
விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
ஸ்லோகங்கள் 156-170
156. पाणिपादादिमान्देहो नात्मा व्यङ्गेऽपि जीवनात्। तत्तच्छक्तेरनाशाच्च न नियम्यो नियामकः ॥ १५६॥
pāṇipādādimāndēhō nātmā vyaṅgē’pi jīvanāt ।tattachChaktēranāśāchcha na niyamyō niyāmakaḥ ॥ 156॥
பாணிபாதா³தி³மாந்தே³ஹோ நாத்மா வ்யங்கே³ऽபி ஜீவநாத் । தத்தச்ச²க்தேரநாஶாச்ச ந நியம்யோ நியாமக: ॥ 156॥
இது என் கை , கால், கழுத்து, மார்பு என்று சொல்கிறாயே அதுவா நீ, இல்லை. நீ ஆத்மா. உருவமில் லாதவன். கை ,கால் இல்லாமல் கூட வாழலாம். ஆத்மா இல்லாவிட்டால் பிணம். புலன்கள் ஆத்மாவில் அடங்கியவை ஆனால் அதன் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. மனம் சொன்னபடி தான் ஆடுகிறது. .
157. देहतद्धर्मतत्कर्मतदवस्थादिसाक्षिणः । सत एव स्वतःसिद्धं तद्वैलक्षण्यमात्मनः ॥ १५७॥
dēhataddharmatatkarmatadavasthādisākṣiṇaḥ । sata ēva svataḥsiddhaṃ tadvailakṣaṇyamātmanaḥ ॥ 157॥
தே³ஹதத்³த⁴ர்மதத்கர்மதத³வஸ்தா²தி³ஸாக்ஷிண: । ஸத ஏவ ஸ்வத:ஸித்³த⁴ம் தத்³வைலக்ஷண்யமாத்மந: ॥
ஆத்மாவின் நிலைப்பாடு, குணமே தனி. அது சத்ய பிரமாணம். உடம்புக்கும், மனதுக்கும் அதற்கும் காத தூரம். ஆத்மா மனம் போனபடி ஆடும் உடல் செய்யும் காரியங்களுக்கு சம்பந்தமில்லாத வெறும் சாக்ஷியாக மட்டும் செயல்படுகிறது.
158, शल्यराशिर्मांसलिप्तो मलपूर्णोऽतिकश्मलः । कथं भवेदयं वेत्ता स्वयमेतद्विलक्षणः ॥ १५८॥
śalyarāśirmāṃsaliptō malapūrṇō’tikaśmalaḥ । kathaṃ bhavēdayaṃ vēttā svayamētadvilakṣaṇaḥ ॥ 158॥
ஶல்யராஶிர்மாம்ஸலிப்தோ மலபூர்ணோऽதிகஶ்மல: । கத²ம் ப⁴வேத³யம் வேத்தா ஸ்வயமேதத்³விலக்ஷண: ॥
சில்கோ, கதரோ , வெள்ளை சட்டை, பாக்கெட்டில் படம், வெள்ளை வெட்டி,நெற்றியில் சும்மா ஒரு வெள்ளை விபூதி கீற்று வேஷம், இதுவா உடம்பு. சே. வெறும் எலும்புகளின் கத்தை ஏதோ தோலினால் மூடப்பட்டுள்ள ஒரு சமாச்சாரம். அசுத்தமானது, நாற்றம் பிடித்தது. இது எங்கே, பரிபூர்ண சத்ய ஒளியான ஆத்மா எங்கே? அறிந்துகொள்பவன் ஞானி.
159. त्वङ्मांसमेदोऽस्थिपुरीषराशा वहम्मतिं मूढजनः करोति । विलक्षणं वेत्ति विचारशीलो निजस्वरूपं परमार्थभूतम्॥ १५९॥
tvaṅmāṃsamēdō’sthipurīṣarāśā- vahammatiṃ mūḍhajanaḥ karōti । vilakṣaṇaṃ vētti vichāraśīlō nijasvarūpaṃ paramārthabhūtam
த்வங்மாம்ஸமேதோ³ऽஸ்தி²புரீஷராஶாவஹம்மதிம் மூட⁴ஜந: கரோதி । விலக்ஷணம் வேத்தி விசாரஶீலோ நிஜஸ்வரூபம் பரமார்த²பூ⁴தம் ॥ 159॥
இப்படிப்பட்ட தோல் சதை, எலும்பு ரத்தம் சேர்ந்த நாற்றமுடைய, மூட்டையை மதித்து அதை ‘தான்” ஆக , ஆத்மாவாக, சாஸ்வதமானது என்று நினைப் பவன் சர்வ முட்டாள்.
