
ஒரு நித்ய பிரம்மச்சரியம், நித்ய உபவாசியும். -நங்கநல்லூர் J K SIVAN
நான் அநேகமாக புதிதாக எதையாவது படித்தறிந்து சிந்தித்து எழுதுவது என்றால் அது இரவு 12 மணிக்கு மேல் தான் இருப்பது வழக்கம்.,ஏன்? எங்கும் நிசப்தம். டெலிபோன் வராது. வந்தாலும் எடுக்கமாட்டேன். மனது அமைதியில் வசித்து ரசித்து படிக்கும் விஷயத்தை எந்த இடையூறுமின்றி உள்வாங்கி ஜீரணித்து புரிந்து பிறகு புரிந்த வரையில் எளிதாக சொல்லவோ எழுதவோ முயற்சிக்கும்.
கிருஷ்ணன் பற்றிய விஷயங்களை நாம் அவனைப் பற்றி படிக்கும் புத்தகங்கள் காட்டும் உருவத்துக்கும் அவனை உண்மையாக புரிந்து கொள்வதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது.
உதாரணமாக ஒரு சின்ன சம்பவம் நினைவூட்டுகிறேன்
.
ருக்மணியும் கிருஷ்ணனும் யமுனை நதிக்கரையில் சில நாட்கள் வந்து ஒரு பர்ணசாலையில் தங்குகி றார்கள்.
ஒருநாள் காலையில் எதையோ மறந்ததை நினைவுக் கு கொண்டு வருபவன் போல் கிருஷ்ணன் யோசிப்ப தை ருக்மணி கவனிக்கிறாள்.அவள் மனதைப் புரிந்து கொள்ளவா முடியாது கிருஷ்ணனால்! மெதுவாக பேச்சை ஆரம்பிக்கிறான்.
“ருக்மணி ஒரு வேலை எனக்காக செய்கிறாயா ?” என்றான் கிருஷ்ணன்
.”என் பிராண நாதா, அது என் பாக்கியம், சொல்லுங் கள்”
“இதோ அந்த யமுனை நதியின் அக்கரையில் ஒரு ஆஸ்ரமத்தில் துர்வாச முனிவர் வந்து தங்கியிருக்கி றார் என்று கேள்விப்பட்டேன். அவருக்கு இன்று ஒரு சிறந்த விருந்து அளிக்க விரும்புகிறேன். உடனே தயார் செய்து நீயே அதை கொண்டு போய் அவருக்கு பரிமாருகிறாயா?”
“உடனே செய்கிறேன்”
ருக்மணி அறுசுவை உண்டி தயாரித்து நிறைய எடுத்து கொண்டு யமுனை நதியை அணுகினாள். வெள்ளம் கரை புரண்டோடியது எப்படி கடப்பது? படகு ஒன்றுமே இல்லையே?
” கிருஷ்ணா நான் எப்படி அக்கரை போவது ? இன்று என்னவோ படகு ஒன்றைக் கூட காணோமே.”
“ஒ. ஆமாம் யமுனையில் வெள்ளம் வந்தால் படகு ஓட்டமாட்டார்கள். நீ ஒரு காரியம் செய்யேன்? யமு னைக் கரையில் நின்று கொண்டு ” அம்மா யமுனா, ஒரு நித்ய பிரம்மச்சாரி” உன்னை எனக்கு வழி விடச்சொன்னார்” என்று யமுனா தேவியைக் கேள். வழி விடுவாள்” என்றான் கிருஷ்ணன்
.”கிருஷ்ணா யார் அந்த நித்ய ப்ரம்மசாரி?”
” என்ன ருக்மணி இப்படி கேட்டு விட்டாய், நான் தான் அந்த நித்யப்ரம்மச்சாரி.!.”
ருக்மணி கொள்ளை சிரிப்பு. இருந்தாலும் தன்னை ஒருவாறு சுதாரித்துக்கொண்டு மனதுக்குள் சிரித்தாள் தன்னையும் சேர்த்து எட்டு மனைவிகள் கொண்ட இந்தப் பயல் கிருஷ்ணனா நித்ய பிரம்மச்சாரி?!, என்ன வேடிக்கை. பரவாயில்லை, கிருஷ்ணன் சொன்னதை செய்வது தான் என் கடமை”
அறுசுவை உணவு வகைகளை நிறைய தயாரித்து எடுத்துக் கொண்டு வெள்ளம் ஓடும் யமுனைக் கரை யில் நின்று கிருஷ்ணன் சொன்னதை அப்படியே உச்சரித்து வேண்டினாள். என்ன ஆச்சர்யம் ஒரு பாதை வெள்ளம் ஓடும் யமுனையைப் பிரித்துக் கொண்டு நடுவே ஒரு ஆள் நடக்க வழிவிட்டது. .அக்கரை போனாள்
ஆஸ்ரமத்தில் காத்து கொண்டிருந்த துர்வாச முனிவ ருக் கு அறுசுவை உண்டியை திருப்தியாக படைத்தாள். திரும்பி வரும்போது பார்க்கிறாள். வரும்போது இருந்த தை விட இப்போது அதிகரித்து யமுனை ஹோ என்ற ஓசையோடு பெரு வெள்ளத்துடன் ஓடுவதை கண்டு தயங்கினாள்.
