
ஸ்ரீமத் பாகவதம் – 12வது காண்டம் 3வது அத்யாயம்.- நங்கநல்லூர் J K SIVAN
பூமி கீதை
ஸ்லோகங்கள் 12.3. 6-13
6. यां विसृज्यैव मनवस्तत्सुताश्च कुरूद्वह । गता यथागतं युद्धे तां मां जेष्यन्त्यबुद्धय: ॥ ६ ॥
yāṁ visṛjyaiva manavas tat-sutāś ca kurūdvaha gatā yathāgataṁ yuddhe tāṁ māṁ jeṣyanty abuddhayaḥ
குரு வம்சத்தில், பாண்டவ குடும்பத்தில் உதித்த மஹா வீர புருஷ பரீக்ஷித் ராஜனே, மேலே பூமாதேவி சொன்னதை உனக்கு உபதேசிக்கிறேன் கேள். “ எத்தனையோ மூட அரசர்கள் என்னை முழுதுமாக சாஸ்வதமாக ஆண்டு அனுபவிக்க முயன்று மரணத்தை தான் கடைசியில் அடைந்தார்கள். அவர்கள் வம்சாவழியில் வந்த மற்ற அரசர்களுக்கும் இந்த ஆசை அடங்கவில்லை. என்னை ஆளவேண்டும் என்ற மண்ணாசை, பேராசை யோடு வெற்றிபெற முயல்கிறார்கள். இந்த முட்டாள்தனத்திற்கு முடிவே இல்லை போலிருக்கிறது. பூமாதேவி சொவ்லது நியாயம் தான். இன்றும் மற்றவர் நிலத்தை அபகரிக்கும், ஆக்கிரமிக்கும் மூடர்கள் இருக்கிறார்களே.
7. मत्कृते पितृपुत्राणां भ्रातृणां चापि विग्रह: । जायते ह्यसतां राज्ये ममताबद्धचेतसाम् ॥ ७ ॥
mat-kṛte pitṛ-putrāṇāṁ bhrātṝṇāṁ cāpi vigrahaḥ jāyate hy asatāṁ rājye mamatā-baddha-cetasām
பூமியை ஆள்வதற்கு ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை போட்டா போட்டி. அப்பா பிள்ளையை கோர்ட்டில் சந்திக்கிறான். பிள்ளை அப்பாவைக் கொல்ல பிளான் போடுகிறான். முகலாய சரித்திரபக்கத்தில் ஜஹாங்கீர். ஷாஜஹான், ஒளரங்கசீப் எவ்வளவு பெயர்கள் நம் கண்ணில் படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் என்ன பஞ்சமா? கோர்ட்டில் எத்தனையோ சகோதர,சகோதரிகள் அப்பாஅம்மா வழக்குகள் இன்னும் பைசல் ஆகவில்லையே. எல்லாம் காசாசை, மண்ணாசை தான் காரணம்.
8. ममैवेयं मही कृत्स्ना न ते मूढेति वादिन: । स्पर्धमाना मिथो घ्नन्ति म्रियन्ते मत्कृते नृपा: ॥ ८ ॥
mamaiveyaṁ mahī kṛtsnā na te mūḍheti vādinaḥ spardhamānā mitho ghnanti mriyante mat-kṛte nṛpāḥ
அரசியல் களத்தில் மட்டும் என்ன வாழ்கிறது? கட்சி கொடி ஜாதி என்று பங்கு பிரித்துக்கொண்டு சண்டை எல்லாம் எதற்கு, பதவிஅதன்மூலம் காசு, நிலம் நீச்சு, இதல்லாம் அடைவதற்கு தானே. மக்கள் நலனுக்காகவா இவர்கள் போட்டி போடுகிறார்கள்? எல்லா நிலமும் என்னுடையதே என்ற முட்டாள் தனம் நிறைந்த ஆசை தானே என்கிறாள் பூமாதேவி.
9. श्रीशुक उवाच: पृथु: पुरूरवा गाधिर्नहुषो भरतोऽर्जुन: ।मान्धाता सगरो राम: खट्वाङ्गो धुन्धुहा रघु: ॥ ९ ॥
10. तृणबिन्दुर्ययातिश्च शर्याति: शन्तनुर्गय: ।भगीरथ: कुवलयाश्व: ककुत्स्थो नैषधो नृग: ॥ १० ॥
11. हिरण्यकशिपुर्वृत्रो रावणो लोकरावण: ।नमुचि: शम्बरो भौमो हिरण्याक्षोऽथ तारक: ॥ ११ ॥
12. अन्ये च बहवो दैत्या राजानो ये महेश्वरा: ।सर्वे सर्वविद: शूरा: सर्वे सर्वजितोऽजिता: ॥ १२ ॥
13. ममतां मय्यवर्तन्त कृत्वोच्चैर्मर्त्यधर्मिण: ।कथावशेषा: कालेन ह्यकृतार्था: कृता विभो ॥ १३ ॥
pṛthuḥ purūravā gādhir nahuṣo bharato ’rjunaḥ māndhātā sagaro rāmaḥ khaṭvāṅgo dhundhuhā raghuḥ
tṛṇabindur yayātiś caśaryātiḥ śantanur gayaḥ bhagīrathaḥ kuvalayāśvaḥ kakutstho naiṣadho nṛgaḥ
hiraṇyakaśipur vṛtro rāvaṇo loka-rāvaṇaḥ namuciḥ śambaro bhaumo hiraṇyākṣo ’tha tārakaḥ
anye ca bahavo daityā rājāno ye maheśvarāḥ sarve sarva-vidaḥ śūrāḥ sarve sarva-jito ’jitāḥ
mamatāṁ mayy avartanta kṛtvoccair martya-dharmiṇaḥ kathāvaśeṣāḥ kālena hy akṛtārthāḥ kṛtā vibho
“பழைய ராஜாக்களை எடுத்துக் கொள் . ப்ருது , ப்ரூரவன், காதி, நஹுஷன், பரதன், கார்த்தவீர்யார்ஜுனன், மாந்தாதா, சகரன், ராமன், கட்வாங்கன், துந்துஹன், ரகு, த்ருணபிந்து, யயாதி, ஸர்யாதி, சந்தனு, கயன் ,பகீரதன்,குவலயாஸ்வன், காகுத்ஸன், நைஷதன்,ந்ருகன், ஹிரண்யகசிபு, வ்ரித்ரன்,ராவணன் இவர்கள் எல்லோருமே எவ்வளவு பலம் வாய்ந்த ராஜாக்கள், உலகை ஆண்டவர்கள். நமுசி, சம்பரன் பௌமன், ஹிரண்யாக்ஷன், தாரகன் போன்ற அசுரர்களும் பலமானவர்கள், அதிக சக்திகொண்டவர்கள். அடக்கி ஆளும் தகுதி பெற்றவர்கள். வெற்றி கொள்ள முடியாதவர்கள். இவர்கள் எல்லோரும் கூட என்னை சாஸ்வதமாக ஆள ஆசை கொண்டு தோற்று, மாண்டவர்கள்”என்று நினைவு கூறுகிறாள் பூமா தேவி.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