160. देहोऽहमित्येव जडस्य बुद्धिः देहे च जीवे विदुषस्त्वहन्धीः । विवेकविज्ञानवतो महात्मनो ब्रह्माहमित्येव मतिः सदात्मनि ॥ १६०॥
dēhō’hamityēva jaḍasya buddhiḥ dēhē cha jīvē viduṣastvahandhīḥ । vivēkavijñānavatō mahātmanō brahmāhamityēva matiḥ sadātmani ॥ 160॥
தே³ஹோऽஹமித்யேவ ஜட³ஸ்ய பு³த்³தி:⁴ தே³ஹே ச ஜீவே விது³ஷஸ்த்வஹந்தீ:⁴ । விவேகவிஜ்ஞாநவதோ மஹாத்மநோ ப்³ரஹ்மாஹமித்யேவ மதி: ஸதா³த்மநி ॥ 160॥
இந்த உடம்பை முட்டாளானவன் ஆத்மாவாக எண்ணுகிறான்.கொஞ்சம் படித்தவன் இல்லை, இது உடம்பும் ஆத்மாவும் சேர்ந்த கலவை என்று சொல்கிறான். சகலமும் உணர்ந்த அறிந்த ஞானி, ஆத்மா என்பது ப்ரம்மம். உடம்பு,மனம் ரெண்டுமே அது இல்லை என்று புரிந்தவன்.
161,अत्रात्मबुद्धिं त्यज मूढबुद्धे त्वङ्मांसमेदोऽस्थिपुरीषराशौ । सर्वात्मनि ब्रह्मणि निर्विकल्पे कुरुष्व शान्तिं परमां भजस्व ॥ १६१॥
atrātmabuddhiṃ tyaja mūḍhabuddhē tvaṅmāṃsamēdō’sthipurīṣarāśau ।sarvātmani brahmaṇi nirvikalpē kuruṣva śāntiṃ paramāṃ bhajasva ॥ 161॥
அத்ராத்மபு³த்³தி⁴ம் த்யஜ மூட⁴பு³த்³தே⁴ த்வங்மாம்ஸமேதோ³ऽஸ்தி²புரீஷராஶௌ । ஸர்வாத்மநி ப்³ரஹ்மணி நிர்விகல்பே குருஷ்வ ஶாந்திம் பரமாம் ப⁴ஜஸ்வ ॥ 161॥
ஆதிசங்கரர் ஆகவே ‘ ஏ, முட்டாள் மனிதா, இனியாவது உடம்பை ஆத்மா என்று தப்பாக எடை போடாதே, உள்ளே அது இருப்பதை உணர்ந்து கொள்வதன் மூலம் சித்தானந்தம் பெற்று சுகமாக இரு’ என்று உபதேசிக்கிறார்.
162. देहेन्द्रियादावसति भ्रमोदितां विद्वानहन्तां न जहाति यावत्। तावन्न तस्यास्ति विमुक्तिवार्ताप्यस्त्वेष वेदान्तनयान्तदर्शी ॥ १६२॥
dēhēndriyādāvasati bhramōditāṃ vidvānahantāṃ na jahāti yāvat । tāvanna tasyāsti vimuktivārtā- pyastvēṣa vēdāntanayāntadarśī
தே³ஹேந்த்³ரியாதா³வஸதி ப்⁴ரமோதி³தாம் வித்³வாநஹந்தாம் ந ஜஹாதி யாவத் । தாவந்ந தஸ்யாஸ்தி விமுக்திவார்தாப்யஸ்த்வேஷ வேதா³ந்தநயாந்தத³ர்ஶீ ॥ 162॥
கொஞ்சம் அரைகுறையாக படித்தவன் மனதிலிருந்து ஆத்மா உடம்பு ரெண்டும் சேர்ந்தது தான் ‘நான்’ என்ற எண்ணம் விலகவேண்டும். லேசில் ஒப்புக்கொள்ள மாட்டான். நாய் வாலை நிமிர்த்த முடியாது. அவன் முக்தி ஞானம். பெற வழியில்லாதவன்.
