CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி.    நங்கநல்லூர்  J K  SIVAN 

रूपयौवनसम्पन्ना विशालकुलसम्भवाः। विद्याहीना न शोभन्ते निर्गन्धाः किंशुका यथा॥ ०३-०८
rūpayauvanasampannā viśālakulasambhavāḥ। vidyāhīnā na śobhante nirgandhāḥ kiṃśukā yathā॥ 03-08
குலத்தளவே ஆகுமாம்  குணம் என்று இப்போதெல்லாம்  சொல்வதற்கு வழியில்லை.  ஆகவே  தானாகவே  ஒவ்வொருவரிடமும் வெளிப்படும்.  மேற்கு மாம்பலத்தில்  பிராமின் தெரு  என்று ஒரு தெரு இருந்தது.  ஜாதி பெயர் ஒழிப்பு என்று  தெருக்கள்  பாதி அடையாளங்களை விட்டன.  பிராமின் தெரு   வெறும் ”தெரு” வாக நின்றது.   இளமை,  அழகு, பணம்,  அந்தஸ்துள்ள குடும்பம்  என்று  ஊரே  போற்றினாலும் படிப்பு வாசனையே இல்லாமல் எங்கோ எளிதில் பட்டத்தை வாங்கி பேருக்கு பின்னால்  அடுக்கிக் கொண்டவன் சாயம் எளிதில் வெளுத்து விடும்.  துடைப்பத்துக்கு பட்டு குஞ்சலம்!  ஊமத்தம்பூவுக்கு மணம்  எங்கிருந்து வரும்?  என்கிறார்  சாணக்கியர்.


कामधेनुगुना विद्या ह्यकाले फलदायिनी। प्रवासे मातृसदृशी विद्या गुप्तं धनं स्मृतम्॥ ०४-०५
kāmadhenugunā vidyā hyakāle phaladāyinī। pravāse mātṛsadṛśī vidyā guptaṃ dhanaṃ smṛtam॥
கல்வி  என்பது  காமதேனு  என்று  அறிந்து கொள்.  காமதேனு  கேட்டதெல்லாம் கொடுக்கும்  பசு .   எந்த காலத்திலும் கல்வியறிவு  கை  கொடுக்கும்.  அதற்கு  நேரம் காலம்    எல்லையே இல்லை.   தாய் மாதிரி அது.   குழந்தை எங்கு சென்றாலும் அதற்கு பசி என்று  அது அழுவதற்கு முன்பே,  தானே அறிந்து  பால் புகட்டுபவள் போல்,  கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு.  மற்றவனுக்கு செருப்பு.   கல்வி கண்ணுக்குத் தெரியாத  பெரும் செல்வம். திருட முடியாதது.यथा चतुर्भिः कनकं परीक्ष्यते निघर्षणच्छेदनतापताडनैः। तथा चतुर्भिः पुरुषः परीक्ष्यते त्यागेन शीलेन गुणेन कर्मणा॥ ०५-०२
yathā caturbhiḥ kanakaṃ parīkṣyate nigharṣaṇacchedanatāpatāḍanaiḥ। tathā caturbhiḥ puruṣaḥ parīkṣyate
tyāgena śīlena guṇena karmaṇā॥ 05-02

ஸ்புடம் போடுவது என்றால் அக்னியில் தங்கத்தை  போட்டு அதை  வாட்டி, வெட்டி, முறுக்கி,  அடித்து, அழகூட்டுவதால் தான்  அது மேன்மை பெறுகிறது.   AC  ஷோ கேஸில்  தானாக போய்  அதிக  விலை யோடு அது  உட்காரவில்லை.   இத்தனை  கஷ்டங்களைத் தாங்கியபிறகே  அதற்கு உயர்ந்த ஸ்தானம்.   ஒவ்வொரு மனிதனும் பொன் போன்றவன்.  தியாகம், அவன்  குணம், அவன்  பொறுமை,  அவன்  நம்பிக்கை, அவன் பரோபகாரம், நேர்மை, நற் செயல்கள் அவனை  உயர்த்துவதற்கு முன் அவன் தன்னை தானே பல  சோதனைகளுக்கு  உட்படுத்திக் கொண்டு ஒளிர்பவன்.