“என்ன யோசிக்கிறாய் ருக்மணி?” என்றார் துர்வாசர்.”
”மகரிஷி யமுனையை பார்த்தீர்களா? அந்தி நெருங்கி இருள் சூழ்வதற்குள் நான் அக்கரை செல்லவேண்டும். என் பிராணநாதர் காத்துக்கொண்டிருப்பார். யமுனை யில் வெள்ளம் எப்போது வடிந்து எப்போது நான் திரும்புவது? என்று தான் கவலைப் படுகிறேன்.”
.”ருக்மணி, நீ கொஞ்சமும் கவலைப்படாதே. யமுனை நதி அருகே நின்று ” அம்மா யமுனா தேவி, இங்கே ஒரு நித்ய உபவாசி உன்னை எனக்கு வழி விட கேட்கிறார் வழி விடு” என்று சொல். வந்த போது உனக்கு கிடைத்த வழி இப்போதும் திரும்பிப் போக கிடைக்கும்”
மறுபடியும் அந்த நிலையிலும் ருக்மணியால் சிரிப்பை அடக்க முடிய வில்லை. இப்போது தான் மூக்கு பிடிக்க வயிறு வெடிக்க நான் கொண்டு வந்த உணவு அத்த னையும் சாப்பிட்ட இவரா நித்ய உபவாசி? வாய் திறக் காமல் சிரிக்காமல் ரிஷி சொன்னபடியே செய்தாள். அவர் பெரிய கோபக்கார முனிவராச்சே. ஆச்சர்யமாக இப்போதும் யமுனை உடனே வழி விட் டாள்.
ஆஸ்ரமம் திரும்பி கிருஷ்ணனிடம் ஆச்சர்யங்கள் நிறைந்த இந்த விஷயத்தை சொல்லும் போது அவளுக்கு மனதில் ஒரே குமைச்சல், என்ன இது, ஒருவர் நித்ய பிரமச்சாரியாம் ஒருவர் நித்ய உபவாசம் இருப்பவராம்! சம்திங் ராங் என்று யோசித்தாள் .கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே பேசினான்
“ருக்மணி, உனது மனதில் ஓடும் எண்ணம் என்ன என்று எனக்கு தெரியும் நானே விளக்குகிறேன் உனக்கு. நீ பார்க்கும் இந்த உடல் வேறு, உள்ளே இருக்கும் நான் வேறு, துர்வாசர் உடலில் வாசம் செய்யும் ஆத்மாவும் அவ்வாறே. உடல் சம்பந்தப்பட்ட எந்த ஆசை, பாசம், உணர்ச்சி, காலம், நேரம், உணவு, உறவு, வேண்டியது, வேண்டாதது செய்யும் செயல் ஆத்மாவாகிய எங்களுக்கு கிடையாது.
பிரம்மச்சாரி என்பவன் உடலால் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாதவன் என்று மட்டும் புரிந்து கொள்ளவேண்டாம். தாமரை இலைத் தண்ணீர் போல க்ரஹஸ்தனாக, பல தார கணவனாக இருந்தும் சதா ப்ரம்மத்திலேயே திளைப்பவன் நித்ய பிரம்மச் சாரி. உபவாசி என்பவன் தின்பண்டங்களால், உணவால் வயிற்றை நிரப்பாதவன் என்று அர்த்தமல்ல. இந்த உடல் எதை உண்டாலும் உண்ணாவிட்டாலும் ஆத்மா பரமாத்மாவோடு சதா அவனருகிலேயே வாசம் செய்பவன் நித்ய உபவாசி. அவர்களை இயற்கை மதிக்கும். யமுனா இதை அறிந்தவள். நான் நித்ய பிரம்மச்சாரி துர்வாசர் நித்ய உபவாசி என்பதை அறிந்து கொள்ள முடிந்தவர்களால் மட்டுமே அதை உணரமுடியும். புரிகிறதா”.
புரிகிற பக்குவம் வந்தால் உனக்கு இது விளங்கும்” என்றான் கிருஷ்ணன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