163. छायाशरीरेप्रतिबिम्बगात्रे यत्स्वप्नदेहे हृदि कल्पिताङ्गे । यथात्मबुद्धिस्तव नास्ति काचिज्जीवच्छरीरेच तथैव माऽस्तु॥ १६३॥
Chāyāśarīrē pratibimbagātrē yatsvapnadēhē hṛdi kalpitāṅgē । yathātmabuddhistava nāsti kāchi- jjīvachCharīrē cha tathaiva mā’stu ॥ 163॥
சா²யாஶரீரே ப்ரதிபி³ம்ப³கா³த்ரே யத்ஸ்வப்நதே³ஹே ஹ்ரு’தி³ கல்பிதாங்கே³ । யதா²த்மபு³த்³தி⁴ஸ்தவ நாஸ்தி காசிஜ்ஜீவச்ச²ரீரே ச ததை²வ மாऽஸ்து ॥ 163॥
மனிதா நீ தான் உன் நிழலா? இல்லையே, நீ தான் படத்தில் காணப்படுபவனா, இல்லையே அதுவும் நிழல் தானே, அதன் பேரே ”புகை” ப் படம். தானே. கனவில் காரில் லண்டன் போனவன் நீ தானா இல்லையே, இப்போது மைலாப்பூரில் ஒரு புறாக்கூண்டில் நாலாவது மாடியில் தூக்கத்தில் கனவு கண்டு விழித்தவன் தானா நீ, ரெண்டுமே இல்லை. எப்படி இதெல்லாம் நீ இல்லையோ அதே போல் தான் வெள்ளை வேட்டி சட்டை,நெற்றியில் விபூதி கீற்று அலங்கார புருஷனாக காரில் போய்க் கொண்டிருக் கும் உடம்பு கொண்ட நீயும் இல்லை. உருவமில்லாத ஆத்மா நீ என்று எப்போது உணர்வாய்?
164. देहात्मधीरेव नृणामसद्धियां जन्मादिदुःखप्रभवस्य बीजम्। यतस्ततस्त्वं जहि तां प्रयत्नात् त्यक्ते तुचित्तेन पुनर्भवाशा ॥ १६४॥
dēhātmadhīrēva nṛṇāmasaddhiyāṃ janmādiduḥkhaprabhavasya bījam । yatastatastvaṃ jahi tāṃ prayatnāt tyaktē tu chittē na punarbhavāśā ॥
தே³ஹாத்மதீ⁴ரேவ ந்ரு’ணாமஸத்³தி⁴யாம் ஜந்மாதி³து:³க²ப்ரப⁴வஸ்ய பீ³ஜம் । யதஸ்ததஸ்த்வம் ஜஹி தாம் ப்ரயத்நாத் த்யக்தே து சித்தே ந புநர்ப⁴வாஶா
நமக்கு நேரும் சகல கஷ்டங்களும் துயரங்களும் துன்பங்களும் நாம் தான் இந்த உடம்பு என்று நினைப்பதால் தான். பிறப்பு இறப்பு வியாதி எல்லாம் அந்த உடம்புக்குதான். உண்மையான ”நான்” எனும் உள்ளே உள்ள உள்ள நாமாகிய ஆத்மாவுக்கு இல்லை. அடையாளம், பேர், அழகு என்று நினைப்பதெல்லாம் உடம்புக்கு மட்டுமெ .
165 कर्मेन्द्रियैः पञ्चभिरञ्चितोऽयं प्राणो भवेत्प्राणमयस्तु कोशः ॥ येनात्मवानन्नमयोऽनुपूर्णः प्रवर्ततेऽसौ सकलक्रियासु॥ १६५॥
karmēndriyaiḥ pañchabhirañchitō’yaṃ prāṇō bhavētprāṇamayastu kōśaḥ ॥ yēnātmavānannamayō’nupūrṇaḥ pravartatē’sau sakalakriyāsu ॥ 165॥
மேலே நிறைய இடத்தில் சொன்ன இந்த உடம்புக்குள் ஆத்மா எனும் ப்ராணன் ஊடுருவி செல்கிறது. அதனால் தான் இந்தஉடம்பு இயங்குகிறது. உடம்பு இயங்குவதாக நாம் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உடம்பு கார் மாதிரி.அதை இயக்கம் டிரைவர் ஆத்மா எனும் ப்ராணன். நல்ல காரியங்களை சொல்கிறவன், செய்கிறவன் நல்ல ”ஆத்மா” என்று தான் பாராட்டப்படுகிறான். யாரும் நல்ல”உடம்பன் , தேகன், என்று சொல்வதில்லையே.