दारिद्र्यनाशनं दानं शीलं दुर्गतिनाशनम्।अज्ञाननाशिनी प्रज्ञा भावना भयनाशिनी॥ ०५-११
dāridryanāśanaṃ dānaṃ śīlaṃ durgatināśanam। ajñānanāśinī prajñā bhāvanā bhayanāśinī॥ 05-11

தானம் கொடுக்க கொடுக்க  தான் தரித்திரம்   தொலையும்.  துன்பம் வந்தால் நகுக  என்றபடி  தளராத நெஞ்சம் கொண்ட திட மனம் துக்கத்தை, துன்பத்தை அகற்றும்.   எதை அறியவேண்டும் என்ற அறிவு அஞ்ஞானத்தை விளக்கும்.  பாகுபாடுடன் ஈடுபடும் செயல்  சொல் இரண்டும்  பயத்தை போக்கும். .

जन्ममृत्यू हि यात्येको भुनक्त्येकः शुभाशुभम्। नरकेषु पतत्येक एको याति परां गतिम्॥ ०५-१३
janmamṛtyū hi yātyeko bhunaktyekaḥ śubhāśubham। narakeṣu patatyekaeko yāti parāṃ gatim॥ 05-13

ராஜாவோ, பிச்சைக்காரனோ,  கோடீஸ்வரனோ, பரதேசியோ,  ஒவ்வொருவனும்  தனியாகத்தான் துணையின்றி பிறந்து தனியாக துணையின்றி மறைபவன்.  அவன்  யாராக இருந்தால் என்ன?   தான் செய்த கர்ம பலனுக்கேற்றவாறு இன்பமும் துன்பமும்  அனுபவிக்கிறான்.   அதன் பலனாக தனியாக  மோக்ஷமோ, நரகமோ செல்கிறவன்.எது எல்லோருக்கும் பொது விதி.  ரெகமெண்டேஷன், பெரிய இடத்து அரசியல் வியாதி சிபாரிசு,  லஞ்சம் கொடுத்து பெறமுடியாது.

सत्येन धार्यते पृथ्वी सत्येन तपते रविः।सत्येन वाति वायुश्च सर्वं सत्ये प्रतिष्ठितम्॥ ०५-१९
satyena dhāryate pṛthvī satyena tapate raviḥ। satyena vāti vāyuśca sarvaṃ satye pratiṣṭhitam॥ 05-19

நம்மைத்  தாங்கி  வாழ்விக்கும் இந்த  பூமி ஏதோ ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்டது. அது தான்  ப்ரம்மம்.  அந்த சக்தியே சூரியனை சரியாக காலையில் எழுப்பி  ஒளி வீசிவிட்டு சாயந்திரம் மறையச்  செய்கிறது.  காற்றை மிருதுவான தென்றலாகவும் சூறாவளியாக வும்  வீசச்  செய்கிறது.  சர்வம் ப்ரம்ம மயம் ஜகத்   என்பது புரிகிறதா?  ப்ரம்மம் ஒக்கட்டே , ஒன்று தான்.   அதுவே பரம்பொருள் என்று   நம்மால் இரு கை கூப்பி வணங்கப்படுவது.

कालः पचति भूतानि कालः संहरते प्रजाः।कालः सुप्तेषु जागर्ति कालो हि दुरतिक्रमः॥ ०६-०७
kālaḥ pacati bhūtāni kālaḥ saṃharate prajāḥ। kālaḥ supteṣu jāgarti kālo hi duratikramaḥ॥ 06-07

காலம்  இருபக்கமும்  கூரான கத்தி.  ஜீவன்களை உன்னதமாக வாழ்விக்கும். அதே சமயம்  அவர்கள் ஈவிரக்கம் இன்றி அழிக்கும் தன்மை கொண்டது.  எது உறங்கினாலும்  விழிப்போடு எப்போதும்  செயல்படுவது காலம் தான் என்பது நினைவிருக்கட்டும்.  அதை மீறவே முடியாது. அதற்கு கட்டுப்பட்டு தான் நாம் வாழவேண்டும். அது சத்யத்திற்குட்பட்டது.

