SURDAS – J K SIVAN

ஸூர்தாஸ்  –    நங்கநல்லூர்  J K  SIVAN  

குள்ள பிராமணன் கேட்ட தானம்  –

ராஜ்யம் பூரா  சேதி பரவி விட்டது.  மஹாராஜா  ஒரு பெரிய  யாகம் வளர்த்து  வெகுநேரம்  மந்திர ஒலி  எங்கும் கேட்டது.  ஹோமப்புகை  நெய் மணம்  வீசி எங்கும்  பரவி இருந்தது.  யாகம் வெற்றிகரமாக முடிந்து  எல்லா  பிராமணர்களுக்கும்  நிறைய  தானங்கள்  வழங்குகிறார் மஹாராஜா. கொடுத்து கொடுத்து  கை  தோள்பட்டை எல்லாம் வலி எடுத்தது. இருந்தும் மத்தியானம்  முடிந்து மாலை வேளை  நெருங்கும் வரை ராஜா  எல்லோருக்கும் தானங்கள் கொடுத்து ஒருவழியாக முடித்தார். ரொம்ப அசதியாக இருந்ததால் சற்று ஒய்வு எடுக்கும் நேரத்தில் வாசலில் ஒரு பிராமணன் வந்து நின்றான்.  வேத மந்த்ரங்கள் உச்சரிக்கிறான். கேட்க ஆனந்தமாக இருந்தது ராஜாவுக்கு””யார் இவன்?  விசித்ரமாக இருக்கிறானே,  இவ்வளவு குள்ள  பிராமணனை பார்த்ததே இல்லையே”வாருங்கள்” என்று ராஜா அவனை வரவேற்றார்.”மஹாராஜா இங்கே  தானம் கொடுக்கிறார் என்று கேள்விப்பட்டு  தொலை  தூரத்தில் இருந்து வந்திருக்கிறேன்””ஆமாம்.  இங்கே  என்ன சுற்றி முற்றி பார்க்கிறீர்கள்?””இங்கே யாரையும் காணோமே, தானம் கொடுத்து முடிந்தாகிவிட்டதா?””வந்தவர்களுக்கு எல்லாம் தந்தாகி விட்டது,  தானம் பெற வந்திருக்கிறீர்களா ?”” ஆமாம் என்று லேசாக  தலையாட்டினான் அந்த குள்ள பிராமணன்””வாருங்கள் உட்காருங்கள், நீங்கள் வந்ததில் எனக்கு பரம சந்தோஷம்” என்று ராஜா அவனை உபசரித்து அமர்த்தி அவன் பாதங்களுக்கு அபிஷேகம் பண்ணி அந்த ஜலத்தை  தலையில் தெளித்துக்கொண்டு ஒரு துளி பருகினான்”’பிராமணரே  உங்களுக்கு என்ன வேண்டும் என்று தாராளமாக கேளுங்கள் உடனே அளிக்கிறேன்”குள்ள பிராமணன் ஒரு நிமிஷம் அந்த ராஜாவை ஏற  இறங்க பார்த்தான், அருகிலே சுற்று முற்றும் பார்த்தான். மனதில் என்ன  கேட்கலாம் என்று  முடிவாகி விட்டது. ”எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்  என் காலடி அளவில் மூன்றடி மண் தந்தால் போதும்.” ”பிராமணரே   நீங்கள் கேட்பது ரொம்ப  விசித்திரமாக இருக்கிறது. எனக்கு சிரிப்பும் வருகிறது. வெறுமே மூன்றடி மண் கேட்டு என்ன பிரயோஜனம். வேறு ஏதாவது உருப்படியாக  பொன்னும் பொருளும் தானியங்களும் உங்களுக்கு தேவைகள் என்னென்னவோ அதெல்லாம் கேட்கலாமே. ஏதாவது ஊர்  வேண்டுமானாலும்  தாராளமாக  தருவேன்””நன்றி மஹாராஜா, உங்கள் தாராள குணத்தை மெச்சுகிறேன். எனக்கு என் காலடி அளவு மூன்றடி மண்ணே போதும்””உங்கள் விருப்பம் அதுவென்றால் உடனே  நிறைவேற்றுவேன் என்று மஹாராஜா அந்த பிராமணனுக்கு தாரை வார்த்து மூன்றடி மண் தானம் தந்தான்.  ” மஹா பலி, வேண்டாம்  தானம் தராதே, வந்தவன் சாதாரண பிராமணன் இல்லை, மஹா விஷ்ணு,  நீ கொடுக்கும் தானத்தால் நீ சகலமும் இழப்பாய் உன்னையும் சேர்த்து தான்” என்று அசுர குரு சுக்ராச்சாரியார் தடுத்தார். ”அதனாலென்ன, மகாவிஷ்ணுவே என்னிடம் தானம் கேட்டார் என்ற பெருமை வேறு யாருக்கு கிடைக்கும், நான் தானம் தருவேன் என்றான் மஹாபலி.  தாரைவார்க்கும் பாத்திரத்தில் ஜலதாரை விழும் இடத்தில் வண்டாக மாறி சுக்ரன் தடுத்தபோது, ஒரு தர்ப்பையால்  அந்த துவாரத்தில் உள்ள தடையை நீக்கினான் வாமனன். மூன்றடியில் ஓரடி மண், ரெண்டாம் அடி விண் , மூன்றாமடி  வேறொன்றும் தர இயலாமல் சரணடைந்த  மகாபலியின் சிரம் மூன்றும்  வாமனன் வசமாகியது. மூன்றும் வென்ற அவன் அப்போது வாமனன் இல்லை, த்ரிவிக்ரமன்.  வாமனாவரத்தை  நினைவு கூர்ந்து  ஸூர்தாஸ் பாடியதின்  ஆங்கில வடிவம் யாரோ அனுப்பியதை இணைத்திருக்கிறேன்.  

“A Brahmin dwarf is standing at the door!”
hearing him chant the Veda brought the king such joy
 that he asked the scholar to come in.
He bathed his feet, drank the water from those feet,
and asked the Brahmin what he might desire.
Just give me three and a half steps’ worth of earth
for a fine little hut in which to dwell.”
“But why,” said the king, “would you ask for only that?
 I’d give you many jewels, many towns.”
Then the Lord of Sūrdās took what he had asked:
 On the prostrate monarch’s back
he placed his foot.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;