166. नैवात्मापि प्राणमयो वायुविकारो var नैवात्मायं गन्ताऽऽगन्ता वायुवदन्तर्बहिरेषः । यस्मात्किञ्चित्क्वापि न वेत्तीष्टमनिष्टं स्वं वान्यं वा किञ्चन नित्यं परतन्त्रः ॥ १६६॥
naivātmāpi prāṇamayō vāyuvikārō (pāṭhabhēdaḥ – naivātmāyaṃ) gantā”gantā vāyuvadantarbahirēṣaḥ ।yasmātkiñchitkvāpi na vēttīṣṭamaniṣṭaṃ svaṃ vānyaṃ vā kiñchana nityaṃ paratantraḥ ॥ 166॥
நைவாத்மாபி ப்ராணமயோ வாயுவிகாரோ var நைவாத்மாயம் க³ந்தாऽऽக³ந்தா வாயுவத³ந்தர்ப³ஹிரேஷ: । யஸ்மாத்கிஞ்சித்க்வாபி ந வேத்தீஷ்டமநிஷ்டம் ஸ்வம் வாந்யம் வா கிஞ்சந நித்யம் பரதந்த்ர: ॥ 166॥
இந்த உடலின் அசைவுக்கு, இயக்கத்திற்கு முக்கிய காரணம் ப்ராணன் எனும் வாயு. உடலில் நவ த்வாரங்கள் வழியாகவும் வந்து போகும் வாயு ஒரு நாள் வெளியே போனால் திரும்பி உடலுக்குள் வராமல் போகிற போது , மரணம் சம்பவிக்கிறது. உடல் கட்டையாகிறது. எரிக்கப்படுகிறது அல்லது புதைக்கப்படுகிறது.
.
167. ज्ञानेन्द्रियाणि च मनश्च मनोमयः स्यात् कोशो ममाहमिति वस्तुविकल्पहेतुः । संज्ञादिभेदकलनाकलितो बलीयांस्तत्पूर्वकोशमभिपूर्य विजृम्भतेयः ॥ १६७॥
jñānēndriyāṇi cha manaścha manōmayaḥ syāt kōśō mamāhamiti vastuvikalpahētuḥ । sañjñādibhēdakalanākalitō balīyāṃ- statpūrvakōśamabhipūrya vijṛmbhatē yaḥ ॥ 167॥
ஜ்ஞாநேந்த்³ரியாணி ச மநஶ்ச மநோமய: ஸ்யாத் கோஶோ மமாஹமிதி வஸ்துவிகல்பஹேது: । ஸம்ஜ்ஞாதி³பே⁴த³கலநாகலிதோ ப³லீயாம்ஸ்தத்பூர்வகோஶமபி⁴பூர்ய விஜ்ரு’ம்ப⁴தே ய: ॥ 167॥
அறிவு, ஞானம் என்பது புத்தி மனம் அஹங்காரம், தேஹம் ஆகியவை பிராணனோடு சேர்ந்த வெளிப்பாடு. இதில் ஆத்மாவின் பங்கை புரிந்து கொண்டால் உடல் பற்று,உலகப்பற்று விலகி ஞானம் எஞ்சுகிறது. மனம் புலன்களின் வழிப்போகாமல் தடுக்கப்பட்டு நிலையாக ஆத்ம விசாரத்தில் ஈடுபடுகிறது.
