இவருக்கு தலைக்குள்ள tumour ன்னு சொல்லிட்டா பெரியவா….. ரொம்ப பயமா இருக்கு பெரியவா ..எங்களுக்கு .கல்யாணமாய் ரெண்டு மாசம் தான் ஆறது. காப்பாத்துங்கோ பெரியவா, பெரியவா என்ன சொன்னாலும் நாங்க கேக்கறோம் . கண்டிப்பாக எங்களை காப்பாத்துங்கோ பெரியவா! உங்களை விட்டா யார் இருக்கா எனக்கு?
குழந்தை அழுதால் தாய் பொறுப்பாளா சஹிப்பாளா?

“ஆபரேஷன்ல எனக்கு நம்பிக்கை இல்லே.பெரியவா, அதுவும், மண்டையை திறந்து உள்ளே ஆபரேஷன் என்கறது சரிப்பட்டு வராது. விபரீத விளைவு ன்னு சொல்றா. நேக்கு சரியா படலே..பெரியவா ” ராமரத்னம் திக்கி திக்கி அழுதுகொண்டே சொல்ல மஹா பெரியவா மௌனமாக அந்த பையன் ராமநாதனைப் பார்த்தார்.

அங்கிருந்த எல்லோருக்குமே அதிர்ச்சி. மஹா பெரியவா அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மோனம் கலைந்து என்ன வார்த்தை வரப்போகிறதோ?” காது, கண் எல்லாவற்றையும் கூராக்கிக் கொண்டனர். தெய்வம் அந்தப் பையனைப் பார்த்து மெல்லிய குரலில் பேசியது.

“உன் பேர் ராமநாதன் தானே… நீ என்ன பண்றே. …காவேரிக் கரையோரமா இருக்கற எதாவது ஒரு க்ஷேத்ரத்துக்கு போ! ஸ்வாமி தர்சனம் பண்ணு! தெனோமும் விடிகாலம்பற காவேரிக் கரையோட களிமண்ணை நிறைய எடுத்து தலைல முழுக்க அப்பிண்டு அரை மணி நேரம் உக்காரு. அப்புறம், ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், ஸ்வாமி தர்சனம், எல்லாம் பண்ணு. நல்ல ஆசாரமான எடத்ல தங்கணும். ஸ்வயம்பாகம் பண்ணி சாப்டணும்…… இப்டீயா ஒரு மண்டலம், நாப்பது நாப்பத்தஞ்சு நாள் …இருந்தாலே எல்லாம் செரியாயிடும்…கவலைப்படாம போ.பயப் படவே வேண்டாம். ஒண்ணும் ஆகாது போ “

அந்த இளம் தம்பதிகளுக்கு மட்டுமா சந்தோஷம்? அங்கே இருந்த அனைவருமே சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார்கள் ராமரத்னம் குடும்பம் ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு அடுத்த நிமிஷமே நேராக, திருச்சி அருகே காவேரிக் கரையில் ஒரு க்ஷேத்ரத்தில் தங்கினார்கள்.

பழைய காவேரிக்கரையிலேயே இருந்த ஒரு சிவன் கோவில். அங்கே ஒரு இடம் பிடித்து தங்கினான் பையன் மனைவியோடு. பெரியவா சொன்னபடியே ப்ராத ( விடியல்) காலத்தில் களிமண் காப்பு, ஸ்நானம், ஸந்த்யா வந்தனம், ஸ்வாமி தர்சனம், ஸ்வயம்பாகம் (தானே மடியாக சமைத்து) எல்லாம் அழகாக சிரத்தை யோடு. காலம் ஓடியது. நாற்பது நாள் ஆகிவிட்டது.

ரெண்டு பேரும் ஊருக்கு திரும்பினார்கள். ராமநாதனுக்கு இப்போ தலைவலியை காணோம்.
” டாக்டரிடம் போய் பார்த்துடுவோம்” . மனைவி சொன்னபடி இருவரும் சுப்பராயனை சந்தித்தார்கள். வழக்கம் போல் டெஸ்ட் எல்லாம் எடுத்துவிட்டு ரிப்போர்ட் காகிதங்களை மேய்ந்தார். செக் பண்ணி விட்டு,
“அட ஆச்சர்யமாக இருக்கே. ஒண்ணுமே காணுமே. TUMOUR trace இல்லையே! கட்டி கம்ப்ளீட்டா கரைஞ்சு போய்டுத்தே.”

நீங்களே சொல்லுங்கள் அந்த ரெண்டு இளம் தம்பதிக ளும் அப்போது உடனே என்ன செய்திருப்பார்கள்?
ஓடி வந்தார்கள் மகா பெரியவாளிடம். ஒண்ணரை மாசத்துக்கு முன் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டவள், இப்போது ஆனந்தம் தாங்காமல் கண்ணீர் விட்டாள். முகமெல்லாம் ஆனந்த சந்தோஷ பிரதி பலிப்பு. நன்றி உணர்ச்சியால் வார்த்தைகளே வரவில்லை.

“பெரியவா.. பெரியவா….” காலைத் தொடாத குறையாக கீழே விழுந்த ஹேமா கணவனோடு எழுந்திருக்க மறுத்தாள்.

”எழுதிரும்மா, நிறைய பேர் காத்திருக்கிறார்களே” . மடத்து உதவியாளர் மெதுவாக ஜாடை காட்டி அவர்களை எழுந்திருக்க வைத்தார்.

”கை தொழுது அவரையே பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்ணிடமும் பையனிடமும் பிரசாதம் அளித்து விட்டு பேசும் தெய்வம் என்ன சொல்லியது தெரியுமா ?

“நா….என்ன பெருஸ்…ஸா பண்ணிட்டேன்? “வைத்யோ நாராயணோ ஹரி” தெரியுமோன்னோ? நேக்கு ஒண்ணும் தெரியாது. போங்கோ க்ஷேமமா இருங்கோ “

ராமநாதனுக்கு அவன் தினமும் சொல்லும் ஸ்ரீ ருத்ரத்தின் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அவரைப் பார்த்ததும் அப்போது தான் புரிந்தது ”பேஷஜம் பிஷகு” மஹா வைத்யநாதன் ஈஸ்வரனும் அவன் அம்சமான மஹா பெரியவா போன்றவர்களும் தான்.

या ते रुद्र शिवा तनूः शिवा विश्वाह भेषजी ।शिवा रुद्रस्य भेषजी तया नाे मृड जीवसे ॥ १०
Ya te Rudra Shiva tanu Shiva vishvaha bheshaji, Shiva Rudrasya Bhesaji tasya no mruda jivase ||
”என்னப்பா பரமேஸ்வரா, மஹா ருத்ரா, அமைதி, ஆனந்தம், சுபம் அளிக்கும் மூர்த்தி. உன் உருவமே சர்வ வியாதி நிவாரணி, மனிதனுக்கு நேரும் உள், வெளி துன்பங்களை தீர்ப்பது ஸர்வ ரோக நிவாரணி. உன் ஞானப்ரகாச ஒளி பட்டாலே போதும். வைத்தியத் துக்கே வைத்தியம் செய்பவர் ஆயிற்றே அந்த சிவஸ்வரூபம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;