संतोषस्त्रिषु कर्तव्यः स्वदारे भोजने धने। त्रिषु चैव न कर्तव्योऽध्ययने जपदानयोः॥ ०७-०४
saṃtoṣastriṣu kartavyaḥ svadāre bhojane dhane। triṣu caiva na kartavyo’dhyayane japadānayoḥ॥ 07-04

மனைவி, உணவு, பணம்  இது மூன்று தான் ஒருவனின் வாழ்வில்  அவனுக்கு தெம்பு கொடுப்பவை திருப்தி அளிப்பவை.  கல்வி,  தியானம்,  தர்மம்  இவற்றுக்கு  எல்லையே இல்லை, மேலும் மேலும்  ஈடுபட்டுக்கொண்டே இருக்கவேண்டியவை. போதும் என்ற திருப்தி இதற்கில்லை.

दीपो भक्षयते ध्वान्तं कज्जलं च प्रसूयते। यदन्नं भक्षयेन्नित्यं जायते तादृशी प्रजा॥ ८ – ०३
dīpo bhakṣayate dhvāntaṃ kajjalaṃ ca prasūyate।yadannaṃ bhakṣayennityaṃ jāyate tādṛśī prajā॥

தீபத்தின்  குணம் என்ன தெரியுமா ?   ஒளிவீசும்போதே, இருட்டை கடித்து மென்று விழுங்கி கரியாக, புகையாக வெளிவிடுவது.. எதை நாம்  சாப்பிடுகிறோமோ  உணவாக,  அதைப் பொருத்து தான் நமது செயல்களின் வெளிப்பாடு இருக்கும். நமது வாரிசுகளும் அதற்கேற்ப தான் உருவாகும்.   ரிஷிகள், ஞானிகள் அதனால் தான்  சாத்வீக உணவை தேர்ந்தெடுத்தார்கள்.

क्रोधो वैवस्वतो राजा तृष्णा वैतरणी नदी ।विद्या कामदुधा धेनुः संतोषो नन्दनं वनम् ॥८-१४॥
krodho vaivasvato rājā tṛṣṇā vaitaraṇī nadī ।vidyā kāmadudhā dhenuḥ saṃtoṣo nandanaṃ vanam ॥8-14॥

கோபம்  ஆத்திரம் இதெல்லாம்  யார்?  யமனின்  உருவங்கள். தாகம் இருக் கிறதே  அது தான் நரகமான  வைதரணி நதி.  ஞானம் தான்  காமதேனு. எதேஷ்டமாக  கேட்பதெல்லாம் அருள்வது.   திருப்தி என்பது தான் இந்திரனின்   நந்தவனம் போன்றது.   போதும் என்ற மனம்  பொன்  செய்யும் மருந்து என்று தெரியாமலா சொல்லி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்..

प्रलये भिन्नमर्यादा भवन्ति किल सागराः ।सागरा भेदमिच्छन्ति प्रलयेऽपि न साधवः ॥ ०३-०६
pralaye bhinnamaryādā bhavanti kila sāgarāḥ।sāgarā bhedamicchanti pralaye’pi na sādhavaḥ॥ 03-06

யுக  சந்தியில் ப்ரளயம் உருவாகி  உலகத்தை அழிக்கும்.  அப்போது  சமுத்திரங்கள் எல்லை மீறும்.  எல்லாம்  மறையும். மாற்றம் எங்கும்  உருவாகும். 

 பழையனவெல்லாம்  மறைந்து புதியன  புகும்.  ஞானி இதனால்  மாறுவதில்லை.  


रूपयौवनसम्पन्ना विशालकुलसम्भवाः।विद्याहीना न शोभन्ते निर्गन्धाः किंशुका यथा॥ ०३-०८
rūpayauvanasampannā viśālakulasambhavāḥ। vidyāhīnā na śobhante nirgandhāḥ kiṃśukā yathā॥ 03-08
வாழ்வில்  எது  முக்கியம்.  அழகா? யௌவனமா?  மஹாராஜா, பிரபு குடும்பத்தில் பிறப்பதா?? சே சே  இதனால்  எல்லாம் ஒரு  பிரயோஜனமும் இல்லை.  கல்விஞானம் இல்லாதவன் மேலே  சொன்னதெல்லாம் இருந்தாலும்  வாசனையற்ற  ஒரு காட்டுப்பூ .  எவராலும் லக்ஷியம் பண்ணப்பட்ட மாட்டான்.  நாம் தான்  பார்க்கிறோமே தினமும் யூட்யூபில் எத்தனை அரசியல் வியாதிகள். 
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;