168.अनुपूर्य पञ्चेन्द्रियैः पञ्चभिरेव होतृभिः प्रचीयमानो विषयाज्यधारया । जाज्वल्यमानो बहुवासनेन्धनैः मनोमयाग्निर्दहति प्रपञ्चम्॥ १६८॥
(pāṭhabhēdaḥ – anupūrya) pañchēndriyaiḥ pañchabhirēva hōtṛbhiḥ prachīyamānō viṣayājyadhārayā ।jājvalyamānō bahuvāsanēndhanaiḥ manōmayāgnirdahati prapañcham ॥ 168॥ (pāṭhabhēdaḥ – manōmayō’gnirdahati)
அநுபூர்ய பஞ்சேந்த்³ரியை: பஞ்சபி⁴ரேவ ஹோத்ரு’பி:⁴ ப்ரசீயமாநோ விஷயாஜ்யதா⁴ரயா । ஜாஜ்வல்யமாநோ ப³ஹுவாஸநேந்த⁴நை: மநோமயாக்³நிர்த³ஹதி ப்ரபஞ்சம் ॥ 168॥
ஐந்து புலன்கள் தான் ஆட்டிவைப்பவை. அவை தான் பிரபஞ்சத்தின் நிலையாமையை சாஸ்வதமாக எண்ண வைப்பவை.
169. मनोमयोऽग्निर्दहति न ह्यस्त्यविद्या मनसोऽतिरिक्ता मनो ह्यविद्या भवबन्धहेतुः । तस्मिन्विनष्टेसकलं विनष्टं विजृम्भितेऽस्मिन्सकलं विजृम्भते॥ १६९॥
na hyastyavidyā manasō’tiriktā manō hyavidyā bhavabandhahētuḥ ।tasminvinaṣṭē sakalaṃ vinaṣṭaṃ vijṛmbhitē’sminsakalaṃ vijṛmbhatē ॥ 169॥
மநோமயோऽக்³நிர்த³ஹதி ந ஹ்யஸ்த்யவித்³யா மநஸோऽதிரிக்தா மநோ ஹ்யவித்³யா ப⁴வப³ந்த⁴ஹேது: । தஸ்மிந்விநஷ்டே ஸகலம் விநஷ்டம் விஜ்ரு’ம்பி⁴தேऽஸ்மிந்ஸகலம் விஜ்ரு’ம்ப⁴தே ॥ 169॥
மனதை சுற்றி அஞ்ஞானம், அவித்யா எனப்படுவது சூழ்ந்திருக்கிறது. மனதே அதன் வசம் தான். பற்றுகளுக்கு ஆதிகாரணம். மனதை ஒடுக்கி, நாசம் செய்தால் எண்ணங்களுக்கு அங்கே இடம் இல்லை. அடிவாரத்தில் ஒடுங்கி இருக்கும் ஆத்மா முழுதும் நிரம்பும்.
170. स्वप्नेऽर्थशून्येसृजति स्वशक्त्या भोक्त्रादिविश्वं मन एव सर्वम् । तथैव जाग्रत्यपि नो विशेषः तत्सर्वमेतन्मनसो विजृम्भणम्॥ १७०॥
svapnē’rthaśūnyē sṛjati svaśaktyā bhōktrādiviśvaṃ mana ēva sarvam । tathaiva jāgratyapi nō viśēṣaḥ tatsarvamētanmanasō vijṛmbhaṇam ॥ 170
ஸ்வப்நேऽர்த²ஶூந்யே ஸ்ரு’ஜதி ஸ்வஶக்த்யா போ⁴க்த்ராதி³விஶ்வம் மந ஏவ ஸர்வம் । ததை²வ ஜாக்³ரத்யபி நோ விஶேஷ: தத்ஸர்வமேதந்மநஸோ விஜ்ரு’ம்ப⁴ணம் ॥ 170॥
கனவு காணும்போது வெளியுலகத்தோடு உடம்புக்கு சம்பந்தமில்லை. எங்கோ ஒரு அறையில் மைலாப்பூரில் புறா கூண்டில் போர்த்திக்கொண்டு படுத்திருக்கிறான். மனம் மட்டும் அமேரிக்கா ஐரோப்பா, சந்திரமண்டலம் என்று எங்கெங்கோ சுற்றுகிறது. விழிப்பு நிலையிலும் அப்படி தான். கனவில் கண்டது எப்படி நிஜமாக தோன்றியதோ அப்படி விழிப்புணர்வில் நம்மை சுற்றியிருக்கும் பிரபஞ்சம் உண்மை மாதிரி தோற்றம் தருகிறது. இந்த மாயை தேன் போல் இனிக்கிறது. உண்மையில் அது விஷம். சத்யம் ஒன்றே அம்ருதம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



